Advertisment

விபத்துக்கான கிரக காரணம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/planetary-cause-accident-r-mahalakshmi

ss

Advertisment

டைமுறை வாழ்வில் எதிர் பாராதவிதமாக யாராவது இரண்டு பேர் இடித்துக் கொண்டாள், கொஞ்சம் பார்த்து போங்க கூடாதா என கண்டிப்புட னும் எரிச்சலுடனும் கூறுகிறோம்.

இதுவே வாகனங்கள் மோதிக் கொண்டால்?

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு பயங்கர விபத்து நிகழ்ந்தது. அதிக மனிதர்களின் மரணம் நிகழ்ந்துள்ளது. இவ்விதம் ஏதோ ஒரு இடத்தில் அதிக மனிதர்கள் ஒரே நேரத்தில் இறப்பதை "ஙஹள்ள் க்ங்ஹற்ட்' என்று கூறுவர். தமிழில் இதனை கூட்டு மரணம் என்பர்.

இவ்விதம் பொதுவான உலகியல் பலன்களை முண்டேன் அஸ்ட்ராலஜி என்னும் உலகியல் ஜோதிடம் தெளிவுபட உரைக்கும். சமீபத்தில் 2-6-2023 அன்று மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோத

ss

Advertisment

டைமுறை வாழ்வில் எதிர் பாராதவிதமாக யாராவது இரண்டு பேர் இடித்துக் கொண்டாள், கொஞ்சம் பார்த்து போங்க கூடாதா என கண்டிப்புட னும் எரிச்சலுடனும் கூறுகிறோம்.

இதுவே வாகனங்கள் மோதிக் கொண்டால்?

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு பயங்கர விபத்து நிகழ்ந்தது. அதிக மனிதர்களின் மரணம் நிகழ்ந்துள்ளது. இவ்விதம் ஏதோ ஒரு இடத்தில் அதிக மனிதர்கள் ஒரே நேரத்தில் இறப்பதை "ஙஹள்ள் க்ங்ஹற்ட்' என்று கூறுவர். தமிழில் இதனை கூட்டு மரணம் என்பர்.

இவ்விதம் பொதுவான உலகியல் பலன்களை முண்டேன் அஸ்ட்ராலஜி என்னும் உலகியல் ஜோதிடம் தெளிவுபட உரைக்கும். சமீபத்தில் 2-6-2023 அன்று மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மடிந்து போயினர். இவ்வித கூட்டு மரணத்திற்குக் காரணம் என உலகியல் ஜோதிடம் கூறுவது--

Advertisment

ப் பாவ கிரகம் ஒன்றுக்குமேல் ஒருவரை ஒருவர் பார்த்து கிரகச் சேர்க்கை ஏற்படுவது.

ப் சனி, ராகு; சனி, செவ்வாய்; குரு, கேது அல்லது ராகு, என இவர்களின் பார்வை, சேர்க்கை, சம்பந்தம்.

ப் சனியும் ராகுவும் கிரக யுத்தம் பெறுதல்.

ப் இதுபோல் ராகு, செவ்வாய் கிரக யுத்தம் பெறுவது கூட்டு மரணத்தைத் தோற்றுவிக்கும்.

ப் செவ்வாய், சனி சம்பந்தம் தீவிரவாத அழிவைத் தரும்.

ப் செவ்வாய், ராகு இணைவு வாகன விபத்துக்களைத் தரும்.

குரு, ராகு சம்பந்தம், மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போவதைக் குறிக்கும்.

விபத்து நிகழ்ந்த 2-6- 2023 அன்று கோட்சாரப்படி செவ்வாய் நீசம். அவர் தனது நான்காம் பார்வையால் கேதுவையும், தனது எட்டாம் பார்வையால் சனியையும் நோக்குகிறார். சனி தனது மூன்றாம் பார்வையால் குரு, ராகு, புதன் ஆகியோரை நோக்குகிறார். இதன்மூலம் அனைத்து பாவ கிரகங்களும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கின்றனர்.

மேலும் கூட்டு மரணத்திற் கான குரு, ராகு சேர்க்கை யும் உள்ளது.

இதில் குருவும் ராகுவும் அஸ்வினி நட்சத்திரம் என்னும், கேது சாரத்தில் நின்று கொடுமையான சண்டாள யோகம் பெற்றுள்ளனர். கேது நீச செவ்வாயின் பார்வை பெறுகிறார். அன்று சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சென்று கொண்டிருந்தார். விசாகம் என்பது குரு சார நட்சத்திரம். ஆக குரு கூட்டு மரணம் கொடுத்து விட்டார்.

மேலும் நீச செவ்வாய் சனியைத் தனது எட்டாம் பார்வையால் பார்ப்பதால், இது நிச்சயம் தீவிரவாதிகளின் கொடுமை செயலாகதான் இருக்கும். இதை விசாரணை செய்து கண்டு பிடிப்பர்.

நிறைய பாவ கிரகங்கள் சேர்க்க இருப்பதால் நிறைய மனிதர்களின் மரணம் நடந்துள்ளது. இவ்விதம் நிறைய பாவர்கள் சம்பந்த காலகட்டத்தில் கோளறு பதிகம் பாராயணம் செய்வது, பைரவர் வழிபாடு, சித்தர்களை வணங்கு வது நல்லது.

19-10-2018 அன்று ரயில்கள் மோதி 61 பேர் இறந்தனர். அன்றைய கோட்சார நிலைப்படி செவ்வாய், கேதுவுடனும் ராகுவின் பார்வையிலும் உள்ளார். சனி பகவான், கேது சாரம் பெற்றுள்ளார். ராகு, சனி சாரம் பெற்று நிற்கிறார். மேலும் இது கால சர்ப்ப தோஷத்தில் உள்ளது. அன்றைய சந்திரன் அவிட்ட நட்சத்திரத்தில் நிற்கிறார். செவ்வாய் அம்சத்தில் நீசம். நிறைய பாவ கிரகங்கள் சேர்க்கை. மேலும் செவ்வாய் கேது இணைவு ரயில் விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

20-11-2016 அன்று உத்தரப்பிரதேசம் கான்பூரில் ரயில் விபத்து ஏற்பட்டு 150 பேர் மரணம் அடைந்தனர். இதில் சனி தனது மூன்றாம் பார்வையால் செவ்வாயை பார்க்கிறார். செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராகுவைப் பார்க்கிறார் ஆக, பாவர்கள் அனைவரும் தொடர்பில் உள்ளனர். 8-9-2002 பீகார் ரயில் விபத்தில் 130 பேர் மரணம் அடைந்தனர். இதிலும் சனி, செவ்வாய் பார்வை. செவ்வாய், கேது பார்வை. ஆக, பாவர்கள் அனைவரின் சேர்க்கையும் உள்ளது.

செல்: 94449 61845

bala160623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe