Advertisment

சனியுடன் இணைந்த கிரங்களும் மனித வாழ்க்கையும்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/planets-conjunct-saturn-and-human-life-prasanna-astrologer-i-anandhi-0

சனி+செவ்வாய்

இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க முடியும். இந்த கிரகச் சேர்க்கை லக்னம், ஏழாம் வீட்டில் இருந் தால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தோல்வியை சந்தித்து விவாகரத்துப் பெறுகிறார் கள். பிற வீட்டில் இருந்தால் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந் திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்சினைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். கணவன்- மனைவி விவாகரத்துக் கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் பிரச் சினையை சந்தேகத்தாலும், பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்சினையாலும், பொருளாதாரக் குறைபாட்டாலும் உண்டாக்கும். கோர்ட்டில் எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம் சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கை தான்.

பரிகாரம்: தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரிகொண்டு மண் அகலில் இலுப் பெண்ணெய் தீபம் ஒன்பது ஏற்றி மனமுருகி வேண்டிவர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கைமேல் உண்டு.

Advertisment

ss

சனி+புதன்

இது நட்பு கிரகங்களின் சேர்க்கை. மந்த கிரகமான சனியும், புத்தி கிரகமான புதனின் சேர்க்கை. புதன் என்ற புத்தி கிரகம் சனி என்ற மந்த கிரகத்துடன் கேந்திர திரிகோண, பார்வை என எந்த வழியில் சம்பந்தம் பெ

சனி+செவ்வாய்

இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க முடியும். இந்த கிரகச் சேர்க்கை லக்னம், ஏழாம் வீட்டில் இருந் தால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தோல்வியை சந்தித்து விவாகரத்துப் பெறுகிறார் கள். பிற வீட்டில் இருந்தால் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந் திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்சினைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். கணவன்- மனைவி விவாகரத்துக் கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் பிரச் சினையை சந்தேகத்தாலும், பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்சினையாலும், பொருளாதாரக் குறைபாட்டாலும் உண்டாக்கும். கோர்ட்டில் எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம் சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கை தான்.

பரிகாரம்: தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரிகொண்டு மண் அகலில் இலுப் பெண்ணெய் தீபம் ஒன்பது ஏற்றி மனமுருகி வேண்டிவர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கைமேல் உண்டு.

Advertisment

ss

சனி+புதன்

இது நட்பு கிரகங்களின் சேர்க்கை. மந்த கிரகமான சனியும், புத்தி கிரகமான புதனின் சேர்க்கை. புதன் என்ற புத்தி கிரகம் சனி என்ற மந்த கிரகத்துடன் கேந்திர திரிகோண, பார்வை என எந்த வழியில் சம்பந்தம் பெற்றா லும் புத்தி தடுமாற்றம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் இருந்தால் ஏமாற்றுபவர் அல்லது ஏமாந்து போனவர் அல்லது ஏமாந்து போகப் போகிறவர் என்று கூறலாம்.

ஜாதகத்தில் புதன் வலிமைபெற்று சனி வலிமை குறைந்தவர்கள் ஏமாற்றுபவர்கள். புதன் வலிமை பெற்றவர்கள் தன் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சனி வலிமை குறைந்த வர்களை ஏமாற்றுவார்கள். ஜாதகத்தில் சனி வலிமைபெற்று புதன் வலிமையற்றவர்கள் ஏமாறுபவர்கள்.

கோட்சார புதன் சனியுடன் சம்பந்தம் பெறும்போது இழப்பு அதிகமாகவும் மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது. அத்துடன் புதன், சனி தசை நடை பெறும்போது மிகவும் கவனத்துடன் செய்யபடவேண்டும்.

மிகச் சுருக்கமாக புதன், சனி சம்பந்தம் முடிவெடுக்கும் திறனில்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப் போகிற வர்களாகவோ இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக இந்த கிரக இணைவு இருப்பவர் கள் தொடர்ந்து, ஏமாற்றத்தை சந்தித்து மனச் சோர்வால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.

பரிகாரம்: புதன்கிழமை சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழபடவேண்டும்.

சனி+சுக்கிரன்

சனி, சுக்கிரன் சம்பந்தம் இரு நட்பு கிரகங் களின் சேர்க்கை. சனி வறுமை, பசி, பட்டினி, கடன், நோய் எதிரிக்கான காரக கிரகம். சுக்கிரன் அழகு, ஆரம்பரம், லௌகீகம், இன்பம், கலைகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை குறிக்கும் கிரகம். இந்த இரண்டு கிரகக் சேர்க்கை பெரிய பொருளாதாரத்தைத் தருகிறது என்பது நாடி ஜோதிட விதி. மத்திம வயதை கடந்தபிறகே பொருளாதாரத்தில் உயர்வைத் தருகிறது. ஆனால் வாலிப கடன், வறுமை, பாலியல் நோய் ஆகியவற்றை தருகிறது என்பது எனது அனுபவ கருத்து.

இந்த கிரகச் சேர்க்கை உள்ள இருபாலருக்கும் ரகசிய வாழ்க்கை உண்டு. என் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை பார்த்துச் சொல்லுங்க என்று பெற்றோர்கள் கொண்டு வரும் ஜாதகத்தில் இந்த கிரகச் சேர்க்கை இருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று பதில் கூறலாம். ஆனால் அது ஜாத கரின் சுய விருப்ப விவாகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம். அல்லது ஜாதகரின் சுய விருப்பத் திற்கு ஒரு திருமணம். பெற்றோரின் விருப்பத் திற்காக மற்றொரு திருமணம் என்றரீதியில் வாழ்க்கை இருக்கிறது.

சமீபத்தில் ஒரு 42 வயது பெண் ஆன்லைனில் ஜாதகம் பார்த்தார்.

இந்த கிரக இணைவை பாத்தவுடன் பாலீசாக கணவன்- மனைவி தகராறு மற்றும் மறு விவாகம் சம்பந்தமான கேள்வி என்றேன். அதற்கு அந்தப் பெண் தகராறு உண்டு. மறு விவாகம் இல்லை. ஆனால் எனக்கு வேறு ஒரு ஆண் நட்பு உண்டு. அவரும் திருமணம் ஆனவர். சமீபகாலமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது. அவர் திரும்ப என்னுடன் நட்புடன் பழகுவரா? என்று கேட்டார். இந்த கிரக அமைப்பு குடும்பப் பெண்கள், ஆண்கள், திருமணம் ஆகாதவர், வயது முதிர்ந்தவர் என அனைவருக்கும் தவறான களவியல் வாழ்க்கையை ஏற்படுத்து கிறது. இதற்கு மேல் இதை பற்றி எழுத மனசு வரவில்லை.

பரிகாரம் வெள்ளிக்கிழமை மகாவிஷ்னு சமேத மகாலட்சுமியை வழிபட நல்ல புத்தி வரும்.

சனி+குரு

இந்த கிரக இணைவு தர்மகர்மாதிபதி யோகம். முன்னோர்கள் செய்த தொழில் தர்மத் தால், தானதர்மத்தால் உருவாக்கக்கூடிய யோகம் தர்மகர்மாதிபதி யோகம். கால புருஷன் ஒன்பதாம் அதிபதியான குருபகவானும் காலபுருஷ பத்தாம் அதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாக செயல்படும். சனி லட்சக்கணக்கான பணத்தைக் குறிப்பவர். குரு கோடிக்கணக்கான பணத்தைக் குறிப்பவர். மிக சாதாரண குடுப்பத்தில் பிறந்தாலும் உழைப்பால் உயர்வார்கள் அல்லது தந்தைவழி முன்னோர்கள் தன் வம்சாவளியினருக்கு தேவையான பொருளை சம்பாதித்து வைத்திருப்பார்கள்.

சிறிய உழைப்பில் பெரும் பொருள் சேரும். அந்தஸ்தான உயர்ந்த கௌரவ பதவி வகிப்பார்கள். நாடாளும் யோகம் பெற்ற அரசியல்வாதிகளாக இருப்பார்கள். அரசு உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். தனியார் நிறுவனத்தில் நிர்வாகப் பதவி வகிப்பார்கள். சுய தொழிலில் பிரபலமடைவார்கள். உறவினர் கள் இவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். இவர்கள் உறவுகளுக்கு உதவியாக இருப்பார்கள். கோவில் கட்டுவது கும்பாபிஷேகம் செய்வது. ஊர் கோவில் அல்லது குலதெய்வக் கோவிலில் தலைமைப் பதவிகள் வகிப்பார்கள். ஜனனகால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக பிரம்மஹத்தி தோஷமாகவும் செயல்படும்.

இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது. வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும். மன உளைச்சல் அதிகமாகிக்கொண்டே இருக்கும். அசுபத் தன்மையோடு செயல் பட்டால் புகழ், அந்தஸ்து கௌரவம் பங்கப்படும். வாழ்க்கைத் தரம் உயராது. குடும்ப உறுப்பினர்கள் மதிக்கமாட்டார்கள். தலைமைப் பதவிகள் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இடர்கள் இருந்துகொண்டே இருக்கும். கட்சியின் அடிமட்ட தொண்டராகவே வாழ்வார்கள். சிறிய பொருளுக்கு அதிகம் உழைக்க நேரும். தர்மகர்மாதிபதி யோகம் விரிவாக நமது "பாலஜோதிட'த்தில் வெளியாகியுள்ளது.

பரிகாரம்: சனிக்கிழமை குரு ஓரையில் சிவனுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.

சனி + ராகு, கேது

சனி, செவ்வாய் கிரகச் சேர்க்கை அடுத்து சனி+ராகு, கேது சம்பந்தம் மிகுந்த அசுப பாதிப்புகளை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி, ராகு சேர்க்கை இருந்தால் அவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் கற்பனைகள், ஆசைகள், மோகங்கள் மிக அதிகமாக இருக்கும். ஒரு தொழிலை இவர்களால் உருப்படியாக வாழ்க்கையில் செய்யவே முடியாது. எல்லாத் தொழிலும் செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் இவர்களுக்கு மிக மிக அதிகமாக இருக்கும். தொழில் மூலம் ஏமாற்றங்கள், பிரச்சினைகள், பண இழப்புகள் நஷ்டங்கள் இவர்களுக்கு கண்டிப் பாக ஏற்படும். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடுசெய்து நஷ்டங்கள், ஏமாற்றங்கள் அடைபவர்கள் இவர்கள்தான்.

அதேபோன்று சனி, ராகு சம்பந்தமுள்ள உத்தியோகஸ்தர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த எண்ணத்துடன் வாழ்பவர்கள். இவர்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால் அந்த வேலை செய்து முடிக்கும்வரை இவர்களுக்கு தூக்கம் வராது. ஆயிரம் பேருக்கு மத்தியில் இவர்கள் பெயர், புகழ் பேசப்படும்.

சுய ஜாதகத்தில் சனி, கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு தொழிலாளர்களால், தொழிலால் வம்பு, வழக்கு உருவாகும். பல எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இவர்கள் மிகுதியான தொழில் கடனை சுமப்பவர்கள். இவர்களுக்கு தொழில் செய்யவே விருப்பம் இருக்காது. ஏதோ செய்தாக வேண்டுமே வேறு வழி இல்லையே என்றுதான் இவர்கள் தொழில் செய்வார்கள். அடுத்தவர்களுக்கு இவர்கள் தொழில் சார்ந்த உதவி எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு தொழில் சார்ந்து உதவிசெய்ய யாரும் செய்ய முன்வரமாட்டார்கள். இவர்கள் பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும். பல தொழில் அனுபவங்கள் இவர்களிடம் இருக்கும். இவர்களுடைய தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும்.

ஆனால் இவர்களுக்கு பயன்படாது.

சனி, கேது சம்பந்தமுள்ள உத்தியோகஸ் தர்கள் பலர் கௌரவ அடிமையாக அல்லாடு கிறார்கள். வெகுசிலர் கன்சல்டன்ஸி போன்ற ஆலோசனை வழங்கி சுகமாக வாழ்கிறார்கள். இந்த இணைவு உள்ள வேலையாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு இலவச ஆலோசனையால் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

இதுபோன்று சனி ராகு+கேது சம்பந்தம் கோட்சாரத்தில் ஏற்படும் காலங்களில் தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

பரிகாரம்: தொழில், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் வாழ்வாதாரத்தை மாற்றும் வல்லமை படைத்தது. தொழில், உத்தியோகத்தில் விரும்பத்தகாத மாற்றம் ஏற்படும் காலத்தில் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாட்டையும் சனிக்கிழமைதோறும் ராகு காலத்தில் காலபைரவர் வழிபாட்டையும் வழக்கப் படுத்திக்கொள்வது நல்லதாகும்.

விதிக்கு கட்டுப்பட்டு செயல்படும் கிரகம் சனிபகவான் என்பதால் சுய ஜாதகமும், கோட்சாரமும் இணைந்தே செயல்படும். உரிய வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்க இன்னல்கள் விலகும்.

செல்: 98652 20406

Advertisment
bala110425
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe