Advertisment

எண்களின் ஆளுமையும், அதிர்ஷ்டமும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/personality-numbers-and-fortune-melmaruvathur-s-kalaivani

மானுடம் மலரச்செய்யும், மகிழ்வான எண்ணியல் சதுராட்டத்தில் இரண்டாம் எண்ணின் மகத்துவமும், அதன் அணுகு முறையையும் காணலாம்.

இ, ஃ, த ஆகிய ஆங்கில எழுத்துக்கள் இரண்டாம் எண்ணின் ஆதிக்கம் நிறைந்தவை.

Advertisment

இந்த இரண்டாம் எண்ணின் ஆதிக்க கிரகம் தாய்மை, மனது, ரத்த ஓட்டம், நீர் சார்ந்த உள்ளுறுப்புகள், இடது கண் போன்றவற்றை குறிக்கும் சந்திரன் ஆகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

உலகியல் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் இருபடி நிலைகள் அமைந்திருக்கும்.

அதாவது உண்மை என்றால் பொய், உயர்வு, தாழ்வு, அன்பு, வெறுப்பு என்று இருப்பதுபோல இந்த இரண்டாம் எண்ணில் பிறந்தோர்களின் மனோநிலையும் மாறுதலுக்கு உட்பட்டே இருக்கும்.

Advertisment

உலக இயக்கத்தைச் சார்ந்து வாழ்வியல் நடவடிக்கைகள் இவர்களுக்கு இருக்கும். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி சந்திக்கும் நிலை கொண்டவர்கள்.

பொதுஜனங்களின் மத்தியில் பிரசித்தியும், பிரபலமும் அடையும் யோகிதை பெற்றவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு அதீத பயத்தன்மையும், பதட்டம் நிறைந்த எண்ணங்களும், கற்பனை திறனும், கவிப்புணையும் திறமையும் பொதிந்திருக்கும்.

தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தானும் குழம்பி மற்றவர்களையும் புலம்பச் செய்யும் ஆற்றல்பெற்றவர்கள்.

குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர்களாக திகழ்வார்கள். பிறரை மிரட்டி பேச எத்தனிப்பார் கள். அவர்கள் எதிர்த்து பேசினால் அடங்கியும் விடுவார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் மாற்றிப் பேசும் தன்மை படைத்தவர்கள். இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அவர்கள்.

சந்தி ரன் வளர் வதும், தேய்வது மான மாயசக்தி படைத்த கிரகம் ஆகும்.

இவர்களின் உடலில் நீர் சத்து நிறைந்து காணப்படும். உடல் பருமனுக்கு தகுந்தார்போல் பலம் இருக்காது.

முகம் வட்ட வடிவமாகவும், கன்னங்களில் சதைப்பற்றும், கழுத்துகளில் மடிப்புகள் விழுந்தும் காணப்படுவார்கள்.

பிறப்பு எண் 2 விதி எண் 1-ல் பிறந்த வர்கள்

தன்னம் பிக்கையும் தளராத மனமும் கொண்டவர்கள். பிறருடைய மனதை ஆராயும் வல்லமை வாய்ந்தவர்கள். புதுப் புதுறைகளில் எப்பொழுதும் ஆராய்ந்தவண்ணம் இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளும், புத்திர தோஷமும், இளமையிலேயே குடும்பத்து பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையும். இவர்களுக்கு அமைந்துவிடும்.

தெய்வம், மதம், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.

பிறருடன் எளிதில் பழக மாட்டார்கள். பழகினால் உள்ளன்புடன் பழகுவார்கள். மனித பலத்தை காட்டிலும் தெய்வ பலமே இவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் உதவியாக இருக்கும். சுதந்திர உணர்ச்சிகள் மிக்கவர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். காதலை உதாசினப்படுத்தும் மனோநிலை பெற்றவர்கள். மனரீதியாக மிகவும் கொடூரமான மனிதர்களும் இந்த எண்ணில் காணப்படுகின்றார்கள். செய்தொழிலில் அதிக நம்பிக்கையும் திறமையும் இருக்கும். எப்பொழுதும் உற்சாகத்துடன் காட்சி யளிப் பார்கள். இவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்

மானுடம் மலரச்செய்யும், மகிழ்வான எண்ணியல் சதுராட்டத்தில் இரண்டாம் எண்ணின் மகத்துவமும், அதன் அணுகு முறையையும் காணலாம்.

இ, ஃ, த ஆகிய ஆங்கில எழுத்துக்கள் இரண்டாம் எண்ணின் ஆதிக்கம் நிறைந்தவை.

Advertisment

இந்த இரண்டாம் எண்ணின் ஆதிக்க கிரகம் தாய்மை, மனது, ரத்த ஓட்டம், நீர் சார்ந்த உள்ளுறுப்புகள், இடது கண் போன்றவற்றை குறிக்கும் சந்திரன் ஆகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

உலகியல் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் இருபடி நிலைகள் அமைந்திருக்கும்.

அதாவது உண்மை என்றால் பொய், உயர்வு, தாழ்வு, அன்பு, வெறுப்பு என்று இருப்பதுபோல இந்த இரண்டாம் எண்ணில் பிறந்தோர்களின் மனோநிலையும் மாறுதலுக்கு உட்பட்டே இருக்கும்.

Advertisment

உலக இயக்கத்தைச் சார்ந்து வாழ்வியல் நடவடிக்கைகள் இவர்களுக்கு இருக்கும். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி சந்திக்கும் நிலை கொண்டவர்கள்.

பொதுஜனங்களின் மத்தியில் பிரசித்தியும், பிரபலமும் அடையும் யோகிதை பெற்றவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு அதீத பயத்தன்மையும், பதட்டம் நிறைந்த எண்ணங்களும், கற்பனை திறனும், கவிப்புணையும் திறமையும் பொதிந்திருக்கும்.

தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தானும் குழம்பி மற்றவர்களையும் புலம்பச் செய்யும் ஆற்றல்பெற்றவர்கள்.

குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர்களாக திகழ்வார்கள். பிறரை மிரட்டி பேச எத்தனிப்பார் கள். அவர்கள் எதிர்த்து பேசினால் அடங்கியும் விடுவார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் மாற்றிப் பேசும் தன்மை படைத்தவர்கள். இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அவர்கள்.

சந்தி ரன் வளர் வதும், தேய்வது மான மாயசக்தி படைத்த கிரகம் ஆகும்.

இவர்களின் உடலில் நீர் சத்து நிறைந்து காணப்படும். உடல் பருமனுக்கு தகுந்தார்போல் பலம் இருக்காது.

முகம் வட்ட வடிவமாகவும், கன்னங்களில் சதைப்பற்றும், கழுத்துகளில் மடிப்புகள் விழுந்தும் காணப்படுவார்கள்.

பிறப்பு எண் 2 விதி எண் 1-ல் பிறந்த வர்கள்

தன்னம் பிக்கையும் தளராத மனமும் கொண்டவர்கள். பிறருடைய மனதை ஆராயும் வல்லமை வாய்ந்தவர்கள். புதுப் புதுறைகளில் எப்பொழுதும் ஆராய்ந்தவண்ணம் இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளும், புத்திர தோஷமும், இளமையிலேயே குடும்பத்து பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையும். இவர்களுக்கு அமைந்துவிடும்.

தெய்வம், மதம், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.

பிறருடன் எளிதில் பழக மாட்டார்கள். பழகினால் உள்ளன்புடன் பழகுவார்கள். மனித பலத்தை காட்டிலும் தெய்வ பலமே இவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் உதவியாக இருக்கும். சுதந்திர உணர்ச்சிகள் மிக்கவர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். காதலை உதாசினப்படுத்தும் மனோநிலை பெற்றவர்கள். மனரீதியாக மிகவும் கொடூரமான மனிதர்களும் இந்த எண்ணில் காணப்படுகின்றார்கள். செய்தொழிலில் அதிக நம்பிக்கையும் திறமையும் இருக்கும். எப்பொழுதும் உற்சாகத்துடன் காட்சி யளிப் பார்கள். இவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

ss

பிறப்பு எண் 2 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

முழுமையான சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும், காட்சியளிப்பார்கள். இனிமையாக பேசும் குணம் வாய்ந்தவர்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதீதமாக இருக்கும். மக்கள் தொடர்பினை பெரிதும் விரும்புவார்கள். ஆழ்ந்த நட்புடன் பிறருடன் பழகுவார்கள். மனதில் எண்ணியதை சாதித்துவிடுவார்கள். வட்ட வடிவமான முகமும், அழகான பெரிய கண்களும், படைத்தவர்களாக இருப்பார்கள். மிகச்சிறிய காரியத்தையும் பிறரை நம்பி ஒப்படைக்க மாட்டார்கள். இவர்களுக்கு உயர்ந்த லட்சியங்களும், தத்துவஞானி ஆக வலம்வரும் சூழலும் இயல்பிலேயே அமைந்திருக்கும். சிறிய விஷயத்தையும் மிகைப்படுத்தி பேசுவார்கள். நெருப்பு போன்ற வாசகங்களை ஆணித்தரமாக பேசும் ஆற்றல் உடையவர்கள். இவர்கள் கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள். மனதில் எப்பொழுதுமே ஒரு பயத்தன்மை ஒளிந்து கொண்டே இருக்கும். நன்மை பொருட்டு அல்லது தங்களின் சூழ்நிலை பொருட்டோ அடிக்கடி பொய் பேசும் குணம் இவர்களுக்கு இருக்கும். மனம் ஒருபொழுதும் நிலையாக இருக்காது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்க தன்னை மாற்றிக்கொள்வார்கள். இவர்களுக்கு தலைவலி சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும்.

பிறப்பு எண் 2 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

தன்னடக்கமும் பொதுநலமும் கலந்த வாழ்க்கை வாழ்வார்கள் மனதில் சலன புக்தி உடையவர்கள். துடிப்புமிக்க பாவனையுடன் செயலாற்றுவார்கள். எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள். அதைப்போல எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கும். நம்பிய மனிதர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வார்கள். தாய்நாடு, தாய்மொழி, சுற்றத்தார் இவர்களின் மீது பற்றும், அன்பும், நிறைந்திருப்பார்கள். கலைகளில் ஆழ்ந்த தேர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள். கருணை உள்ளமும், தெய்வத்தன்மையும், மிகுந்து காட்சியளிப்பார்கள். பிறர்க்கு அறிவுரை கூறும் யோகிதை பெற்ற இவர்கள், சுய கௌரவம் அதிகம் பார்ப்பார்கள். பிறர் இழிவாக பேசிவிட்டால் எந்த பதவியும் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிடுவார்கள். விஞ்ஞானம், மருத்துவம், வானிலை ஆய்வு என்று பல துறைகளில் சிறந்து விளங்குவார்கள். புகழ்ச்சிக்கு மயங்கிவிடுவார்கள். இவர்களுக்கு உடல் இயக்கத்தைவிட மன ஓட்டம் மிகுதியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பலமுறை யோசித்து முடிவு எடுக்கும் தன்மை பெற்றவர்கள். இவர்கள் பெரிய அபாயத்திலும் வாழ்க்கை போராட்டத்திலும் இறையருளால் தப்பித்துக்கொள்வார்கள். எவருக்கும் கெடுதல் நினைக்க மாட்டார்கள். பருவவயதிலேயே வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பிறப்பு எண் 2 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

சுறுசுறுப்பு மிக்கவர்கள். மனிதர்களைவிடவும் தெய்வபலத்தையே அதிகம் நம்பி காரியம் செய்பவர்கள். புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்கள். கடமை உள்ளம் கொண்டவர்கள். சிறிய பிரச்சினை வந்தாலும் சுறுசுறுப்பு மிக்கவர்களாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். வழக்குகள் தீர்ப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், பெரும் புகழ்பெறுவார்கள். வாகனம், அழகு சாதனை விற்பனை போன்றவற்றில் உயர்வடைவார்கள். உலக இன்பங்களை பெறுவதற்காக பிறப்பெடுத்தவர்கள். கதை, காவியம், கட்டுரை, இயற்றுவதில் வல்லவர்கள். சினிமாத்துறை சார்ந்தவர்கள் இந்த எண்ணில் பிறக்கின்றார்கள். மற்றவர்களின் மனதை எளிதில் எடைபோட்டு பேசும் திறமைமிக்கவர்கள். மிக வித்தியாசமான முறையில் தொழில்செய்து வெற்றிபெறுவார்கள். சட்டம், வேதம், இதிகாசம், மேடைப்பேச்சு போன்றவற்றின்மூலம் பெரும் பணம் சம்பாதிப்பார்கள். நட்பு பெருந்தன்மையுடன், பொறுமையுடன் இருக்கும். துணிச்சல்மிக்கவர்கள். புன்னகையுடன்கூடிய முகம், யதார்த்தமான செயல்பாடு இவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

பிறப்பு எண் 2 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

கலைகளை ஊக்குவிக் கும் குணம் உடையவர்கள். கவர்ச்சியாகவே எப்பொழுதும் காட்சியளிப்பார்கள். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஒரு காரியத்தில் கால் பதிப்பார்கள். கடின உழைப்பாளிகள். தொழிலில் மிகச்சிறந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொருட்கள்மீது ஆர்வம் இருக்கும் கலை சார்ந்த தொழிலால் உயர்வினை அடைவார்கள் பிறருடைய துன்பங்களை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் அழுதே விடுவார்கள். அதிக பணம் சேர்ப்பார்கள். குழந்தை மனம் வாய்ந்தவர்கள். எதிலும் எப்பொழுதும் முன்ஜாக்கிரதையுடன் இருப்பார்கள். உடலில் ஒருவித ஈர்ப்பு சக்தி இருக்கும். ஆகர்சன சக்திகள் குடிகொள்ளும். மக்கள் கூட்டத்தையும், பாராட்டையும், வரவேற்பையும், ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மிக சுலபமாக திருவருளை பெறும் பாக்கியசாலிகள். நீர் சார்ந்த தொழில்களின்மூலம் உயர்வுகள் கிடைக்கும்.

பிறப்பு எண் 2 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

எளிதில் மற்றவர்களை கவர்வதிலும் நண்பர்கள் ஆக்கிக்கொள்வதிலும் கை தேர்ந்தவர்கள். தீய பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிமையாகி விடும் மனம் படைத்தவர்கள். புகழ்ச்சிகளை கண்டு மயங்கிவிடுவார்கள். எப்பொழுதும் மனம் ஒரு நிலையில் இருக்காது. உலக அனுபவம் இருக்கும். சாஸ்திர அறிவு கலைகளை மையமாகக்கொண்ட தொழில்களால் லாபம் சேர்ப்பார்கள். பயணங்கள் மிக பிடித்தமான ஒன்று. நடை உடை செயல்கள் கவர்ச்சியாக காட்சியளிக்கும். பிறர் விரும்பாத காரியம் எதுவானாலும் வேண்டுமென்றே தலையிட்டு வீண் வம்பை இழுப்பார்கள். பிறர் மனம் அறிந்து, குணம் அறிந்து நேரத்திற்கு தகுந்தார்போல் பேசுவார்கள். தீய எண்ணங்களை வளரவிடாமல் தடை போட்டால் வெற்றிபெறலாம். தீவிரமான ஆராய்ச்சியாளர்கள் மங்கையர்கள் விரும்பும் துணி, நகை, அழகு சாதன பொருட்கள், தயாரிப்பு சினிமா, போட்டோ சூட் போன்றவற்றின்மூலம் உயர்வடைவார்கள். மந்திர சாஸ்திர நூல்கள் எளிதில் இவர்களுக்கு கைகூடும். சித்து வேலைகள் உச்சாடனங்கள் எளிதில் கைவல்யமாகும். மித மிஞ்சின கற்பனை வளமிருக்கும். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். வருங்காலத்தை பற்றி திட்டமிட்டு குழம்பி போவார்கள். சுய கௌரவம் பார்ப்பார்கள். புதிய அணுகுமுறைகளை புகுத்தி வெற்றிபெறும் தன்மை பெற்றவர்கள்.

பிறப்பு எண் 2 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

நிர்வாகத் திறமை அதீதமாக வாய்ந்தவர்கள். அன்பு மனம் கொண்டவர்கள். சிறந்த வாழ்க்கைத்துணை இவர்களுக்கு அடைந்துவிடும். ஞானம் மார்க்கத்தில் பயணிக்கும் சிறப்பு பெற்றவர்கள் வெற்றிபெறுவதையே குறிக் கோளாக கொள்வார்கள். தெய்வ நம்பிக்கையும் அசைக்கமுடியாத கலைநானமும் தேர்ச்சியும் இவர்களுக்கு இருக்கும். பிறர்க்கு உதவும் நல்ல குணமுடையவர்கள். மந்திரம் சித்தம், தெய்வ பக்தி போன்றவற்றின்மூலம் உயர்வை அடைவார்கள். தனிமையில் கற்பனை செய்வார்கள். இயற்கை காட்சிகளை மனம் விரும்பி ரசிப்பார்கள். உடல் முழுவதும் சந்திரனின் சக்தி பரவி காணப்படும். மற்றவர்களின் உதவிகளின் மூலம் வெற்றிபெறுவார்கள். மனதை கட்டுப்படுத்தி நல்ல வழியில் சென்றால் மகத்தான புகழ் உண்டாகும். பிறருக்கு நல்ல யோசனைகளை சொல்லி கொடுக்கக்கூடியவர்கள். தனது வாழ்க்கை குறிக்கோளுடன் ஆரம்பித்து வெற்றிபெறும் பாக்கியசாலிகள். அன்பும் அழகும் வாழ்ந்த வாழ்க்கைத் துணை அமையும். பிரச்சினைகள் வந்தால் முகத்தை சுளித்துக்கொண்டு மற்றவர்களை கடிந்து பேசும் தன்மை பெற்றவர்கள். எதையும் துணிந்து பேசும் ஆற்றல் பெற்றவர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள். புதுவிதமான கொள்கைகள் உடையவர்கள். தவறு செய்தால் தண்டிக்காமல் பிறர் குற்றத்தை மன்னிக்கும் மனோபாவம் உடையவர்கள்.

பிறப்பு எண் 2 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

உலக அனுபவமிக்கவர்கள் கலாச்சார விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பார்கள். இளமையே காதல் வயப்படுவார்கள். புதுமையை விரும்புவார்கள். எவரையும் மிக விரைவில் எடை போட்டு விடுவார்கள். வாதாடும் திறமைமிக்கவர்கள். எதிரிகளைக் கண்டு பயம்கொள்ள மாட்டார்கள். புத்திர தடைகள் ஏற்பட்டு பின்பு நீங்கிவிடும். பலருக்கு பல காரியங்களில் சாதித்து கொடுப்பார்கள். புகழுக்கு அடிமையாகும் மனம் படைத்தவர்கள். உணவு, உறக்கமின்றி உழைப்பார்கள் அழகும், கவர்ச்சியும், மாறாமல் இருக்கவேண்டும் என்பதே இவர்களின் விருப்பம். எதையும் சீர்தூக்கி பார்க்கும் முடிவெடுக்கும் வல்லமைமுடைய நபர்கள். பண விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். கடவுள் பக்தி அதிகமுணடு. புதுப்புது வழிகளில் தெய்வத்தை வணங்கவேண்டும் என்று வலியுறுத்துவார்கள். புத்திசாலித்தனத்தை விரும்புவார்கள். அஞ்சாத நெஞ்சத்தோடு செயல்படுவார்கள். மன தைரியமும், காரிய சக்தியும், அடைவார்கள். குழப்பம் வந்தால் அப்படியே போட்டுவிட்டு நின்று விடுவார்கள். திடீரென வீண் சண்டையிடுவதும் கோபத்தால் பிறரை இகழ்ந்து பேசுவதும் பணத்தை தாராளமாக செலவு செய்வதும் இவர்களின் எதிர்மறை குணங்களாகும்.

பிறப்பு எண் 2 விதி என் 9-ல் பிறந்தவர்கள்

மனவளம் மிகுந்த தெய்வங்கள் எதையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவார்கள். எதிலும் தலைமை பொறுப்பு ஏற்று நடத்துவார்கள். இளமையில் கோபத்துடன் செயல்பட்டாலும் வயது ஏற ஏற மிகவும் நிதானமாக செயல்படுவார்கள். பலவிதமான வாழ்க்கை அனுபவங்களை இளமையிலேயே பெற்றுவிடுவார்கள். வம்புக்காரர்கள் என்ற பட்டமும் எடுப்பார்கள். பஞ்சாயத்து செய்வதிலும் சமாதானம் செய்துவைப்பதிலும் திறமைசாலிகள். பல பேருக்கு நன்மைகளை செய்வார்கள். நட்பு விஷயத்தில் விட்டுக்கொடுத்து பழகிக்கொள்ளவேண்டும். நீச்சல் விளையாட்டு வீரர்கள் அவர்கள். நல்ல தாம்பத்தியம் இல்லறம் அமைந்தாலும் மத்திம வயதில் ஏகாந்த வாசத்திலும் தனிமையிலும் அதிகமாக செலவிடுவார்கள். பலர் இவரை சத்தியசீலர் என்றும் மகான்கள் என்றும் அழைப்பார்கள். இவர்கள் பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து நடக்கப் போவதை தெரிவித்தும் விடுவார்கள். குரு பக்தியும் இறை பக்தியும் மிக்கவர்கள். அயராத உழைப்பின்மூலம் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள். மருத்துவம் மற்றும் வேதம் அறிந்தவர்கள். தனது சொல்லை புறக்கணிப்பவர்களை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். எதையும் கண்டு பயப்படாமல் திடமாக செயல்பட்டு வெற்றிபெறுவார்கள். நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் இழக்கத் துணியும் நபர்கள் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களை அதிகமாக காணப்படுகின்றது.

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்ட தேதிகள்

1, 10, 1, 28, 7, 16, 25 இதில் 28-ஆம் தேதி மட்டும் பரிபூரண அதிர்ஷ்டம் தருவதில்லை. சந்திரனும் சனியும் இருப்பதனால் இதை சந்திரன் சனி பலம் பெற்றவர்கள் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

துரதிஷ்ட தேதிகள்

8, 17, 26, 9, 18, 27.

அதிர்ஷ்ட நிறங்கள்

மஞ்சள், வெளிர் நீளம், சந்தனம், பொன்னிறம், பச்சை, வெளீர் பச்சை, வெள்ளை.

துரதிஷ்ட நிறங்கள்

கருப்பு, காபி கலர், பாக்கு நிறம், இருண்ட நிறங்கள் அதிர்ஷ்ட ரத்தினங்கள் மாணிக்கம், முத்து, கனக புஷ்பராகம், தங்க புஷ்பராகம், சூரியகாந்தக்கள் டைகர் ஐ, ஜேட்.

சந்திர ஆதிக்க பெயர் எண்கள் அமைத்துக் கொள்ளும்பொழுது சந்திரனுக்கு நட்பு எங்கள் ஆகிய எண்ணிக்கையில் பெயர்களை அமைத்துக் கொள்வது சிறப்பினை தரும்.

பெயர் அமைக்கும்போது மாதம், தேதி, வருடம் ஆகிய வற்றை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

கையெழுத்து இடும்பொழுது 20 டிகிரி சாய் கோணத்தில் கையெழுத்து இடுவது சிறப்பினை தரும். மேலும் எழுத்துக்களை கோபுர வடிவில் எழுதுவதும் அரைவட்ட வடிவில் எழுதுவதும் இவர்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அளிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் பெயர்களுக்கு அடியில் கோடு இடுவதோ முற்றுப்புள்ளி வைப்பதனையோ தவிர்ப்பது சிறப்பு.

தொலைபேசி எண்ணை கணக்கிடுதல் ஒருவர் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணானது அவருடைய பிறப்பு விதி மற்றும் பெயரின் சம்பந்தப்பட்ட எண்ணாக அமையவேண்டும். பிறப்பு மற்றும் விதி எண்கள் எதிர்மறையாக இருப்பின் நட்பு எண்ணிலோ அல்லது பெயர் வரும் எனில் அதிர்ஷ்ட கூட்டு எங்களுடைய தொலைபேசி எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதேபோன்று வங்கிக் கணக்கையும் உருவாக்கிக் கொள்வது, சிறப்பு. மேலும் முதலில் பதியப்படும் பணத்தின் எண்ணிக்கையானது இரண்டாம் எண்ணின் கூட்டுத் தொகையில் வங்கியில் செலுத்தும்போது பொருளாதார உயர்வினை அளிக்கும்.

இந்த இரண்டாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் திங்கள் கிழமையில் பச்சரிசி தானம் செய்வது சிறப்பிலும் சிறப்பினை அளிக்கும்.

செல்: 80563 79988

bala290324
இதையும் படியுங்கள்
Subscribe