கிரகங்கள் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், நீசம்! - ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்

/idhalgal/balajothidam/planets-rule-apex-source-triangle-nisam-arr-sudarshan

பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் உச்சம், ரிஷபத்தில் சந்திரன் உச்சம், கடகத்தில் செவ்வாய் நீசம், சனி பகை என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் சொல்லப்பட்டுள்ளன. பொதுவாக மக்களிடையே ஆட்சி, உச்சம், நட்பு பெற்ற கிரகங்கள் பற்றி ச

பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் என ஒவ்வொரு ராசியில் உள்ளது. உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் உச்சம், ரிஷபத்தில் சந்திரன் உச்சம், கடகத்தில் செவ்வாய் நீசம், சனி பகை என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் சொல்லப்பட்டுள்ளன. பொதுவாக மக்களிடையே ஆட்சி, உச்சம், நட்பு பெற்ற கிரகங்கள் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

dd

ஆதிபத்திய வகையில் 6, 8, 12-க்குடைய ஆட்சி, உச்சம், நட்புபெற்றால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். 6-க்குடையவர் நீசம்பெற்றால் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு ஏற்படாது. 8-க்குடையவர் நீசம் ஆயுளில் பங்கம் ஏற்படும். 6-க்குடையவர் ஆட்சிபெற்றால் சரள யோகம். 12-க்குடையவர் நீசம்பெற்றால் விரயம் குறையும் அதேநேரத்தில், வெளிநாடு செல்லநேரும். தூக்கம், கணவன்- மனைவி தாம்பத்திய உறவு பாதிக்கும்.

dadfaf

எனவே ஒவ்வொரு கிரகத்திற்கும் நன்மையும் தீமையும் கலந்தே பலன்கள் நடைபெறும். யோகத்தைச் செய்யும் கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், கிரகயுத்தம், மறைவு போன்றவற்றால் பாதிப்படையக்கூடாது. பாதித்தால் முழுமையான பலன்கள் கிடைக்காது. யோகத்தைச் செய்யாத கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், பகை போன்றவற்றால் பாதிப்படைய வேண்டும். நன்மைகள் உண்டாகும். பொதுவாக ஆட்சி, உச்சம், நீசம்பெற்ற கிரகம் ஒரு ராசியில் இருக்கும்பொழுது ஓரு குறிப்பிட்ட டிகிரிவரை இருக்கும். அந்த டிகிரியில் இருக்கும்வரை ஆட்சி, உச்சம், நீசம், மூலதிரிகோணம் உறுதியாக உள்ளதாக அர்த்தம். அந்த குறிப்பிட்ட டிகிரியில் இல்லையென்றால் மேற்கண்ட நிலைகளை அடைவதில்லை. சமநிலையில் அல்லது நட்பு நிலையில் உள்ளதாக அர்த்தம். ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், நீசம் என பொதுவாக ஜாதகத்தில் உள்ளதை மேலோட்டமாக நம்பி ஏமாறக்கூடாது. அட்டவணையில் எந்தெந்த டிகிரிகளில் கிரகங்களின் நிலை எவ்வாறுள்ளது என்று தரப்பட்டுள்ளது.

செல்: 98403 69513

bala150321
இதையும் படியுங்கள்
Subscribe