ஜாதகத்தில் மாரகாதிபதி தசை நடக்கும்போது, ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அந்த சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு மன நோய் வரும்.
லக்னாதிபதி பலவீனமாக இருந்தால் அல்லது அஸ்தமனமாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
அஸ்தமனமான கிரகத்தின் தசை நடக்கும்போது, 6-ஆம் அதிபதியின் அல்லது 8-ஆம் அதிபதியின் அந்தரம் நடந்தால், மன நோய்க்கு வாய்ப்பு இருக்கிறது. லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் நீசச் சூரியன் இருந்தால், மன அழுத்தம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாய், 2-ல் சனி, 8-ல் சந்திரன், கேது இருந்தால், அடிக்கடி மனநோய் வரும். 3-ஆம் பாவத்தில் சுக்கிரன், ராகு, 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அவருக்கு அதிகமாக மனநோய் இருக்கும். அதனால் அவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கும்.
லக்னத்தில் லக்னாதிபதி, புதன் அஸ்தமனமாக இருந்து, அதே ஜாதகத்தில் பலவீனமான சந்திரன் 8 அல்லது 11-ல் இருந்தால், மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
2-ல் சந்திரன், ராகு, 9-ல் சனி இருந்தால், ஏழரை நாட்டுச்சனி நடக்கும்போது குடும்பப் பிரச்சினை காரணமாக மனநோய் வரும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/planets_6.jpg)
லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீசச் சந்திரன், 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு மனைவியுடன் உறவு சரியாக இருக்காது. அதனால் அவருக்கு மன அழுத்தம் உண்டாகும்.
லக்னத்தில் சனி, செவ்வாய், 8-ல் ராகு, சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் அதிகமாக சிந்திப்பார். நிறைய பேசுவார். பிறருடன் அவர் ஒத்துப்போகமாட்டார். அதனால் அவருக்கு மனநோய் வரும்.
ஒருவருக்கு அஷ்டமச் சனி நடக்கும்போது, கோட்சாரத்தில் குரு பகவான் 3-ல் இருந்தால், குடும்பப் பிரச்சினை காரணமாக அவருக்கு மனநோய் வரும். தூக்கம் சரியாக வராது. எங்காவது ஓடிவிடலாமா என்று நினைப்பார்.
ஒரு ஜாதகத்தில் 5-ல் ராகு, 11-ல் சந்திரன், சூரியன், 12-ல் சனி, செவ்வாய் இருந்தால், வாழ்க்கையின் முதல்பகுதியில் கஷ்டம் இருக்கும். இரண்டாவது பகுதியில் கணவன்-மனைவி உறவு சரியாக இருக்காது. அதனால் அவர் எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பார். எல்லாரிடமும் சண்டை போடுவதைப்போல பேசுவார்.
ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்து, சந்திரன் பலவீனமாக அதுவும் தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அவருக்கு மனதில் தைரியம் இருக்காது. மனதில் பயத்துடன் இருப்பார். சரியாகத் தூங்கமாட்டார்.
2-ல் செவ்வாய், 4 ல் சனி, சூரியன், 11-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு ஏழரை நாட்டுச் சனி அல்லது அஷ்டமச் சனி நடக்கும்போது மனக் கஷ்டமும் பணக் கஷ்டமும் ஏற்படும். அதன்காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்படும்.
சந்திரன், சனி, கேது 6, 8, 11-ல் இருந்து, சூரியன் நீசமாக இருந்தால், அவருக்கு மனநோய் பலமாக இருக்கும். சிலவேளைகளில் அவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வீசி எறிவார்கள். சிலர் தங்களின் தலைகளில் தாங்களே அடித்துக்கொள்வார்கள்.
வீட்டில் தெற்கு திசை அதிகமாக காலியாக இருந்து, படுப்பவர் வட மேற்கில் படுத்தால், அவருக்கு மனநோய் வர வாய்ப்பு இருக்கிறது.
வீட்டின் மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து, படுக்கும் அறை வடமேற்கு திசையில் இருந்தால், அவருக்கு மனநோய் வரும்.
வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்து, வடகிழக்கில் படுத்தால் அவருக்கு மனநோய் வரும்.
வீட்டின் வடகிழக்கில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அல்லது வட கிழக்கு மூடியிருந்து, தென்மேற்கு திசையில் கழிவறை இருந்தால் அங்கு வாழ்பவருக்கு மனநோய் வரும்.
பரிகாரங்கள்
தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது
வீட்டில் பச்சை, சிவப்பு நிறம் இருக்கக்கூடாது.
வீட்டில் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருக்கக்கூடாது.
அரச மரத்திற்கு நீர் விடவேண்டும்.
குலதெய்வத்தை வழிபடவேண்டும்.
தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
வீட்டில் ஆஞ்சனேயரின் யந்திரத்தை வைத்துப் பூஜை செய்யவேண்டும்.
தினமும் பைரவருக்கு தீபமேற்றவேண்டும்.
தினமும் சூரியனுக்கு நீர் விடவேண்டும்.
தினமும் காலையில் சிவனுக்கு நீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.
.செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/planets-t.jpg)