Advertisment

எண்களின் (6) ஆளுமையும் அதிர்ஷ்டமும் -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/personality-and-fortune-numbers-6-melmaruvathur-s-kalaivani

ண்களின் ஆளுமையில் இந்த அண்டம் அதிர்வுக்குள்ளாகி அத்தணை உயிர்களிடத்தும் தன்னிலையை உணர்த்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த எண்களின் துணைக்கொண்டு சில அதிர்ஷ்டத்தை அடைந்துவிடலாம் என்பதே நியூமராலஜி என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

ம,ய,ர ஆகிய எழுத்துக்கள் 6-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவை ஆகும். இது எண்ணியலில் வளங்களையும், சுகங்களையும், அள்ளித்தரும் சுக்கிரனின் தன்மையில் பிரபஞ்சத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

Advertisment

சுக்கிரன் மனித உடலில் சுவாதிஷ்டான சக்கரத்தை ஆளுகின்ற முழு சக்தியும் பெற்றுள்ளது. இச்சை, காமம், ஆசை ஆகிய அனைத்துக் கும் இந்த சுக்கிரனே காரகமாகும்.

ஒரு பொருளின்மீது ஏற்படுகின்ற ஈர்ப்பு, தன்னை மிக அழகாக வெளிக்காட்டிக்கொள்ளும் ஆற்றல், எதையும் நேர்த்தியாக செய்துமுடிக்கும் ஆளுமை, மனைவி, அத்தை, பெண்கள் ஆகிய அனைத்தும் இந்த சுக்கிரன் உள் அடக்கம் ஆகும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறப்பெடுத்திருந்தாலும், இவர்கள் சுக்கிரனின் ஆதிக் கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆதிக்கத் தில் பிறந்தவர்கள் எல்லா விதத்திலும் சுகவாசிகளாக வும், யாராவது அனைத்து விஷயத்தையும் இவர்களுக் காக முடித்துக்கொடுக்கும் சூழலையும், கிட்டத்தட்ட செல்வம், செல்வாக்கு ஆகியவையை அனுபவிக்கும் தன்மையிலும் இவர்களின் பிறப்பு அமைந்திருக்கும்.

பிறப்பு எண் 6 விதி எண் 1-ல் பிறந்தவர்கள் சுக்கிரன் மற்றும் சூரிய னின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்யும் பேராற் றலுடன் விளங்குவார்கள். பார்க்க மிக கவர்ச்சியாக இருப்பார்கள். எல்லாவித சுகபோகங்களும் இவர் களுக்கு ஆளுமையுடனும், அதிகாரத்துடனும் அமை யும். கலைகளின் பிறப்பிட மாக திகழ்வார்கள். இவர் களின் வம்சாவழியில் ஒரு கன்னிப் பெண் வாழ்ந்து இறந்திருப்பார்கள்.

எல்லாவித வாகனங்களின்மீதும் அதீத ஈர்ப்பு இவர்களுக்கு இருக்கும். தங்களின் பொருட்கள் அன

ண்களின் ஆளுமையில் இந்த அண்டம் அதிர்வுக்குள்ளாகி அத்தணை உயிர்களிடத்தும் தன்னிலையை உணர்த்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த எண்களின் துணைக்கொண்டு சில அதிர்ஷ்டத்தை அடைந்துவிடலாம் என்பதே நியூமராலஜி என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

ம,ய,ர ஆகிய எழுத்துக்கள் 6-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவை ஆகும். இது எண்ணியலில் வளங்களையும், சுகங்களையும், அள்ளித்தரும் சுக்கிரனின் தன்மையில் பிரபஞ்சத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

Advertisment

சுக்கிரன் மனித உடலில் சுவாதிஷ்டான சக்கரத்தை ஆளுகின்ற முழு சக்தியும் பெற்றுள்ளது. இச்சை, காமம், ஆசை ஆகிய அனைத்துக் கும் இந்த சுக்கிரனே காரகமாகும்.

ஒரு பொருளின்மீது ஏற்படுகின்ற ஈர்ப்பு, தன்னை மிக அழகாக வெளிக்காட்டிக்கொள்ளும் ஆற்றல், எதையும் நேர்த்தியாக செய்துமுடிக்கும் ஆளுமை, மனைவி, அத்தை, பெண்கள் ஆகிய அனைத்தும் இந்த சுக்கிரன் உள் அடக்கம் ஆகும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறப்பெடுத்திருந்தாலும், இவர்கள் சுக்கிரனின் ஆதிக் கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆதிக்கத் தில் பிறந்தவர்கள் எல்லா விதத்திலும் சுகவாசிகளாக வும், யாராவது அனைத்து விஷயத்தையும் இவர்களுக் காக முடித்துக்கொடுக்கும் சூழலையும், கிட்டத்தட்ட செல்வம், செல்வாக்கு ஆகியவையை அனுபவிக்கும் தன்மையிலும் இவர்களின் பிறப்பு அமைந்திருக்கும்.

பிறப்பு எண் 6 விதி எண் 1-ல் பிறந்தவர்கள் சுக்கிரன் மற்றும் சூரிய னின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்யும் பேராற் றலுடன் விளங்குவார்கள். பார்க்க மிக கவர்ச்சியாக இருப்பார்கள். எல்லாவித சுகபோகங்களும் இவர் களுக்கு ஆளுமையுடனும், அதிகாரத்துடனும் அமை யும். கலைகளின் பிறப்பிட மாக திகழ்வார்கள். இவர் களின் வம்சாவழியில் ஒரு கன்னிப் பெண் வாழ்ந்து இறந்திருப்பார்கள்.

எல்லாவித வாகனங்களின்மீதும் அதீத ஈர்ப்பு இவர்களுக்கு இருக்கும். தங்களின் பொருட்கள் அனைத்தையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள். அயராத உழைப் பாலும், முயற்சியாலும், எதிலும் வெற்றி பெறும் ஆற்றல்மிக்கவர்கள். செல்வம், புகழ், கௌரவம் ஆகிய அனைத்தும் இவர்களின் வாழ்வில் கூடிக்கொண்டே இருக்கும். இவர்கள் அதிர்ஷ்ட தேவதையின் அருளை பெற்றவர்களாக எடுத்துக்கொள்ளலாம். தைரியமும், அஞ்சான் நெஞ்சமும் கொண்ட வர்கள். கண்களில் எப்பொழுதுமே ஒரு கவர்ச்சி ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.

இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஆதிபத்தியமும், பலமும் பெற்று இருந்தால் இவர்கள் கோடீஸ்வர யோகத்தில் பயணிப்பார்கள். மேலும் சூரியனின் பலமும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ss

பிறப்பு எண் 6 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கருணை உள்ள மும், தாய் அன்பும் கொண்டு விளங்குவார் கள். இரக்க சுபாவம் உள்ள வர்கள். இவர்களின் மனநிலையை அறிவது மிக கடினம். எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர்கள். ஆராய்ச்சி மீது ஆர்வம் உடையவர்கள். ஒரு பொருளை தீவிரமாக விரும்பி உடனே வெறுத்தும் விடுவார்கள். இவர்கள் பேச்சு, எழுத்து போன்றவற்றின்மூலம் பொருளீட்டும் தன்மை பெற்றவர்கள்.

பொது வாழ்க்கையில் நாட்டம் இருக்கும். சமாதான பிரியர்கள். புகழை விரும்ப மாட்டார்கள். பிடிவாதம் இருந்தாலும் இளகிய மனமுடையவர்கள். தூய்மையை விரும்புவார்கள். தலையை அலங்கரிப்பதில் ஆர்வம் உடையவர்கள். முகம் நிலவில் வட்டத்தை போன்று இவர்களுக்கு காணப்படும்.

எடுத்த முயற்சியில் பின்வாங்க மாட் டார்கள். தாயின் அரவணைப்பில் பெரும் பாலும் இவர்கள் இருப்பார்கள். மிக சாதுவாக காணப்படும் இவர்கள் சில நேரங்களில் அசுரத் தன்மையுடனும் காணப்படுவார்கள். இவர்களின் எண்ணங்கள் மிக அழகானவையாக இருக்கும்.

வசிக்குமிடம் மற்றும் பணிபுரியும் இடங் களை மிக அழகுடன் பராமரிப்பார்கள். மனதின் சக்திக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பேச்சில் இவர்களை வெல்வது சற்று கடினம் தான் எதையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். தன்னுடைய தவறை சுட்டிக் காட்டுபவர்களை வெறுப்பார்கள். பதவியின் மீது அதீத ஆசை இருக்கும். குரு பக்தி அதிகம் உடையவர்கள் தீவிரமான உழைப்பாளிகள். ஆன்மிகவாதிகள். தனிமையில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருப்பார்கள். தனிமை யில் ஆராய்ச்சி செய்வார்கள். எதையும் வேகமாக விரும்பி வெறுத்தும் விடுவார்கள்.

புகழ்ச்சிக்கு மயங்கி பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள். இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஏற்றுள்ள இடங்கள் பலமாக இருந்தால் இவர்களின் வாழ்வு ருசிகரமாக பயணிக்கும்.

பிறப்பு எண் 6 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைவாதியாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அசுரகுருவும், தேவகுருவும், முரண்பட்ட உறவு. எனவே இவர்கள் எல்லா விதத்திலும் முரண்பாடாகவே பயணிப்பார்கள். தீர்க்கமான யோசனை செய்யக்கூடிய மனிதர்கள். சமூக நலனுக்காக பாடுபடக் கூடியவர்கள். பிறருக்கு பல நல்ல உதவி களைச் செய்வார்கள். இன்ப- துன்பத்தை சமமாக பாவிப்பார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களுக்கு கெட்டதாகவே தெரியும்.

இதனால் வாழ்க்கையை வேதனையுடன் வெறுப்பார்கள். செய்தொழிலில் நிகரற்ற லாபம் ஈட்டக்கூடிய அன்பர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவார்கள். இயற்கை காட்சியின்மீது அளவு கடந்த ரசனை கொண்டிருப்பார்கள் எப்பொழுதுமே சுகமாக வாழ ஆசைப்படுவார்கள். முன்யோசனை அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை கூறி அதன்மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவார்கள். கலை சார்ந்த தொழிலை நிரந்தரமாக கொள்வார்கள். இவர்களின் தோற்றத்திற்கும் பேச்சிக்கும் மற்றவர்கள் மயங்கிவிடுவார்கள்.

பொது ஜன ஆதரவும் அன்பும் என்றென்றும் இருக்கும். நோய் இல்லா விட்டாலும் உடல் விருத்திக்காகவும் வனப்பிற்காகவும் மருந்துகள் சாப்பிடுவார்கள். ஒருபொழுதும் உணவு, உடை உறைவிடத்திற்கு குறைவில்லாத ஆசீர்வதிக்கப்பட்ட நபர்கள். இவர்களின் ஜாதகத்தில் குரு மற்றும் சுக்கிரன் ஏற்றுள்ள ஸ்தானங்கள் பலமாக இருந்தால் எல்லா விதத்திலும் வெற்றியை அடையும் பாக்கியவான்கள் இவர்கள்.

பிறப்பு எண் 6 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலை அறிவு நிரம்பியவர்கள். எல்லா சுகத்திலும் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கும் ஆற்றல்பெற்றவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள். கதை, கவிதை எழுதுவதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாளும் சாமர்த்தியசாலிகள். மனம் எந்நேரமும் இன்பத்தை நாடியே செல்லும். தீர்க்கமான முடிவெடுத்த பின்னரே காரியத்தில் இறங்கி செயலாற்று வார்கள். மேன்மையான குண நலன்களை பெற்றிருப்பார்கள். நல்ல மனிதர்கள் என்ற பாராட்டைப் பெறுவார்கள். இவர்களின் பேச்சில் அதீத வசீகரமும், கற்பனை வளமும், கலந்தே இருக்கும். கவர்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். இலக்கியம், கலை, சினிமா, தத்துவம், போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் இந்த எண்களின் ஆதிக்கம் கொண்டவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள்.

பலருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள். பலரால் நல்ல மனிதர்கள் என்று போற்றப்படக்கூடியவர்கள். சோம்பேறிகளை பார்க்கவே விரும்ப மாட்டார்கள். நறுமணப் பொருட்கள், மலர்கள், செடிகள், வாசனை திரவியங்கள் மீது அதீத ஆசையும், பற்றும் இவர்களுக்கு இருக்கும். மற்றவர்களின் துயர் துடைக்க அரும்பாடு படுவார்கள்.

இவர்கள் காமத்தின்வசம் சற்று அதிகமாக ஈர்க்கப்பட்டவர்களாக இருப்பார் கள். இவர்களின் என்ன ஓட்டத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ள நினைக்கக்கூட முடியாது. எந்தவித குறையும் இல்லாமல் வாழ இறையால் பணிக்கப்பட்ட நபர்கள் இவர்கள். இவர்களின் வம்சாவழியில் கட்டப்பட்ட வீட்டில் தென் மேற்கு மூலையில் பாம்பு புற்று அழிக்கப்பட்டு வீடு கட்டப்பட்டிருக்கும். இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவின் பலம் சிறப்பாக இருப்பின் நல்ல எதிர்காலத்தையும், சிறப்பையும் அடைவார்கள்.

பிறப்பு எண் 6 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பார்க்க சுறுசுறுப்பாக காட்சியளிக்கும் தேனீக்கள் போன்றவர்கள். எந்த காரியத்தையும் உடனே செய்துமுடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எதிலும் துரிதமாக செயல்படுவார்கள் .

பொதுஜன ஆதரவு பெற்ற சத்திய வான்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியசாலிகள். படிப்படி யாக இவர்களின் அந்தஸ்து உயர்வதை நம்மால் காணமுடியும். இவர்கள் பேச்சில் அழகாகவும் ஆதாரப்பூர்வமான சில விஷயங்களையும் மேற்கோள்க்காட்டி பேசுவார்கள். பிறருக்கு உதவும் மனப் பான்மை கொண்டவர்கள். இவர்களை மற்றவர்கள் ஏமாற்ற நினைத்தால் சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்கி விடுவார்கள். இதனால் இவர்கள் மற்றவர்கள் அஞ்சும்படி நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் எளிதில் இவர்களின் வலையில் மாட்டிக் கொள்வார்கள்.

பணம் இவர்களுக்கு பல வழிகளில் வந்துசேரும் சினிமா, நாட்டியம், சங்கீதம், கணிதம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ருசியான உணவுகளை உண்பார்கள். ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், நகை, மருந்துக் கடை, மாளிகை கட்டுதல், லாட்டரி போன்ற தொழில்களில் லாபம் அடைவார்கள். இரு பாலினத்தவராலும் பல நன்மைகள் இவர்களுக்கு கிடைக்கும். இலட்சியை எண்ணம் உடையவர்கள். நண்பர்கள் பல பேர் இவர்களுக்கு உதவ தயாராக இருப் பார்கள். பேச்சில் இளமை கலந்திருப்பதால் எவரையும் எளிதில் கவர்ந்து ஏமாற்றி விடுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் இவர்களைப் பயன்படுத்தி யாரும் காரியம் ஆற்றி கொள்ளலாம். முறையற்ற வழிகளில் காம சுகத்தை தேடிச்செல்வார்கள்.

வீணான பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார்கள்.

இவர்களின் வம்சவழியில் சொத்து சார்ந்த பத்திரத்தில் ஒரு வில்லங்கம் இருப்ப தற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்களின் பிறவி ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் புதன் நல்ல ஸ்தான பலம்பெற்று சுபருடன் சேர்ந்து இருக்க பல சுபிக்சங்களை அடையும் தன்மை யை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

6-ஆம் எண் அடுத்த இதழிலும் தொடர்கிறது...

செல்: 80563 79988

bala260424
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe