ஒருவர் அரசியலிலில் நுழைந்து சாதனை புரியவேண்டுமென்றால், அவரின் ஜாதகத் தில் லக்னம் பலமாக இருக்கவேண்டும். 5-ஆம் அதிபதி, 9, 10-க்குரிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
சூரியன் உச்சமாக அல்லது 5, 10 அல்லது லக்னத்தில் இருக்கவேண்டும். அல்லது உச்ச சூரியனை குரு பகவான் பார்க்கவேண்டும்.
செவ்வாய், சூரியனுக்கு கேந்திரத்தில் இருக்கவேண்டும். செவ்வாயும் சூரியனும் குருவால் பார்க்கப்படவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சந்திரனுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்து, அதற்கு கேந் திரத்தில் குரு இருந்தால் அவர் ஒரு பெரிய அரசியல்வாதியாக வருவார்.
10-ஆம் பாவத்தில் சனி, லக்னத்தில் செவ்வாய், 4-ல் குரு இருந்தால், அவர் பெரிய அரசியல் தலைவராக வாய்ப்பிருக்கிறது.
4-ல் சனி, 10-ல் சூரியன், புதன், 11-ல் குரு இருந்தால், அவர் அரசியலிலில் பெரிய மனிதராக வருவார். சந்திரனுக்கு 10-ல் செவ்வாய் இருந்து, சந்திரனை குரு பார்த்தால், அவர் புகழ்பெற்ற அரசியல்வாதியாக இருப்பார்.
லக்னத்தில் செவ்வாய், 10-ல் சூரியன், 11-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் அரசியலிலில் புகழ்பெறுவார்.
லக்னத்தில் செவ்வாய், 2-ல் குரு, 4-ல் சந்திரன், 10-ல் சூரியன் இருந்தால் அவர் புகழ்பெற்ற அரசியல் தலைவராக இருப்பார்.
லக்னத்தில் சூரியன், 4-ல் குரு, கேது, 10-ல் ராகு இருந்தால் அவர் உலக அளவில் புகழ்பெற்ற அரசியல் தலைவராக இருப்பார்.
லக்னத்தில் செவ்வாய், 2-ல் குரு, 9-ல் ராகு, 11-ல் சனி இருந்தால், அரசியலில் புகழ்பெறுவார்.
சனி சுய வீட்டிலோ உச்சமாகவோ இருந்து, அந்த சனிக்கு கேந்திரத்தில் குரு இருந்தால் அவர் அரசியல் உலகில் வெற்றிகரமான மனிதராக இருப்பார்.
லக்னத்தில் செவ்வாய் இருந்து, அதற்குக் கேந்திரத்தில் சூரியன், சூரியனுக்கு கேந்திரத் தில் குரு இருந்தால், அவர் பெரிய அரசியல் தலைவராக இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் புதாத்திய யோகம் இருந்தால், அதுவும் லக்னத்தில் இருந்து, அது பத்ர யோகமாக இருந்தால், அதற்கு கேந்திரத்தில் குரு, செவ்வாய் இருந்தால், அவர் அரசியலிலில் பெரிய பதவியில் இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் ஹம்ஸ யோகம் இருந்து, குரு லக்னத்தில் உச்சமாக இருந்து, அதற்கு 10-ஆவது இடத்தில் செவ் வாய், சூரியன் இருந்தால், அரசியல் உலகில் அவர் உன்னதப் பதவியில் இருப்பார்.
4-ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்து, அதற்குக் கேந்திரத்தில் அல்லது மூலத் திரிகோணத்தில் செவ்வாய், குரு இருந்து, சூரியன் கேந்திரத்தில் இருந் தால், அவர் அரசியலிலில் பெரிய பதவி வகிப்பார்.
லக்னத்தில் செவ்வாய் உச்சமாக இருந்தால் ருசக யோகம் உருவாகும். அதற்கு கேந்திரத்தில் சூரியன், குரு இருந்தால் ஜாதகர் அரசியலிலில் உயர்ந்த பதவியில் இருப்பார்.
5-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் இருந்தால், அவர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்.
3-ல் ராகு, 5-ல் சனி, 9-ல் புதன், சூரியன், செவ்வாய் இருந்தால், அவர் அரசியலில் புகழுடன் இருப்பார்.
லக்னத்தில் புதன், 5-ல் சனி, 9-ல் குரு இருந்தாலும்; உச்ச சந்திரன், 3-ல் சனி, 7-ல் குரு, 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் புதன் இருந்தாலும் அவர் அரசியலிலில் நல்ல நிலையில் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி, 3-ல் சந்திரன், செவ்வாய், 5-ல் கேது, 7-ல் குரு, 10-ல் உச்ச சுக்கிரன் இருந்தால் அவர் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அரசியலிலில் பெரிய வளர்ச்சி காண்பார்.
பரிகாரங்கள்
அரசியலில் உயர்நிலையில் இருப்பதற்குச் செய்யவேண்டிய பரிகாரங்கள்...
தெற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும்.
தினமும் சூரியனை வழிபட வேண்டும்.
பைரவரை வழிபடவேண்டும்.
வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத் திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
தன் லக்னம், 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணிவது நல்லது.
தினமும் அரசமரத்திற்கு நீர் வார்க்க வேண்டும்.
செல்: 98401 11534