சிவபெருமான் தன் சகாக்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது அவர்கள், ""ஐயனே! ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் அநேகம்பேர் உலகில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரேவிதமான பலன்களை அனுபவிக்காமல், முற்றிலும் வித்தியாசமான பலன்களை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்களைக் கூறியருள வேண்டும்'' என்று சிவபெருமானை வேண்டினர்.

Advertisment

சிவபெருமான் அருளிய விளக்கங்களை முனிவர் பலபத்திரர் தான் எழுதிய "ஹோரா ரத்னம்' என்ற ஜோதிட நூலில் கொடுத்திருக்கிறார்.

அவற்றை இங்கே காணலாம்.

இவ்வுலகில் ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில்களை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் செய்கிறார்கள். ஆக்கல் தொழிலில் உயிரினங்கள் படைக்கப்படுகின்றன. ஒரு உயிரில் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு அம்சங்கள் உண்டு. இந்த உயிரினங்கள் ஜீவாத்மா அம்சத்தை அதிகமாகவும், பரமாத்மா அம்சத்தைக் குறைவாகவும் கொண்டு பிறக்கின்றன. பரமாத்மா அம்சத்தை முழுமையாக உடைய நவகிரகங்கள், ஜீவாத்மா அம்சங்கள் கொண்ட மனிதர் களை நல்வழிப்படுத்தி, பரமாத்மா அம்சங்களைப் பெற்று முக்தியடைய பெரிதும் உதவுகின்றன.

sivan

Advertisment

ஒரு காலத்தில் உலகில் அநீதிகள் கட்டுக்கு மீறி நடைபெற்றபோது மகாவிஷ்ணு சூரிய கிரகத்தின் அம்சமாக ராமாவதாரம் எடுத்து இராவணனை வதம்செய்து நீதியை நிலைநாட்டினார். அதேபோல் சந்திரனின் அம்சமான கிருஷ்ணர் மகாபாரதப்போரை நடத்தி தர்மத்தை நிலைநாட்டினார். இதேபோல் ஒவ்வொரு கிரகமும் ஒரு அவதாரமெடுத்து உலகத்தில் நடை பெற்ற அநீதியை அழித்து நீதியை நிலை நாட்டின.

மனித உயிர்கள் அனுபவிக்கும் கர்மாவைப் போக்குவதற்கு உதவும் கிரகங்கள், அவரவர் களின் ஜாதகத்தில் அமைந்த தன்மை களைப் பொருத்து வேறுபட்ட அவஸ்தை களை அனுபவிக்கின்றன. கிரகங்களின் அவஸ்தைகளானது, ஒருவருடைய ஜாத கத்தில் அந்த கிரகம் அமைந்திருக்கும் ராசி யையும், அந்த ராசியில் உள்ள நட்பு அல்லது பகைபெற்ற கிரகங்களின் தொடர்பையும், தங்கள் பலத்தைப் பொருத்தும் வேறுபடும். அத்தகைய அவஸ்தைகளின் குணங்களைப் பொருத்து ஜாதகருக்கு நல்ல அல்லது கெட்ட பலன்களைக் கொடுக்கவல்லது என்று விளக்கியிருக்கிறார்.

கிரகங்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஆறு வகையாகப் பிரித்திருக்கின்றனர்.

1. லஜ்ஜித அவஸ்தை ஐந்தாமிடத்தில் பாம்பு கிரகங்களின் தொடர்பு பெற்றோ அல்லது சூரியன், சனி, செவ்வாயுடன் தொடர்பு பெற்றோ உள்ள கிரகங்கள் லஜ்ஜித அவஸ்தையைப் பெறுகின்றன. இந்த அவஸ்தையானது வெட்கத்துடன் உள்ள நிலையாகும். இத்தகைய கிரகங்கள் தங்களுடைய பலன்களை ஜாதகரை அனுபவிக்கவிடாமல் தடுக்கக்கூடியது. நன்மை உண்டாக்கக்கூடிய செயல்களைத் தடுக்கும். நல்ல வஸ்துகளை விரும்பாத நிலையையும் உண்டாக்கும். கடவுள்மீது ஒருவித அவமரியாதையும், எதிர்மறையான எண்ணங்களையும் வளர்த்துக்கொண்டு, புத்திக்கூர்மை குறைவானவர்களாக இருப்பார்கள்.

2. கர்விதா அவஸ்தை திமிர்பிடித்த நிலையிலிருக்கும் கிரகமாகும்.

Advertisment

ஒரு கிரகம் ஜாதகத்தில் உச்சத்திலும் திரிகோணத்திலும் இருந்தால் இந்த அவஸ்தையைப் பெறும். ஜாதகருக்கு வீடுகளையும் நிலங்களையும் கொடுத்து, அதிகாரம், அந்தஸ்துடன் முக்கிய புள்ளியாக வளர்க்கும் குணமுடையது. கலை நுணுக் கங்களையும், உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல வளர்ச்சியையும் கொடுக்கும்.

3. க்ஷீ டிதா அவஸ்தை பசியால் கஷ்டப்படுவது, எந்த பொருளையும் விரும்பும் வேட்கையில் உண்டாகும் துன்பத்தால் அவதிப்படுவ தாகும். ஒரு கிரகம் தன் எதிரியின் ராசி யிலோ அல்லது எதிரி கிரகத்தினால் பார்க்கப்பட்டோ இருந்தால் இத்தகைய அவஸ்தையை அனுபவிக்கும். மேலும் வேறு எந்த ஒரு எதிரி கிரகமும் தொடர் பில்லாமல் சனி கிரகத்துடன் கூடினாலே இத்தகைய துன்பத்தை அனுபவிக்கும் நிலையுண்டாகும். க்ஷீ டிதா அவஸ்தை பெற்ற கிரகங்கள் மிகுந்த துக்கத்தையும், வாழ்க்கையில் கஷ்டங்களையும் கொடுக்கும். உடம்பில் மிகுந்த துன்பங்களும் ஆரோக் கியத்தில் குறையுமுண்டாக்கும். எதிரி களால் மிகுந்த தொல்லைகளையும் பணக் கஷ்டங்களையும் கொடுக்கும் வல்லமை யுண்டு.

4. ட்ருஷிதா அவஸ்தை மிகுந்த தாகமான அவஸ்தையாகும். ஒரு கிரகம் நீர் ராசியிலிருந்து, அந்த கிரகத்தை பகை கிரகம் பார்வை செய்தால் இந்த அவஸ்தை உண்டாகும். அதிக தாகமுடன் நாக்கு வறண்டிருக்கும் நபர்களின் அவஸ்தைக்கு இந்த நிலைமையை ஒப்பிடலாம். இத்த கைய கிரகங்களால் ஜாதகர்களுக்கு கெட்ட நடத்தையுண்டாகும். சமுதாய ஒழுக்கங் களுக்கு கேடு விளைவிக்கும் செயலைச் செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த பந்தங்களினால் பொருளை இழந்து விடுவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறமுடியாமல் திண்டாடுவார்கள். கெட்ட மனிதர்களின் சகவாசத்தால் நிம்மதி இழப்பார்கள்.

5. முதிதா அவஸ்தை இது சந்தோஷத்தால் அவதிப்படும் அவஸ்தையாகும். கிரகங்கள் தங்களுடைய நட்பு ராசியில் அமர்ந்து, நட்பு கிரகங் களுடன் இணைந்தோ அல்லது சுபகிர கங்களால் பார்க்கப்பட்டோ அல்லது குருவின் சேர்க்கையுடனோ அல்லது பார்க்கப் பட்டோ இருப்பின் முதிதா அவஸ்தை யுண்டாகும். இத்தகைய அவஸ்தையைப் பெற்ற கிரகங்களால் ஜாதகருக்கு மனைவி மூலமாக மகிழ்ச்சியை வாரிவழங்கும். சொத்துசுகங்களை அபரிமிதமாகக் கொடுக்கும். அதிகாரத்திலும் அந்தஸ்திலும் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்புமூலம் நன்மைகள் ஏற்படும். செல்வங்கள், அறிவுத் திறன், எதிரிகளை வெல்லும் சக்தியைக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

6. ஷோபிதா அவஸ்தை கிரகங்களின் கிளர்ச்சியால் அல்லல் படும் அவஸ்தையாகும். ஜாதகர்கள் வறுமை யில் வாடும் நிலையை உருவாக்கும். சூரியனுடன் இணையும்பொழுதோ அல்லது பார்க்கப்படும்பொழுதோ அல்லது எதிரி, அசுப கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ இத்தகைய கெடுதல் விளைவிக்கும் அவஸ்தையை கிரகங்கள் பெறுகின்றன. இது பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும். அரசாங்கத்தின் மூலம் நஷ்டங்களை உண்டாக்கும். காலில் நோயுண்டாக்கும். மேலும் பல துன்பங்களைக் கொடுத்து அல்லல் படுத்தும்.

கிரகங்கள் படும் அவஸ்தைகளை அந்த கிரகங்களின் தொடர்புகொண்ட பாவங்கள் சம்பந்தப்பட்ட குணங்களின்மூலம் வெளிப் படுத்தும். நன்மையளிக்கக்கூடிய அவஸ்தை களைப் பெற்ற கிரகங்கள், அவை சம்பந் தப்பட்ட பாவங்களைப் பொருத்து அதன் குணங்கள் மூலம் நல்ல பலன்களைக் கொடுக்கவல்லவையாகும். கெடுபலன்களைக் கொடுக்கும் அவஸ்தைகளைப் பெற்ற கிரகங்கள் எந்த பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதோ அவற்றின்மூலம் கெடுக்கும் பலன்களைக் கொடுக்கின்றன.

மேலே குறிப்பிட்ட அவஸ்தைகள்மூலம் பொதுப்படையான பலன்களைக் கூறலாம். அதாவது ஒருவர் கடற்கரையில் நின்றுகொண்டு "கடலில் என்ன இருக்கிறது' என்று வினவினால் என்ன சொல்வார்கள்? "கடலில் தண்ணீர் இருக்கிறது' என்று கூறுவார்கள். அது உண்மைதான். ஆனால் கடலில் தண்ணீர் மட்டும்தான் உள்ளதா? தண்ணீருக்குள் சென்று ஆராய்ந்தால் பாசி, பவளம், சிறியமீன், பெரியமீன், திமிங்கலம், பாறைகள், மலைகள்- ஏன் நெருப்பைக் கக்கும் எரிமலையே இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். அதுபோல ஜாதகத்தை மேன்மேலும் ஆராயும்போது இன்னும் அதிகமான பலன்களைக் கூற இயலும். மேலே கூறிய ஆறுவகையான அவஸ்தைகளும் கடலிலுள்ள நீரைப்போன் றதுதான்; பொதுப்படையானது.

மகரிஷிகள் மேலும் சாயநாடி அவஸ் தைகள் என்று 12 வகையான அவஸ்தை களைக் கூறியுள்ளனர். அவற்றை எவ்வாறு கணக்கிடுவது என்றும், அத்தகைய அவஸ்தைகளின் விரிவான பலன்களையும் மகரிஷி பலபத்திரர் தனது "ஹோரா ரத்தினம்' நூலிலிலும் மகரிஷி பராசரர் தனது "பிருகத் பராசரஹோரா சாஸ்திரா' நூலிலும் கூறியுள்ளனர். அவற்றை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

செல்: 91767 71533