சில குடும்பங்களிலுள்ள பெண்கள் பிற ஆண்களுடன் தவறான உறவு வைத்திருப்பார்கள். தன்னைவிட குறைவான வயதுள்ள ஆணுடன் ஓடிவிடக்கூடிய சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது. இதன்மூலம் குடும்பத்திற்கு கெட்ட பெயர் உண்டாகிறது. அதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் ஜாதகத்திலிருக்கும் கிரகங்களும், வீட்டிலுள்ள வாஸ்து தோஷமும்தான்.

பெண்ணின் ஜாதகத்தில் 5-க்கு அதிபதியான கிரகம் அவளின் சிந்தனை, செயல் ஆகியவற்றைக் குறிப்பிடும். பூர்வஜென்மக் கர்மங்களையும் குறிக்கும். அந்த 5-க்குரிய கிரகம் 7-ஆம் பாவத்திற்கு அதிபதியான கிரகத்துடன் 11-ல், 11-ஆம் பாவத்திற்கு அதிபதியுடன் இருந்தால், அந்தப் பெண் பல தவறுகளைச் செய்வாள். திருமணத்திற்கு முன்பும் செய்வாள், பின்பும் செய்வாள்.

பெண்ணின் ஜாதகத்தில் ராகு, சுக்கிரன், செவ்வாய் 3, 6, 8-ல் இருந்தால், அந்தப் பெண் கள்ள உறவு கொண்டிருப்பாள்.

ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் நல்ல மனம் கொண்டவளாக இருக்க மாட்டாள். தனக்குக்கீழே மற்றவர்கள் அடிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பாள். எப்போதும் ஆவேசமாகப் பேசுவாள். யாராவது நன்கு பேசிவிட்டால், அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென நினைப்பாள்.

Advertisment

ஜாதகத்தில் 6-ஆவது பாவத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன், புதன் இருந்தால், அந்தப் பெண் வாழ்வில் சந்தோஷமாகவே இருக்கமாட்டாள். தன் கணவனுக்குத் தெரியாமல், வேறு ஆணுடன் உறவு வைத்திருப்பாள்.

ஜாதகத்தில் சந்திரன் 4-ல் நீசமடைந்திருந்து, அந்த ஜாதகத்தில் சுக்கிரன், சூரியன் 12-ல் இருந்தால், வசதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே இருக்கக்கூடிய குடும்ப வாழ்க்கையை அந்தப் பெண் பாழாக்கிக்கொள்வாள். சில பெண்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவார்கள். சில பெண்கள் வேறு ஆண்களுடன் தவறான உறவு வைத்திருப்பார்கள்.

ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் அல்லது சூரியன், சனி, செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் மது அருந்துவாள். பிற ஆண்களுடன் பழகுவாள். அதன்மூலம் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வாள்.

Advertisment

cc

பெண்ணின் ஜாதகத்தில் 10-ஆவது பாவத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலிருந்தே பல ஆண்களுடன் பழகுவாள். பலருடன் கள்ள உறவு இருக்கும். ஆனால், வெளியே நல்ல பெண்ணாக நடித்துக்கொண்டிருப்பாள் பெண்ணின் ஜாதகத்தில் 12-ஆவது பாவத்தில் செவ்வாய், 4-ல் சந்திரன், 6-ல் சுக்கிரன், புதன் அல்லது சுக்கிரன், சனி இருந்தால், அந்தப் பெண் தன் கணவனை மதிக்கமாட்டாள். வீட்டிற்குப் பணிசெய்ய வந்த ஆணுடன்கூட அவளுக்கு ரகசிய உறவுண்டாகும்.

ஜாதகத்தில் 5-ஆவது பாவத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இருந்து, அதற்குக் கேந்திரமாக சந்திரன் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தசையோ சுக்கிர தசையோ நடக்கும் போது, அவள் தன்னைவிட வயது குறைவான ஆணுடன் பழகி, தன் பெயரைக் கெடுத்துக் கொள்வாள்.

ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், 2-ஆம் பாவத்தில் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்கமாட்டாள்.

தவறு செய்வதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என எப்போதும் பார்த்துக்கொண்டிருப் பாள்.

பெண்ணின் ஜாதகத்தில் 9-ஆவது பாவத்தில் ராகு, செவ்வாய், சனி இருந்து, சந்திரன் 12 அல்லது 6-ல் இருந்தால், அந்தப் பெண் பிற ஆணுடன் திருட்டுத்தனமான உறவு வைத் திருப்பாள்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சனி, 6-ல் சுக்கிரன், 7-ல் சந்திரன் இருந்தால், அந்தப் பெண் பிற ஆண்களுடன் ரகசிய உறவு கொண்ட வளாக இருப்பாள்.

ஒரு வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்து, அங்கிருக்கும் பெண்ணின் படுக்கையறை வடமேற்கில் இருந்து, அந்தப் படுக்கையறையின் வாசல் தென்கிழக்கில் இருந்தால், அங்கு வசிக்கும் பெண் வேறு ஆணுடன் ரகசிய உறவு வைத்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்து, அந்த அறையின் வாசல் தென்மேற்கில் இருந்தால், அங்கிருக்கும் பெண் தவறான ஆணுடன் பழகுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தவறானவழியில் செல்லும் பெண்ணைத் திருத்துவதற்குச் செய்யவேண்டிய பரிகாரங்கள் பெண்ணின் தாய், துர்க்கை ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். விளக்கேற்றவேண்டும். சிவப்பு நிற மலர்களை வைத்து பூஜை செய்யவேண்டும். வெள்ளிக்கிழமை அன்று பெண்ணின் வயதுக்கேற்றபடி எலுமிச் சம்பழங்களை வாங்கி, அவற்றை மாலையாகக் கோர்த்து துர்க்கைக்கு அணிவிக்கவேண்டும்.

பெண்ணின் தந்தை தினமும் நாய்க்கு பிஸ்கட் அல்லது இனிப்பு ரொட்டியைத் தரவேண்டும்.

பெண்ணின் தாய் பௌர்ணமியன்று அரச மரத்தை ஏழுமுறை சுற்றி வரவேண்டும். அதற்கு குங்குமம் வைத்து விளக்கேற்றவேண்டும்.

பெண்ணின் கணவர், சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். திங்கட்கிழமை அவர் கட்டாயம் சிவாலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும்.

படுக்கையறையில் கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

.லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.

வீட்டில் பச்சை, சிவப்பு வண்ணங்கள் இருக்கக்கூடாது.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.

செல்: 98401 11534