Advertisment

மீன லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! 12

/idhalgal/balajothidam/pisces-lagna-dasa-enlightenment-remedies

மீன லக்னத்தில் பிறந்தவர்கள்

அழகான தோற்றம் உடையவர்கள். தராள மனப்பான்மை உடையவர்கள். பின்னால் வரப்போவதை முன்பே அறியக் கூடிய சக்தி உள்ளவர்கள். எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள். எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. மற்றவர்களின் சுக- துக்கங்களையும் தம்முடைய சுக- துக்கங்களாக நினைப்பார்கள். வாழும் இடத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகிவிடவும் செய்வார்கள். வசிக்கும் இருப்பிடத்தைகூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். வெளிநாட்டு மோகம் உடையவர்கள். போதை பொருட்கள், வாசனை திரவியங்கள்மேல் ஆர்வம் உடையவர்கள். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

Advertisment

ss

குரு தசை

மீன லக்னத்திற்கு குரு 1, 10-ஆம் அதிபதி. லக்னாதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. குரு சுப வலுப்பெற்று தசை நடத்தினால் பந்துக்களிடம் அதிக அன்பு உடையவர். தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் திறமைசாலியாகவும் இருப்பார்கள். தொழில் நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு உண்டு. தொழில் நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்கு உதவி என பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறுவார்கள். தொழிலில் அதீத மேன்மை ஏற்படும். அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்து இயங்கி பலருக்கு வேலை தரும் இயல்பிலோ, ஒருவருக்கு ஆலோசனை வழங்குபவராகவோ இருப்பார்கள். நிலைத்த வருமானமும், தொழில் செய்யும் இடங் களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்கு கிடைக்கும். புகழ், அந்தஸ்து,

மீன லக்னத்தில் பிறந்தவர்கள்

அழகான தோற்றம் உடையவர்கள். தராள மனப்பான்மை உடையவர்கள். பின்னால் வரப்போவதை முன்பே அறியக் கூடிய சக்தி உள்ளவர்கள். எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள். எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. மற்றவர்களின் சுக- துக்கங்களையும் தம்முடைய சுக- துக்கங்களாக நினைப்பார்கள். வாழும் இடத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகிவிடவும் செய்வார்கள். வசிக்கும் இருப்பிடத்தைகூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். வெளிநாட்டு மோகம் உடையவர்கள். போதை பொருட்கள், வாசனை திரவியங்கள்மேல் ஆர்வம் உடையவர்கள். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

Advertisment

ss

குரு தசை

மீன லக்னத்திற்கு குரு 1, 10-ஆம் அதிபதி. லக்னாதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. குரு சுப வலுப்பெற்று தசை நடத்தினால் பந்துக்களிடம் அதிக அன்பு உடையவர். தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் திறமைசாலியாகவும் இருப்பார்கள். தொழில் நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு உண்டு. தொழில் நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்கு உதவி என பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறுவார்கள். தொழிலில் அதீத மேன்மை ஏற்படும். அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்து இயங்கி பலருக்கு வேலை தரும் இயல்பிலோ, ஒருவருக்கு ஆலோசனை வழங்குபவராகவோ இருப்பார்கள். நிலைத்த வருமானமும், தொழில் செய்யும் இடங் களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்கு கிடைக்கும். புகழ், அந்தஸ்து, கௌரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடிவரும். குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமான வரி துறையிடம் சிக்குவது, கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசௌகரியங்கள் உண்டாகும். உழைப்பு முதலீட்டிற்கு ஏற்ற வருமானத்தை பெற்றுத்தராது.

பரிகாரம்

வியாழக்கிழமை குரு ஓரையில் திருச் செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.

செவ்வாய் தசை

செவ்வாய் மீனத்திற்கு 2, 9-ஆம் அதிபதி. தன ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. செவ்வாய் பலம் பெற்று தசை நடத்தி னால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகம் உண்டு. பள்ளி, கல்லூரி நடத்தும் பாக்கியவான்கள். குடும்பம் தெய்வ கடாட்சம் நிறைந்து கோவில்போல் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். குலம் தலைக்க வாரிசு உண்டாகும். வாழ்வின் இறுதிகாலம் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும். பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வராக வாழ்வார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. செவ்வாய் பலம் குறைந்து தசை நடத்தி னால் குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை குறையும். பொருள் வரவில் ஏற்ற- இறக்கம் நிலவும். தந்தை, தந்தைவழி முன்னோர்கள் முறையாக பித்ரு கடன் நீக்காதவர்கள். வில்லங்க சொத்து பங்காளி பகை உண்டு. தாய், தந்தைக்கு நோய் பாதிப்பு உண்டு. கற்ற கல்வியால் பயன் இருக்காது.

பரிகாரம்

வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

சுக்கிர தசை

சுக்கிரன் மீனத்திற்கு 3, 8-ஆம் அதிபதி. சகாய ஸ்தானதிபதி. அஷ்டமாதிபதி. சுக்கிரன் மீனத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் சுப பலன் ஏற்படும் வாய்ப்பு குறைவு. தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன், வம்பு, வழக்கு, விபத்து அவமான வலையில் சிக்குகிறார்கள். கடனை வாங்கும் போதில் இருக்கும் ஆர்வம் திரும்பச் செலுத்தும்போது இருக்காது. வீண் விவாகரங்களில் அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். அந்தஸ்து, ஆடம்பரம் என பேராசையில் வாழ்வை இழப்பார்கள். உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல் கள், வம்பு, வழக்கு, நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது. முக்கிய சொத்துக்கள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது. சொத்து தகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். சிலருக்கு அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். பய உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபடலாம். திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்திப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரவே கூடாது.

பரிகாரம்

வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

புதன் தசை

புதன் மீனத்திற்கு 4, 7-ஆம் அதிபதி. கேந்திராதிபதி மற்றும் பாதகாதிபதி. மாரகாதிபதி. லக்னம் மற்றும் பாதக ஸ்தானம் இரண்டுமே உபய லக்னம் என்பதால் தம்பதிகளிடையே புரிதலின்மை மிகுதி யாக இருக்கும். ஒருவரின் எதிர்பார்ப்பை மற்றவர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தம்பதிகளுக்குள் இணக்கமற்ற மனநிலையை உருவாக்கும். லக்னத் தில் சுக்கிரன் உச்சம்பெற்றவர்களுக்கும், புதன் நீசம்பெற்றவர்களுக்கு காலதாமதத் திருமணம் அல்லது திருமண மற்ற நிலை இருக்கும். அதேபோல் மீன லக்னம் காலபுருஷ பன்னிரன்டாமிடம் என்பதால் அடிக்கடி கால், பாதம் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணை, சம்பந்திகள் போன்றவர்களால் மன சஞ்சலம் உண்டாகும்.

பரிகாரம்

வியாழக்கிழமை புதன் ஓரையில் மகா விஷ்ணுவை வழிபடவேண்டும்.

சந்திர தசை

மீன லக்னத்திற்கு சந்திரன் 5-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி. சந்திரன் பலம்பெற்று தசை நடத்தினால் பூர்வபுண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ், அந்தஸ்து உடன் வரும். பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். அறிவாளி யாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். குலதெய்வ அருள் உண்டு. குலதெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவ பதவியில் இருப்பார்கள். குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையி னர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சந்திரன் பலம் குறைந்து தசை நடத்தினால் அதிர்ஷ்டம் புத்திக்கூர்மை குறைவுபடும். புத்திர தோஷம் உண்டாகும். வம்சம் தலைக்காது. வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து கௌரவம் மட்டுப்படும். குலதெய்வ அருள் கிடைக்காது. விரும்பமில்லாத இடப்பெயர்ச்சி ஏற்படும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து பூர்வீகத்திற்கு மீண்டும் திரும்பமுடியாது.

பரிகாரம்

வியாழக்கிழமை ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வங்களை வழிபட வேண்டும்.

சூரிய தசை

மீனத்திற்கு சூரியன் 6-ஆம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி. சூரியன் பலம்பெற்று தசை கவுரவமான, அந்தஸ்தான உத்தியோகம் உண்டு. திறமை மிக்கவர்கள். எதிரிகளை வெல்லும் சாதுர்யம், தந்திரம் நிறைந்தவர்கள். கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும். இவர்கள் இருக்குமிடம் தேடி கடன் பணம் செல்லும். பெற்ற கடனை திரும்பிச் செலுத்தும் வல்லமை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள். சூரியன் பலம் குறைந்து தசை நடத்தினால் பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினை, நோய்க்கு தானே காரணமாக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது. தமக்கு தாமே தீமை செய்துகொள்வதில் வல்லவர்கள். நிலையான- நிரந்தரமான உத்தியோகம் இருக்காது.

பரிகாரம்

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவேண்டும் அல்லது படிக்கவேண்டும்.

சனி தசை

சனி மீன லக்னத்திற்கு லாபாதிபதி மற்றும் விரயாதி. சனி பலம்பெற்று தசை நடத்தினால் வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும். வெளிநாட்டு, வெளிமாநில வாழ்க்கை சிறப்பு. மூத்த சகோதரம், சித்தப்பா, வைப்பாட்டிமூலம் அதிக விரயம் ஏற்படும். சிலர் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்குபோல் வைப்பாட்டி வைத்து வீடு, வாசல் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்பார்கள். கடன் தொல்லை உண்டு. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன்பட நேரும் அல்லது தொழில் கடனை அடைக்க முடியாது. சிலர் கடனுக்கு பயந்து தலை மறைவாக வாழ நேரும். சிலருக்கு சுய தொழில் குறிப்பிட்ட காலத்திற்கு நல்ல மிகைப்படுத்தலான வருமானம் தரும். சேர்த்துவைத்த அனைத்தும் ஏழரை, அஷ்டமச்சனி காலங்களில் விரயமாகும். அயன சயன போகம் சுகபோகம் சார்ந்த விஷயங்கள், இவர்களுக்கு பிரச்சினைகளை- ஏமாற்றங்களைத் தரும். சிலர் வாழ்வின் அனைத்து சுகங்களையும் மறைமுகமாக அனுபவிப்பார்கள். சிலருக்கு இரண்டு திருமணம் நடக்கும். சிலர் உடன்பிறப்பிற் காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்டபெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள். அல்லது அடிமை வேலையில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். பன்னிரண்டாம் அதிபதியின் தசை என்பதால் எலும்பு நரம்பு, மூட்டு தொடர்பான நோய்கள் தாக்கும். மிகுதியான இழப்பு அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை அடைவார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் சிவசக்தியை வழிபட வேண்டும். ராகு தசை நடப்பவர்கள் காலபைரவரை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் பஞ்சமுக கணபதியை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406

bala010923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe