எண்களின் (7) ஆளுமையும் அதிர்ஷ்டமும் -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/personality-and-fortune-numbers-7-melmaruvathur-s-kalaivani

ந்த பிரபஞ்சத்தின் பிறப்பிலிருந்து எண்களுக்கான ஆளுமை அமைந்துள்ளதை சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உரைத்துள்ளனர்.

ஜாதகமும் பிறந்த எண்களும் ஒன்றுக் கொன்று முரண்பாடாக இருந்த பொழுதிலும் கையெழுத்து மற்றும் பெயர் எண்களை அதிர்ஷ்டமாக அமைத்துக் கொண்டு பல சாதனைகளை புரியமுடியும் என்று பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞ, ழ ஆகிய எழுத்துக்கள் 7-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவை ஆகும்.

இந்த 7-ஆம் எண் ஆனது ஞானம், ஆன்மிகம், இறை சிந்தனை, பற்றுகளிலிருந்து தனித்திருப்பது போன்ற தன்மையை இந்த பிரபஞ்சத்தின் வசம் இருந்து தனதாக்கிக் கொண்டுள்ளது.

கேது மனித உடலில் தலைமுடி மற்றும் மூளையின் கொள்ளளவான (brain capacity)என்ற முழு சக்தியும் ஆளுகின்ற தன்மையை பெற்றுள்ளது.

sss

7, 16, 25 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறப்பெடுத்திருந்தாலும். இவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறப்பு எண் 7 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் நல்ல குணத்தை யும் அறிவையும் சிந்தனை சக்தியும் பெற்றிருப் பார்கள். உயர்ந்த உள்ளம்கொண்ட மனிதர் கள். கதை, கவிதை, கட்டுரை, கலாச்சார நாட்டமுடையவர்கள். ஈவு இரக்கமுடைய இவர்கள் தெய்வ நம்பிக்கையில் சிறந்து விளங்குவார்கள். மனிதனுக்கு அப்பாற் பட்ட சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்வார்கள்.

மிகவும் குழப்பம் அடைவார்கள். எதிலும் முடிவெடுக்க முடி யாமல் திணறுவார்கள். கலைத்துறையில் பிரகாசிக்கும் தன்மை இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். எல்லா விஷயத்தையும் எளிதில் அறிந்து வைத்திருப்பார்கள். சுதந்திர உணர்ச்சிமிக்கவர்கள் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். இவர்களின் தாயாதிவழியில் ஒரு அரசு சார்ந்த தண்டனை பெற்றவர் இருப்பார்.

பிறப்பு எண் 7 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் இளமையிலேயே ஞானம் முதிர்ச்சி பெற்றவர்கள். கலையின் பிறப் பிடமாக இவர்கள் திகழ்வார்கள். புன்னகை கூடிய முகத்துடன் காட்சியளிப்பார்கள். பேச்சைவிடவும் எழுத்துக்களின் ஆதிக்கத்தில் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

சிறந்த நடிகர்களும், ஜோதிடம், மனோ வசியம், விஞ்ஞானம், மருத்துவம், சினிமா போன்ற துறைகளிலும் பெரும் சிறப் படைந்தவர்கள் இந்த எண்ணில் இருக்கின்றார் கள். வீரர்கள்போல காட்சியளிப்பார்கள். பார்க்கவே கவர்ச்சியாக இருப்பார்கள். இளகிய மனதுடன் பிறருடைய துன்பத்திற

ந்த பிரபஞ்சத்தின் பிறப்பிலிருந்து எண்களுக்கான ஆளுமை அமைந்துள்ளதை சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உரைத்துள்ளனர்.

ஜாதகமும் பிறந்த எண்களும் ஒன்றுக் கொன்று முரண்பாடாக இருந்த பொழுதிலும் கையெழுத்து மற்றும் பெயர் எண்களை அதிர்ஷ்டமாக அமைத்துக் கொண்டு பல சாதனைகளை புரியமுடியும் என்று பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞ, ழ ஆகிய எழுத்துக்கள் 7-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவை ஆகும்.

இந்த 7-ஆம் எண் ஆனது ஞானம், ஆன்மிகம், இறை சிந்தனை, பற்றுகளிலிருந்து தனித்திருப்பது போன்ற தன்மையை இந்த பிரபஞ்சத்தின் வசம் இருந்து தனதாக்கிக் கொண்டுள்ளது.

கேது மனித உடலில் தலைமுடி மற்றும் மூளையின் கொள்ளளவான (brain capacity)என்ற முழு சக்தியும் ஆளுகின்ற தன்மையை பெற்றுள்ளது.

sss

7, 16, 25 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறப்பெடுத்திருந்தாலும். இவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறப்பு எண் 7 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் நல்ல குணத்தை யும் அறிவையும் சிந்தனை சக்தியும் பெற்றிருப் பார்கள். உயர்ந்த உள்ளம்கொண்ட மனிதர் கள். கதை, கவிதை, கட்டுரை, கலாச்சார நாட்டமுடையவர்கள். ஈவு இரக்கமுடைய இவர்கள் தெய்வ நம்பிக்கையில் சிறந்து விளங்குவார்கள். மனிதனுக்கு அப்பாற் பட்ட சக்திகளை பற்றி ஆராய்ச்சி செய்வார்கள்.

மிகவும் குழப்பம் அடைவார்கள். எதிலும் முடிவெடுக்க முடி யாமல் திணறுவார்கள். கலைத்துறையில் பிரகாசிக்கும் தன்மை இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். எல்லா விஷயத்தையும் எளிதில் அறிந்து வைத்திருப்பார்கள். சுதந்திர உணர்ச்சிமிக்கவர்கள் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். இவர்களின் தாயாதிவழியில் ஒரு அரசு சார்ந்த தண்டனை பெற்றவர் இருப்பார்.

பிறப்பு எண் 7 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் இளமையிலேயே ஞானம் முதிர்ச்சி பெற்றவர்கள். கலையின் பிறப் பிடமாக இவர்கள் திகழ்வார்கள். புன்னகை கூடிய முகத்துடன் காட்சியளிப்பார்கள். பேச்சைவிடவும் எழுத்துக்களின் ஆதிக்கத்தில் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

சிறந்த நடிகர்களும், ஜோதிடம், மனோ வசியம், விஞ்ஞானம், மருத்துவம், சினிமா போன்ற துறைகளிலும் பெரும் சிறப் படைந்தவர்கள் இந்த எண்ணில் இருக்கின்றார் கள். வீரர்கள்போல காட்சியளிப்பார்கள். பார்க்கவே கவர்ச்சியாக இருப்பார்கள். இளகிய மனதுடன் பிறருடைய துன்பத்திற்கு உதவுவார்கள். மனதில் புதுப்புது கருத்துக்கள் உதயமாகும்வண்ணம் தன்னை மெருகேற்றிக்கொண்டே செல்லுவார்கள். தொழில்களில் பல புதுமைகளை செய்வார்கள். சந்தோஷமான சூழ்நிலையால் சாதகமான பலன்களை அடைவார்கள். இவர்களுக்கு உணவு சார்ந்த துறையில் பெரும் மதிப்பும் மரியாதையும் வரும். இவர்களின் வம்சாவழியில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த துறையில் பயணிப்பவர்கள் அமைந் திருப்பார்கள்.

பிறப்பு எண் 7 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பொது அறிவும், சுய அறிவும். நிரம்பியவர்களாக இருப்பார்கள். கவர்ச்சியான முக அமைப்பு உடையவர்கள். குறுகுறுப்பான தன்மை கொண்டவர்கள். மிகவும் திறமைசாலிகள். வசீகரமான முகமுடையவர்கள். தியானம், மந்திரம், யோகம், அஷ்டமா சித்துக்கள், இவர்களுக்கு கைவள்ளியமாகும். தியானமே இவர்களின் மனதை பெரிதும் கவர்ந்திருக்கும். ரகசிய கலைகள் கற்றவர்கள். இளமை முதல் தாய் மீதும் தாய் நாட்டின்மீதும் மிகுந்த பற்று உடையவர்களாக இருப்பார்கள். முன்னோர்களை பின்பற்றி நடப்பார்கள். கடினமான உழைப்பாளிகள். நாணயம் மிக்கவர்கள். மிக எளிதில் எல்லா துறையிலும், தொழில்களையும் கற்றுக் கொள்வார்கள்.

நல்ல வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். இளமை காதலை நினைத்து வருந்துவார்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள். இவர்கள் மனதில் தான் ஏதோ பெரிய மனிதர் என்ற நினைப்பு இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் வம்சாவழியில் சன்னியாசம் சென்றவர்களோ அல்லது திருமணமே ஆகாத யாரோ ஒரு நபரோ இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

பிறப்பு எண் 7 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் நினைத்ததை முடிக்கும் லட்சியவாதிகளாக திகழ்வார்கள். கலையுலக பிரம்மாக்கள் இவர்கள் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. எப்பொழுதுமே தூய்மையாக காட்சியளிப்பவர்கள். விலை உயர்ந்ததாக இல்லாவிட்டாலும்கூட தான் அணியும் ஆடை சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்பார்கள். கலகலப்பாக பேசும் இவர்கள் சில நேரங்களில் தனிமையில் சிந்தனை செய்துகொண்டே இருப்பார்கள். அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். எதையும் வருமுன் யூகிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

சமுதாயத்தில் முக்கிய நபராக விளங்குவார்கள். சுற்றுப்பயணத்தை மனம் விரும்பி அனுபவிப்பார்கள். ருசியான உணவு களை விரும்பி உண்பவர்கள். பணம், பதவி, புகழ் மூன்றையும் உடையவர்கள், கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடியவர்கள். புதிய பல சாதனைகள் படைப்பார்கள். இவர்களின் முப்பாட்டனார் பெரும் மரியாதைக்குரியவராக இருந்திருப்பார்கள்.

பிறப்பு எண் 7 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பார்கள். பெரும் கற்பனை வாதிகள். பலத்தின்மூலம் பணத்தை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். தேவையில்லாத விஷயங்களில் ஒருபொழுதும் தலையிடமாட்டார்கள். லீலா வினோதங்கள் இவர்களிடையே நிரம்பி யிருக்கும். தன்னம்பிக்கை கொண்டவர்கள். தொழில்செய்து உழைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருபவர்கள். கண்ணியமானவர்கள்.

மனோவசியம் பிறவியிலேயே இவர்களிடம் இருக்கும். எம்மதத்தையும் மதிப்பவர்கள். எளியவர்களின்மீது இரக்கமுடையவர்கள். மந்திர சக்தியும், மனோவசியமும், இவர்களுக்கு கைவள்ளியமாகும். சன்னியாசம் பெறாத வாழ்வே இவர்களை அதீதமாக கவர்ந்திருக்கும். வயது ஏற ஏற இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் தன்னுடன் நேரடி பார்வையில் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். தர்மவான்கள். தன்னிச்சையாக செயல்பட்டு பெரிய மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய யோகிதை பெற்றவர்கள். குருவருள் நிறைந்திருக்கும். பேச்சாலும் எழுத்தாலும் முன்னேறக் கூடியவர்கள். தான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஆண்டவன்தான் காரணம் என்று கூறுவார்கள்.

பிறப்பு எண் 7 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் எந்த ஒரு செயலிலும் கலை அம்சத்துடன் ஈடுபடுவார்கள். எதிர்கால திட்டங்களை யோசித்த வண்ணமே இருப்பார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். சமூக வாழ்க்கையையும், போக இன்பத்தையும் அனுபவிக்க ஆசைப்படுவார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து நடப்பார்கள். ஒவ்வொரு செயலுக்கும் பேச்சு தத்துவ நோக்க முடியாத இருக்கும். சமூக சேவைக்காக பெரிய தொகையை நன்கொடையாக அளிக்கும் மனப்பாங்கு உடையவர்கள். இவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணையும் நல்ல வசதிகளும் இயல்பாகவே அமைந்து விடும். பேசுவதில் வல்லவர்கள். பெரிய மனிதர்கள் என்றும் மகான்கள் என்றும் இவர்களை பிறர்கள் போற்றுவார்கள் காதலில் இன்பம் காணுவார்கள். குடும்ப வாழ்க்கையில் பல குழப்பங்கள் வந்து நீங்கும். சில நேரங்களில் எதையோ இழந்ததுபோன்று காட்சியளிப்பார்கள். ஆடம்பரப் பொருள்களை சேர்ப்பதிலும் வீட்டை அழகாக வைப்பதிலும் மிகவும் ஆர்வம் உடையவர்கள். இவர்களின் குடும்ப உறவுகளில் விவாகரத்து சார்ந்த பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

பிறப்பு எண் 7 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

முழுக்க முழுக்க கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் ஆன்மிக வாழ்க்கையில் பரிபூரண வெற்றி அடைவார்கள். இவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவிழந்தது போன்று காணப்படும். சிந்தனையில் சதாகாலமும் மூழ்கி இருப்பதுபோல தோன்றுவார்கள். தெய்வத் துணையால் வெற்றி அடைவார்கள். பிறர் போற்றும் தத்துவ ஞானிகள். இவர்கள் கலைகளாலும் கவர்ச்சியாலும் பெரும் பொருள் ஈட்டுவார்கள். பொதுநலவாதிகள் என்று இவர்களைக் கூறலாம். சிலபேர் திருமண பந்தங்களை வெறுத்து சாமியார்கள்போல வாழ்க்கை நடத்துவார்கள். சிலர் அளவுக்கு அதிகமான காமத்தில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை சீரழிப்பார்கள். பிடிவாத குணம் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். இவர்கள் தற்கொலை செய்ய முயலும் எண்ணத்தை அடிக்கடி தோற்றுவித்துக்கொள்வார்கள். எல்லா கல்வியையும் வசதியும் வாழ்க்கையும் இருந்தாலும் ஏதோ ஒரு மனக்கவலை கொண்டு வருந்திகொண்டே இருப்பார்கள். சராசரி மனிதனைப்போல வாழ்க்கையை இவர்களால் எடுத்துச்செல்ல முடிவதே இல்லை.

இவர்களுக்கு பிறர் செய்யும் எல்லா செயல்களும் தவறாகவே தோன்றும். தனக்கென்று ஒரு கற்பனை இல்லத்தை கட்டிக்கொண்டு அதற்குள் வாழும் வகை அறிந்தவர்கள். ஜீவசமாதிகள் பக்கம் அதீத ஈர்ப்பு உடையவர்கள். காதல் வாழ்க்கையை அவ்வளவாக அனுபவிக்க மாட்டார்கள். நட்புக்கு கட்டுப்பட்டவர்கள். குடும்ப வாழ்விலும் சிறு சிறு குழப்பங்கள் வந்து தீரும்.

பிறப்பு எண் 7 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் எந்த காரியத்தையும் தன்னுடைய சொந்த எண்ணப்படியே செய்வார்கள். பிறர்மீது அதீதமான ஆதிக்கம் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அதிகாரமும் மற்றவர்கள்மீது செலுத்துவார்கள். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்திவாய்ந்தவர்கள். உழைத்து உயர்வடையும் இவர்களுக்கு வாழ்க்கையில் தொடர்ச்சியான சோதனைகள் வந்துகொண்டே இருக்கும். எந்த காரியமாக இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெறுவார்கள். உலக நன்மைக்காக பாடுபடுவார்கள். தனிமையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். போராட்ட குணம் இருக்கும். மற்றவர்களால் முடியாது என்று விட்டுவிட்ட காரியத்தை ஏற்றுக்கொண்டு முன்நின்று முடித்துக் காட்டுவார்கள். ஏதாவது ஒருவழியில் புதுமை செய்துகொண்டே இருப்பார்கள். அனைவரிடமும் ஒத்துப் போவார்கள். கலை பிரியர்கள். குழந்தை களின்மீது அதீத பாசமுடையவர்கள். இயற்கையை ரசிக்கும் தன்மை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். குலதெய்வம் குலகுருவின்மீது மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் வைத்திருப்பார்கள். மறை பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைவார்கள்.

பிறப்பு எண் 7 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

கேது மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் செயல் வீரர்கள் என்று பெயர் எடுப்பார்கள். தீவிரமான உழைப்பாளிகள். மனதிலுள்ள கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் தன்மை பெற்றவர்கள். தெளிவான மனநிலையுடன் காரியத்திலேயே இறங்கி செயல்பட்டு வெற்றிபெறுவார்கள். ஆண்- பெண் இருபாலருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும் இவர்கள் தாமதமாக திருமணத்தால் வேதனை அடைகின்றார்கள். தேவையற்ற காரியத்தில் இறங்கி மாட்டிக்கொள்கின்றார்கள். செய்திகளை எந்நேரமும் சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். மறைப்பொருள், ஆன்மிக விஷயத்தின்மீது அதீத நம்பிக்கை இருக்கும். நட்புக்கு இலக்கணம் வகுப்பவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள். அரசியலில் ஆர்வம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் அழியாத புகழை அடைவார்கள். உடல் சுத்தத்தை தியாகம் செய்ய செய்ய பல துறைகளில் சாதனை செய்வார்கள். சேவை மனப்பான்மை உடையவர்கள். தேகபலம் மிக்கவர்கள். அமைதியாக இருப்பார்கள். ஆனால் பல தகுதிகளைப் பெற்றிருப்பார்கள். புதுப்புது கருத்துக்களை உடையவர்கள். பிடிவாத குணமுடைய இவர்களுக்கு மற்றவர்களை மதிக்கும் சிந்தனை திறன் இருக்காது.

அதிர்ஷ்ட தேதிகள் 1, 10, 19, 28, 6, 15, 24.

துரதிஷ்ட தேதிகள் 8, 17, 26, 7, 16, 25.

அதிர்ஷ்ட நிறங்கள் வெளிர் நீளம், மஞ்சள், பொன்னிறம், வெளிர் பச்சை, வெள்ளை.

துரதிஷ்டமான நிறங்கள் கருப்பு, சிவப்பு, இருண்ட நிறங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள் நீலக்கல், ஓபல் சந்திர காந்தக்கல், முத்து.

இவர்கள் தங்களின் கையெழுத்தை அதிர்ஷ்டம் ஆக்கிக்கொள்ள ஆரம்பத்தில் வலப்புறமாக சுழித்து கையெழுத்திடவேண்டும். இறுதி எழுத்தை மற்ற எழுத்துக்களைவிட உயரமாக போடவேண்டும். 4 சென்டிமீட்டர் முதல் 6 சென்டிமீட்டர் நீளமுடையதாக இவர்களின் கையெழுத்து இருக்கவேண்டும். இவர்களின் வங்கிக்கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணை கேதுவிற்கு நட்பு எண்களின் அமைத்துக்கொள்வது சிறப்பினை அளிக்கும்.

செல்: 80563 79988

bala100524
இதையும் படியுங்கள்
Subscribe