Advertisment

சனியுடன் இணைந்த கிரகங்களும் மனித வாழ்க்கையும்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/planets-conjunct-saturn-and-human-life-prasanna-astrologer-i-anandhi

2025-ஆம் ஆண்டு வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகிறது. இதில் அனைவரின் மனதினையும் சலனப்படுத்துவது சனிப்பெயர்ச்சியாக இருந்துவருகிறது. ஒரு பிரிவினர் சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்று கூறினால் மற்றொரு பிரிவினர் சனிப்பெயர்ச்சியே இல்லை என்ற புரளியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இங்கு சனிப்பெயர்ச்சி நடக்கிறதா- இல்லையா என்று விவாதத்திற்கு போக வேண்டாம்.

வாக்கியப் பஞ்சாங்கம் சரியானதா?

திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியா? என்று ஆய்வு செய்ய வேண்டாம். அவரவர்களின் அனுபவத்தில் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்கள் சனிப்பெயர்ச்சி நடந்துவிட்டதா? இல்லையா? என்பதை தெளிவாக உணர்த்தும். தற்போது கோட்சாரத்தில் சனிபகவானுடன் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் சேர்கிறது. இந்த கிரக கூட்டணியில் அனைத்து கிரகங்களையும் கேதுபகவான் பார்க்கிறார்.

Advertisment

ss

இந்த கிரக கூட்டணியில் குருவும் செவ்வாயும் சம்பந்தப் படவில்லை என்று கூறினாலும் இப்போது கோட்சாரத்தில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் உள்ளார்கள். ராகு- கேதுவின் மையப்புள்ளியில் செவ்வாய் உள்ளது. நவகிரகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு நிலையில்தான் உள்ளது. இது கோட்சாரத்தில் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்குறி அனைவருக்குமே உள்ளது. 29-3-2025 ஆண்டு ஏற்படக்கூடிய இந்த கிரக நிலவரம் சூரிய கிரகணத்தையும் அமாவாசையையும் ஏற்படுத்துகிறது. அன்று சனிக்கிழமையாகவும் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த கிரக இணைவிற்கு செவ்வாயின் நேரடி பங்களிப்பு இல்லையென்பது மிகுந்த ஆறுதலான விஷயமாக உள்ளது.

Advertisment

ஆனால் சனி பகவானும் ராகு பகவானும் நெருக்கமான டிகிரியில் பயணிப்பதால் இது அச்சப்பட வேண்டிய விஷயமாகவும் உள்ளது.

2019-2020-ஆம் ஆண்டில் நடந்த ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் புத்தகம் நமது நக்கீரன் நிறுவனத்தின்மூலமாக நான் எழுதி வெளிவந்த ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் நான் எழுதிய சம்பவங்கள் பெரும் பான்மையாக நடந்தது. அதில் எழுதிய அசுப சம்பவங்கள் அதிகமாக நடந்தது.

வரலாற்றில் இடம்பெறக்கூடிய சம்பவங் கள் மக்கள் மீள முடியாத துயரத்தையும் நடத்திக்காட்டும். கூட்டு மரணம் அதிகரிக் கும். இதுபோன்ற வாசகங்கள் எழுதப் பட்டுள்ளது. இனம் புரியாத நோய் தாக்கம் உருவாகும். துர்மரணம் அதிகரிக்கும் போன்ற வாசகங்கள் நான் எழுதிய படியே அப்படியே நடந்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய கிரகச் சேர்க்கை நன்மையைத் தருமா? தீமையை ஏற்படுத்துமா என்று ஆய்வை விடுத்து நாம் நன்றாக இருப்போம் உலகம் நன்றாக இயங்கும் நாடும் நாட்டுமக்களும் செழிப்பாக இருக்கக் கூட்டு பிரார்த்தனை செய்துகொள்வோம். அத்துடன் நீர் நிலை களுக்கு அருகில் இருப்பவர்கள் அபாயகர மான வேலையைச் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இந்த கூட்டுக் கிரகச் சேர்க்கை கோட்சாரத்தில் மாறும்வரை அவரவர் பகுதியிலுள்ள காவல் எல்லை தெய்வங்களை வழிபட நன்மையே நடக்கும்.

சனியுடன் சேர்ந்த கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பலன்களை இந்த கட்டுரையில் நாம் காண்போம். இது தற்போதைய கோட்சார பலன் அல்ல. பொதுவாக சனியுடன் சேர்ந்து கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்.

சனி+சூரியன்

சூரியனின் வீடான சிம்மத்தில் இருந்து சனியின் வீடான மகரம் ஆறாவது வீடாக வரும். சனியின் வீடான மகரம் சூரியனின் வீடான சிம்மம் எட்டாவது வீடு. இந்த இரண்டு கிரகங்களின் வீடுகளும் 6, 8 ஆக இருப்பது சஷ்டாஷ்டகம். இதை காலப்பகை என்று கூறலாம். காலப் பகை கிரகங்களின் சேர்க்கை என்பதால் சனி, சூரியன் சேர்க்கை ஜாதகத்தில் சில நன்மைகளையும் பல அசவுகரியங்களையும் வழங்குகிறது. குறிப் பாக சனி என்பது பொதுமக்களை குறிக்கக் கூடிய கிரகம். இது ராஜ கிரகமான சூரியனுடன் சேரும்போது அரசியல் அரசாங்க , வாழ்க்கை யில் உன்னதமான நல்ல பலன்களை வழங்கு கிறது.இவர்களுக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உண்டு. ஆனால் பதவி உயர்வு எளிதில் கிடைக்காது. கிடைத்த உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் மனக்கசப்பு உண்டாகும். சூரியன், சனி சேர்க்கை இருக்கும். பல தந்தை மகன்கள் சிறப்பாகவே வாழ்கிறார்கள். இந்த கிரகச் சேர்க்கை உள்ள பாவகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறும். சூரியனும் சனியும் ஒரே ராசி கட்டத்திலிருந்து சூரியன் சனியை அஸ்த மனப்படுத்தியிருந்தால் தந்தை மகனை கட்டுப்படுத்த முடியும். மகன் தந்தைக்கு கட்டுப்படுவான். சூரியனுக்கும் சனிக்கும் அதிகமாக இடைவெளி இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. தந்தை மகனும் ஒற்றுமையாக இருப்பார்கள். சனியின் மூன்றாம் பார்வையில் இருக்கும் சனிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. சனியின் ஏழு, பத்தாம் பார்வையில் இருக்கும் சூரியனுக்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். சூரியன், சனி சேர்ந்து விட்டது என்றால் தந்தை மகனுக்கும் ஆகாது. தந்தையை பிரிந்த மகன் வாழ வேண்டும். இப்படி தவறான கூற்றுக்களை தவிர்க்க தவிர்க்க வேண்டும். பல ஆதாரங்களுடன் சூரியன், சனி சேர்க்கை உள்ள தந்தை மகனும் ஒற்றுமையாக வாழ்வதை நிரூபிக்க முடியும். தொழிலைக் குறிக்கும் கிரகம் சனிபகவான். புகழைக் குறிக்கும் கிரகம் சூரியன்.

இது தொழிலில் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் கிரக சேர்க்கை ஆகும். பல கூட்டு குடும்பங்களில் இந்த கிரக சேர்க்கை உள்ள தந்தை மகனும் பல வருடங்களாக தொடர்ந்து சுய தொழிலில் வெற்றி அடைந்துகொண்டு உள்ளார்கள். கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். பெண் ஜாதகத்தில் இந்த கிரகச் சேர்க்கை இருந்தால் தந்தை- மகள் மிகுந்த அன்புடன் இருக்கிறார் கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்பு உண்டு.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சனி ஓரையில் சிவவழிபாடு செய்தல் நல்லது.

சனி+சந்திரன்

காலபுருஷ நான்காம் அதிபதி சந்திரன். காலபுருஷன் பத்தாம் அதிபதி சனிபகவான். சனியின் வீடான கும்பமும் சந்திரனின் வீடான கடகமும் சஷ்டாஷ்டகமாக இருப்பது.

காலப்பகை. சனி சந்திரன் சம்பந் தம் காலப்பகை யாக இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சில முன் னுக்கு பின் முர ணான பலனைத் தரும். கர்மக்கார கரான சனி நாள் கிரகமான சந்திர னுடன் சேரும் போது கர்ம செயல்படுகளின் தன்மையில் அதி வேக மாற்றமும், தனித்தன்மையும் ஏற்படும். இதை புனர் பூ தோஷம் என்பார்கள். சனி பகவான் சந்திர னுடன் சம்பந்தப்படுபவர்கள் . அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஞான மார்க்கப் பாதையில் கொண்டு விட்டு விடுவார். ஒருசிலர் இல்லறத்தில் இருந்து கொண்டே பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கும்போது பலவிதமான எண்ணங்கள் அலைமோதும். முடிவு செய்ய முடியாமல் திணருவார்கள்.

அதீத திருமணத் தடையை தருவதில் இந்த கிரக அமைப்பு முன்னணியில் நிற்கிறது. தாலி கழுத்தில் ஏறும் கடைசி நிமிடம் வரை திருமணத்தை தடை செய்யும் அதிகாரம் உண்டு.

அதேபோல் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆன ஹ்ர்ன்ற்ன்க்ஷங், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பத்திரிகை போன்றவற்றில் ஒருவர் தனித்திறமையுடன் மிளிர சனி, சந்திரன் சம்பந்தம் நிச்சயம் இருக்க வேண்டும்.

சனி என்றால் தொழில். சந்திரன் நாள் கிரகம். இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்கள் அன்றாடம் அழியக்கூடிய பொருட்களை கொண்டு தொழில்புரிபவர்களுக்கு மிகுந்த வருவாயை தருகிறது. குறைந்த முதலீடு அதிக வருமானம் உண்டு. சில்லறை வியாபாரம் காய்கறி, பால், பழ வியாபாரம், குளிர் பானம், குடிசைத் தொழில் போன்ற தொழிலில் இருப்பார்களுக்கு எப்பவுமே கூட்டம் கூடிக்கொண்டே இருக்கும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். அதேபோல் சனியும் சந்திரனும் சுய ஜாதகத்தில் 6, 8-ஆக இருந்தால் அவர்கள் அதிக முதலீட்டில் தொழில் செய்ய கூடாது.

புத்தி தடுமாற்றம் அதிகமாக இருக்கும். தொழிலில் நல்லமுடிவு எடுக்க முடியாது. சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது. எடுத்த வாக்கிலும் வந்த வாக்கிலும் வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வாதாரம் இழப்பார்கள் போட்ட முதல் நிச்சயமாக வீடு வந்து சேராது. பூர்வ புண்ணியம் மிகுதியாக இருக்க பிறந்த வர்கள் பற்றற்ற நிலை ஏற்பட்டு வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு பயணிப்பதும், தனித்தன்மையான கொள்கைப் பிடிப்போடு இருந்து புகழின் உச்சத்தைத் தொட்டு விடுவார்கள். அதாவது புனர்பூ என்பது இப்பிறவியில் கழிக்கவேண்டிய சஞ்சீத கர்மாவாகும் விட்டுப்போன கர்மவினையை இப்பிறவி யிலேயே நடத்திவிடும். ஆசைகளை குறைக்கும் போது புனர்பூச தோஷம் வலிமை இழக்கும்.

விதிவிலக்காக லக்ன சுபர், குருவின் பார்வை சனி, சந்திரனுக்கு கிடைத்தாலோ சனி, சந்திர தசையோ வராமல் இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும் புனர்பூச தோஷம் என்று கூறலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.

சனி+செவ்வாய்

சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பிரச்சினைதான்.

ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவாலானது ஆபத்தானது. வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். பிறப்பு முதல் இறப்புவரை மனிதனை வாழவும் விடாமல், வீழவும் விடாமல் கடுமையான பாதிப்பை தரக்கூடிய இரு பகை கிரகச்சேர்கை. இந்த கிரகச்சேர்க்கையில் பலவிதம் உள்ளது. நேரடி சனி செவ்வாய் சம்பந்தம்‌, மறைமுக சனி செவ்வாய் சம்பந்தம், சர்ப்பக்கிரக சனி செவ்வாய் சம்பந்தம் என்று பலவிதம் உள்ளது. செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் பங்காளிகள், உடன் பிறந்தவர் களிடம் கருத்து வேறுபாடு, குலதெய்வ வழி பாட்டில், முன்னோர்கள் வழிபாட்டில் முறையின்மையை ஏற்படச் செய்கின்றது.

இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்று நினைத் தல், முரட்டுத்தனம். நான் சொன்னா சொன் னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம். செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். சனி ஆதிக்கமுள்ளவர்கள் வானமே இடிந்து விழுந்தாலும் எதுவும் நடக்காதது போல் இருப்பார்கள்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

செல்: 98652 20406

bala040425
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe