Advertisment

மீன ராகுவும் கன்னி சந்திரனும்... -ஆர். மகா

/idhalgal/balajothidam/pisces-rahu-and-virgo-moon-r-great

ற்போதைய கோட்சாரத்தில் ராகு மீன ராசியில், சனி சாரத்தில் நகர்ந்து கொண்டுள்ளார். சாரம் வாங்கிய சனி வக்ரம். இதுவொரு இக்கட்டான விபரீத கோட்சாரமாகும்.

Advertisment

இந்த நேரத்தில் ராகு தன் எதிரே நகர்ந்துவரும் கிரகங்களை துவம்சம் செய்துவிடுவார். அதுசரி; அவரே அடங்கா கோபத்தில் உள்ளார். எதிரில் வருபவர்கள்மீது அந்த கோபத்தைக் காட்டுவார்தானே!

Advertisment

அதிலும் முக்கியமாக, சந்திர பகவான் மிக வேகமாக நகர்வார். மாதத்திற்கு ஒருமுறை கன்னி ராசிக்குச் செல்வார். கன்னிச் சந்திரனை, மீன ராகு நேர் பார்வையாகப் பார்க்க இயலும். அதனால் சந்திரனை வெகுவாக அலைக்கழிப்பார்.

இதனால், ஜாதகர்கள் துன்பத்தை அனுபவிக்க நேரும். சந்திரன் மனக்காரகன். அவரை, ராகு தனது நேர்பார்வையாகப் பார்க்கும்போது அச்சமும், வேறுபாடான சிந்தனையும் தருவார்.

12 ராசிகளுக்கும் கோட்சார ராகு, சந்திரனைப் பார்க்கும் பலன்களைக் காண்போம்.

ss

மேஷம்

இவர்களுக்கு 6-ஆமிடமான கன்னியில் சந்திரன் வரும்போது, நோய்த்தாக்கம் அதிகரிக்கும். எதிரிகள் வன்மையாக நடந்துகொள்வர். வ

ற்போதைய கோட்சாரத்தில் ராகு மீன ராசியில், சனி சாரத்தில் நகர்ந்து கொண்டுள்ளார். சாரம் வாங்கிய சனி வக்ரம். இதுவொரு இக்கட்டான விபரீத கோட்சாரமாகும்.

Advertisment

இந்த நேரத்தில் ராகு தன் எதிரே நகர்ந்துவரும் கிரகங்களை துவம்சம் செய்துவிடுவார். அதுசரி; அவரே அடங்கா கோபத்தில் உள்ளார். எதிரில் வருபவர்கள்மீது அந்த கோபத்தைக் காட்டுவார்தானே!

Advertisment

அதிலும் முக்கியமாக, சந்திர பகவான் மிக வேகமாக நகர்வார். மாதத்திற்கு ஒருமுறை கன்னி ராசிக்குச் செல்வார். கன்னிச் சந்திரனை, மீன ராகு நேர் பார்வையாகப் பார்க்க இயலும். அதனால் சந்திரனை வெகுவாக அலைக்கழிப்பார்.

இதனால், ஜாதகர்கள் துன்பத்தை அனுபவிக்க நேரும். சந்திரன் மனக்காரகன். அவரை, ராகு தனது நேர்பார்வையாகப் பார்க்கும்போது அச்சமும், வேறுபாடான சிந்தனையும் தருவார்.

12 ராசிகளுக்கும் கோட்சார ராகு, சந்திரனைப் பார்க்கும் பலன்களைக் காண்போம்.

ss

மேஷம்

இவர்களுக்கு 6-ஆமிடமான கன்னியில் சந்திரன் வரும்போது, நோய்த்தாக்கம் அதிகரிக்கும். எதிரிகள் வன்மையாக நடந்துகொள்வர். வேலை செய்யுமிடத்தில் இடையூறு ஏற்படும். ராகுவின் பார்வை 6-ஆமிடப் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

ரிஷபம்

ராசிக்கு 5-ஆமிடமான கன்னியில் சந்திரன் செல்லும்போது, வாரிசுகளால் சற்று தலைகுனிவு ஏற்படும். கலைஞர்கள், அவர்களைப் பற்றிய மோசமான தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பர். பூர்வீகம் சற்று சங்கடமான தகவல் தரும்.

மிதுனம்

இவர்களின் 4-ஆமிடமான கன்னி ராசியில் சந்திரன் வந்து, அவரை ராகு நோக்கும்போது, மிதுன மாணவர்கள் கல்வித் தடையை சந்திப்பர். தாயார் வெகு குழப்பம் கொள்வார். வீடு, மனை, வாகன விஷயங்கள் தள்ளாடும். எனவே இவைசார்ந்த முடிவுகளை இந்த நாட்களில் எடுக்கவேண்டாம்.

கடகம்

ராசிக்கு 3-ஆமிடத்தில் கன்னிச் சந்திரன் வரும் நாட்களில் பணியாளர்களைத் தேர்வு செய்யாதீர்கள். இளைய சகோதர விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். அலைபேசி விஷயத்தில் கவனம் இருக்கட்டும். வீடு விற்பது மற்றும் புதிய கல்விப் பயிற்சியை இந்த நாட்களில் தொடங்கவேண்டாம்.

சிம்மம்

2-ஆமிடமான கன்னி ராசியில் சந்திரன் செல்லும் நாட்களில் நிறைய விரயம் ஏற்படும். அது பொருள் செலவா, பண விரயமா, வாக்கு பாதிப்பா என விதவிதமாக விரயம் உண்டு. சில எதிர்பாராத இழப்புகளை இவர்களின் அந்தரநாதர் நிர்ணயம் செய்வார்.

கன்னி

உங்கள் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது ஒருவித குழப்பம், தடுமாற்றம், முடிவெடுக்க தாமதம், எரிச்சல் என எப்போதும் டென்ஷனிலேயே அலைய நேரும். ரத்த அழுத்தம் கூடிவிட்டதோ என சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்படும்.

துலாம்

ராசிக்கு 12-ல் கன்னியில் சந்திரன் பயணிக்கும்போது, தொழில் சார்ந்த, வீண் அலைச்சல் உண்டாகும். சாதாரணமான அலைச்சலுக் கும், இந்நாட்களில் வரும் அலைச்சலுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கும். ஒருவித அவசரமாக அலைய வேண்டி நேரும். செலவுகள் வரும்போது, என்ன ஏதென்று நிதானித்து யோசிக்காமல் பணம் கொடுக்கவேண்டிய சூழல் உண்டாகும். இதுவே ராகுவின் பார்வை. விசேஷம்.

விருச்சிகம்

இவர்களின் 11-ல் சந்திரன் செல்லும்போது, எண்ணக் குழப்பமும் ஒரு பதட்டமும் உருவாகும். ஏதோவொன்று கை நழுவுவதுபோல் உணர்வீர் கள். ஒரு நிராசை வந்து சுற்றிக்கொள்ளும். உதவிக்கு ஆளில்லாமல், தனித்து நிற்பதுபோல் பேதமை நிலை ஆட்கொள்ளும். 11-ஆமிடம் என்பது எண்ணங்களின் செழுமையைக் காட்டுமிடம். ஆனால் ராகுவின் பார்வை, அந்த எண்ணக்குவியலை சிதைக்கும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 10-ஆமிடமான கன்னியில் சந்திரன் செல்லும்போது, வாகனப் பயணத்தில் இடையூறு ஏற்படும். சுகம் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, தயாரின் நிலை கவனிக்கப்பட வேண்டும். ராகு கௌரவ ஸ்தானத்தைப் பார்வையிட்டு, அதில் அவர் பார்வையில் சந்திரன் ஓடும்போது கௌரவ வீழ்ச்சியைத தருவார்.

மகரம்

ராசிக்கு 9-ல் கன்னியில் சந்திரன் நகரும்போது, திருமண வாழ்வின்மீது சந்தேகங்களை ராகு தன் பார்வைமூலம் கொடுப்பார். மேலும் தந்தையின் நிலைபற்றி கவலை கொள்ளச் செய்வார். ஆன்மிகத் தல பயணத் தடைகளை உண்டாக்குவார். ஒருவித நாத்திக மனப்பான்மையைக் கொணர்வார்.

கும்பம்

8-ஆமிடத்தில், கன்னிச் சந்திரன் நகரும்போது, ராகு தன் பார்வையால் தேவையற்ற அச்சத்தை உண்டாக்குவார். அது அனேகமாக உயிர் பயமாக இருக்கலாம் அல்லது பெரிய வியாதியின் தாக்குதல் வந்துவிடுமோ எனும் அச்சம் ஏற்படலாம். இந்த பயங்களில் சிறிது உண்மையும் இருக்கும். எனவே கும்ப ராசியார் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மீனம்

ராசிக்கு 7-ஆமிடமான கன்னி ராசியில், ராகு பார்வையில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, காதல்மீது வெகு சந்தேகம் வரும். திருமண வாழ்வு நிலைக்குமா அல்லது பிரிந்துவிடுவோமா எனும் ஒருவித மயக்க நிலையை ராகு கொடுப்பார். சிலர் வாரிசுகள் உருப்படாமல் போய்விடுவாரா என விசனம் கொள்வர். சிலருக்கு வியாபாரம் முடங்கிவிட்டால் என் செய்வது எனும் கலவரத்தை மனதிற்குள் மூட்டுவார். இதுபோன்ற நிலை எவ்வளவு காலம் இருக்கும்? சனி வக்ர நிவர்த்தியடையும் நவம்பர் 3-ஆம் தேதிவரை இருக்கும். ராகு பகவான், சனி சாரத்தில் சென்று, அவரும் வக்ரமாவதால், உக்ர பலனைக் கொடுப்பார். இது வாக்கியப்படி, திருத்தக்கணிதப்படி நவம்பர் 15 வரை இவ்விதம், செயல்களில் முரண்பாடுகள் நிறைந்திருக்கும்.

இக்காலகட்டத்தில், உக்ரகாளியை, பிரத்யங்கரா, வாராஹி, மஹிசாசுரமர்த்தினி, மாகாளி போன்றவர்களை பணிந்து வணங்க வேண்டும். தனி மனிதர்கள் மற்றும் இயற்கையைக் காக்குமாறு துர்க்கையிடம் வேண்டுவோம்.

bala230824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe