பூசம் என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத் திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங் களில் எட்டாவது நட்சத்திர மாகும்.
இது கடக ராசியில் அமையப்பெற்ற பிரகாச மான, பிரம்மாண்டமான, ஒளிரும் தன்மை யுடைய, உடைபடாத முழு நட்சத்திரமாகும். இதனை வெறும் கண்களாலேயே வானில் காணமுடியும். இது மூன்று நட்சத்திரங்களின் கூட்டாகும்.
இந்திய வானியலின் பழைய மரபுப்படியும், ஜோதிட மரபுப்படியும் இந்த நட்சத்திரமானது கடக ராசியில் கணக்கிடப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு கார்குலம் என்னும் பெயருமுண்டு.
பூச நட்சத்திரம் வான்மண்டலத்தில் அம்புக் கூடு, அம்பாரம், பசுவின் மடி போன்ற வடிவங் களில் காணப்படும்.
இது கடக ஆழி என்றும், பாற்கடல் என்றும் அழைக்கப் படும். காலபுருஷனுக்கு நான் காமிடத்தில் அமையப் பெற்றுள்ளது. மாபெரும் மகான்களையும், முனிவர்களையும், மேன்மை பொருந்தியவர்களையும் இந்த நட்சத்திரம் ஈன்றிருக்கிறது.
இது முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமென்றும், இராமாயணத்தில் பதவி ஆசையற்ற பரதன் பிறப்பெடுத்த
பூசம் என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத் திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங் களில் எட்டாவது நட்சத்திர மாகும்.
இது கடக ராசியில் அமையப்பெற்ற பிரகாச மான, பிரம்மாண்டமான, ஒளிரும் தன்மை யுடைய, உடைபடாத முழு நட்சத்திரமாகும். இதனை வெறும் கண்களாலேயே வானில் காணமுடியும். இது மூன்று நட்சத்திரங்களின் கூட்டாகும்.
இந்திய வானியலின் பழைய மரபுப்படியும், ஜோதிட மரபுப்படியும் இந்த நட்சத்திரமானது கடக ராசியில் கணக்கிடப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு கார்குலம் என்னும் பெயருமுண்டு.
பூச நட்சத்திரம் வான்மண்டலத்தில் அம்புக் கூடு, அம்பாரம், பசுவின் மடி போன்ற வடிவங் களில் காணப்படும்.
இது கடக ஆழி என்றும், பாற்கடல் என்றும் அழைக்கப் படும். காலபுருஷனுக்கு நான் காமிடத்தில் அமையப் பெற்றுள்ளது. மாபெரும் மகான்களையும், முனிவர்களையும், மேன்மை பொருந்தியவர்களையும் இந்த நட்சத்திரம் ஈன்றிருக்கிறது.
இது முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமென்றும், இராமாயணத்தில் பதவி ஆசையற்ற பரதன் பிறப்பெடுத்த நட்சத்திர மென்றும் மக்களால் அறியப்படுகிறது.
மார்கழியில் வரும் பூசத்தன்று சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலகமக்களுக்குக் காட்சிதருவார் என்றும், தை மாதத்தில் வரும் பூசத்தன்று உமையம்மை யுடன் ஆனந்த நடனம்புரிந்து காட்சியளிப் பார் என்றும் ஐதீகங்கள் கூறுகின்றன.
உமையம்மை வேலவனுக்கு சக்திவேலை வழங்கிய நாள் பூசத்திருநாளாகும். உலக மக்களின் பசிப் பிணையைத் தீர்க்க வள்ளல் பெருமானால் அணையா அடுப்பு அமைக் கப்பட்ட வட லூரில் ஜோதி தரிசனம் இந்த பூசத் திருநாளில் தான் நடைபெறுகிறது.
இந்த பூச நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் அனைத்துத் துறைகளிலும் ஞானம் கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்கள்மீது அதீத பற்றுகொண்டவர்கள். இறைநம்பிக்கை, அனைவரிடமும் அன்புடன் பழகும் குணம், எவரா லும் முடியாத காரியத்தை முடிக் கும் வல்லமை, நல்ல வசீகரமான தோற்றம், வாக்கு சாதுரியம், கலை நுட்பம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்களின் இளமைக்காலம் பெரும்பாலும் சிறப்பானதாக அமையப்பெறுவதில்லை.
ஏழ்மையான இல்லங்களில் பிறப்பெடுத்திருந்தாலும் இவர் களின் வளர்ச்சியில் மாபெரும் இடத்தையடையும் வல்லமை பெற்றவர்கள். இயல்பிலேயே புனர்பூ தோஷம்கொண்டது பூச நட்சத்திரம். சந்திரன், சனி தொடர்பு புனர்பூ தோஷமாக ஜோதிடத்தில் அறியப்படுகின்றது.
கடகத்திற்கு இரண்டா மிடத்தில் ஆட்சிபெறும் சூரியனின் மூலம் வல்லமையும், அதிகாரத் தோரணையில் வாக்கும் இவர் களுக்கு அமையப் பெற்றிருக்கும்.
ராசியிலேயே உச்சமடையும் குருவின் குணமான அனுசரித்துச் செல்லுதல், மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குதல், பிறரை அன்புடன் பராமரிக்கும் குணம் போன்றவை இயற்கையாகவே அமைந் திருக்கும்.
சமூகத்தில் சேவைசெய்யும் மனப் பான்மையில் அமையப்பெறும் நட்சத்திரம் பூச நட்சத்திரமாகும்.
இங்கு ராசிநாதன் சந்திரனாகவும், நட்சத்திரநாதன் சனிபகவானாகவும், நவாம்ச நாதர்களாக பூசம் ஒன்றாம் பாதமென்றால் சூரியனாகவும், இரண்டென்றால் புதனாகவும், மூன்றென்றால் சுக்கிரனாகவும், நான் கென்றால் செவ்வாயாகவும் வருவார்கள்.
இந்தப் பூசத்தில் பிறந்தவர்களின் குடும்பங்களில் ஏதேனும் ஒரு சமாதி வழிபாடு இடம்பெற்றிருக்கும். மேலும் பரிகாரங்களுக்கு உகந்தது பூச நட்சத்திரமாகும்.
பூசம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களின் சந்திரன், நவாம்சத்தில் சூரியனின் வீடான சிம்மத்தில் இடம் பெறுவார். அதனால் அதிகாரத் தோரணை யிலுள்ள பேச்சு, பேச்சின்மூலம் வருமானம், அரசு, அரசு சம்பந்தப்பட்ட தொழில், சாஸ்திர ஞானம், சமூகத்தில் பெரும் மதிப்பிற் குரிய இடம் போன்றவை அமையும். கமிஷன் துறை, பேச்சாளர், வழக்கறிஞர், ஆசிரியர் போன்ற தொழில்களும் இவர்களுக்கு மேலும் சிறப்பினைத் தரும்.
பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
சந்திரன் நவாம்சத்தில் கன்னி வீட்டில் அமையப்பெறும். இவர்கள் எடுக்கும் எல்லாவிதமான தொழில்களிலும் வெற்றி, நுணுக்கமான அறிவுத்திறன் இருக்கும். கமிஷன், தரகு, ரியல் எஸ்டேட், மென் பொருள் சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் கல்வி போன்றவை அமையும்.
பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
சந்திரன் நவாம்சத்தில் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமையப்பெறுவார். இவர்களுக்கு கலை, சினிமா, தையற்கலை, நகைக்கடை, துணிக்கடை, ஃபேஷன் டிசைனிங், விவசாயம், டிராவல் ஏஜென்சி போன்ற சுக்கிரனின் காரகத்துவம் மிகுந்த தொழில்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட கல்வி அமையும்.
பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களுக்கு சந்திரன் நவாம்சத்தில் விருச்சிக வீடான செவ்வாயின் வீட்டில் அமையும். இங்கு சந்திரன் தன் வலுவையிழந்து நீசம்பெறுகிறார். எனவே மன உளைச்சல், சஞ்சலம், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் தாமதம் போன்றவை இருக்கும். மறைமுகத் தொழில், கந்துவட்டி போன்றவை அமையும்.
மகான்கள் ஜீவசமாதி அடைவதற்கு பெரும்பாலும் பூச நட்சத்திரத்தை தேர்ந் தெடுத்துள்ளனர். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் தொழிற்கூடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பசுவின் மடியைப் புகைப்படமாகவோ, வரைபடமாகவோ வைப்பதன்மூலம் பெரும் சிறப்பினை அடைய முடியும்.
வழிபடவேண்டிய தெய்வங்கள்: எல்லை தெய்வங்கள், அம்மன்.
வணங்கவேண்டிய விருட்சம்: அரசமரம்.
அணியவேண்டிய ரத்தினம்: முத்து.
(அடுத்த இதழில் ஆயில்யம்)
செல்: 80563 79988