பூமியில் உயிர்கள் வாழத்தேவையான அனைத்து வளங்களும் பிரபஞ்சம் உலக உயிர்களுக்கு வழங்கிய நற்கொடை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தத்துவங்களையும் உள்ளடக்கியதே பிரபஞ்ச வளம். மனிதன் பூமியைப் படைத்தானா அல்லது பூமி மனிதனைப் படைத்ததா என வியக்கும்வகையில், மனிதன் தன் அறிவால் பல விசித்திர- விநோதக்கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறான்.

ஆனால், இயற்கையின் உதவி இல்லாமல், இயற்கை அனுமதிக்காமல், பிரபஞ்ச சக்தி களான பஞ்சபூதங்களைப் பயன்படுத்தாமல் எந்த விந்தை, விநோதமும் கண்டுபிடிப்பும் மனிதனுக்கு சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பஞ்சபூதங்களும் நவகிரகங்களும் இணைபிரியா சக்திகள். நவகிரகங்கள் தங்களின் இயக்கங்களினால் உலகிற்கு நன்மை, தீமைகளைப் பஞ்சபூதங்கள் வாயிலாகவே வெளிப்படுத்துகின்றன.

மனிதன் இயற்கையின் கொடைகளை ஆக்கத்திற்குப் பயன்படுத்தும்போது நவகிரகங்களின் பரிபூரண நல்லாசிகள் பூமிக்குக் கிடைக்கும். அதேநேரத்தில், இயற்கை வளங்களை அழிவுக்குப் பயன்படுத்தும்போது நவகிரகங்கள் தக்கசமயத்தில் இயற்கைப் பேரிடர்களாகவும், நோயாகவும், விபத்தாகவும், உலக நாடுகளுக்கிடையே இணக்கமற்ற சூழல், போர் அபயம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணிகளால் பூமிக்கு எச்சரிக்கை விடவும் தயங்குவதில்லை. அந்த வகையில், தற்போது உலகம் அனுபவித்துவரும் நோய்த் தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அண்டை நாடுகளுடையே நிலவும் இணக்கமற்ற சூழ்நிலைகளுக்கு ஜோதிட ரீதியான காரணங்களைக் காணலாம்.

நவகிரகங்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும்- ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும், அனைவருடைய எதிர்பார்ப்பும் புதிய வருடம் உலகிற்கு ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்னவென்பதே. புத்தாண்டுப் பலனைத் தீர்மானம் செய்வதில் நவகிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. நவகிரகங்களுள் வருடக் கிரகங்களான குரு, ராகு- கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிப்பலன்கள் உலக இயக்கம் மற்றும் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் காரணிகள்.இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால், அவற்றால் ஏற்படும் சுப- அசுபப் பலன்கள் வருடக்கணக்கில் உலகத்திற்கு இருக்கும்.

Advertisment

ராகு-கேது

ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுப- அசுபப் பலன்களைத் தருவார்கள். நிழல் கிரகங்களான இவர்களுக்கு சொந்த வீடில்லாத காரணத்தினால், தான் நின்ற வீட்டினைத் தன் சொந்த வீடாகப் பாவித்து அந்த ராசியின் முழுவலிமையையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். அதுவும் சுயசாரத்தில் சஞ்சாரம் செய்யும்போதும், செவ்வாய் மற்றும் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போதும் வரலாற்றில் இடம்பெறக்கூடிய சம்பவங்களை நடத்திவிட்டுதான் அடுத்த ராசிக்குச் செல்லும்.

சுயசாரம் பெறும் சர்ப்ப கிரகங்கள் ஏற்படுத் தக்கூடிய விளைவுகள் கொடூரமான- கோரத் தாண்டவமாகவே இருந்துவருகின்றன. உலக மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உதாரணமாக, உலக மக்களை சூறையாடிய சுனாமி, விமானக் கடத்தல், கும்பகோண தீ விபத்து, சிக்குன் குனியா போன்றவற்றைக் கூறலாம். ஆனால், தனித்த ராகு- கேதுவினால் எதையும் சாதிக்கமுடியாது. தங்களுடன் சம்பந்தம்பெறும் கிரகத்தின் தன்மைக்கேற்ற வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கும்.

Advertisment

ஒரு பொருள் அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. ஒரு பொருளை அனுபவிக்கவிடாமல் தடை செய்வது கேதுவின் குணமாகும். தான் நின்ற ராசியின் பலன்களை அனுபவிக்கவிடாமல் தடை செய்பவர். ஆக, ராகு- கேது இரண்டுமே பிரிவினை மற்றும் தடைகளை உண்டாக்கும் கிரகங்களாகும். ராகு- கேதுவின் கோட்சாரத் தால் சுபப் பலன் நடப்பது மிகக்குறைவு. தீய பலன் நடப்பது அதிகம்.

சனி பகவான்

சனி பகவான் ஒரு ராசியில் தோராயமாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்பவர். உலகின் தொழில் வளர்ச்சியை நிர்ணயம் செய்பவர்.உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் தன்னுள் பதிவுசெய்து வைத்திருப்பவர். தான் நின்ற ராசிக்கேற்பவும், தன்னுடன் இணைந்த கிரகத்தின் தன்மைக்கேற்பவும் உலக மக்களுக்கு சுப- அசுப விளைவுகளை நிகழ்த்துபவர். மிகச்சுருக்கமாக, சுபகிரகங்களுடன் சம்பந்தம் பெறும்போது சுபப் பலன்களையும், அசுப கிரகங்களான ராகு- கேதுக்கள் மற்றும் செவ்வாயுடன் சம்பந்தம் பெறும்போது இயற்கை சீற்றம், கூட்டு மரணம், கொடூர நோய் தாக்கம் போன்றவற்றால் உலகத்திற்கு மீளாத் துயரத்தையும் தருபவர்.

rk

குரு பகவான்

குரு பகவான் ஒரு ராசியைக் கடக்கத் தோராயமாக ஒரு வருடமாகும். உலகப் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் படைத்தவர். ராஜகிரகமான குரு பகவான் தன்னுடைய பெயர்ச்சியால் மூன்று விதமான பலன்களை உலகிற்கு வழங்குகிறார்.

1. சீரான, சிறப்பான பொருளாதார வளர்ச்சி

ஒரு ராசியில் ஒரு வருடம் விகிதம் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் நட்புக் கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் உலகின் பொருளாதார வளர்ச்சியை சிறப்படையச் செய்வார்.

2. சீரற்ற, நிலையற்ற பொருளாதார நிலை

குரு பகவான் ராகுவுடன் சம்பந்தம் பெறும் காலங்களில் சர்வதேசப் பொருளாதார நிபுணர்களால்கூட நிர்ணயிக்கமுடியாத வகையில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்ற-இறக்கத்தை ஏற்படுத்தி, உலக வர்த்தகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்து வார்.

3. கடுமையான பொருளாதார மந்தம்

குரு பகவான் நீசம் பெறும் காலங்களிலும், கேதுவுடன் சம்பந்தம் பெறும் காலங்களிலும் உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மிகுதியான பொருளாதார நெருக்கடி ஏற்படும். சரியாக 12 வருடங்களுக்குமுன், 2008-2009-ல், பல வங்கிகள் திவாலானது. அந்த காலகட்டத்தில் 2008-09-ல் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது, குரு பகவான் தன் பலமிழந்து நீசவீடான மகரத்தில் நின்றார். இந்த நெருக்கடி 2007 டிசம்பரிலிருந்து ஜூன் 2009வரை நீடித்தது. 2007-ஆம் ஆண்டின் இறுதியிலேயே பொருளாதாரப் பெருமந்தம் துவங்கிவிட்டாலும், 2008-ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில்தான் இதன் தாக்கம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. 2007-ல் குரு, கேது சாரத்தில் நின்றபோது ஏற்பட்ட பொருளாதார மந்தம் 2008- 2009-ல் குரு, மகரத்தில் நீசம் பெற்றபோது அதிகமானதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு ஏன்- கடந்த 2019-ஆம் ஆண்டு குரு, கேது சாரத்தில் நின்றபோது சில வங்கிகள் வராக்கடனால் அவதியுற்றதும் நாம் அறிந்ததே. 2020-ல் குரு, கேது சம்பந்தம் மற்றும் குருவின் நீசத்தன்மைக் காலங்களில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்தது நாம் அறிந்ததுதான். உலக மக்கள் அனைவரும் கொரோனோ வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தும் இருக்கிறோம்.

2020ம் ராகுவும் வருடக் கிரகங்களின் பெயர்ச்சிகள்

உலக மக்களின் வாழ்வில் பெரும் ஏற்ற- இறக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், 2020-ஆம் ஆண்டு உலக நாடுகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கோட்சாரத்தில், கடந்த மார்ச் 2019-ல் நடைபெற்ற ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு ராகு பகவான் மிதுன ராசியிலும், கேது பகவான் தனுசு ராசியிலும் நுழைந்தார்கள். ராகு, தான் நின்ற பாகவகப் பலனைப் பிரம்மாண்டப்படுத்தி சிதைத்துவிடும். சிறிய விஷயத்தைப் பிரம்மாண்டப்படுத்தி, வரும் முன்னே பீதி, வதத்திகளைப் பரப்புவதில் வல்லவரான ராகுவை யாரும் மிஞ்ச முடியாது.

ராகு என்றாலே பீதி, வதந்தி.

இனம்புரியாத, அச்சுறுத்தல் ஏற்படுத் தக்கூடிய கடுமையான நோய், விஷக் கிருமிகள், கூட்டு மரணம், கொடூர விபத்து, உலக நாடுகளுடையே போர் அபாயம் போன்றவற்றை ஆர்ப்பாட்டத்துடன் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒரே கிரகம் ராகு பகவான். கடுமையான நோய்த்தாக்கம், திடீர் கெட்ட விளைவு, அசம்பாவிதம், கூட்டு மரணம், தாங்கமுடியாத பிரச்சினைகள் நடக்கும்போது அசுபர்களான சனி, செவ்வாய், ராகு தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதைப் பார்த்தோம்.

சனி பகவான், தான் நின்ற இடத்திற்கேற்ப சம்பவத்தை நிர்ணயித்து நடத்த ராகுவுக்கு உறுதுணையாக இருப்பவர். சம்பவத்தால் ஏற்படக்கூடிய விளைவை நிர்ணயம் செய்யக்கூடிய கர்மவினை அதிகாரி.

காலபுருஷ அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் முரட்டுத்தனமான தீவிர செயல்களால் பிரச்சினைகளை அதிகப் படுத்துபவர். இதுபோன்ற கொடூர விளைவு களில் செவ்வாயின் பங்கு அளப்பரியது.

2019-ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் விருச்சிகத்தில் நின்ற செவ்வாயைத் தவிர, அனைத்துக் கிரகங்களும் ராகு- கேதுவின் கட்டுப்பாட்டில்- கால சர்ப்ப தோஷ அமைப்பில் உலகை இயக்க ஆரம்பித்தன. செவ்வாயின் 8-ஆம் பார்வை ராகுவுக்குக் கிடைத்தது.

பிப்ரவரி 2020-ல் செவ்வாயும் தனுசு ராசிக்குப் பெயர்ச்சியானவுடன், காலசர்ப்ப தோஷ அமைப்பு முழுமையாக இயங்கி, உலக இயக்கமே ராகு- கேதுவின் பிடியில் நின்று, கொடூரமான நோய்த்தாக்கத்தால் பின்னோக்கித் தள்ளப்பட்டது. உலக மக்களின்அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உளவியல்ரீதியாகப் பொருளாதார நெருக்கடி என்னும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றால், ஜோதிடம், அறிவியல், புவியியல், வானியல், மருத்துவயியல் எல்லாவற்றையும்விட வலிமையானது இந்தியாவின் இயற்கை வளங்கள். இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் இந்தியர்களையும், எந்தச் சூழ்நிலையும் காப்பாற்றும். உழைப்பின் அவசியத்தை உணர்ந்த இந்தியர்கள் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் மனவலிமை, உடல் வலிமை மிகுந்தவர்கள்.

நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஒவ்வோர் இந்தியரின் கடமை யாகும். காட்டையும், காட்டில் வாழும் உயிர்களையும் அழிக்கக்கூடாது. பஞ்சபூதங் களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தி மாசுபடுத்தாதவரை, இயற்கையானது மனிதர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

இயற்கைக்கு எதிரான சிந்தனையில் மனிதன் ஈடுபடும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களே மனிதர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தும். இயற்கை வேறு, நவகிரகங்கள் வேறல்ல. இயற்கையைப் போற்றினால் நவகிரகங்களின் நல்லாசிகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

பரிகாரம்

தற்போது வக்ரகதியில் இருக்கும் குரு பகவான் வக்ரநிவர்த்தி பெற்றபின் மிதுன ராசியைப் பார்க்கும்போது ராகுவின் செயல்கள் மட்டுப்பட்டு, நோய்த்தாக்கம் குறைந்து, மருந்துக்குக் கட்டுப்பட்டு நம்முள் உலாவரும் சாதாரண நோயாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. குருவின் பார்வைக்கு எல்லா பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. எனவே, இயன்றவர்கள் நாட்டு நலனுக்காக நவகிரக சாந்தி ஹோமம் நடத்தினால், பாதிப்பு வெகுவாகக் குறையும். பஞ்சபூதங்களை வழிபட சீற்றம் குறையும்.

செல்: 98652 20406

______________

2020= 2 +2 = 4

நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். 4, 13, 22, 31 ஆகிய எண்கள் ராகுவின் குணத்தை மிகுதியாக வெளிப்படுத்தும்.

ராகுவுக்கு அழிக்கும் குணம் மிகுதியாக இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாத எண்ணத்துடன் செயல்படும் . வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்தும்.

இந்த எண்ணில் பிறந்தவர்களில் வெகுசிலருக்கே சிறப்பான, நல்ல பலன்கள் கிடைக்கும். பலரை வாழ்வின் உச்சத்தை எட்டிப்பார்க்க வைத்து குப்பை மேட்டிற்கு தள்ளிவிடும் தன்மை படைத்த எண். மேலும், சிலருக்கு வாழ்வில் எந்த சுபப் பலனையும் நடத்தியே தராத எண்ணும் இதுதான்.

2020-ஆம் ஆண்டு 2+ 2 = 4 என்ற ராகுவின் எண்ணில் இயங்குகிறது. அதனால், உலக மக்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விளைவுகளும் விபரீதமாகவே இருந்துவருகின்றன.

கடந்த 1984-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட வன்முறை, 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனவெறித் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, 2011-ஆம் ஆண்டின் மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

2020-ஆம் ஆண்டில் ராகு- கேதுக்கள் சுயசாரம் பெற்று கால சர்ப்ப தோஷ அமைப்பில் இயங்கின. அத்துடன் காலபுருஷ 8-ஆமிடமான விருச்சிகத்திற்கு 8-ஆமிடமான மிதுனத்தில் (8-க்கு 8 ) சஞ்சரிப்பதால், விளைவுகள் கொடுரமான கோரத் தாண்டவமாகவே இருந்துவருகின்றன.

தற்போது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் ராகு, சுக்கிரன் வீட்டை நெருங்குவதால், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு வேளையில் வீட்டில் தீபமேற்றி துர்க்கை, காளி, பிரத்தியங்கரா தேவி போன்ற அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து நெற்றியில் இட்டுவர சுபப் பலன் மிகும்.