Advertisment

எண்களின் ஆளுமையும், அதிர்ஷ்டமும்! மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/personality-numbers-and-fortune-melmaruvathur-s-kalaivani-0

மானுடத்தை வெற்றியின் வசம் இட்டுச்செல்லும் எண்ணிய-ல், பற்பல ரகசியங்கள் ஒளிந்தும், பொதிந்தும் உள்ளது.

Advertisment

ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், கிரகங்கள் சார்ந்தே செயல்படுகின்றது. அந்த கிரகங்கள் எண்ணியலோடு இணைந்து பலனை மனித வாழ்வில் பிரதிப-க்கின்றது.

இதனால் ஒவ்வொருவரின் உடல், மனம், அறிவு போன்றவை மாற்றமடைந்து ஒரு செயலை வெற்றியின் வசமும், எதிர்மறையின் வசமும் இட்டு செல்கின்றது.

குருவின் ஆதிக்கமான எண் 3-ன் வசம் பயணிக்கலாம்.

C, G, L, S. ஆகிய ஆங்கில எழுத்துக்கள் குருவின் ஆதிக்கம் கொண்டவை ஆகும்.

மேலும் எந்த மாதமாக இருந்தாலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த மூன்றாம் எண் குருவின் பூரண சுபத்துவம் கொண்ட எண்ணாகும்.

Advertisment

இது உட-ல் தொடை, வயிறு, குடல் பகுதி, உட-ல் அடங்கியுள்ள மொத்த கொழுப்புக்களின் கூட்டு மற்றும் மூளையின் வடிவமைப்பு, குருவின் ஆளுமைக்கு உரிய இடங்கள் ஆகும்.

அனுசரித்து செல்லுதல், மற்றவர்களுக்கு அறிவுரை கூறுதல், நெருடலான சந்தர்ப்பத்தையும், தனக்கு சாதகம் இல்லாத சந்தர்ப்பங்களையும், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் தன்மை, மன்னிப்பு இவையனைத்தும் குருவின் குணங்கள் ஆகும்.

இயற்கையிலேயே நீதி, நேர்மை, நிதானம், நடுநிலை, முன்பின் நடப்பதை ஆராயும் திறன், துவளாத தன்மை போன்ற கொள்கையுடன் வாழ்பவர்கள்.

பரோபகார சிந்தனையும், தேசபக்தியும், கொண்டு தேச முன்னேற்றத்தில் ஆர்வமுடன் செயல்படுவார்கள்.

இவர்கள் மூத்தோர்கள், முன்னோர்கள், சான்றோர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பார்கள். பிறருடைய துன்பம் கண்டு மனம் உருகுவார்கள். நியாயமான முறையில்தான் எதையும் செயல்படுத்துவார்கள். ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பார்கள்.

இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரும் தலைவர்களாகவும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதிக்கும் மாண்புமிக்கவர்களாகவும் திகழ்வார்கள்.

தனக்கு லாபம் இல்லாத காரியங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். தான தர்மங்கள் செய்பவருக்கு உதவும் தன்மை இவர்களின் இயல்பிலேயே அமைந்திருக்கும்.

பெரிய மனிதர்கள் தங்களுடைய காரியங்களுக்கு இவர்களை பயன்படுத்திக்கொண்டு, பிறரிடம் இவர்களைப் பற்றி அறிவாளிகள்போல அடையாளம் காட்டிக்கொண்டு, சாதாரண நிலையை விட்டு உயர்ந்துவிடாமல் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இவர்களின் உடல் சரியான மற்றும் நடுத்தரமான உயரமும், நீண்ட வில் போன்ற புருவங்களும், கருணை மிகுந்த கண்களும், கூர்மையான காந்த பார்வையும் அமைந்திருக்கும். புன்னகை தோய்ந்த முகத்துடன் அழகாக காட்சியளிப்பார்கள். அழகான பல்வரிசை அமைந்திருக்கும். பல்வரிசை சரியாக அமையாவிட்டால் குருவின் ஆதிக்கத்தில் குறைவை காட்டும். இவர்கள் பெரும்பாலும் சதைப்பற்றுடன் காட்சியளிப்பார்கள். உடல் எளிதில் வெப்பம் ஆகிவிடும்.

பிறப்

பிறப்பு எண் 3 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

இயற்கையிலேயே நேர்மையான குணம் கொண்டவர் கள். தனது மனதிற்கு பிடிக்காத காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். குழந்தைகள்மீது அதீத பாசம் இருக்கும்.

அரசியல் ஞானிகள் பிரயாணத்தில் பிரியம் உடையவர் கள். இரவு- பகல் பாராமல் எப்பொழுதும் உழைப்பவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். உயர்பதவி வகிப்பவர்கள். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பிறருடைய யோசனையை ஒருபொழுதும் ஏற்க மாட்டார்கள். தன்னை நாடி வருபவர்களின் துன்பம் துடைக்க தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள்.

பிறரை மதித்து கண்ணியமாக வாழ்வார்கள். சாதிக்கும் ஆர்வம் உடையவர்கள். பண விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்வார்கள்.

இவர்களின் வம்சாவழியில் கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்து கொடுத்தவர்கள் அல்லது கோவிலை சார்ந்த பயணத்தில் இருப்பவர்கள் அமைந்திருப்பார்கள்.

இவர்களின் வம்சாவழியில் ஆன்மிகம் சார்ந்த தொடர்பு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.

dd

பிறப்பு எண் 3 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

இவர்கள் தைரியசா-கள்போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் சற்று பயந்த மனநிலை இவர்களின் மனதில் இருக்கும்.

எந்த விஷயத்தையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்து செய்பவர்கள். யோசித்தாலும் சரியாக முடிவெடுப்பதில் சுனக்கம் காட்டுவார்கள்.

உணவு பிரியர்கள் உணவின்மீது அதீத பற்றும் ஆர்வமும் இவர்களுக்கு இருக்கும்.

இளமையிலேயே பல துன்பங்களை அனுபவித்து விடுவார்கள். அன்பான உள்ளம் கொண்டவர்கள். வெளியூர், வெளிநாடு பிரயாணத்தின்மூலம் பெரும் பணம் சம்பாதிப் பார்கள். பல்நோக்கு சிந்தனையாளர்கள். தன்னடக்கம் மிக்கவர்கள். நல்ல வீடு, வாகன யோகம் உண்டாகும். துன்பப் படுபவர்களின் துயரை போக்குவார்கள். தாய் அன்புடன் நடந்துகொள்வதில் சிறப்பு மிக்கவர்கள்.

இவர்களின் தாய்யாதிவழியில் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை அதிகமாக காணமுடிகின்றது. மக்கள் மத்தியில் கலைகளை பரப்பும் ஆசானாக இருப்பார் கள். மனோதிடத்தில் சிறிய குறைபாடு இருக்கும். மிக எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சட்டங்களை நிறைவேற்றும் சாமர்த்தியசா-கள்.

பிறப்பு எண் 3 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

முழுக்க முழுக்க குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மற்றவர் களின் அறிவு கண்களை திறப்பார் கள். இயற்கையாகவே நாணயம், நீதி, நேர்மை, தன்னம்பிக்கை என்று பயணிக்கிறார்கள். வசீகரிக் கக்கூடிய தன்மை உடையவர்கள். பல நல்ல உதவிகள் இவர்களைத் தேடிவரும்.

ஞாபக சக்தி அதிகம் உடையவர்கள். இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்குவார்கள். இரட்டை நாடி கொண்ட வர்கள். சிறந்த தோல் வ-மை உடையவர்கள். இளமை யிலேயே முடி சம்பந்தப்பட்ட பிரச்சினை இவர்களுக்கு இருக்கும். பல பேர் சூழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இவர்களை சுற்றி இவர்கள் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த வர்கள் தூய்மை விரும்பிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றியே தீருவார்கள். இவர்களின் வம்சாவழியில் மகான்கள் மற்றும் முனிவர்கள் சார்ந்த வழிபாடுகள் அமைந்திருக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பிறப்பு எண் 3 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் ராகுவின் ஆதிக்கம்கொண்ட இவர்கள் ஞானமுடையவர்கள். ஞானத்தின் தூண்களாக விளங்கு பவர்கள். நல்ல குணம் படைத்த இவர்கள் தைரியசா-கள். நல்ல நண்பர்களை பெற்றிருப்பார்கள். வாகன பிரியர்கள். எதிலும் உச்சத்தை தொடும் வல்லவர்கள். புகழ்பெறும் பாக்கியம் உடையவர்கள். பேரறிவும் பேச்சுத்திறனும் உடையவர்கள். இவர்களில் வழக்கறிஞர்கள் உச்சத்தை எட்டுவதைக் காணமுடிகின்றது.

நன்றாக பேசி காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். பொதுசேவைகள் நிறைய செய்வார்கள். வாய் பேச்சில் சம்பாதிக்கும் திறனுடையவர்கள்.

இவர்களின் ஒவ்வொரு செய-லும் தனித்தன்மை ஒளிந்திருக்கும். எதையும் செவ்வனே செய்துமுடிக்கும் திறமை சா-கள். பொதுஜன உபகாரியாக பலருக்கு உதவும் எண்ணத்துடன் வாழ்வார்கள். நண்பர்கள் பிரியவே மாட்டார்கள்.

இவர்களின் எதிர்மறையான தன்மை என்றால் அவசரத் தன்மை அதிகம் உடையவர்கள். இறையும் பிரபஞ்சமும் இவர்களுக்கு மறைபொருள் ரகசியத்தை வெளிக் கொணரும் ஞானத்தை அளித்திருக்கும். பேரம் பேசுவதிலும் சாமர்த்திய சா-கள். இவர்களை சூழ்நிலைக்கு ஏற்றால்போல் தன்னை சரியாக பயன்படுத்தி முன்னேறும் தன்மை உடையவர்கள்.

தனக்கே எல்லாம் தெரியும் என்கின்ற மிதப்பும் அதிகமாக காணப்படுகின்றது. சில வாய்ப்புகளை தவற விடும் சூழ்நிலை இவர்களுக்கு உருவாகும்.

பிறப்பு எண் 3 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் நேர்மையுடனும் நீதியுடனும் பேசுவார்கள்.

மிகுந்த சுறுசுறுப்புடனும் மிக விரைவாக பணியாற்று வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள் உடல் உழைப்பை விட புத்தியின் கூர்மை இவர்களுக்கு அதீதமாக இருக்கும். எந்தச் செயலையும் வியாபார நோக்குடன் எடுத்துச் செல்லும் சாமர்த்தியசா-கள். வீடு, வாகனம், தொழில் என்று எல்லா வளங்களோடும் வசதியாக வாழ்வார்கள். இவர்கள் எளிதில் யாரிடமும் ஏமாற மாட்டார்கள். இயல், இசை, சினிமா போன்ற கலைத்துறையில் புகழ்பெறுவார்கள்.

சிலருக்கு அமைதி குறைவாகவே இருக்கும். ஆரோக் கிய குறைபாடும் ஏற்படும். உலக வரலாற்றிலேயே இடம் பிடிக்கக்கூடிய யோகிதை உடையவர்கள். இவர்கள் கண்டிப் பும் கடமை உணர்ச்சியும் அதிகம் உடையவர்கள்போல தோன்றினாலும் மிகவும் இளகிய மனமுடைய நபர்கள்.

இவர்கள் சிந்திக்கும் சிந்தனை இவர்களுக்கே சில சமயத்தில் இடர்பாடாக அமைந்துவிடும். இவர்கள் வகுத்துக் கொடுக்கும் திட்டங்கள் எள்ளளவும் பிசகாமல் நிறைவேறி வெற்றியினை கை வசமாக்கும்.

பிறப்பு எண் 3 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலைகளில் வல்லவர்கள். சாமர்த்திய கொள்கையை பரப்பி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். நடத்தைகளில் சமநிலை வகிப்பார்கள்.

கலைத்துறையில் பெரும் சாதனைபுரிய வல்லவர்கள். வாழ்க்கையில் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வருவார்கள். பொன், பொருள், வண்டி வாகனம் என்று வசதியான வாழ்க்கை அமையும். நல்ல மனைவி, குழந்தைகள் வாய்க்கும்.

வீட்டை கலைநயத்துடனும் அம்சங்களுடன் அமைத்துக் கொள்வார்கள். இவர்களுக்கு காம சிந்தனை சற்று மேலோங்கி இருக்கும். சிலர் நல்லவராக வாழ முயற்சி செய்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கு கெட்ட பெயர் எடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகின்றது.

பிறருக்கு யோசனை கூறி பொருளீட்டும் யோகம் உண்டு. மனைவியை விட்டு பிரிய மனம் இராதவர்கள். தன் மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுவார்கள். குழந்தைகளின்மீதும், குடும்பத்தாரின்மீதும், அதீத பிரியம் கொண்டவர்கள். வீண் பேச்சை விரும்ப மாட்டார்கள் கோபம் திடுக்கென்று வந்துபோகும்.

எதையும் வருமுன் யூகிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். எப்பொழுதுமே ஒரு ஈர்ப்புடனும் நல்ல மனம் வீசும் திரவியங்களின் ஆளுமையுடனும் திகழ்வார்கள்.

பிறப்பு எண் 3 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நாட்டிற்கு சேவை செய்வதையே முழு நேரமும் ஈடுபட்டு இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். எழுத்து, பேச்சு, பெரும் மக்கள் கூட்டம் ஆகியவற்றுடன் இவர்களின் பொழுதுபோகும். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். கதை, இலக்கியம், சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் ஈடுபட்டால் பெரும் புகழ் கிடைக்கும்.

ஏகாந்த வாழ்க்கை இவர்களை பெரிதும் கவரும். பழமையும், புதுமையும், கலந்து காட்சியளிப்பார்கள். பிரச்சினை வரும்போது அதை பேசி தீர்க்கும் சமாதான விரும்பிகள். அடிமை தொழிலைவிட சுயதொழிலையே பெரிதும் விரும்புவார்கள். தைரியசா-கள். நல்ல யோசனை கள் சொல்லக்கூடியவர்கள். தூய்மையான உள்ளம் உடையவர்கள். ஓய்வு நேரத்திலேயே சிந்தித்துக்கொண்டே இருக்கும் செயல்திறன் மிக்கவர்கள். யார் தவறு செய்தாலும் எழுத்தாலும் பேச்சாலும் சுட்டிக் காட்டுவார்கள். பொது நலன் செய்வதாக காட்டிக்கொண்டு தன்னையும், தன் இனம் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், நலமுடனும் வளமுடனும் வாழ வைப்பதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.

பிறப்பு எண் 3 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் இவர்களின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிபெறுவார்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தெரிந்திருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காட்சியளிப்பார்கள் ஓய்வெடுக்க நினைத்தால் முழு சோம்பேறிகளாகவும் மாறிவிடுவார்கள். தனது கருத்துக்களை விவாதிக்கும்போது தெளிவாக இருப்பார்கள். உதவி என்று கேட்டுவருபவர்களை யாராக இருந்தாலும் உதவிகள் செய்வார்கள். அஞ்சா நெஞ்சமும் மன தைரியமும் மிக்கவர்கள். காரிய சித்தி உடையவர்கள். ஏதாவது ஒருவழியில் புதுமையை செய்து கொண்டே இருப்பார்கள். எல்லோரிடமும் ஒத்துப்போகக் கூடியவர்கள். சுய முயற்சியால் பூரண வெற்றி கிடைக்கும். புகழ்பெற வேண்டும் என்ற அதீத ஆசையுடன் பயணிக்கும் நபர்கள். யோசிக்கும் திறனில் அவ்வப்போது சிறிய தடைகள் இவர்களை வந்து அணுகும்.

பிறப்பு எண் 3 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர் கள் உடல் வ-மையும் மனவ-மையும் மிக்க திறமைசா-கள். எல்லா வசதிகளும் பெற்று வாழக்கூடிய பாக்கியசா-கள். அயராத உழைப்பினால் அபரிவிதமான வெற்றிகளை குவிப்பார்கள். பிறர்மீது அதிகாரம் செலுத்தக்கூடியவர்கள். அரசிய-ல் பெரும் உச்சத்தை எட்டும் நபர்கள். சேவை மனப் பான்மை உடையவர்கள் அயராத உழைப்பின்மூலம் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்கள். இளமையிலேயே மிகவும் கடினமாக உழைத்து வெற்றிபெறுவார்கள். சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். தனது மனம் கூறும் யோசனைபடியே எதையும் செய்வார்கள். ஆன்மிக வளமுள்ளவர்கள். கல்வி, தனம், வீரம் மூன்றையும் ஆட்சிசெய்வார்கள். நலன் கருதி பயன்தரும் சாஸ்திர நியமங்களைக் கடைபிடிப்பார் கள். குடும்ப சகோதர- சகோதரிகளுடன் பாசமாக இருப்பார் கள். பொருளாதார மேம்பாட்டுக்கான வழிகளை நன்கு அறிந்துவைத்திருப்பார்கள். தன்னைத்தானே பல பெயரிடும் புகழ்ந்து பேசுவார்கள். தான் அடைந்த நன்மை மற்றவர்கள் அடையக்கூடாது என்று எண்ணி மற்றவர்களிடம் உண்மையை மறைத்து புறம்கூறும் மனம் உடையவர்கள். குதர்க்க புத்தியால் நோயை வரவழைத்துக்கொள்வார்கள். சிறந்த நிர்வாகிகள். நாட்டையே திசை திருப்பி தன் பின்னால் வழிநடத்திச் செல்லும் போர் குணம் வாய்ந்தவர்கள்.

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட தேதிகள்

3, 12, 21, 30, 9, 18, 27.

துரதிஷ்ட தேதிகள்

6, 15, 24.

அதிர்ஷ்டமான நிறங்கள்

மஞ்சள், பொன்னிறம், சந்தன கலர், ஆரஞ்சு, ரோஜா பூ நிறம், தாமரைப் பூ நிறம்.

துரதிஷ்டமான நிறங்கள்

பச்சைக், கருப்பு, காபி கலர் மா இருண்டு நிறங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

மஞ்சள் புஷ்பராகம், செவ்வந்திக்கள், கனக புஷ்பராகம்.

அதிர்ஷ்டமான உலோகங்கள்

தங்கம், பிளாட்டினம்.

குருவின் ஆதிக்க எண்களான மூன்றின் கூட்டுத் தொகையில் அதிர்ஷ்டமான பெயர்களை அமைத்துக் கொண்டால் வாழ்வில் பொருளாதார உயர்வும் வெற்றியும் இவர்களின் வசமாகும். இவர்களின் கையெழுத்தில் வகுத்தல், கழித்தல், சம குறிகள், துதிக்க கீழ்வெட்டு, குறிகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

கையெழுத்தின் ஆரம்பம் வலப்புறமாக சுழித்தும் முக்கோண குறியுடனும் அமைக்கவேண்டும். மூன்று சென்டி மீட்டருக்குள் நீளமுடையதாக புள்ளி வைக்காமல் அடிக்கோடு இடாமல் குரு ஆதிக்க எழுத்துக்களை கோவில் கோபுரங்கள் போன்று உயரமாக இட்டு வசியமான கையெழுத்தை அமைத்துக் கொண்டால் வளம்மிக்க வாழ்க்கை அமையும்.

தொலைபேசி எண்ணையும், வங்கியின் எண்களையும், குருவின் ஆதிக்க எண்ணிலோ அல்லது நட்பு எண்ணிலோ அமைத்துக்கொண்டால் வாழ்வில் பல வளங்களை ஆட்சி செய்யலாம்.

bala050424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe