பிறப்பு எண் 6 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

முழுக்க முழுக்க சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலைஞர்கள் என்று பெயர் எடுப்பார்கள். கலை அறிவு, பொது அறிவு ஆகியவற்றில் மிக அழகாக பயணிப்பார்கள். ஞான தீர்க்க உடையவர்கள். பார்க்கவும் அழகாகவும், நிதானமாகவும் செயல்படுவார்கள். எதையும் சிந்தித்து செயல்படும் மனிதர்கள். மக்களிடம் நன்மதிப்பு பெற்று இருப்பார்கள். புத்தக பிரியர்கள். எங்கு சென்றாலும் புதுப்புது நண்பர்களை உருவாக்கிக் கொள்வார்கள். வாசனை திரவியங்கள், மலர்கள், இயற்கை காட்சிகள் ஆகிய அனைத்தையும் அதிகமாக விரும்புவார்கள். இவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் இவர்களுக்கு இருக்கும். முக அழகும், கலை அழகும் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் செல்வத்தை பாதுகாக்கக்கூடியவர்கள். எதையும் முன் நின்று சாதிக்கும் குணமுடைய வர்கள். புத்தகம், இசை, நாடகம், நாட்டியம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். சுவையான உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். சினிமா, கதை, நாடகம், கவிதை, பத்திரிகை, இலக்கியம், சமயம் உபதேசம், போன்றவற்றில் மிகவும் ஆர்வமுடன் செயல்படுவார்கள். சுகபோக வாழ்க்கை விரும்பியிகள். புதுமையை ஆதரிப்பார்கள். பலர் புரட்சியாளர்கள்போல காட்சி யளிப்பார்கள். இவர்கள் பெற்றிருக்கும் பதவிகளை இவர்கள் அலங்கரிப்பார்கள். மனைவி, மக்களிடம் தனி பாசம் இருக்கும். ஆன்மிகப்பற்றும், சாஸ்திரங்களின்மீதான நம்பிக்கையும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். இவர்களின் வம்சத்தில் ஏதாவது ஒரு புதையலை அடைந்திருப்பார்கள். இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல பலத்தில் இருக்க சுகபோக வாழ்க்கையை கை கொள்வார்கள்.

6

பிறப்பு எண் 6 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக் கத்தில் பிறந்த இவர்கள் எளிதில் அன்புவையப்படுபவர்கள். கண்ணியமானவர்கள். நாகரிகத்தையும் ஆடம்பரத்தையும் விரும்ப மாட்டார்கள். அதிகமான கலகலப்பு டன் யாருடனும் பேசமாட்டார்கள். நிதானமான வார்த்தைகளையே பேசுவார்கள். தனிமையில் தனக்கான கற்பனை கோட்டையில் வசிக்கும் தன்மை பெற்றவர்கள். இவர்கள் பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறமை சாலிகள். இளகிய மனம் உடையவர்கள். கவர்ச்சிக்கோ பணத்திற்கோ ஒருபொழுதும் மயங்கமாட்டார்கள். சங்கீதம், தத்துவம் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். பிறருக்கு உதவுவதன்மூலம் தன் தகுதியை உயர்த் திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மிகுந்த கற்பனை சக்தி உடையவர் கள். கூர்மையான அறிவும் இந்த உலகத்தில் பயணிக்கும் எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவும் இவர் களுக்கு இருக்கும். இவர் களை புரிந்து கொள்வது சற்று கடினம் என்றாலும் பழகுவதற்கு மிகவும் அழகானவர்கள்.

இந்த எண்ணில் பிறக்கும் பெண்கள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களை மணந்துகொண்டு புகழுடனும், செல்வ செழிப்பு டனும் வாழ்கின்றார்கள். இவர்கள் காம குரோதம் நிறைந்த புத்தியுடையவர்கள். அழகு, அறிவு, கவுரவம் ஆகியவை இவர்களின் உடனே ஒட்டிப் பிறந்தவை கள் ஆகும்.

ஆன்மிகம் சார்ந்த பயணத்தில் தன்னை அதிக மாக ஈடுபடுத்திக் கொள்வார் கள் புதிய நடைமுறைகளை உடையவர்கள். தவறு செய்தவர்களை தண்டிக்காமல் மன்னிக்கும் மனம் உடைய வர்கள். அரசியல் சட்டம் அறிந்தவர்கள். சில நேரங்களில் எதையோ பலி கொடுத்ததுபோல மிகவும் அமைதியாகவும் ஆழ்ந்த சிந்தனையுடனும் காட்சியளிப்பார்கள். புராதான சின்னங்களை சுற்றிப் பார்ப்பதில் அதீத ஆர்வம் உடையவர்கள்.

இவர்களின் வம்சாவழியில் பிரிந்த கணவன்- மனைவியோ அல்லது திருமணத் தின்மூலம் ஏதோ ஒரு இடர்பாடு உள்ள உறவு களோ நிச்சயமாக இருக்கும். இவர்களின் பிறவி ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் கேது ஏற்றுள்ள இடங்கள் சிறப்பாக இருந்தால் அதீத ஞானத்தையும், இறையருளையும் இவர்களால் பெறமுடியும்.

பிறப்பு எண் 6 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் கண்டிப்பும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள். கடுமையாக முயன்று வெற்றி பெறுவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். போக விஷயத்தில் நாட்டமுடையவர்கள். தீங்கு என்று தெரிந் தால் எந்த காரியத்திலும் மேற்கொண்டு ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் தங்கள் கடின உழைப்பால் முன்னேற முடியும் என்று கூறுபவர்கள். மறைத்து பேச தெரியாத இவர்கள் எதையுமே பலபேர் முன்பு பகிரங்கமாக பேசுவார்கள். இளமையில் போராடி வயது ஏற ஏற வாழ்க்கையில் சிறந்த வெற்றிகள் குவிக்கும் திறமைசாலிகள். லட்சியவாதிகள். கணிதம், வாகனம், கருவிகள், ஆய்வுகள், அரசியல், உளவியல், உலோகங்கள் போன்ற துறைகளில் சிறப் பாக பணியாற்றுபவர்கள். இந்த எண்களில் பிறந்தவர்களாக நிறைய நபர்கள் இருக்கின் றார்கள். உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கும் சூழல் இவர்களுக்கு ஏற்படும்.

புகழுக்காக சுய செலவு செய்து விளம்பரம் செய்துகொள்வார்கள். காம இச்சை சற்று கூடுதலாக இவர்களுள் வசிக்கும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எதிரிகளை சமயம் பார்த்து வீழ்த்த வேண்டும் என்கின்ற அதிநுட்ப சிந்தனை இவர்களுக்குள்ளேயே இருக்கும். இவர்களின் பிடிவாதமே இவர்களுக்கு வெற்றியாக முடியும். கோபம் வந்துவிட்டால் எவரிடத்தும் போராட தயங்க மாட்டார்கள். நண்பர்கள் பலபேர் இருப்பார்கள். மற்றவர்களின் தந்திர செயல்களை ஆராயும் சக்தி படைத்தவர்கள். எதையும் சீர்தூக்கி பார்க்கும் என்ன உடையவர்கள். விவாதிக்கும் திறன் இருக்கும். பண விஷயத்தில் கண்டிப்பாக நடந்துகொள்வார்கள்.

தோல்வியை கண்டு ஒருபொழுதும் பயப்படமாட்டார்கள். காந்தக்கண்கள் உடையவர்கள். நோயை போக்கும் வைத்தியம் அறிந்தவர்கள். ஜோதிடம், வைத்தியம், மந்திரம், மனோதத்துவம் ஆகியவற்றில் மிக செம்மையாக பயணிக்கும் நிர்வாக திறன் உடையவர்கள்.இவர்களின் வம்சத்தில் ஊனமுற்ற ஒரு நபர் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் சனி மற்றும் சுக்கிரன் ஏற்றுள்ள இடங்கள் நல்ல பலத்துடன் இருக்க தொழிலில் கொடிகட்டி பறக்கும் சூழல் இவர்களுக்கு உருவாகும்.

பிறப்பு எண் 6 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் கம்பீரத் தோற்றத்துடன் குறுகுறுப்பான நடவடிக்கையுடன் தைரியசாலியாக காட்சியளிப்பார்கள் போராடியே எதிலும் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டிருப்பார்கள். பேரறிவும் பெரும் சூழ்ச்சித்திறனும் கொண்ட வர்கள் காந்த சக்தி நிறைந்த கண்களை உடையவர்கள். எதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள். இந்த பூமியை ஆளக்கூடிய சக்தி படைத்தவர்கள். குரு பக்தியும் இறை பக்தியும் மிகுந்திருக்கும். ராஜதந்திரமும் சூழ்ச்சியும் தெரிந்திருக்கும் பேச்சில் கண்டிப்பும் கோபமும் கலந்திருக்கும். உலக இன்பங்களில் பற்று வைத்திருப்பார்கள். தேசநலத்தில் மிக அதிகமான அக்கறை உடைய நபர்கள். அதிர்ஷ்டத்திற்கு குறைவில்லாத வளமான வாழ்க்கை வாழ்வார்கள். தொழிலில் மேன்மை அடைவார்கள் சாதனை சிற்பிகள். சிந்தனையில் சிறகடித்து பறப் பார்கள். உடல் உறுப்புக்கள் அனைத் தையும் நலிநத்துடன் இயக்குவதாக இருப்பார்கள் புகழ்மிக்க ஏதாவது ஒரு துறையில் முன்னேற பாடுபடுவார்கள். பிறருக்காக அடிமையாக ஒரு பொழுதும் இருக்க மாட்டார்கள். வசீகரமான கண்களைகொண்ட இவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையுடன் தனது காலங்களை கழிப்பார்கள். இயற்கை காட்சிகளில் தன்னை கரைத்துக்கொள்வார்கள். ஆன்மிகம், பக்தி, தேசபக்தி நிரம்பியவர்கள். நண்பர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள். புகழுக்கு மயங்கி மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். இவர்களின் வம்சத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இருப்பார்.

இவர்களின் பிறவி ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஏற்றுள்ள இடங்கள் சிறப்பு இருக்கும்பட்சத்தில் இவர்கள் அரசியல் மற்றும் சீருடைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டி ருப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்

6, 15, 24, 14, 23, 9, 18, 27.

துரதிஷ்ட தேதிகள்

3, 12, 21, 30, 2, 11, 20, 29.

அதிர்ஷ்ட நிறங்கள்

வெளிர் நீளம், பச்சை.

துரதிஷ்ட நிறங்கள்

கருப்பு, சிவப்பு, இருண்ட நிறங்கள், ஆரஞ்சு, ரோஸ்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

மரகதம், பவளம், அக்கோமரின், ஜெட், ஓபல் இவர்கள் தங்களின் கையெழுத்தை அதிர்ஷ்டம் ஆக்கிக்கொள்ள சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றுள்ள ஆங்கிலே எழுத்துக்களை நன்கு தெரியுமாறு உயர்த்தி எழுதி தங்களின் கையெழுத்தை போட்டுக் கொள்ளவேண்டும்.

அதோடு பெயரில் அமையப்பெற்ற சூரியனின் ஆதிக்க எண்களை கோபுர எழுத்துக்கள்போல மேல்நோக்கி வலப்புறம் சுழி அமைத்து 4 முதல் 6 சென்டிமீட்டர் வரையிலான கையெழுத்தை 23 டிகிரி சாய் கோணத்தில் குறிப்பிட அனைத்து அதிர்ஷ்டத்தையும் இவர்களால் அள்ளி விடமுடியும்.

மேலும் தொலைபேசி எண் மற்றும் வங்கியின் எண்களை சுக்கிரனுக்கு நட்பு எண்ணில் அமைத்துக்கொள்ள பெரும் சிறப்பை இவர்களால் அடைந்துவிட முடியும்.

செல்: 80563 79988