பார்வைக் குறைவுக்கான கிரக அமைப்புகள்!

/idhalgal/balajothidam/planetary-systems-visual-impairment

னி மனிதனின் வாழ்வில் செல்வத்தைவிட ஆரோக்கியமே மிகவும் முக்கியமாகும். ஒருவருக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருந்துவிட்டால் அவர் அனைத்து செல்வத்தையும் அடைந்ததுபோலாகும். ஒருவரின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது கண் பார்வையாகும். கண்பார்வை சிறப்பாக இருப்பதற்கும் ஜோதிடரீதியாக சில அமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஒருவர் பிறக்கின்றபொழுது இருக்கின்ற கிரக அமைப்பு ஜனன ஜாதகமாகும். ஜனன ஜாதகத்தில் 12 ராசிகளை 12 பாவங்களாக, ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பாவத்தைக்கொண்டு ஆராயவேண்டி இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத் த

னி மனிதனின் வாழ்வில் செல்வத்தைவிட ஆரோக்கியமே மிகவும் முக்கியமாகும். ஒருவருக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருந்துவிட்டால் அவர் அனைத்து செல்வத்தையும் அடைந்ததுபோலாகும். ஒருவரின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது கண் பார்வையாகும். கண்பார்வை சிறப்பாக இருப்பதற்கும் ஜோதிடரீதியாக சில அமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஒருவர் பிறக்கின்றபொழுது இருக்கின்ற கிரக அமைப்பு ஜனன ஜாதகமாகும். ஜனன ஜாதகத்தில் 12 ராசிகளை 12 பாவங்களாக, ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பாவத்தைக்கொண்டு ஆராயவேண்டி இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திற்கு 2-ஆம் வீடு வலது கண்ணுக்கும், 12-ஆம் வீடு இடது கண்ணுக்கும் உரிய பாவமாகும்.

eye

இந்த இரண்டு ஸ்தானங்களும் பலமாக இருந்து, சுபர் பார்வையோடு இருந் தால் கண் பார்வை சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு ஸ்தானங்கள் பாதிக்கப்பட் டிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் கண் பார்வை பாதிக்கப்படும். நவகிரகங்களில் கண் பார்வைக்கு முக்கிய கிரகமாக விளங்குவது சூரியனாகும். அதிலும் குறிப்பாக சூரியன் வலது கண்ணுக்கும், சந்திரன் இடது கண்ணுக்கும் காரக மாவார்கள். சுக்கிரனும் ஒருவகையில் கண் பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜனன ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பாவிகள் சேர்க்கைப்பெற்று பலவீனமாக இருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். சூரியன், சந்திரனை சனி, செவ்வாய் பார்த்தாலும், 2, 12-ஆம் வீடுகளை சனி பார்த்தாலும் கண் சம்பந்தப்பட்ட விஷயங் களில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். அதுபோல 2, 12-ஆம் வீடுகளுக்கு செவ்வாய் பார்வை இருந்தால் கண்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உண்டாகும்.

லக்னத்திற்கு 2, 12-ஆம் வீடுகளுக்கு 7-ஆம் வீடு- குறிப்பாக 2-ஆம் வீட்டுக்கு 7-ஆம் வீடான 8-ஆம் வீட்டிலும், 12-ஆம் வீடுக்கு 7-ஆம் வீடான 6-ஆம் வீட்டிலும் பாவிகள் அமைந்தால் அதன்மூலம் 2, 12-ஆம் வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் 6, 8-ல் பாவ கிரகங்கள் இல்லாமலிருப்பது மிகவும் நல்லது.

ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பாவர்கள் சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் ராகு- கேதுவுக்கு மிக அருகிலிருந்தாலும், குறிப்பாக சூரியன் சந்திரன் 2, 12, 6, 8-ல் கேதுவுக்கு மிக அருகில் அமையப்பெற்றாலும் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

2, 6, 8, 12-ல் சந்திரன் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் ஒருசிலருக்கு மாலைக்கண் நோய் உண்டாகிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் 2, 6, 8, 12-ல் இருந்து பாவி களுடன் இருந்தால் கண்களில் நீர் சம்பந்தப் பட்ட பாதிப்புகள், கண்களில் நீர் வடியும் அமைப்பு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் பாதிக்கப் படுகிறதோ அந்த கிரகத் திற்குரிய இறைப் பரிகாரங் கள் மேற்கொள்வதன் மூலமாக பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். 2, 6, 8, 12-ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகரங்கள் பாவிகளுடன் சேர்ந்து பலவீனமாக இருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்படுமென்றாலும், குரு பார்வை இருந்தால் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பிலிருந்து குண மாகும் வாய்ப்பு ஏற்படும்.

-முனைவர் முருகு பாலமுருகன்

bala200924
இதையும் படியுங்கள்
Subscribe