னித வாழ்வியலில் வளர்ச்சிக்கு வழிவகுத்த அளித்த சாஸ்திரங்களில், எண் கணிதமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

D, M, T ஆகிய ஆங்கில எழுத்துக்கள் 4-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவை, இது ராகுவின் தன்மையில் பிரபஞ்சத்தில் சஞ்சரித்து வந்து கொண்டிருக்கின்றது.

ராகு உடலில் தசைகளின் வலிமையினை சுட்டிக் காட்டும் ஒரு மாபெரும் சூட்சம சக்தியாகும்.

இரு தசைகளுக்கு இடையே அமைந்துள்ள ஜவ்வு ராகுவாகும்.

Advertisment

ஆழ்ந்த சிந்தனை, பிரம்மாண்டம், இடையறாது பயணிப்பது, நாடி தத்துவம், தந்தைவழி பாட்ட னார், டி.என்.ஏ.வின் வடிவம் ஆகிய அனைத் துமே ராகுவின் காரகங்கள் ஆகும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ss

Advertisment

பிறப்பு எண் 4 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், உலக அறிவு நிரம்பியவர்கள். நேர்மை யைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி அடையும் யோகிதை உடையவர்கள். அரசியலில் புகழ், மகுடம் கிடைக்கும். லட்சியத்தை அடைய எப்பேர்பட்ட தியாகத்தையும் செய்வார்கள். பலர் இவரை நண்பர்களாக அடைய விரும்புவார்கள். உலக விஷயங்களில் ஆர்வம் இருக்கும், ஏதாவது புது மனிதர்களிடம் தன்னுடைய கருத்துகளை கூறிக்கொண்டே இருப்பார்கள். செய்யும் தொழிலில் கண்டிப்புடனும், உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படு வார்கள். நல்ல கணவன்- மனைவி வாய்த்துவிடும், ருசி மிகுந்த உணவை ருசித் ருசித்து உண்ணும் குணம் படைத்த நபர்கள். ஞாபக சக்தி அதிகம் இருக்கும் அதீத வாசனை பிரியர்கள். வாக்கு வண்மை உடையவர்கள். தனது எண்ணப்படியே காரியம் ஆற்றுவார்கள். சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளையும், இவர்களின் வசமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். ரகசிய சக்திகள் குடிகொள்ளும்.

பிறப்பு எண் 4 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் அடிக்கடி மனநிலை திடம் குறைந்து பின்னர் மனம் தெளி வடைந்து விடுவார்கள். பார்க்க கம்பீரமாக காட்சியளித்தபொழுதும் மன குழப்பத்துடனே இருப்பார்கள். வசதியான குடும்பத் தலைவர்களாக இவர்கள் இருப்பார்கள். கலைகளை ரசிப் பவர்கள். சுய கௌரவம் பார்ப்பார்கள். மற்றவர்களின் ரகசியங்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். வாக்கில் வண்மை அதிகம் இருக்கும். பேச்சு எழுத்து உலகையே உலுக்கும். தெய்வ சக்தியின்மீது அதீத நம்பிக்கையை கொண்டவர்களாக இருப்பார்கள். கடினமான உழைப்பாளிகள்.

பிறப்பு எண் 4 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பொதுஜன விஷயத் தில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பார்கள். அறிவாலும் ஆற்றல்மிக்க செயலாலும் மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள். ஆரம்ப வாழ்க் கையில் போராடினாலும் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவார்கள். எல்லாரிடமும் நல்லவிதமாக பழகக் கூடியவர்கள். பிறருக்கு போதிக்கும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். வெகு சிலரையே ஆழ்ந்த நட்பின் மூலம் நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். கடின உழைப்பாளிகள். நாயஸ்தர்கள். கூர்மையான அறிவு இயற்கை யிலேயே இருக்கும்.

பிறப்பு எண் 4 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

முழு ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர் கள் பண்பட்ட மனிதர்களாக இருப்பார்கள். தன்னை நம்பியவர்கள் யாராக இருந்தாலும் காக்கும் அரனாக விளங்குவார்கள். பணத்தை விட அனுபவத்தையே அதிகம் சம்பாதிப் பார்கள். எதிலும் பிரம்மாண்டத்தை எதிர் பார்ப்பார்கள். கலைத்துறை, சினிமாத்துறை, போன்றவற்றின்மூலம் பெறும் வருமானத்தை அடையும் யோகிதை பெற்றவர்கள். எழுத்தும், பேச்சும், மக்களை திசை திருப்பும், உலகையே உலுக்கக்கூடிய அளவிற்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவர்கள். ஆன்மிகத்தின் பற்றுதல் உண்டாகும் நல்ல நண்பர்கள் இவர்களுக்கு அமைவார்கள். புகழில் ஆசை இருக்காது.

பிறப்பு எண் 4 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் புதனின்ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் எந்த ஒரு செயலையும் விரைந்து முடிக்கவேண்டும் என்று எண்ணு வார்கள். யார் எதைப் பற்றி கூறினாலும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களுடைய கருத்துக்கள் பிறருக்கு புரியவில்லை என்றால் விரக்தியின் வசம் செல்வார்கள். அபூர்வ ஆற்றல் படைத்தவர்கள். தொழில்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தயாள குணம் கொண்டவர்கள். இவர்கள் பிறருக்கு நன்கு செலவுசெய்து அதற்கு தக்க வேலையும் வாங்கிக்கொள்வார்கள். குடும்ப வாழ்க்கையை விட்டுவிலக விருப்பம் கொள்வார்கள். தான- தர்மங்கள் அதிகம் செய்வார்கள். பிறரை பழிவாங்கும் எண்ணம், சூது, வஞ்சனை இவை இவர்களிடத்தில் சிறிதும் இருக்காது.

பிறப்பு எண் 4 விதி எண்-6 பிறந்தவர்கள்

ராகு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலைகளின் பிறப்பிட மாக திகழ்வார்கள். தன்னம்பிக்கைமிகுந்த இவர்கள் தைரியசாலிகளாகவும், பிறரை கவரும் காந்த சக்தி உடையவர்களாகவும், கேட்பவரை தன்மயப்படுத்தும் பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசியல் அறிவு உடையவர்கள். நல்ல வாழ்க்கை துணையால் வாழ்க்கையில் வசந்தம் வீசும். சுதந்திரப் பிரியர்கள். சரீர பயிற்சி தத்துவ ஆராய்ச்சிகள் செய்வார்கள். விஞ்ஞானிகள், வக்கீல், ஆன்மிக தலைவர்கள், கதாசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோர் இந்தக் கூட்டுத் தொகையில் அமைந்தவர்கள். சாதிக்கும் சூழல் இயற்கையாகவே அமைந்து விடுகின்றது.

பிறப்பு எண் 4 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நல்ல நாணமும், சிறந்த அறிவும், எதையும் முன்னரே அறிந்துவிடும் ஆற்றலும் உடையவர்களாக இருப்பார்கள். கடவுளின் பக்திகொண்டவர்கள். கலகலப்பாக பேசும் இவர்கள் திடீரென தனிமையை விரும்புவார்கள். குடும்ப பிரச்சினைகளால் மனம் நொந்து சில தேவை யில்லாத முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கடுமையான சொற்களைக் கேட்டால் மனம் நொந்து போவார்கள். தன்னுடைய குடும்ப விவகாரத்தை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். சமூகத்தை தட்டி எழுப்பக் கூடிய நபர்கள், கவர்ச்சியின்மீது விருப்பும் வெறுப்பும் இரண்டற கலந்த தன்மை இருக்கும். சில சமயத்தில் வீட்டை விட்டு சன்னியாசம் செல்லும் சூழல் இவர்களுக்கு உருவாகும். மிதமான ஆகாரத்தை விரும்பும் நபர்கள்.

பிறப்பு எண் 4 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர் கள். பூரணமான சுதந்திரப் பிரியர்கள். உடல்பலமும் மனோபலமும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள். பேச்சு சுவை யுடையதாக இருக்கும். மந்திரம், வசியம் போன்ற கலைகளில் எளிதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். வாக்கு பலம் வாய்ந்தவர்கள் எதிரியை எளிதில் விழுத்துவார்கள். வாதாடும் திறன் இருக்கும். துப்பறியும் சக்தி உடையவர்கள்.

பிறப்பு எண் 4 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

ராகு மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் மிடுக்கான தோற்றம் உடையவர்கள். எதிரிகளுக்கு எதிரியாகவே திகழும் ஆற்றல் உடையவர்கள். அதீத மனோபலமும் அதீத உடல்பலமும்மிக்க நபர்களாக பிரதிபலிப்பார்கள். கௌரவத்தை பெரிதாக மதிப்பார்கள். இவர்களின் பேச்சு மற்றவர்களை சிந்திக்க வைக்கும். இவர்களுக்கு தெரியாத விஷயங்களை இருக்காது என்று எடுத்துக்கொள்ளலாம். ரகசியம் காப்பார்கள். தன் இனம் காப்பதில் வல்லவர்கள். பொதுவாழ்க்கையில் பிரகாசிப்பார்கள்.

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட தேதிகள்

1, 10, 19, 28, 5, 14, 23, 6, 15, 24, 9, 18, 27.

துரதிர்ஷ்டமான தேதிகள்

8, 17, 26, 2, 11, 20, 29.

அதிர்ஷ்ட நிறங்கள்

வெளிர் நீலம், மஞ்சள், பொன்னிறம், சிவப்பு நிறம், சந்தனம்.

துரதிஷ்டமான நிறங்கள்

கருப்பு, இருண்ட நிறங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

கோமேதகம், நிலக்கல், பவளம்.

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் கையெழுத்தை பாம்புபோல வளைவுகளைக் குறிப்பிட்டு பெரியதாக எழுதிவர அதிர்ஷ்டம் உண்டாகும். கிட்டத் தட்ட நான்கு சென்டிமீட்டருக்கு அதிகமாக கையெழுத்து இருக்கவேண்டும். அடிக்காமல் அடிக்கோடிடாமல் மேல் நோக்கி சாய்வாக அமைந்திடவேண்டும்.

இவர்கள் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி ஆகியவற்றை ராகுவின் நட்பு எண்ணில் அமைத்துக்கொள்வது சிறப் பினை தரும்.

செல்: 80563 79988