சங்கிய உடை, கலைந்த கேசம், முகத்தில் சேகாம், உடலில் தளர்ச்சி- மொத்தத்தில் பிரம்மை பிடித்தது போன்ற தோற்றம்கொண்ட ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலன்கேட்க வந்து சிறிதுநேரம் எதுவும் பேசாமலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

"ஐயா, என்ன விஷயமாக நாடியில் பல கேட்க வந்துள்ளீர்கள்?'' என்று நானே அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

"ஐயா, நான் எதைச் சொல்வது? நாங்கள் வந்த காரணத்தைச் சொல்லும் மனநிலையில் இல்லை'' என்று மெல்லிய குரலில் கூறினார்.

இந்த தம்பதியினர் ஏதோவொரு பெரிய துக்க சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிந்து, அகத்தியரை வணங்கி ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் படித்துப்பார்த்தேன்.

Advertisment

ஓலையின் அகத்தியர் தோன்றி, "இவர்களுக்கு ஒரு மைந்தன் இருந்தான். அவன் ஒரு வாகன விபத்தில் மரணமடைந்துவிட்டான். இதுபோன்று தங்களுக்கு ஏன் நடந்து என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியனை நாடி வந்துள்ளான்' என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

இவர்கள் பலன்காண வந்துள்ள விஷயத்தைத் தெரிந்துகொண்ட நான் அவர்களை நோக்கி, "ஐயா, நான் ஓலை படித்துப் பலன்கூறினா லும், அதை கவனமாகக் கேட்கும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதா? அதைப்புரிந்து ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையென் றால் இன்னும் சிறிது காலம் கழித்து வாருங்கள்'' என்றேன்.

"ஐயா, நீங்கள் ஓலையில் வரும் பலனைக் கூறுங்கள். நாங்கள் புரிந்து கொள்வோம்'' என்றார் அவர்.

Advertisment

ஜீவநாடியில் அகத்தியர் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

"இவன் மகன் தொழிற்கல்வி படித்துவந்தான். ஒரு பண்டிகை நாளில், தன் நண்பனைக் காண வாகனத்தில் செல்லும்போது, எதிரே வந்த வாகனத் தில் மோதி விபத்து ஏற்பட்டு, விழுந்த அதே இடத்தில் மரணமடைந்தான். தன் ஒரே மகன் இழப்பைத் தாங்கமுடியாமல், இதற்குக் காரணம் விதியா? வினையா அல்லது ஏதாவது கெட்டசக்தி பாதிப்பா என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்துள்ளான். காரணத்தைக் கூறுகிறேன். புரிந்துகொள்ளச் சொல்.

இந்த தம்பதியினர் முற்பிறவியில், வம்ச முன்னோர்கள் கால வாழ்வில், தன் குடும்ப உறவுகளுக்குச் செய்த பாவச் செயல்களால் பாதிக்கப்பட்ட அவர்கள் விட்ட சாபம், பிறவிதோறும் தொடர்ந்து வளர்ந்து, இந்தப் பிறவியில், இவன் பெற்றமகனை இழக்கச் செய்து, இவர்கள் வாழ்நாள் முழுவதும் புத்திர சோகத்தை அனுபவிக்கச் செய்துவிட்டது. (அவர்கள் செய்த துரோகங்களையும் கூறினார்.)

dd

மகனே, ஒருவன் மற்றவர்களுக்குச் செய்யும் துரோகம், பாவமே கர்மவினையாகி, அந்த வினைப்பதிவே விதியாகி, அடுத்தடுத்த பிறவிகளில் தண்டனையாக தரப்பட்டு அனுபவிக்கச் செய்கிறது. இவன் மகன் இழப்பிற்கு வேறு எதுவும் காரணமில்லை'' என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட அவர், "ஐயா, எங்கள் வம்சத்தில் உண்டான சாபத்தையும், மகன் இழப்பிற்குக் காரணத்தையும் தெரிந்து கொண்டோம் நீங்கள் கூறியதுபோன்று எங்கள் வம்ச முன்னோர்கள் காலத்தில் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் எனக்கு ஒரு கேள்வி.

எனது மகன் பிறந்தபோது, அவனது பிறப்பு ஜாதகத்தில் இவனுக்கு 72 வயதில் மரணம் என்று ஜோதிடர் எழுதிக் கொடுத்தார்.

ஆனால், 20 வயதில் இறந்துவிட்டான். இந்த சந்தேகத்தையும் தீர்த்துவிடுங்கள்'' என்றார்.

"ஐயா, இந்த கேள்விக்கான பதிலை அந்த ஜோதிடரிடம்தான் கேட்க வேண்டும். நான் என்ன சொல்ல'' என்று கூறி அனுப்பி வைத்தேன்.

இன்றைய நாளில் தினமும் ஏராளமானவர்கள் விபத்தில் சிக்கி காயம்படுகின்றனர்;

உடல் உறுப்புகளை இழக்கின்றனர். மரணமடைகின்றனர். அவர்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் என்பதை அறிந்துகொள்ள, விபத்தில் மரணமடைந்தவர்களின் ஜாதகத்தை சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிடமுறையில் ஆய்வு செய்தபோது, அவர்களின் பிறப்பு ராசிக்கட்டத்தில் பல ஒற்றுமைகளை அறியமுடிந்தது. அதனை சுருக்கமாக இங்கு காண்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக் கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால், இந்த ஜாதகருக்கு விபத்து, மரணமடையும் வாய்ப்புண்டு.

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 2-ஆவது ராசியில் ராகுவும் என அடுத்தடுத்து இந்த மூன்று கிரகங்களும் இருந்தால் ஜாதருக்கு விபத்து, மரணம் ஏற்படக்கூடும்.

குருவும் செவ்வாயும் ஒரே ராசியிலிருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால், விபத்துகளை சந்திக்க நேரும்.

சனியும் செவ்வாயும் ஒரே ராசியில் இருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால், ஜாதகருக்கு விபத்தும், அதில் மரணமும் ஏற்படலாம்.

ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 2-ஆவது ராசியில் ராகுவும் அடுத்தடுத்து இருந்தால் ஜாதகருக்கு விபத்து உண்டாகலாம்.

சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் இருந்தால் ஜாதகருக்கு விபத்துகள் நேரிடலாம்.

குரு இருக்கும் ராசிக்கு 5-ஆவது ராசியில் செவ்வாயும், செவ்வாய் இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தால் விபத்து உண்டாகலாம்.

குரு இருக்கும் ராசிக்கு 9-ஆவது ராசியில் செவ்வாயும் ராகுவும் இருந்தாலும் விபத்து ஏற்படலாம்.

சனி இருக்கும் ராசிக்கு 5-ஆவது ராசியில் செவ்வாயும், அந்த செவ்வாய்க்கு 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தால் விபத்துகள் ஏற்படலாம்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் அவளது சகோதரனுக்கு அல்லது கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 5-ல் செவ்வாயும், அந்த செவ்வாய்க்கு 2-ல் ராகுவும் இருந்தால் அவள் கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.

பெண்ணின் ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 2-ஆவது ராசியில் ராகுவும் அடுத்தடுத்து மூன்று ராசிகளில் இருந்தால் அவள் கணவனுக்கு விபத்துகள் ஏற்படலாம்.

பெண்ணின் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் (குரு) செவ்வாய், ராகு இருந்தால் கணவனுக்கு விபத்து உண்டாகலாம்.

குரு இருக்கும் ராசியிலிருந்து 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த செவ்வாய்க்கு 2-ஆவது ராசியில் ராகு இருந் தால் அவள் கணவனுக்கு விபத்து நேரிடலாம்.

பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1, 5, 9-ஆவது ராசிகளில் அல்லது 1, 2, 12-ஆவது அடுத்தடுத்த ராசிகளில் இருந்தால் அந்தப் பெண்ணின் சகோதரன், கணவன், மூத்த மகன் ஆகியோருக்கு விபத்துகள் உண்டாகலாம்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், ராகு 1, 5, 9-ஆவது ராசிகளில் இணைந்திருந் தால் அவன் மனைவிக்கு நெருப்பினால் விபத்து உண்டாகலாம்.

ஒருவர் ஜாதகத்தில் சனி, சூரியன், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் 1, 5, 9-ஆவது நெருப்பு ராசிகளில் இருந்தால் தீயினால் விபத்து, மரணம் உண்டாகலாம்.

ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், ராகு ஒரே ராசியிலோ அல்லது 1, 5, 9-ஆவது ராசி களிலோ அல்லது அடுத்தடுத்த ராசிகளிலோ இருந்தால் ஜாதகரின் மனைவிக்கு நீரில் கண்டம் காட்டும்.

குரு, சந்திரன், ராகு ஆகியவை ஒன்றுக் கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளிலோ அல்லது 2, 6, 10-ஆவது ராசிகளிலோ அல்லது அடுத் தடுத்த ராசிகளிலோ இருந்தாலும் ஜாதக ருக்கு நீரில் விபத்து, கண்டம் ஏற்படும்.

மேலும் சில குறிப்புகளை அடுத்த இதழில் காண்போம்.