மீன ராசியில் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன.

Advertisment

மீன ராசிக்காரர்கள் அழகான முகத்துட னும், அங்க லட்சணங்களுடனும் இருப்பார்கள். பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் ஒரு முறையேனும் காஞ்சிபுரம் சென்று சித்திர குப்தரை வணங்கிவரவேண்டும். இவர்களுக்கு அதிதேவதையாக ராகுவும் கேதுவும் உள்ளதால், சனிக்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் ராகுவையும், செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் எமகண்ட நேரத்தில் கேதுவையும் வணங்கி வரவேண்டும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மௌனமாகவே இருப்பார்கள். செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்களை வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். முன்ஜாக்கிரதையுடன் இருப்பார்கள். நல்ல செல்வம், செல்வாக்கு பெற்றிருந்தாலும், எதிர்பாராத விதமான கஷ்ட நஷ்டங்கள் உடனே ஏற்படும். பெரும்பாலும் இவர்கள் சிரமமான வாழ்க்கையைத்தான் அனுபவிப்பார்கள். இதற்குக் காரணம் பிரம்மஹத்தி தோஷமாகிய முன்னோர் செய்த பாவமாகும். பரிகாரம் செய்து கொள்ளவும்.

mm

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பான்மையினருக்கு கல்வி ஞானம் நிறைந்திருக்கும். தெய்வ வழிபாடுகள், ஆச்சார அனுஷ்டா னங்களை அறிந்திருப்பார்கள். வாசனை திரவியங்களிலும், ஆடை, ஆபரணங்களிலும் பிரியமானவர் கள். இவர்களது வாழ்க்கையில் ஒருமுறையேனும் திருவையாறு சென்று அங்குள்ள சனீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கிவர வேண்டும். சனிக்கிழமைகளில் அருகி லுள்ள சனீஸ்வரரையும், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் வணங்கிவரவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை வணங்கிவந்தால் தங்களது 24-ஆவது வயதில் அரசு வேலைகிட்டும். 25-ஆவது வயது முடிவதற்குள் திருமணம் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மிருகமாக பாற்பசு, கீரி வருகின்றன. எக்காரணம்கொண்டும் ரோகிணி நட்சத்திரக்காரர்களை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மணக்கக்கூடாது. நல்வாழ்வு அமையாது. உத்திரட்டாதியில் பிறந் தவர்கள் முன்ஜாக்கிரதை உடையவர் களாக இருப்பார்கள். பிறர் உதவிகளி னாலேயே தங்கள் வாழ்வை மேம்படுத் திக்கொள்வார்கள். இவர்களுக்கு ஆண் குழந்தைகளே பிறக்கும். பெரும்பாலான பெண்கள் புதிய நிறமுள்ளவர்களாக இருப்பர். இவர்களை மணந்துகொண்ட ஆண்களுக்குப் பெருமை வருமேயொழிய சிறுமை வராது.

Advertisment

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தேவையான உயரமும், தேவையான அளவு எடையும் பெற்றி ருப்பார்கள். இவர்கள் ஆணாக இருந்தால் பெண் நட்சத்திரமுடைய வர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவர்களது மிருகம் பெண் யானையாகும். இவர்கள் மேஷ ராசிக்காரர்களைத் திருமணம் செய்யலாகாது. குறிப்பாக பரணி நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்யக்கூடாது. இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருந்தால், அவர்களால் கெட்டுப் போவார்கள். ஆதலால் நண்பர்கள் கூடாது. இவர்களுக்கு 25 வயது நடக்கும்போது 40 வயது மனிதர்கள் போல் முதிர்ச்சியுடன் பேசுவார் கள். இவர்களிடம் அதிகமாகப் பேசக்கூடாது. ரேவதி நட்சத்திரத் தில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் என்றும் கூறலாம்.

இவர்கள் 90 வயதுவரை ஜீவித்திருப் பார்கள். ஆண் குழந்தைகளாகவே பிறக்கும். பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதற்கான பரிகாரத்தைச் செய்துகொள்ளவேண்டும். வாழ் வில் ஒருமுறையேனும் தேனி மாவட் டம், குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வரரை, அங்குள்ள வாய்க் காலிலில் நீராடி தரிசித்துவரவேண்டும். இவர்கள் சனி பகவானை சனிக் கிழமைகளிலும், குரு பகவானை வியாழக்கிழமைகளிலும் வழிபட்டு வருவது நல்லது.

பரிகாரம்

பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக் காரர்கள் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொள்ளவேண் டும்.

Advertisment

கும்பகோணம் அருகே திருவிடை மருதூர் மகாலிலிங்கேஸ்வரர் கோவிலிலில் தினமும் காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை பிரம்ம ஹத்தி தோஷ நிவர்த்தி செய்வதுண்டு. பரிகாரக்கட்டணமாக அனைத்தும் சேர்த்து ரூ. 900/- ஆகும்.

செல்: 94871 68174