Advertisment

தீராத கடன் தொல்லை தீர்க்கும் பிரதோஷ வழிபாட்டு ரகசியம்! -கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/pradosha-worship-secret-solve-problem-debt-kavita-balajiganesh

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதோஷங்களை நீக்க வல்லது பிரதோஷ வழிபாடு.

Advertisment

ருணம் என்பது "கடனை' குறிக்ககூடியது. இந்த செவ்வாய் பிரதோஷ தினத்தில் சிவனை வணங்கினால் கடன் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கை.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும், மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். இவ்வேளையில் சிவனையும், நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.

நந்தி பகவான் அன்றய தினத் தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால் தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியின் காதில் தங்கள் பிரார்த்தனை

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதோஷங்களை நீக்க வல்லது பிரதோஷ வழிபாடு.

Advertisment

ருணம் என்பது "கடனை' குறிக்ககூடியது. இந்த செவ்வாய் பிரதோஷ தினத்தில் சிவனை வணங்கினால் கடன் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கை.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் ருண விமோசன பிரதோஷ காலத்திலும், மைத்ர முகூர்த்த நேரத்திலும் கடனை அடைக்கலாம். இவ்வேளையில் சிவனையும், நந்தி பகவானையும் வணங்க கடன் பிரச்சினை தீரும்.

நந்தி பகவான் அன்றய தினத் தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால் தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியின் காதில் தங்கள் பிரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

Advertisment

ss

பிரதோஷ தின அபிஷேகம்

இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை, பசும்பால் மற்றும் இது எல்லா வற்றையும்விட தும்பை பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத் தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், ஏழு ஜென்மத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் மற்றும் பிரம்ம ஹத்தி தோஷம் விலகும்.

பொதுவாக பிரதோஷம்

அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபடலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கி தரலாம். ஏனென்றால் சிவன் அபிஷேக பிரியன். சிவனை அர்ச்சனை பொருளாலும், அபிஷேக பொருளாலும் வணங்க வேண்டும். இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கும்.

கடன் பிரச்சினை தீர

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ருண, விமோசன பிரதோஷமாகும். ருணம் என்பது கடனை குறிக்கக்கூடியது . நாம் பெறப்படும் கடன் மட்டுமல்ல தேவ, பூத, பித்ரு, ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்கின்ற வகைப்படும் இவைகளை களைய, ருண பிரதோஷ விமோசன நாளில் நந்தியெம்மனை வேண்டி வணங்கி அறுகம் புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசித்தால் இந்த தோஷங்களிலிருந்து விடுதலை பெறலாம்.

கடன் வாங்காதீங்க

ஒருவருடைய ஜாதகத்தில் குருகால புருசனுக்கு ஜாதக ஆறாம் பாவத்தில் அல்லது ஆறாம் பாவமான கன்னியில் கோட்சாரரீதியாக பயணம் செய்யும் போது கடன் வாங்கக்கூடாது. புதிய கடன்கள் வாங்குவதோ அல்லது அடைப்பதோ குரு சர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும்போது முயற்சி செய்யக் கூடாது. அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஏழரைச் சனி ஆகியவை நடைபெறும் போது கடன் வாங்க முயற்சி செய்யக் கூடாது.

முக்கியமாக செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்கக்கூடாது. மாறாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

கடனை தீர்க்கும் சனிபகவான்

கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். மேலும் சனைஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்ய வேண்டும்.

ருண விமோசன ஸ்தோத்திரம்

ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரை குறித்த இந்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்துவந்தால் எல்லாவித கடன் களும் அடைபடும். லட்சுமி நரசிம் மரின் திருவருள் கிடைக்கும்.

செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருக்கு பாணக நிவேதனம் செய்வித் தாலும் கடன் விரைவில் தீரும்.

ருண விமோசன நாளில் இருக்கும் மவ்ன விரதம் மிக கூடுதல் பலன்களை மக்களுக்கு வாரி வழங்கும். இந்நாளில் அன்னதானம், பூஜைகளுக்கான மலர்தானம் போன்றவற்றை செய்வது மிகமிக நல்லது. சில ஆலயங்களில் பிரதோஷ வேலையில் ஈசானிய திசை யில் பூதகணங்களுக்காக ஈசன் ஆடிய பூதநிறுத்தம் நடை பெறும். இந்நாட்டியதை தரிசிப் பது பல நற்பலன்களை நமக்கு தரும். தேவர்களையும், ஜீவ ராசிகளையும் காக்கும்படியாக ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானை எல்லோரும் துதித்து வணங்கிய வேளையே பிரதோஷ காலம் எனப்படும்.

செல்: 98425 50844

bala140723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe