Advertisment

12 ராசியினருக்கும் காலசர்ப்ப தோஷ நிவர்த்திப் பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/periodic-troubleshooting-remedies-12-zodiac-signs

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

சென்ற இதழ் தொடர்ச்சி...

சிம்மம்

பத்தில் ராகு, நான்கில் கேது இருப்பதால் தொழில் தொடர்பான மன உளைச்சல், தாய்க்கு ஆரோக்கியக் குறைபாடு, வீடு, வாகனப் பழுது போன்ற இன்னல்கள் உருவாகும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை 4, 9-ஆமதிபதியான செவ்வாய் 6-ஆமதி பதி சனியுடன் 6-ஆமிடத்தில் இணைகிறார்.

Advertisment

அதீத கடனும் மிகைப்படுத்தலான விரயமும் உண்டாகும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன்பட்டு சொந்தவீடு, வாகனக் கனவை நிறைவேற்றுவீர்கள். வீடுகட்டும் பணியில் பட்ஜெட் கூடும். சிலருக்கு வீடு, வாகனம் பழுதாகி அதிக செலவு வைக்கும். அல்லது மின்சார உபகரணங்களான ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி புதிதாக வாங்க நேரும். அசையா சொத்திலுள்ள குடியிருப்புதாரர்களால் தொந்தரவு வரும். அல்லது குடியிருப்புதாரர்கள் மாறலாம்.

பூர்வீகச் சொத்தால் உடன்பிறந்தவர் களுடன் வம்பு, வழக்கு, பகை உருவாகும். சிலருக்கு பூர்வீகச்சொத்து கைவிட்டுப் போகும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு வாடிக்கையாளர்களால் வம்பு, வழக்கு உருவாகும். தாய்- தந்தையின் ஆரோக்கியம் சீராகும். கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்லநேரும். சிலர் பூர்வீகத்தைவிட்டு பிழைப்புக்காக வெளியூர் செல்லநேரும். வீட்டில் வயது முதிர்ந்த பெண்கள் இருந்தால் அவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். வயது முதிர்ந்தவர்கள் அரசிடம் பென்ஷன், உதவித் தொகை பெற்றுவந்தால் அதில் தடை, தாமதங் கள் ஏற்படலாம். அரசியல் பிரமுகர்கள் பதவியைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடரும் வாய்ப்புண்டாகும். பெண்களுக்கு மாமனார்- மாமியார், நாத்தனார் வகையில் அதிக தொந்தரவு உண்டாகும்.

இடர்களைத் தவிர்க்க ஞாயிறு மாலை 4.30- 6.00 மணிவரையிலான ராகு வேளையில் ஒன்பது நெய்தீபமேற்றி சிவ வழிபாடு செய்யவும்.

கன்னி

Advertisment

ஒன்பதில் ராகு, மூன்றில் கேது இருப்பதால் தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு, இடப்பெயர்ச்சி, வேலை யாட்களால் பயனற்ற நிலை, ஆவணங் கள் தொடர்பான பிரச்சினை போன்ற மன சஞ்சலம் உண்டாகும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை 3, 8-ஆமதிபதி யான செவ்வாய் 5-ஆமிடத்தில் ஆட்சி பலம் பெற்ற சனியுடன் இணையப் போகிறார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி இறக்கம் உண்டாகும். அல்லது பதவி விலக நேரும். சிலர் அதிர்ஷ்டத்தைத் துரத்தி காலவிரயம் செய்வார்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத் தைக் கட்டிக்காத்து ஏமாறுவீர்கள்.

அல்லது கடனுக்காக சொத்தை இழக்க நேரலாம். கன்னி ராசியினர் சொத்தை கவனமாகப் பாதுகாக்கவேண்டும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் திருமணம், குழந்தைப்பேறு போன்ற கடமைகளுக்காக அதிக பொருள் விரயம் செய்யநேரும்.

சிலர் நண்பர்கள், உறவினர்களின் விஷயத்தில் அகப்

சிலர் நண்பர்கள், உறவினர்களின் விஷயத்தில் அகப் பட்டு தங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவார்கள்.

அண்டை, அயலாருடன் அனுசரித் துச் செல்லவேண்டும். முக்கியமான ஆவணங்களை, விலையுயர்ந்த ஆபரணங்களை எச்சரிக்கையாகப் பாதுகாக்க வேண்டும். யாருக்கும் ஜாமின், கியாரன்டி போடக்கூடாது. சட்டச் சிக்கலில் மாட்ட நேரும்.

தேவையில்லாத வீண் விவகாரகங் களில் தலையிடுவதும், அடுத்தவர் களுக்குப் பரிந்துபேசியும் வீண் விரோதத்தை விலைகொடுத்து வாங்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 3, 8-ஆம் அதிபதிகளின் சம்பந்தம் ஏற்படுவதால் சிலருக்கு வாகனவிபத்து ஏற்படக்கூடும். வாகனங் களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. சனி, செவ்வாய் தசை நடப்பவர்கள் கண்டிப்பாக உரிய பாதுகாப்புக் கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. சிலர் காது தொடர்பான பிரச்சினைக்கு வைத்தியம் செய்ய நேரும்.

கன்னி ராசியினர் புதன்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் நெய் தீபமேற்றி லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

12rasi

துலாம்

எட்டில் ராகு, இரண்டில் கேது இருப்பதால் சம்பந்தமில்லாத வம்பு, வழக்கு, தனவரவில் தடை தாமதம் இருக்கும். குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பேச்சால் குடும்பம் பிரியும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை 2, 7-ஆமதிபதியான செவ்வாய் 4, 5-ஆமதிபதியான சனி பகவானுடன் 4-ஆமிடத்தில் இணைகி றார். சனி, செவ்வாய் பகை கிரகங்கள் என்பதால், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். தெளிந்த நீரோடையாக இருக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கு மனவேதனை தரும் விதத்தில் இருக்கும் என்பதால், விட்டுக்கொடுத்து வாழப் பழகவும். பிள்ளைகளின் திருமண முயற்சி, தொழில், கல்வி போன்றவற்றில் நிலவும் தடை, தாமதத்தால் பெற்றோர் களுக்கு மனநிம்மதி குறையும்.

சிலருக்கு காதல், கலப்புத் திருமணம் நடைபெறும். குலதெய்வ கோவிலுக்குச் சென்றுவருவீர்கள். சிலர் குல ஆச்சாரங்கள் மற்றும் விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கமுடியாத சூழல் நிலவும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் தொடரும். சொத்து வாங்கும்- விற்கும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். சிலருக்கு வீடு, வாகன விற்பனையால் வில்லங்கம் உருவாகும். குத்தகைப் பணம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மிகுதியான விரக்தியால் சிலர் தர்மசிந்தனையை ஒதுக்கி சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைப்படும் அல்லது சம்பளம் கிடைக்க காலதாமதம் உண்டாகும். சில துலா ராசி ஆண்கள் காதலால் அவமானப்படுவர். விவசாயிகள் விவசாயத்திற்குத் தேவையான தளவாடங்கள் வாங்கலாம்.

துலா ராசியினர் சங்கடங்களைத் தவிர்க்க வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 மணி வரையிலான ராகு வேளையில் ஆறு நெய்தீபமேற்றி பிரத்தியங்கரா தேவியை வழிபடவும்.

விருச்சிகம்

ராசியில் கேது, ஏழில் ராகு இருப்பதால் திருமணத்தடை அகலும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் நடக்கும்.

சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் குறுக்கீட் டால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களால்- தொழில் கூட்டாளிகளால் நம்பிக்கை துரோகத்தை சந்திக்கும் நிலை உண்டாகும். 26- 2-2022 முதல் 6-4-2022 வரை ராசியாதிபதி செவ்வாயும், 3, 4-ஆமதிபதி சனியும் 3-ஆமிடமான சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் இணைகிறார்கள். செவ்வாய் உங்களின் ராசியாதிபதி. அவரே 6-ஆமதிபதியும் என்பதால், உங்களுக்கு எதிரியென்று ஒருவர் வெளியி-ருந்து வரத் தேவையில்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும்.

சகோதரர்களிடம் இணங்கிப் போக முடியாத நிலை உண்டாகும். சிலரின் தாய்- தந்தை உயில் எழுதலாம். அது உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை செய்ய நேரும். கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பேற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கதிகமாக கடன் வாங்கினால் திரும்ப செலுத்தமுடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத் தின் பேரில் கடன் பெறும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமின் போட்டு வம்பு வழக்கில் சிக்கிக்கொள்ள நேரும். விற்கப்படவேண்டிய சொத்துகள் முறையான ஆவணமின்மையால் தடைப்படும்.

அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும். அடுத்தவர் தவறை சுட்டிக்காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சினையை விலைகொடுத்து வாங்கக்கூடாது.

மன சஞ்சலத்தைத் தவிர்க்க செவ்வாய்க் கிழமை மாலை 3.00-4.30 மணிவரையிலான ராகு வேளையில் அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகர் சிலைக்குப் பால்விட்டு, அபிஷேகம் செய்து வரவேண்டும்.

தனுசு

ஆறில் ராகு, பன்னிரன்டில் கேது இருப்பதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி அல்லது கடன்தொகை கிடைக்கும். சிலருக்கு நீண்டநாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்யநேரும். சிலர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புத்துணர்வு மையங்களுக்குச் சென்று ஓய்வெடுத்து வரலாம். 26-2-2022 முதல் 6-4-2022 வரை தனுசிற்கு 5, 12-ஆமதிபதியான செவ்வாய் ராசிக்கு 2-ல் 2-ஆமதிபதி சனியுடன் இணைகிறார். 5-ஆமதிபதி 2-ஆமதிபதியுடன் சேர்வதால் பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்கும். ஜனனகால ஜாதக ரீதியான தசாபுக்தி சாதகமாக இருந்தால் பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும்.

தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கு பங்குச் சந்தை பெரும் இழப்பைத் தரும். செவ்வாய் தனுசிற்கு பூர்வபுண்ணியாதிபதி என்பதால், மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். எதிர்பாராத மருத்துவச் செலவால் விரயம் ஏற்படும். நீண்டதூரப் பயணம் செய்ய நேரும். உயர்கல்விக்காக வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். சிற்றின்பத்தில் நாட்டம் மிகும். சில வயதான ஆண்கள் "போக்சோ' சட்டத்தில் கைதாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. சில வயதான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் கருதி முதியோர் இல்லம் சென்றுவிடுவார்கள். இளமையில் காதல் ஏற்பட்டு நகமும் சதையுமாக வாழ்ந்தவர்கள் பிரிந்துவிடுவார்கள். காதல் கசக்கும்.

சுபப் பலனை அதிகரிக்க வியாழக்கிழமை பகல் 1.30-3.00 மணிவரையிலான ராகு வேளையில் நெய்தீபமேற்றி ஸ்ரீ ராமானுஜரை வழிபடவும்.

மகரம்

ராசியில் சனி, ஐந்தில் ராகு, பதினொன்றில் கேது இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, குலதெய்வ அனுக்கிரகம், வெளிநாட்டுப் பயணம் போன்ற பாக்கியப் பலன்கள் கிடைக்கும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை 4, 11-ஆம் அதிபதியான செவ்வாய் ராசியாதிபதி சனியுடன் ராசியில் இணைகிறார். மகரத்திற்கு செவ்வாய் நான்காம் அதிபதி என்பதால், விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் கிடைக்கும். விளைச்சல் சீராக இருக்கும். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். சில குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும்.

ஜனனகால ஜாதகத்தில் தசாபுக்தி சாதகமாக இருந்தால் பல மகர ராசியினருக்கு புதிய பல திருப்புமுனைகள் உண்டாகும். வாழ்வில் "செட்டில்' ஆவதற்குத் தேவையான நல்ல வழிகள் தென்படும்.

அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நல்லிணக்கம் உண்டாகும். பகைமை மறையும். பலருக்கு திருமணத் தடை அகலும். சிலர் பெற்றோரின் அனுமதியின்றித் திருமணம் செய்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். பல வழிகளில் பணம்வந்து பையை நிரப்பும். மந்தமான வியாபாரம் துளிர்விடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாட்டுக்கு வந்து செட்டிலாக முயற்சிக்க லாம்.

இன்னல்களைத் தவிர்க்க சனிக்கிழமை காலை 9.00-10.30 மணிவரையிலான ராகு வேளையில் நெய்தீபமேற்றி ஆஞ்சனேயரை வழிபடவும்.

கும்பம்

நான்கில் ராகு, பத்தில் கேது இருப்பதால் தாயின் ஆரோக்கியம் குறைபடும். அழகு, ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். சில தாய்- தந்தையர் கருத்து வேறுபாட்டால் பிரியலாம். 26-2-2022 முதல் 6-4-2022 வரை ராசிக்கு 12-ல் ராசியாதிபதி சனியுடன் 3, 10-ஆமதிபதி செவ்வாய் இணைகிறார். 3-ஆமிடம் இளைய சகோதரம், வீரம், வேலையாள், செய்தித் தொடர்பு, ஆவணங்கள் போன்றவற்றைக் குறிக்கும். செவ்வாய் இளைய சகோதரரைக் குறிக்கும் என்பதால் இளைய சகோதரரால் தொழில் விரயம் ஏற்படும் அல்லது தொழிலில் முடக்கம், வில்லங்கம் ஏற்படும். ஜாதகருக்கும் இளைய சகோதரருக்கும் பிரிவினை ஏற்படும். பலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தைப் பராமரிக்கும் நிலை ஏற்படும். சகோதரரின் கௌரவக் குறைவான நடவடிக்கைகள் உங்களை பாதிக்கும். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் உங்களின் வங்கி சேமிப்பைக் கரைத்துவிடும். பட்டுப்புடவைக்கு பணம்கட்டி பட்டுத்துண்டுகூட கிடைக்காமல் போகும். இதுவரை நீங்கள் காட்டிவந்த வீரமும் விவேகமும் மட்டுப்படும்.

ஏழரைச்சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும், சனி உங்களின் ராசியாதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றமிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். இது விரயச்சனியின் காலம் என்பதால், முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவேண்டும். சிலருக்கு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழும் கட்டாய சூழ்நிலையால் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து மனம் வாடும். அரசு உழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்னல்களைத் தவிர்க்க சனிக்கிழமை காலை 9.00-10.30 மணிவரையிலான ராகு வேளையில் 12 நெய்தீபமேற்றி சரபேஸ்வரரை வழிபடவும்.

மீனம்

மூன்றில் ராகு, ஒன்பதில் கேது இருப்பதால் முன்ஜென்ம கர்மாவைக் கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஆன்மிக வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். முன்னோர் களின் ஆன்மாவை சாந்திப்படுத்தும் பித்ரு வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை ராசிக்கு 11-ல் 11, 12-ஆமதிபதி சனியுடன் மீனத்திற்கு 2, 9-ஆமதிபதியான செவ்வாய் இணைகிறது. உங்களின் ராசியாதிபதி குருவும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால் சுபப் பலன்கள் மிகுதியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர்விட்டு ஊர்மாற நேரும். ஒருசிலர் நாடுவிட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடிவந்தாலும் பணிச்சுமை உங்களை வாட்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். இதுவரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தைத் தள்ளியவர்கள்கூட திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள். மனதிற்குப் பிடித்த மணவாழ்க்கை அமையும். திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தைவழி உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின்மூலம் காரியசித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தோஷத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து திலஹோமம் செய்ய ஏற்ற காலம். புனித நீராடல், புனிதத் தலயாத்திரை சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். பூர்வீக சொத்துகளைப் பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள்.

மீன ராசியினர் வியாழக்கிழமை பகல் 1.30-3.00 மணிவரையிலான ராகு வேளையில், வீட்டில் திருச்செந்தூர் முருகனை நினைத்து ஒன்பது நெய்தீபமேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

செல்: 98652 20406

bala241221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe