சென்ற இதழ் தொடர்ச்சி...
பலமுறை ஜாதகம் பார்த்தும் பலன் தவறுவதற்கு திதிசூன்யமும் ஒரு காரணம்.
திருமணமே மனித வாழ்வின் மகத்தான அத்தியாயமாகும். திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழும் மனிதனுக்கே சமுதாய அங்கீகாரம் கிடைக்கிறது.
இத்தகைய திருமணம்பலருடைய வாழ்வில் எட்டாக்கனியாக இருப்பதற்கு திதிசூன்ய பாதிப்பும் காரணமாக அமைகிறது. திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 மற்றும் சுக்கிரன், செவ்வாய் திதிசூன்யத்தால் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்வில் திருமணமே கேள்விக்குறியாக இருக்கிறது. திருமணம் நடந்த ஒருசிலர் சமுதாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குழந்தைகள், பொருளாதாரம் போன்ற சில தவிர்க்கமுடியாத காரணிகளால் சகிப்புதன்மையுடன் அல்லது இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள்.
லக்னம் எனும் ஒன்றாமிடம் சிறப்பாக இருந்தால் மட்டுமே ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.
இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருளாதார வசதி, அரவணைக்கும் அன்பு, பண்பு நிரம்பியிருக்கும். ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். மானிடராய்ப் பிறந்த அனைவரும் வாழ்க்கையில் எதிர்பார்ப் பது நல்ல வாழ்க்கைத்துணை. ஒருவரின் நிம்மதியான வாழ்க்கை என்பது வாழ்க் கைத்துணையைச் சார்ந்தே இருக்கிறது. ஏழாமிடம் சிறப்பாக இருப்பவர்களே உரிய வயதில் திருமணம் நடந்து மனநிறைவான மணவாழ்க்கை வாழ்வார்கள்.
எட்டாமிடம் என்பது ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம். எத்தனை வாழ்க்கை வசதிகள் இருந்தாலும், அவற்றை அனுபவிக்க ஆயுளும் மாங்கல்ய பலமும் தேவை.
மேலேகூறிய இந்த நான்கு பாவகங்களும் திதிசூன்யத்தால் பாதிக்கும்போது திருமணம் கேள்விக்குறிதான். அதே நேரத்தில், திருமணத்தடையை அகற்றி திருமணத்தை நடத்திவைக்கும் வழிபாட்டுமுறையை ஒருவருக்குக் கூறும்முன்பு, திருமணம் நடக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வுசெய்வது மிகமுக்கியம்.
அந்தவகையில் ஒரு ஆணின் ஜாதகத்தில்-
1. குரு, சுக்கிரனுக்கு சம்பந்தம் அல்லது
2. குரு, சனிக்கு சம்பந்தம் அல்லது
3. சனி, சுக்கிரன் சம்பந்தம் இருக்கவேண்டும்.
பெண் ஜாதகத்தில்-
1. செவ்வாய், சுக்கிரன் சம்பந்தம் அல்லது
2. செவ்வாய், சனி சம்பந்தம் அல்லதுv 3. சுக்கிரன், சனி சம்பந்தம்.
இதுபோன்ற சம்பந்தமில்லாத ஜாதகத் திற்கு திருமணம் தொடர்பான பரிகாரம் கூறுவது பாவம்.
திதிசூன்ய பாதிப்பை சில உதாரண ஜாதகங் களுடன் பார்க்கலாம்.
உதாரணம்- 1 ஆண் ஜாதகம்
9-8-1980, 8.30 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகர், சிம்ம லக்னம். பிறந்த திதி சதுர்த்தசி. சூன்ய ராசிகள் தனுசு, மீனம்/மிதுனம், கன்னி.
சூன்யமடைந்த கிரகங்கள் குரு, புதன்.
ராசியின் அடிப்படையில் சூன்யத்தால் பலமிழந்த பாவகங்கள் 2, 5, 8, 11.
புதன், குரு நின்ற அடிப்படையில் பலமிழந்த பாவகங்கள் 1, 2.
7-ஆம் அதிபதி சனி சூன்ய வீடான கன்னியில் என்பதால், களத்திர ஸ்தானாதிபதி சனி பாதிப்பு.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வலிமையும் மிகமுக்கியம்.
சுக்கிரன் நின்ற வீடான மிதுனம் சூன்ய வீடு என்பதால், களத்திர காரகன் சுக்கிரனுக்கு பாதிப்பு.
ஆக, திருமணம் தொடர்பான 1, 2, 7 பாவகங்கள் மற்றும் சுக்கிரனுக்கு திதிசூன்ய பாதிப்பு.
தீர்வு
16-3-2017-ல் என்னை சந்தித்த இவருடைய ஜாதகத்தில் சனியின் பத்தாம் பார்வைசுக்கிரனுக்கு இருந்ததால், திருமணம் சாத்திய மென்று முடிவுசெய்யப்பட்டது.
தொடர்ந்து ஆறு தேய்பிறை சதுர்த்தசி திதிகளில் முன்னோர் களுக்கு முறையான திதிகொடுத்து, 21 பேருக்கு அன்னதானம் வழங்கவேண்டுமென்று கூறப்பட்டது. அத்துடன் எத்தகைய துணையைத் தேர்வுசெய்தால் வாழ்நாள் முழுவதும் இன்பமாக வாழமுடியுமென்ற ஆலோசனையும் கூறப்பட்டது. 2017 செப்டம்பரில் திருமணம் நடந்தது.
உதாரணம்- 2 ஆண் ஜாதகம்
17-12-1982, அதிகாலை 3.45 மணிக்குப் பிறந்தவர்.
ஜென்ம நட்சத்திரம் பூராடம். ஜென்ம லக்னம் துலாம்.
பிறந்த திதி ஏகாதசி. சூன்ய ராசி தனுசு மற்றும் மீனம். சூன்ய கிரகம் குரு.
லக்னத்தின் ஆரம்பப் புள்ளியே குருவின்மேல் நின்றுவிட்டது.
குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் சூன்ய கிரகம் குரு.
சூன்ய ராசியான தனுசில் களத்திரகாரகன் சுக்கிரன்- கேதுவுடன், கேதுவின் சாரத்தில் நின்றுள்ளது.
இந்த ஜாதகரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. என்ஜினீயரிங் படித்தும் நல்ல வேலை, தொழில் அமையவில்லை. அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் அவமதிப்பு... மிகவும் மனம் வருந்திய நிலையில் 3-8-2017-ல் என்னை சந்தித்தார். ராகு- கேதுவுடன் சம்பந்தம்பெறும் திதிசூன்ய ராசிகள் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற விதி இருந்தாலும், அனுபவரீதியாக சில பிரச்சினைகளையும் அதிகப்படுத்துகிறது.
தீர்வு
சனியின் மூன்றாம் பார்வை சுக்கிரனுக்கு இருந்ததால், திருமண வாழ்க்கையால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற ஒன்பது அம்மன் கோவில் களில் அம்மனுக்கு தங்கத் தாலி அணிவிக்கப்பட்டது.
ஐந்து மாதம் பரிகாரம் செய்தவுடன் திருமணம் நிச்சயமானது. 2018 மே மாதம் திருமணம் நடந்தது. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கு சொந்தத் தொழில்செய்யும் பெண் வீடு, வாகனத்துடன் கிடைத்தார்.
உதாரணம்- 3 ஆண் ஜாதகம் 8-10-1977, காலை 7.35 மணிக்கு இந்த ஜாதகர் ஏகாதசி திதியில் பிறந்தவர். சூன்ய ராசி தனுசு மற்றும் மீனம். சூன்ய கிரகம் குரு. 2, 7-ஆம் அதிபதி செவ்வாய் 9-ல் குருவுடன் குருசாரத்தில். 2, 7-ஆம் அதிபதி 9-ல். (7-ன் பாவத்பாவம்).
இவரின் பெற்றோர், ஜாதகருடன் என்னை 2017 நவம்பரில் சந்தித்தனர். சூரியதசை, குருபுக்தி நடைபெற்றது.
12-ல் நின்ற கிரகத்தின் தசை. 9-ல் நின்ற கிரகத்தின் புக்தி.
திருமணத்தடை என்று வந்தார்கள். பெற் றோரை சிறிதுநேரம் வெளியில் காத்திருக்கச் செய்தேன். ஜாதகரிடம், ""உங்களுக்குத் திருமணம் நடந்து, குழந்தைகளுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறீர்கள்'' என்று கூறினேன். அவர்,“ ""எனக்கு இரண்டு குடும்பங்கள் உள்ளன'' என்று கூறினார். மேலும், ஜாதகர்,“""குலத்திற்கு மாறான திருமணம் என்பதால், வயதான பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு குடும்பம் என்றால் எப்படியாவது சம்மதம் வாங்கலாம். இரண்டு குடும்பம் என்பதால், எப்படி சமாளிப்பதென்று தெரியவில்லை. என்னால் சகோதர, சகோதரிகள் வாழ்வில் பிரச்சினை வந்துவிடும். என் இரண்டு குடும்பங் களுக்கும் என்னுடைய தொடர்பு தெரிந்து, இருவரும் என்னை உதாசீனம் செய்வதால் இல்லற சந்நியாசியாக வாழ்கிறேன்'' என்றார்.
இவருடைய காதலுக்கும், இரண்டு குடும்பத் தலைமறைவு வாழ்க்கைக்கும் காரணம் 5-ஆமிடத்திற்கு சுக்கிரன், சனி, குரு ஆகிய மூன்று கிரகங்களின் சம்பந்தமாகும். லக்னத்திற்கு திதிசூன்ய அதிபதி குருவின் பார்வை இருந்ததால் தவறான நட்புகள். லக்னத்திற்கு குருபார்வை சாதகமா? பாதகமா என்று ஆய்வுசெய்தால், குருபார்வை சிறப் பென்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திதிசூன்ய குருவின் பார்வை இவரைத் தடுமாறச் செய்துவிட்டது.
அவருடைய பெற்றோரிடம் ஒரு வருடம் கழித்து வரும்படி கூறப்பட்டது. இடைக்காலத் தில் ஜாதகரைத் தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த 11 சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தக் கூறப்பட்டது. அத்துடன் 108 சிவாச் சாரியார்களை சந்தித்து ஆசிபெறக் கூறப் பட்டது.
இந்த ஜாதகர் 20 நாட்களுக்குமுன்பு வந்தார். ""இரண்டு வருடத்தில் 26 சிவாலயங் களை தரிசித்துவிட்டேன். சிவாச்சாரி யார்கள் ஆசிபெற முடியவில்லை'' என்றதுடன், ""என் குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்துவிட்டது. ஆனால் எனது மனைவிகள் என்னை மன்னிக்கத் தயாராக இல்லை'' என்று தன் தவறை உணர்ந்தார்.
இந்த மூன்று ஜாதகத்திலும் கிரகண சம்பந்தமும், லக்னத்தில் மாந்தியும் இருப்பதைக் காணலாம். இது முன்னோர்கள்- முற்பிறவி பாவத்தால் தொடரும் வினைகள் என்பது புரியும்.
டி.வி, பத்திரிகை என தகவல்தொடர்பு வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், சிறுவயதுக் குழந்தைகள்கூட தனது ராசி, நட்சத்திரத்தைக் கூறிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் பிறந்த திதி என்பது தெரியாமலே இருக்கிறது. வாழ்வில் விதி, மதி, கதி நன்கமைந்தவர்களுக்குத்தான் சகலவெற்றி களும் கூடிவருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிகப்பெரிய சாதனை மனிதராக மாறுவது இத்தகைய அமைப் பினால்தான்.
ஒவ்வொரு பிறவியிலும் ஒரே உடல் இருக்காது. பிறந்த திதிக்கும் ஆன்மாவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதால், எத்தனைப் பிறவி எடுத்தாலும் ஆன்மா மாறாது. சாதாரண மனிதர்முதல் சாதனையாளர்வரை பிரச்சினை வந்தால், வழிபாட்டால் மட்டுமே அதை சரிசெய்யமுடியும் என்பதை அறிவர்.
"திதியைப் பிடித்தால் விதியை வெல்லமுடியும்'
என்ற சூட்சுமம் பலருக்குத் தெரிவ தில்லை. திதியால் ஏற்படும் கிரக தோஷத்தை சீர்செய்தால் பல கடுமையான பாதிப் புகள் மற்றும் தடை, தாமதத்திலிருந்து விடுபடலாம்.
செல்: 98652 20406