தன யோகங்கள் ஜாதகரை எவரும் எட்டமுடியாத உச்சத்திற்குக் கொண்டுசெல்லும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வராக இருந்தாலும், அவரை செல்வநிலையில் உயர்த்தி, புகழின் உச்சிக்கு இட்டுச்செல்லும்.
மிகச்சிறந்த தன யோகமானது, 5-ஆமிடம் மற்றும் 9-ஆமிடம் தொடர்புகாரணமாக அமைவதேயாம். மேலும், 2-ஆமதிபதியை 9-ஆமதிபதி பார்க்கும்போதும் அல்லது 9-ஆமதிபதி, 2 அல்லது 5 அல்லது 9-ல் இருந்தாலும், 5 மற்றும் 9-ஆமதிபதிகள் நவாம்சத்தில் உச்சமடைந்திருந்தாலும் மேற்சொன்ன தனயோகம் ஏற்படுகிறது. இந்த பாவங்கள் லக்னத் திலிருந்தோ, ராசியிலிருந்தோ கணக்கிடப்படவேண்டும்.
அடுத்ததாக, 6-ஆமதிபதி மற்றும் 10-ஆமதிபதிகள் இணைவு மற்றும் 9-ஆமதிபதியின் 2-ஆம் அதிபதிமீதான பார்வையும், 6, 9, 2 ஆகிய அதிபதிகளின், பாவங்களின் தொடர்பு போன்ற அமைப்புகள் சேவை மற்றும் உத்தியோகத்தின்மூலம் முன்னேற்றம், செல்வச் சேர்க்கையும் ஏற்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yogam_17.jpg)
இந்த யோகத்தின் காரணமாக ஜாதகருக்கு மதிப்பும், மரியாதையும், புகழும், அதிக செல்வமும், நீண்ட ஆயுளும், கரும்புள்ளிகளற்ற நற்குணமும் தரும். புத்திசாலித்தனத் தையும், அனைவரிடமும் நன்கு பழகும் தன்மையையும் அதன்காரணமாக மக்கள் தலைவராகும் தகுதியையும், கலைகளிலும் விஞ்ஞானத்திலும் தேர்ச்சியும், மிகப்பெரிய ஆடம்பர வாகனங்களையும், அரண்மனைபோன்ற அழகிய வசிப்பிடத்தையும், அரச மரியாதையையும், வெகுமதியையும், அதிகாரத்தையும் அள்ளி வழங்குகிறது.
உபஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ல் 9-ஆமதிபதி இருந்து, சுபரால் பார்க்கப்பட்டு அல்லது 9-ஆமதிபதி 9-ஆம் இடத்துக்குத் திரிகோணத்தில் இடம்பெற்று, 2, 9, 11-ஆமதிபதிகள் இணைந்து அனுகூலமான வீட்டிலிருக்க, ஜாதகர் செல்வந்தராகிறார். ஜாதகத்தில் இயற்கை சுபர்கள். திரிகோணத்தில் இருந்து- அதாவது சுப கிரகமொன்று 9-ஆமிடத்தில் இருந்து, அஸ்தமனமாகாத, பாதிப்படையாத நட்பு கிரகத்தால் பார்க்கப்பட்டால் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டசாலியாக எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்க்கை வாழ்கிறார்.
ஒருவர் ஜாதகத்தில் அசுப கிரகங்கள் கேந்திரத்தில் இருக்க, அவரை 9-ல் இருக்கும் அஸ்தமனமாகாத, பாதிப்படையாத, சக்திமிக்க சுபரான நட்பு கிரகம் பார்க்க, மிகப்பெரிய செல்வந்தராகிறார்.
மீன லக்னம், 11-ஆமதிபதி சனி 11-ல் இடம் பெற்று சுபகிரக பார்வைப்பெற, தடையில்லாது சனி தசையில் செல்வம் கொட்டுகிறது. அதேபோல், 2, 9, 11-ஆம் இடங்களில் சுபர் இருக்க அல்லது ஒரு உச்ச கிரகம் மேற்படி இடங்களிலிருந்து, நட்புமிக்க சுபரால் காரகாம்ச லக்னத்திலிருந்து பார்க்கப்பட, அளவற்ற செல்வம்பெற்ற அதிர்ஷ்டசாலியாகிறார் ஜாதகர்.
ராசியில் அதிக பாகையைக் கொண்டுள்ள கிரகமே ஆத்ம காரகராவார். இந்த ஆத்மகாரக கிரகத்தின் நவாம்ச நிலையே காரகாம்ச லக்னமாகும். காரகாம்சத்திலிருந்து சுக்கிரன் 4-ஆமதிபதியோடு 4-ல் இருக்க, அவர்களை நட்பு கிரகம் பார்க்க, ஆடம்பர வாகனங்கள் மற்றும் அதிக செல்வங்களை உடையவராகவும் இருப்பார். ஆரூட லக்னத் தில் 2, 9, 11-ஆமதிபதிகள் இருக்க, ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராகிவிடுவார்.
செல்: 97891 01742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/yogam-t_0.jpg)