ந்த 2025-ம் ஆண்டில் வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி யாகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் பலர் இடப்பெயர்ச்சி செய்வது இயல்பு.

குறிப்பாக தொழில் உத்தியோகத்திற்காக, பணம் சம்பாதிக்க, மன நிம்மதிக்காக, உல்லாச பயணத்திற்காக, கல்விக்காக இடம் பெயருவார்கள். சிலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனையைத் வழங்கும் இடப்பெயர்ச்சி பலருக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் சுப- அசுபங்களைப் பார்க்கலாம். மனிதர்கள் வாழ்வில் நிகழும் இடப் பெயர்ச்சியை சுய ஜாதகரீதியான இடப்பெயர்ச்சி, கோட்சாரரீதியான இடப்பெயர்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம்.

1. சுய ஜாதகரீதியான இடப்பெயர்ச்சி ஒருவர் வசிக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது நான்காமிடம்.

அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான மூன்றாம் வீடுதான் இடப்பெயர்ச்சியைக் குறிக்கிறது நீண்டதூரப் பயணம் செய்யும் இடப்பெயர்ச்சி ஒன்பதாமிடத்தைக் குறிக்கும். நீண்ட பயணத்தை மேற்கொண்டு அறிமுகம் இல்லாத மனிதர்களுடன் வாழ்வது 12-ஆமிடம். அதாவது வெளி நாட்டு பயணத்தையும் கூறுமிடம். ஆக, ஒருவரின் சுய ஜாதகத்தில் 3, 9, 12-ஆம் பாவகங்கள் தசாபுத்தி ரீதியாக செயல்படும் போது இடப்பெயர்ச்சி நிகழும். காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள், ரகசியங்கள் அடங்கி யுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படை யில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கி றார்கள்.

ss

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது. தடையற்ற இயக்கம் கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ- அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும். மாற்றம் வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர ராசிகள் வலிமைபெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசாபுக்திகள் நடத்தினால் ஜாதகருக்கு இடப் பெயர்ச்சி வேகமாக நடக்கும். குடியிருக்கும் வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள். பார்க்கும் வேலை அல்லது தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு வேலையில் மூன்று மாதத்திற்கு மேல் நிலைக்கமாட்டார்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை, தொழிலுக்கு பணம் செலவழித்துச் சென்று ஊர், பிடிக்கவில்லை அல்லது நாடு பிடிக்கவில்லை என்று பாதியில் திரும்பிவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு தொழிலை நடத்துவார்கள்.

Advertisment

உலகத்திலுள்ள அனைத்து தொழிலை யும் கற்றுக்கொள்வார்கள் ஆனால் ஒரு தொழிலைக்கூட உருப்படியாக செய்ய மாட்டார்கள். இவ்வளவு ஏன் பஸ்ஸில், டிரெனில் பயணித்தால்கூட இடம் மாறி, மாறி அமர்ந்து பயணிப்பார்கள். சிறு குழந்தை களாக இருந்தால் அடிக்கடி பள்ளிக்கூடம் மாறுவார்கள். இவர்கள் சரியான சந்தர்ப்பத் திற்காக காத்திருப்பார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறுவார்கள். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப மிக குறுகிய காலத்தில் எதிலும் வேகமாக விவேகமில்லாத முடிவினை எடுப்பார்கள்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான இடப்பெயர்ச்சியை சந்திப்பவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் குலதெய்வத்தின்முன்பு நெய் தீபமேற்றி தொடர்ச்சியாக வணங்கிவருவது நல்லதாகும்.

ஸ்திரம்

Advertisment

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது. அசைவற்ற நிலையைக்கொண்ட தன்மையாகும். சுபமோ- அசுபமோ எதிர்பாராதவிதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும். ஸ்திர லக்னம் காத்தால் தத்துவத்தை அடக்கியது. கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ளவர்கள். இவர்கள் ஒருமுறை எடுத்த முடிவை யாராலும் மாற்றமுடியாது.

அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாறாமல் மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாத மாக இருப்பார்கள். நிலையான வெற்றியை பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓயமாட்டார்கள்.

ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம் சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடத்தினால் இடப் பெயர்ச்சியாகி வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்வார்கள். சிறிது சிரமப்பட்டாலும் இடப்பெயர்ச்சியால் நிலையான பல யோகங்களை ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கும். முன்னேற்றங் கள் வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும். ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள், லக்னாதிபதி ஸ்திர ராசியில் நின்றபவர்கள் தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயர்ந்தால் நிலையாக அங்கேயே தங்கிவிடுவார்கள். இளம் வாலிப பருவத்தில் ஸ்திர ராசியில் நிற்கும் கிரகங்களின் தசை நடந்தால் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று படித்து அங்கேயே வேலை கிடைத்து செட்டிலாகுவார்கள்.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்திலிருந்து ஒரு கிரகம் தசை நடத்தும்பொழுது தினமும் மகாவிஷ்ணுவிற்கு உரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர நன்மைகள் அதிரிக்கும்.

உபயம்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மைமையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும் போது கிரக தன்மை சரம். மாறிய பிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்ர நிலையில் சஞ்சாரம் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புவது உபயம். இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது.

ஒவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமைபெற்ற கிரகத்தின் தசாபுக்திகள் நடைபெற்றால் இடப்பெயர்ச்சியால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

இந்த ராசியில் அசுப தன்மைபெற்ற கிரகம் தசாபுக்திகள் நடத்தினால் இடப் பெயர்ச்சியால் ஜாதகர் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டுவருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை அவர் வீட்டின் கதவை தட்டும். ஒரு இடப்பெயர்ச்சியை சமாளித்து மீளும் முன்பு மீண்டும் அடுத்த இடப்பெயர்ச்சி தயாராகிவிடும். அப்படிச் செய்யலாமா, இப்படி செய்யலாமா என யோசித்துகொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

உபய லக்னத்தில் நின்று கிரகம் தசை நடத்தும்போது இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அசவுகரியத்தை சந்திப்பவர்களுக்கு அரச மரப் பிரதட்சணம் மற்றும் வழிபாடு நன்மை தரும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406