னிதர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான இன்னல்களுக்குக் காரணம் ஜாதகரீதியான தோஷமென்பது நாம் அறிந்ததே. அத்தகைய தோஷங்களில் சர்ப்ப தோஷமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒருவருக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் பழியைச் சுமப்பவர்கள் ராகு- கேதுக்களே. சர்ப்ப தோஷத்திற்கும், காலசர்ப்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டு.

ஒருவருடைய ஜாதகத்தில் 1, 2, 7, 8-ஆம் இடங் களில் ராகு- கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோஷமா கும். ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்து கிரகங் களும் ராகு- கேதுவின் பிடியில் அடைபட்டுக் கிடந்தால் அது காலசர்ப்ப தோஷம். இந்த தோஷம் 35 வயதுவரை துன்பமும், அதன்பிறகு இன்பமும் தரக்கூடியது. ராகுவில் தொடங்கி கேது வில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்.

ராகு, சனியின் பலன்களையும், கேது, செவ்வாயின் பலன்களையும் கொண்டது. காலசர்ப்ப தோஷம் அனைவருக்கும் துன்பம் தராது. ராகு- கேதுவுக் கிடையில் கிரகங்கள் இருந்தாலே உடனே "காலசர்ப்ப தோஷம் கஷ்டப்படுத்தும்' என்று கூறிவிடமுடியாது. ராகு- கேதுவுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மைக் கேற்ப தோஷம் விலகலாம்.

சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடை, திருமண வாழ்க்கையில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள், கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுக்க முடியாத "ஈகோ' பிரச்சினைகளை உருவாகும். இதனால் சர்ப்ப தோஷத்திற்கு சர்ப்ப தோஷத்தையே சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. அதனால் தான், தோஷத்திற்கு தோஷத்தை சேர்க்கும்போது சில பாதிப்புகள் விலகுமென்று சொல்கிறோம்.

Advertisment

காலசர்ப்ப தோஷம் என்பது எல்லாவற்றையுமே காலம்கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலை பார்ப்பது, படித்து முடித்தபிறகு காலதாமதமாக வேலை கிடைப்பது, காலம் தாழ்த்திய திருமணம், குழந்தை என கால நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தித் தரக்கூடியது காலசர்ப்ப தோஷம். அதாவது வெற்றியின் விளிம்புவரை கொண்டுசென்று, கடைசி நேரத்தில் வெற்றிவாய்ப்பைக் குறைக்கக்கூடிய அம்சம் இந்த காலசர்ப்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது போன்ற ஒரு நிலையைத் தருவது காலசர்ப்ப தோஷம்.

இப்படி காலசர்ப்ப தோஷத்தில் இருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக் கும் காலசர்ப்ப தோஷம் தொடரும். இவ்வகை அமைப்பைப் பெற்றவர்கள் எந்தவொரு விஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தியடைய மாட்டார்கள். ஒரு விஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது வேறுமாதிரி செய்யவேண்டுமா என்று எப்போதும் குழம்பிக்கொண்டிருப்பார்கள். எந்தவொரு முடிவையும் உடனுக்குடன் எடுத்துவிட மாட்டார்கள். தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர் களால் எந்தவொரு விஷயத்திலும் தனித்து செயல்பட இயலாது. கொடிபோல படர்ந்து செயல்படக்கூடியவர்கள். சரியான ஊன்றுகோல் போன்ற துணை கிடைத்து விட்டால் அவர்களைக்கொண்டு வாழ்க்கை யில் சிறப்பான ஏற்றத்தினைக் காண்பார்கள்.

கோட்சாரமும் காலசர்ப்ப தோஷமும் உலகில் ஏற்படும் பல்வேறு சம்பவங் களை கோட்சார கிரக நிலைகளே தீர்மானம் செய்கின்றன. அதன்படி 5-12-2021 முதல் 25-4-2022 வரை கோட்சாரரீதியாக கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. காலசர்ப்ப தோஷத்திற்கு உலக இயக்கத்தையே கட்டுப்படுத்தும் சக்தியுண்டு.

Advertisment

இந்த தோஷம் ஒருவிதமான நெருடலை உலகுக்குத் தந்து கொண்டுதான் இருக்கி றது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் நின்ற காலத்தில் கொரோனா தாக்கத்தால் உலக இயக்கமே தடுமாறியது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றுவரை இயல்புநிலை திரும்பிய பாடில்லை. உலக நாடுகளிடையே ஒற்றுமையின்மை, ஆட்சியாளர்கள்மீது மக்களுக்கு அதிருப்தி, பொருளாதார மந்தம், இயற்கை சீற்றம், நோய்த்தாக்கம் என உலகமே அசாதாரண சூழ்நிலையில்தான் இயங்கிவருகிறது.

hh

இந்த நிலையில் 5-12-2021 முதல் 25-4-2022 வரை அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் உலா வரப் போகின்றன. அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி முன்னேறிச் செல்கின்றன. வருட கிரகங்களான குருவும் சனியும், ராகு- கேதுவின் பிடியில் உள்ளன. மேலும், ராகு- கேதுக்களுடன் செவ்வாய் சம்பந்தம் உள்ளது. கோட்சாரரீதியான சனி, செவ்வாய் சம்பந்தம் விபத்துகள், கொடூர நோய்களின் தாக்கத்தை மிகைப் படுத்தும்.

மேலும் தற்போது துலாத்தில் நிற்கும் கோட்சார செவ்வாயின் 8-ஆம் பார்வை ராகுவின்மேல் பதிந்த நேரத்தில் பலமடங்கு வீரியமான "ஒமிக்ரான்' என்னும் புதிய வைரஸ் உருவாகியுள்ளது. அடுத்து செவ்வாய் விருச்சிகத்தில் கேதுவுடன் இணைந்து ராகுவை நேரடியாகப் பார்க்கும் காலமான 15-1-2022 வரை கவனத்துடன் செயல்படவேண்டும். பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா வின் மூன்றாவது அலைத் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம். மேலும் துலாத்தில் நின்ற கோட்சார செவ்வாயின் 4-ஆம் பார்வை மகரத்தில் நிற்கும் சனியின்மீது பதிந்தது. மகரத்தில் நிற்கும் சந்திரன் சாரம்பெற்ற சனியின் 10-ஆம் பார்வை துலாத்தில் நின்ற செவ்வாயின்மேல் பதிந்ததால், இயற்கையானது மழையின் ரூபத்தில் மக்களை அவஸ்தைப் படுத்தியதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் 26-2-2022 முதல் 6-4-2022 வரை காலபுருஷ அஷ்டமாதிபதி செவ்வாய், காலபுருஷ பாதகாதிபதி சனியுடன் மகரத்தில் இணைகிறது. சனி, செவ்வாய் சாரத்தில் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் அரசியல், சட்டம், காவல்துறை, பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, உலகநாடுகளிடையே ஒற்றுமைக்குறைவு, இயற்கை சீற்றம், நோய்த் தாக்கம், விபத்துகள், கூட்டு மரணம் போன்ற பல்வேறு அசௌகரியங்கள் நிலவும். செவ்வாய், ராகு சம்பந்தம், சனி, செவ்வாய் சம்பந்தம் சிறப் பித்துச் சொல்லும் பலனல்ல. 25-4-2022-ல் புதன் மிதுனத்திற்குள் நுழையும்போது காலசர்ப்ப பாதிப்பு படிப்படியாகக் குறையத் துவங்கும்.

இனி பன்னிரண்டு ராசியினருக்கும் கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய், சனி சேர்க்கை யால் ஏற்படும் பலன்களைக் காணலாம்.

மேஷம்

ராசிக்கு இரண்டில் ராகுவும் எட்டில் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம், வாக்கால் பிரச்சினை, ஆரோக்கியக் குறைபாடு, துன்பம், துயரம், அழுகை, அவமானம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் வாழ்க்கைத் துணையுடன் வீண் வம்பு, வழக்கைத் தவிர்ப்பது நலம்.

மேலும் 26-2-2022 முதல் 6-4-2022 வரை யிலான காலகட்டத்தில் செவ்வாய் சனியுடன் இணைகிறார். அஷ்டமாதிபதி செவ்வாயும் பாதகாதிபதி சனியும் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் இணைகிறார்கள். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் குறையும். அல்லது தொழி-ல் சட்டச் சிக்கல் அதிகரிக்கும். உங்களின் ராசியாதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால், சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் நேரும். உட-ல் இடக்கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பிருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு, அவமானங்கள், ஆரோக்கியக் குறைபாடு, எதிர்மறை சிந்தனைகள், எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள் என மன உளைச்சலே மிஞ்சும். சிலருக்கு உடல்நல பாதிப்பால் மருத்துவமனைக்குச் சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சைசெய்ய நேரலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். முறையான திட்டமின்மையால் உங்களின் செயல்பாடு கள் உங்களைப் பதம் பார்க்கும். வெகுநாட்களாக நிலுவையிலுள்ள வழக்குகள் மன உளைச்சல் தரும். ஒருசிலருக்கு இன்சூரன்ஸ், பா-சி முதிர்வுத் தொகை, உயில் சொத்து கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கிரகங்களின் பாதிப்பி-ருந்து விடுபட செவ்வாய்க்கிழமை பகல் 3.00-4.30 மணிவரையிலான ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

ரிஷபம்

ராசியில் ராகு, ஏழில் கேது இருப்பதால் கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, விவாகரத்து, திருமணத் தடை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வீண் விரோதம் போன்றவை அதிகரிக்கும். அத்துடன் 26-2-2022 முதல் 6-4-2022 வரை சனி பகவானும் 7, 12-ஆம் அதிபதியான செவ்வாயும் இணைகிறார்கள். பாதகாதிபதி சனியுடன் மாரகாதிபதி செவ்வாய் இணைவதால் தொழில் அல்லது உத்தியோகம் நிமித்தமாக சிலர் வாழ்க்கைத் துணையைப் பிரிந்துவாழ நேரலாம். அல்லது கணவன்- மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். சில தம்பதியரின் கருத்து வேறுபாடு பஞ்சாயத்து, நீதிமன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். சிலர் தவறான நட்புவலையில் அகப்படலாம். களத்திரம், நண்பர்கள்மூலம் வம்பு, வழக்கு, நீதிமன்றப் பிரச்சினை வரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். நம்பிக்கை வைத்த நண்பரே துரோகியாகலாம். பழைய கூட்டாளி விலகலாம். புதிய கூட்டாளி சேரலாம். வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாட்டுக் குடியுரிமை பெறலாம். சிலர் வெளிநாட்டு வேலையைவிட்டு, சொந்தத் தொழில் செய்கிறேன் என விரயத்தை ஏற்படுத்தலாம். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மிக இயக்கங்கள் அல்லது சங்கங்களுக்குத் தங்கள் சேவையை அர்ப்பணிக்கலாம். சிலர் துக்கம் மிகுதியால் தலைமறைவாக வாழலாம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிவரையிலான ராகு வேளையில், வீட்டில் ஆறு நெய்தீபமேற்றி குலதெய்வத்தை வழிபடவும்.

மிதுனம்

பன்னிரண்டில் ராகுவும் ஆறில் கேதுவும் இருப்பதால் வீண் விரயம், நோய்த் தாக்கம் ஏற்படும். கடனால், நோயால் கவலை உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது வெளிநாட்டுப் பயணம் செய்ய நேரும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை சனி பகவானுடன் 6, 11-ஆம் அதிபதியான செவ்வாய் இணைகிறார். அஷ்டமாதிபதி சனியுடன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சேர்வது சுபமான பலனல்ல. அதேசமயம் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதால், 6-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் செல்லும்போது வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முதலாளிகளுக்கு தொழிலாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். 6, 8-ஆம் அதிபதி சேர்க்கை என்பதால் கடனால் கவலை, வம்பு வழக்கு உருவாகும். ஜாமின் போடக்கூடாது. ஜாமின் போட்ட தொகைக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரும். பூர்வீக சொத்தை மீட்க கோர்ட், கேஸ், வக்கீலுக்கு செலவுசெய்து சொத்திற்குமேல் கடன்தொகை ஏறும். வீண் விரயம் ஏற்படும். சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப்பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷமுள்ள இடம், விருத்தியில்லாத வீடுபோன்ற வில்லங்கத்தில் அகப்பட்டு மீளமுடியாத விரயத்தைத் தந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மிகும். அஷ்டமச்சனியின் காலத்தில் ஆண்கள் தவறான நட்பில் ஈடுபட்டு வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளக்கூடாது. செவ்வாய் 11-ஆம் அதிபதியாகி 8-ல் நிற்கும் சனியுடன் இணைவதால் மூத்த சகோதரத்தால் வம்பு வழக்கு உருவாகும். புதன்கிழமை 12.00-1.30 மணிவரையிலான ராகு வேளையில் 16 நெய்தீபமேற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.

கடகம்

பதினொன்றில் ராகு, ஐந்தில் கேது இருப்பதால், மிகுதியான பொருள் வரவிருந்தாலும் குழந்தைகளால் மனசங்கடம் அல்லது கௌரவப் பதவியில் பிரச்சினைகள் தலைதூக்கும். கருவுற்ற பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு உகந்த காலமல்ல. பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் மிகுதியாக இருக்கும். 26-2-2022 முதல் 6-4-2022 வரை கடகத்திற்கு 5, 10-ஆம் அதிபதியான செவ்வாய் 7, 8-ஆம் அதிபதியான சனியுடன் இணைகிறார். கடகத்திற்கு 5-ஆம் அதிபதி 8-ஆம் அதிபதியுடன் இணைவதால், விபரீதராஜ யோகத்தால் அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி தேடிவரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோகம் நிமித்தமாக பூர்வீகத்தைவிட்டு வெளியேற நேரும். சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒருசிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடிவரும். செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினையில் இருந்த சட்டச்சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாம-ருப்பது புத்திசா-த்தனம். பல சாதகங்கள் நடந்தாலும் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். திங்கட்கிழமை காலை 7.30-9.00 மணி வரையிலான ராகு வேளையில் இரண்டு நெய்தீபமேற்றி அம்பிகையை வழிபட நிம்மதி கூடும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406