Advertisment

2022-ல் கோள்கள் செய்யும் கோலங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/planets-making-planets-2022-s-vijayanarasimhan

2022-ல் கோட்சார கிரக நகர்வுகளால் உலகப் பொருளாதார நிலை எவ்வாறிருக்கும்?

சனி- குரு இணைவு 2020- 2021-ல் மகர ராசியில் ஏற்பட்டது என்பது நாமறிந்த ஒன்றே! பண்டைய ஜோதிட நூல்களில் சனி மற்றும் குருவின் இணைவு அல்லது பார்வை உலகத்தில் பொருளாதார சிக்கல்களையும், பஞ்சத்தையும், பட்டினியையும் உருவாக்கும் என்றும், பல நகரங்கள் அழிந்து, அந்த நகர மக்கள் வேறிடத்துக்கு இடம் பெயர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரக இணைவால் பலர் மரணமடைந்து மக்கள் தொகை குறையும் என்றும்,

Advertisment

அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும் என்றும் "பிருஹத் சம்ஹிதா'வில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், இந்த நிலைகள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே ஏற்படும். அதுவும், ஒரு குறுகிய கால அளவுக்கு மட்டுமே ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் நிலை.

அப்போது ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பல கோடீஸ்வரர்கள் அவர்களின் செல்வ நிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டார் கள். பங்குச் சந்தை நிலையும் சனி, திருவோணத்தில் நகர்ந்தபோது (2020 நடுப்பகுதி முதல் 2021 கடைசிவரை) உச்சத்தைத் தொட்டது.

ஆனால், சனி அவிட்ட நட்சத்திரத் தைக் கடக்கும்போது மிகப்பெரிய செல்வந்தர்கள் பிரச்சினையில் சிக்குவார்கள் என்று "பிருஹத் சம்ஹிதை'யில் பகரப்பட் டுள்ளது. இந்த ஆண்டு சனி அவிட்டத்தில் நகரும் காலத்தில், 18-2-2022 முதல் 2023 ஆரம்பம் வரையும், பின் வக்ரமாகி, நேர்கதியாகி என இந்த நிலை நெடுநாட்களுக்கு நீடிக்கிறது. பணக் காரர்களின் சிக்கலுக்கான "ரெட் அலர்ட்' கொடுக்கப் போகிறது. சனியானவர் அவிட்டத் தில் சஞ்சரிக்கும் காலம்வரை உலகின் பெரும் பணக்காரர்களுக்கு சிக்கல்களே எழும். அவர் களுக்கு அதிக அளவு வரிகள் விதிக்கப்படலாம்; கோர்ட் கேஸ் என அலைய நேரலாம்.

Advertisment

2022 மார்ச் க

2022 மார்ச் கடைசியில், மகரத்தில் சனி, புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியோரின் இணைவு நல்ல மாற்றத்தை, முன்னேற்றத்தைத் தரும். அத்துடன், கும்பத்தில் குரு மற்றும் சூரியன் இணைவுள்ளதால், பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியும், தங்கம் விலை உயருதலும், கட்டுமான நிறுவனங் கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் ஆகியவை அதிக வளர்ச்சியும் காணும்.

கொரோனா பெருந்தொற்று எப்போது குறையும்? ராகு- கேதுக்கள் கடகம், மிதுனம்,

ரிஷப வளைவில் வரும்போது, சனியால் பாதிப்பு,

குருவால் பாதிப்படையும் காலங்களில், ஃப்ளு, புதிய வைரஸ்களால் கொள்ளை நோய்கள், பெருந் தொற்றுகள் ஏற்படுமென்று பழம்பெரும் அனுபவம்மிக்க ஜோதிடப் பெருந்தகைகள் குறிப்பிடுகின்றனர்.

காலபுருஷ தத்துவப்படி, கடகம் நுரை யீரலையும், மிதுனம் தொண்டை மற்றும் உணவுக் குழல், மூச்சுக் குழல் ஆகியவற்றையும், ரிஷபம் மூக்கு மற்றும் வாயையும் குறிக் கின்றன. இப்பகுதிகளே மனித உடலில், முக்கிய மாக தொற்று நோய்கள் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகும். சனியானவர் மகரத்திலிருந்து கடகத்தைப் பார்த்த காலத்தில்தான் கோவிட் பெருந்தொற்று உலகமக்களை அச்சுறுத்தியது.

planets

2022 மார்ச் கடைசியில், ராகு, ரிஷப ராசி யிலிருந்து மேஷத்துக்கு மாறுகிறார். கால புருஷனுக்கு ரிஷபம் வாய் மற்றும் மூக்கு எனக் குறிப்பிட்டோமல்லவா?

ராகு ரிஷபத்தைவிட்டு மேஷத்தை அடையும் போது, கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். 2022 மார்ச் கடைசியில் ராகுவானவர் மேஷத்திற்கு மாறுகிறார். ஏப்ரல் கடைசியில் சனியும் கும்பத்திற்கு மாறுகிறார். குருவும் மீனத்துக்கு மாற்றம் பெறுகிறார். அந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி காணும். ஏனெனில், மீனம், இகலோக ஜோதிடத்தில் (முன்டேன் அஸ்ட்ராலஜி) விரிவாக்கம், பெருக்கம், வணிகக் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த ஆண்டு (2022) ஜூலை மாதம், 3-ஆம் நாள் ஏற்படும் கிரக கோட்சார நிலைகள், மாலை தொடுத்ததுபோல் கிரகமாலிகா யோகத்தை ஏற்படுத்தப் போகின்றன. இந்த நாள் பொன் நாள். சனி கும்பத்தில் தன் ஆட்சி வீட்டிலும், குரு தனது ஆட்சி வீட்டிலும், செவ்வாய், சுக்கிரன், புதன் மற்றும் சந்திரன் ஆகிய ஆறு கிரகங்கள் தங்கள் ஆட்சி வீடு களிலும் இருக்கும் அருமையான கோட்சார நிலையை எய்துகின்றன. இதன்காரணமாக, நாடு மற்றும் உலகம் வளம்பெறும்; நலம் பெறும். நல்லெண்ணம் சிறக்கும். உலக ஒற்றுமை ஓங்கி சிறப்படையும். குருவின் பார்வை சந்திரன்மீது விழுவது, தெய்வீக அருள் மழை யைக் குறிகாட்டுகிறது. உலக அளவில் மிகச்சிறந்த வரலாற்று நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.

தனுசுமுதல் மீனம்வரை பல தருணங்களில் சுக்கிரன், செவ்வாய் நெருக்கத்துடன் பயணிக்கின்றன. (ஜனவரி 16 முதல் பிப்ரவரி 16, 2022 வரை தனுசுவில்). பிப்ரவரி 2022, 9-ஆம் நாள் பூராடம் 2-ல் பயணிக்கிறார்.

கன்னி நவாம்சம் பெறுகின்றனர். இத்தருணத் தில் பெரிய சாதனைகள், நீருக்கு அடியில் மிகப்பெரும் திட்டங்கள் நிறைவேறுதல், மிகப்பெரிய தொழிலகங்களின் லாபகரமான வளர்ச்சி ஆகியவை ஏற்படும். அதிகப்படியான திருமணங்கள் நடக்கும். விவாகரத்து, பிரிவினை யானவர்கள் மீண்டும் சேர்ந்து மகிழும் நிகழ்வுகள் ஏற்படும்.

அன்றிலிருந்து (16-2-2022) ஒரு ஒன்றரை மாதத்திற்கு மகரத்தில் இணையும்போது, வர்க்கோத்தம நிலையும் அடைகின்றனர். (தனுசு, மகர நவாம்சத்தில், உத்திராடம், திரு வோணம் சாரத்தில்). இது ஒரு விசித்திரமான, புதுமையான இணைவு. அடுத்து ஏப்ரல் 7 முதல் 26 வரை கும்பத்திலும், மே 17 முதல் மே 22 வரை மீனத்திலும் பயணிக்கின்றனர்.

செவ்வாயிடம் சுக்கிரன் கிரக யுத்தத்தில் தோல்வியடையும் காலங்களில், இராணுவ உயரதிகாரிகளுக்குப் பிரச்சினைகளும், இளம் அதிகாரிகள் போரில் ஈடுபடுதலும் நிகழும் என பிருஹத் சம்ஹிதையில் குறிப்பிடப்பட் டுள்ளது. எனவே, மியான்மர், ரஷ்யா, வட கொரியா மற்றும் சில சக்திமிக்க, செல்வாக்கு மிக்க தலைவர்களைக்கொண்ட நாடுகளில் தலைமைகள் மாறும் அல்லது முரண்பாடான, கருத்து மாறுபட்ட, சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஏற்படலாம்.

இவ்விரு கிரகங்களும் ஜனவரி 16 முதல் மே 23, 2022 வரை தனுசுமுதல் மீனம்வரை (நெருப்பு, பூமி, காற்று மற்றும் நீர் ராசிகள் என) சுமார் 127 நாட்கள் இணைந்தே பயணிக் கின்றன. குரு, செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைவு சிறப்பான மழைப் பொழிவை குறிகாட்டுகிறது. பின்லாந்து, சுவீடன், கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் இருக்கும்.

தனுசு ராசியில் சுக்கிரன் சுமார் 57 நாட்கள் பயணிக்கின்றார். அவர் பூராடம், உத்திராடம், திருவோணம் மற்றும் அவிட்ட நட்சத்திரங்களில் பயணிக்கும்போது சிறப் பான, சாதகமான, அனுகூலமான பலன் களையே அளிக்கிறார். சுக்கிரன் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பெண்கள், கால்நடைகள், பண்ணைப் புரங்கள், மத நடவடிக்கைகள், பரிசுகள், விருதுகள் போன்ற விஷயங்களில், உலகமக்களுக்குக் கருணைமழை பொழிகிறார்.

மேலும் தனுசு கோதண்டராமரைக் குறிப்பதால், ராமஜென்ம பூமியான அயோத்தி சீரோடும், சிறப்போடும் முன்னேற்றம் காணும்.

நான்கு சர ராசி கேந்திரங்களில் சனி (மகரம்), செவ்வாய், ராகு (மேஷம்), சூரியன் (கடகம்) மற்றும் கேது (விருச்சிகம்) என ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை சிறப்பான முறையில் அமர்கின்றன. சனி, தளபதியான செவ்வாயின் அவிட்ட நட்சத் திரத்தில் வக்ரமடைந்து, அவர் சூரியனைப் பார்வை செய்கிறார். செவ்வாயும் சூரியனைப் பார்க்கிறார். எனினும், குருவின் பார்வையும் சூரியன்மீது விழுவதால், அவர் பாதுகாப்பு பெறுகிறார். இதன்காரணமாக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆளும் கட்சிகளின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால் மூத்த அரசியல் தலைவர்கள் கஷ்டங்களுக்கு ஆளாவர். பாலிஸிகள் மீதான குற்றம், குறைகள் காணப்பட்டு, அதன்மீதான விமர்சனங்கள் பெரிய விஷயமாக்கப்படும். புயல், சூறாவளி, பூமி அதிர்ச்சி, எரிமலைகள் வெடித்தல், மனித செயல்பாடுகளால் உருவாக்கப்பட்ட அழிவுகள் ஆகியவை ஏற்படும்.

நெருப்பு ராசியான மேஷத்தில் ஏற்படும் செவ்வாய், ராகு இணைவு, படுகொலைகள், கூட்டுக் கொலைகள், துப்பாக்கி சூடு, குண்டு வெடித்தல், சிறையிலிருந்து தப்பித்தல், சிவில் வார், தீவிரவாதம், அனுமதியின்றி உள்நுழைதல், எல்லை தாண்டுதல் ஆகிய வற்றை குறிகாட்டுகின்றன. மேஷம் சர ராசியாதலால், ரயில் விபத்துகள், கவிழ்தல், ஓடுதளத்தில் விமான விபத்துகள் ஆகியவை ஏற்படலாம்.

கோட்சார செவ்வாய் பற்றிய பிருஹத் சம்ஹிதையின் கருத்தென்ன? "அதிசார செவ்வாய், தீயால் விபத்து பயத்தை உருவாக்கும். வக்ரமானால் அல்லது அடுத்த ராசிக்குள் நுழையும் காலங்களில் மக்கள் அதிக வெப்பத்தால் கஷ்டப்படுவர். பல குடும்பங்களும் கஷ்டங்களுக்கு உள்ளாகும். செவ்வாய் ஒரு ராசியில் குறிப்பிட்ட காலத்தைவிட அதிக நாட்களுக்கு இருக்க நேர்ந்தால், போர், பஞ்சம் ஆகியவை ஏற்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய் இந்த ஆண்டு நவம்பர் 14, 2022 அன்று ரிஷபத்தில் வக்ரநிலை அடை கிறார். வக்ரச் செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தைக் கடக்கும்போதெல்லாம், அது நாட்டுக்கு மிக நெருக்கடியான காலமாக அமையும். 32 வருடங்களுக்கு ஒருமுறையே இந்தநிலை ஏற்படும். இதற்குமுன் இந்தநிலை ஏற்பட்டபோதெல்லாம், பல தலைவர்களின் தோல்வி, பதவி இழப்பு, படுகொலைகள், கூட்டுக் கொலைகள், பூகம்பம், இயற்கை சீற்றங்கள், இராணுவக் கிளர்ச்சி, கெமிக்கல் வார், அரசியல் படுகொலைகள், பஞ்சம், வறட்சி, பசி, பட்டினி என பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது.

செல்: 63836 25384

bala110222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe