சப்தரிஷி நாடி
ஜோதிடமுறை, அத்திரி, அகஸ்தியர், ஜெய்முனி, நாரதர், கொங்கனர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ஏழு ரிஷிகளால் ஜாதகப் பலன்கள் தொகுத் துக் கூறப்பட்டதாகும்.
இந்த ஏழு ரிஷிகளால், மனிதனின் வாழ்க்கை நிலை பற்றிச் சொல்லப்பட்டுள்ள ஜோதிட பலன்கள், மற்ற ஜோதிடமுறை, ஜோதிட விதிகளில் பலன் கூறும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் பலன் கூறும் முறையாகும். இன்றைய நாளில் வேத ஜோதிடம், கணித ஜோதிடர்கள், தசை, புக்தி, அந்தரம் இவற்றை கணக்கீடு செய்து, திருமணம், புத்திரன், தொழில், உறவுகள் ஒற்றுமை, நட்பு, கணவன், மனைவி, சகோதரர்கள், சகோதரி ஒற்றுமை, பிரிவு போன்ற அனைத்தையும் பலன்களாகக் கூறுகின்றார்கள். ஆனால், இவர்கள் கூறும் தசை, புக்தி காலங்களில் ஜோதிடர்கள் கூறுவதுபோன்று, எதுவும் முழுமையாகப் பலன்கள் நடைபெறுகின்றதா என்றால் இல்லையென்றே மக்களால் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/relatives_0.jpg)
சப்தரிஷி நாடி ஜோதிடமுறையில் லக்னம் முதல் 12 ராசிகளில் அமைந்துள்ள கிரகங்களில், லக்னாதிபதியை ஜாதகராகக் குறிப்பிட்டு, அந்த லக்னாதிபதியை பார்க்கும் கிரகங்களைக்கொண்டு பலன் கூறப்படுகின்றது. நடைமுறையில் அந்தப் பலன்கள் சரியாகவே உள்ளது.
உதாரணமாக ஒரு அரசியல் கட்சியின் தலைவர் லக்னாதிபதி எனக்கொள்வோம். அந்த கட்சித் தொண்டர்களால் விரும்பி ஆதரவு தந்தால்தான் அவர் தலைவராகத் தேர்தலில் வெற்றிபெற்று பதவியை அடையமுடியும். தொண்டர்கள் ஆதரவு இல்லையென்றால் தனித்து அவர் பதவியை அடையமுடியாது. இங்கு தலைவர் லக்னாதி பதியாகவும், தொண்டர்கள் பார்க்கும் கிரகங்களும் ஆவார்கள்..
ஒரு தொழிலதிபர், ஒரு தொழிலையோ அல்லது ஒரு தொழிற்சாலையையோ, ஆரம்பித்து நடத்தும்போது அந்த முதலாளி லக்னாதிபதியாவார். அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் கள் லக்னாதிபதியைப் பார்க்கும் கிரகங்கள் ஆவார்கள். தொழிலாளர்கள் முதலாளிக்கு நன்மை செய்யும் நிலையில் ஆதரவாக இருந்தால்தான் அந்த முதலாளியும், தொழிலும் பெரிதாக வளரும். தொழிலாளர் கள் ஆதரவு இல்லையென்றால் தொழில் முடங்கி அழியும்.
ஒரு கோவிலில் கர்ப்ப கிரகத்திலுள்ள கடவுள், லக்னாதிபதியாவார். அந்தக் கோவிலுக்கு கடவுளைத் தரிசிக்க வரும் மக்கள், பார்க்கும் கிரகங்கள் ஆவார்கள். அந்தக் கோவிலுக்கு பக்தர்கள், கடவுளைப் பார்க்க வரவில்லையென்றால் அந்த கடவுள் பூஜை, நைவேத்தியம், அபிஷேகம், அர்ச்சனை, உற்சவம் இல்லாமல் கோவில் பிரசித்தம் இல்லாமல் போய்விடும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி கிரகமோ அல்லது மற்ற கிரகங்களோ ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, பகை என எந்த நிலையில் இருந்தாலும் அந்த கிரகங்கள், பாவாதிபதிகள், தனித்து எந்த பலனையும் தராது. தருவதற்கு தனித்த பலமும் கிடையாது. ஒரு பாவாதிபதி கிரகத்தைப் பார்க்கும் மற்ற கிரகங்களால்தான் பலம் பெற்று நன்மை- தீமை பலன்களை எந்த க் கால சமயத்தில் எப்படி? அனுபவிக்கச் செய்யும் என்று கூறுவதுதான், சப்தரிஷி நாடி ஜோதிடமாகும்.
குடும்ப உறவு களில் தாய், தந்தை, சகோத ரன், சகோதரிகள், கணவன்- மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர், தந்தை, மகன் என ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உறவு பகை யாகிவிடுவதற்கு அந்த பாவாதிபதிகளை பார்க்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் தீமையான பார்வை பலம் தான் காரணம் என்று சப்தரிஷிகள் கூறியுள்ளார்கள்.
லக்னத்திற்கு இரண்டாவது ராசிக்குடையே கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால் தாயின் மூத்த சகோதரன் (அண்ணன்) சகோதரி (அக்காள்) இந்த உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
லக்னத்திற்கு மூன்றாவது ராசிக்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது கிரகம் இருந்தால், ஜாதகரின் தம்பி, தங்கைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பகை உண்டாகும்.
நான்குக்குடையவன் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசியில் கேது நின்றால் பெற்ற தாய் பகையாவாள்.
ஐந்தாமதிபதி நின்ற ராசிக்கு 1, 5, 9-ல் கேது நின்றால் பெற்ற குழந்தைகளுடன் ஜாதகர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பார்.
ஆறாவது ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால் தாய்- மாமனுடன் ஜாதகர் பகையாவார்.
லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால் கணவன் அல்லது மனைவியுடன் ஜாதகர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பார்.
எட்டுக்குடையவன் நின்ற ராசிக்கு 1, 5, 9-ல் கேது இருந்தால் மாமியாரின் அண் ணன், அக்காளிடம் ஜாதகர் கருத்து வேறுபாடு கொள் வான்.
ஒன்பதுக்குடைய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ல் கேது இருந்தால் பெற்ற தகப்பனுடன் ஜாதகர் (மகன்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவான்.
பத்துக்குடையவன் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால் மாமியாருடன் ஜாதகர் பகை ஆவான்.
பதினொன்றாம் ராசிக்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால் உடன்பிறந்த அண்ணன், அக்காள் இவர்களுடன் ஜாதகர் கருத்து வேறுபாடு கொண்டு பகையாவான்.
பன்னிரண்டுக்குடைய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் தந்தையைப் பெற்ற பாட்டி, பாட்டன், தாயைப் பெற்ற பாட்டி, பாட்டனுடன் ஜாதகர் கருத்து வேறுபாடு கொண்டு பகை ஆவான்.
செல்: 93847 66742
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-02/relatives-t.jpg)