12 லக்னத்தினருக்கும் காலசர்ப்ப தோஷ நிவர்த்திப் பரிகாரங்கள்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/periodic-troubleshooting-remedies-12-lakhs-present-astrologer-i-anandi

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறுவிதமான தோஷங்கள் கூறப் பட்டிருந்தாலும், சர்ப்ப தோஷம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் ஒருவிதமான மனநெருடலைத் தந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் காலசர்ப்ப தோஷம் என்ற பெயரைக் கேட்டாலே பீதி கிளம்புகிறது. நவகிரகங்களில் வலிமையானவர்கள் ராகு- கேதுக்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு.

தோஷம் என்றால் குற்றம், குறைபாடு, இழப்பென்று பொருள். ஜனனகால ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும், ராகு- கேதுக்களின் பிடிக்குள் நிற்பது காலசர்ப்ப தோஷமாகும். ஜாதகரின் ஆயுட்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தோஷத்தை ஏற்படுத்துவதால் இது காலசர்ப்ப தோஷம் என்றழைக்கப்படுகிறது.

ராகு- கேதுக்கள் ஒருமுறை ராசிக் கட்டத்தை வலம்வர 18 ஆண்டுகளாகும். ஜனனம்முதல் இரண்டுமுறை ராசிக்கட்டத்தை வலம்வந்தபிறகே தோஷம் நிவர்த்தியாகும். ( 18 x 2=36) 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்திலுள்ள யோகப் பலன்களைத் தருகிறது. கல்வித்தடை, திருமணத்தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிர்ஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர் களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை தாமங்களையும் காலசர்ப்ப தோஷம் ஏற்படுத்தி, மன நிம்மதியை இழக்கச் செய்யும்.

18 வயதுமுதல் 36 வயதுவரையான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுபப் பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு- கேதுக்களால் காலம் தாழ்த்தித் தரப்படுவதால் இது காலசர்ப்ப தோஷம் எனப்படுகிறது. .

ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய்த் தொடர்ந்து செய்துவந்த பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தைவழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய்வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகின்றன.

அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய்வழி பாவத்தைக் குறிக்கிறார்.

ராகு சூரியனைக் குறிப்பதால், தந்தைவழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.

இதை அறிவியல் ரீதியாகக் கூறினால் மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்களும் ராகு- கேதுவின் கலவைகளாகும். குரோமோசோம்கள் என்பதில் ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகியிருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தைவழியைக் குறிப்பவை. (ராகு). மற்றும் 23 குரோமோசோம்கள் தாய்வழியைக் குறிப்பவை. (கேது). மரபுவழி பாவங்களைக் குறிப்பிடும் ராகு- கேது என்னும் இரு சர்ப்பங்களுக்கு மத்தியில் நிற்கும் அனைத்து கிர

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறுவிதமான தோஷங்கள் கூறப் பட்டிருந்தாலும், சர்ப்ப தோஷம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் ஒருவிதமான மனநெருடலைத் தந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் காலசர்ப்ப தோஷம் என்ற பெயரைக் கேட்டாலே பீதி கிளம்புகிறது. நவகிரகங்களில் வலிமையானவர்கள் ராகு- கேதுக்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு.

தோஷம் என்றால் குற்றம், குறைபாடு, இழப்பென்று பொருள். ஜனனகால ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும், ராகு- கேதுக்களின் பிடிக்குள் நிற்பது காலசர்ப்ப தோஷமாகும். ஜாதகரின் ஆயுட்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தோஷத்தை ஏற்படுத்துவதால் இது காலசர்ப்ப தோஷம் என்றழைக்கப்படுகிறது.

ராகு- கேதுக்கள் ஒருமுறை ராசிக் கட்டத்தை வலம்வர 18 ஆண்டுகளாகும். ஜனனம்முதல் இரண்டுமுறை ராசிக்கட்டத்தை வலம்வந்தபிறகே தோஷம் நிவர்த்தியாகும். ( 18 x 2=36) 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்திலுள்ள யோகப் பலன்களைத் தருகிறது. கல்வித்தடை, திருமணத்தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிர்ஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர் களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை தாமங்களையும் காலசர்ப்ப தோஷம் ஏற்படுத்தி, மன நிம்மதியை இழக்கச் செய்யும்.

18 வயதுமுதல் 36 வயதுவரையான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுபப் பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு- கேதுக்களால் காலம் தாழ்த்தித் தரப்படுவதால் இது காலசர்ப்ப தோஷம் எனப்படுகிறது. .

ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய்த் தொடர்ந்து செய்துவந்த பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தைவழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய்வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகின்றன.

அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய்வழி பாவத்தைக் குறிக்கிறார்.

ராகு சூரியனைக் குறிப்பதால், தந்தைவழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.

இதை அறிவியல் ரீதியாகக் கூறினால் மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்களும் ராகு- கேதுவின் கலவைகளாகும். குரோமோசோம்கள் என்பதில் ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரை வியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகியிருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தைவழியைக் குறிப்பவை. (ராகு). மற்றும் 23 குரோமோசோம்கள் தாய்வழியைக் குறிப்பவை. (கேது). மரபுவழி பாவங்களைக் குறிப்பிடும் ராகு- கேது என்னும் இரு சர்ப்பங்களுக்கு மத்தியில் நிற்கும் அனைத்து கிரகங்களும் பலமிழக்கின்றன. அதனால், எவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அந்த யோகம் தரும் கிரகங்களின் தசை, புக்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொடுப்பதில்லை.

முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின் வாயின் பிடியில் சிக்கி அனுபவித்து, 36 ஆண்டுகள் கழித்து பல அனுபவங்கள் பெற்று, கேதுவின் வால்பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது.

மேலும் காலசர்ப்ப தோஷம் என்றாலே துன்பம்தரும் என்ற தவறான கருத்துகளும் நிலவி வருகின்றன. ராகு- கேதுவிற்கு இடையில் கிரகங்கள் இருந்தாலே காலசர்ப்ப தோஷம் கஷ்டப்படுத்தும் என்று நினைப்பது தவறு. ராகு- கேதுவுடன் இருக்கும் கிரகங்களின் தன்மையைப் பொருத்து தோஷத்தின் தன்மையில் மாறுபாடு இருக்கும்.

இந்த தோஷத்தை காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கிரகங்கள் அனைத் தும் ராகுவில் தொடங்கி, கேதுவில் முடியும் நிலைக்கு காலசர்ப்ப தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடியும் நிலைக்கு காலசர்ப்ப யோகம் என்றும் பெயர். தோஷ அமைப்பினைப் பெற்றவர்களுக்கு 36 வயதுவரை முன்னேற்றக் குறைவிருக்கும். யோக அமைப்பினைக் கொண்டவர் களுக்கு உரிய வயதில் சிறப்பான கல்வி, திருமணம், பொருள்வரவு, அதிர்ஷ்டம், பதவிகள் தேடிவரும்.

காலசர்ப்ப யோகம், தோஷத்தின் பொதுவான தன்மைகள்

*தோஷம் பரம்பரையாகத் தொடர்ந்து வரும்.

*ஜாதகருக்கு பழிவாங்கும் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

*அடுத்தவர்கள்மீது பழிசுமத்தி தப்பித்துவிடுவார்கள்.

*குற்ற உணர்வு குறைவுபடும்.

*யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

*நம்பியவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள்.

*மனக்குழப்பம் அல்லது பயவுணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

*தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள்.

*ஜீரணக் கோளாறு மிகுதியாக இருக்கும்.

*எந்த முடிவையும் உடனடியாக எடுக்கமாட்டார்கள் அல்லது முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும்.

*கூண்டுக்கிளியாக வீட்டில் அடை பட்டுக் கிடப்பதை விரும்புவார்கள்.

சாதாரண பாதிப்பைத் தரும் எந்த தோஷத்திற்கும் பரிகாரம் செய்யவேண்டிய அவசியமில்லை. காலசர்ப்ப தோஷத்திற்குத் தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் அல்லது தவறான பரிகாரம் செய்தால் எதிர்விளைவை சந்திக்க நேரும். பாதிப்பின் தன்மைக்கேற்பவே பரிகாரம் செய்வது நலம். மேலே கூறியதுபோன்ற குறைபாடு இருப்ப வர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து, கருட ஸ்லோகங்களைப் படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.

இனி காலசர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

திருமணத் தடை

காலசர்ப்ப தோஷத்திற்கும் திருமணத் தடைக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. ராகு- கேதுக்களின் தசை நடந்தால் மிக கவனமாகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யவேண்டும்.

பரிகாரம்

ராகு- கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்துவர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால் தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.

புத்திர பாக்கியம்

குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக் கலைதல், பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடிருக்கும்.

பரிகாரம்

கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதியன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்யவேண்டும். திருவாதிரை, மக நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.

நோய்

தோஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு- கேதுவின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராதநோய் அல்லது ஆயுள்பயம் அதிகமாக இருக்கும்.

பரிகாரம்

மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன்மூலம் மரணபயம் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும். இறைவழிபாட்டில் நாட்டம் ஏற்படும். தீராத நோய் தீரும்.

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான்

ம்ருத்யோர் முக்ஷீ யமாம்ருதாத்.'

அதிர்ஷ்டம்

நித்திய கண்டம்- பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தரத் தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியானகூச்சல் குழப்பம், உழைப்பிற்குத் தகுந்த ஊதியமின்மை, வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.

பரிகாரம்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் (நன்னிலம்- குடவாசல் சாலையிலுள்ள) வாஞ்சிநாதேஸ்வரர் ஆலய தீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால் அனைத்துவிதமான அதிர்ஷ்டமும் தேடிவரும்.

12l

தற்போதைய கோட்சாரமும் காலசர்ப்ப தோஷமும்

காலசர்ப்ப தோஷத்திற்கு உலக இயக்கத் தையே கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இந்த தோஷம் ஒருவிதமான நெருடலை உலகிற்குத் தந்துகொண்டு தான் இருக்கிறது.

நடப்பு 2020-ஆம் ஆண்டில் அனைத்து கிரகங் களும் ராகு- கேதுவின் பிடியில் நின்ற காலங்களில் கொரோனா தாக்கத்தால் உலக இயக்கமே தடுமாறி யது நாம் அறிந்ததே. இன்றுவரை இயல்புநிலை திரும்ப வில்லை. உலக நாடுகளிடையே ஒற்றுமையின்மை, ஆட்சியாளர்கள்மீது மக்களுக்கு அதிருப்தி, பொருளாதார மந்தம், இயற்கை சீற்றம், நோய்த்தாக்கம் என உலகமே அசாதாரண சூழ்நிலையில்தான் இயங்கிவருகிறது.

இந்த நிலையில் நடப்பு சார்வரி ஆண்டில், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கார்த்திகை மாதம் 29-ஆம் தேதி (14-12-2020) திங்கட்கிழமை இரவு கேட்டை, மூல நட்சத்திரங்களில் கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் 10-1-2021 முதல் மறுபடியும் அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் உலாவரப் போகின்றன. அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி முன்னேறிச் செல்கின்றன. இதனால் இரண்டாவதாக ஒரு காலசர்ப்ப தோஷம் உண்டாகும். வருட கிரகங் களான குருவும் சனியும், ராகு- கேதுவுக்குள் உள்ளனர்.

மேலும், ராகு- கேதுக் களுடன் செவ்வாய் சம்பந்தம் அதிகமாக உள்ளது. 24-12-2020 அன்று மீனத்திலிருந்து மேஷத்திற்கு மாறும் செவ்வாயின் எட்டாம் பார்வை விருச்சிகத்திலுள்ள கேதுவின்மேல் விழும்.

செவ்வாயின் எட்டாம் பார்வை என்பது விபத்துப் பார்வை. காலபுருஷ லக்னமான மேஷமும், அஷ்டம ஸ்தானமான விருச்சிகமும் சம்பந்தம் பெறுவதால் ஆட்சி, அரசியல், சட்டம், காவல்துறை போன்றவற்றில் சிக்கல், நோய், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, உலக நாடுகளிடையே ஒற்றுமைக் குறைவு போன்ற பல்வேறு அசௌகரியங்கள் நிலவும். 22-2-2021 அன்று ரிஷபத்திற்குள் நுழையும் செவ்வாய் ராகுவுடன் இணைவது சிறப்பித்துச் சொல்லும் பல னல்ல. ஆனாலும் மகரத்தில் நிற்கும் குருவின் ஐந்தாம் பார்வை ரிஷபத்திற்கு இருப்பதால் சற்றே ஆறுதல் அடையலாம். 14-4-2021 பிலவ வருடம், சித்திரை 1-ஆம் நாள் செவ்வாய் மிதுனத்திற்குள் நுழையும்போது காலசர்ப்ப பாதிப்பு படிப்படியாகக் குறையத் துவங்கும்.

இந்தியா 15-8-1947 அன்று நள்ளிரவு 12.01 மணிக்கு சுதந்திரம் அடைந்தபோதும் அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில்தான் அடைபட்டிருந்தன. அனைத்து கிரகங்களும் கேதுவின் பயணப்பாதையில் நின்றன. தற்போது அனைத்து கிரகங்களும் ராகுவின் பயணப்பாதையில் அடைபடுகின்றன. இதற்குத் தீர்வுதான் என்ன?

நமது பாரதத் திருநாட்டின் கிழக்கே காவல் தெய்வமாக விளங்கும் கொல்கத்தா காளியையும், தெற்குப் பகுதியைக் காக்கும் குமரி அன்னையையும், காசி காலபைரவரையும், துர்க்கையம்மனையும் வழிபட நாடும் வீடும் நலம்பெறும்.

இனி பன்னிரண்டு லக்னத்தினருக்கும் கால சர்ப்ப தோஷ நிவர்த்திப் பரிகார வழிபாட்டு முறைகளைக் காணலாம்.

மேஷம்

லக்னத்திற்கு இரண்டில் ராகுவும் எட்டில் கேதுவும் இருப்பதால் ஆரோக்கியக் குறைபாடு, துன்பம், துயரம், அழுகை, அவமானம், வாக்கால் பிரச்சினை போன்றவற்றிலிருந்து விடுபட, அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகர் சிலைக்குப் பால்விட்டு அபிஷேகம் செய்துவர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது.

ரிஷபம்

லக்னத்தில் ராகு, ஏழில் கேது இருப்பதால் கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வீண் விரோதம் போன்றவற்றைத் தவிர்க்க சிவன் கோவிலில் தீபமேற்றி வழிபடவும்.

மிதுனம்

பன்னிரண்டில் ராகுவும் ஆறில் கேதுவும் இருப்பதால் வீண் விரயம், நோய்த் தாக்கம் போன்றவற்றைத் தவிர்க்க ராகு பகவானுக்கு உளுந்துவடை படைத்து தானம் செய்யலாம்.

கடகம்

பதினொன்றில் ராகு, ஐந்தில் கேது இருப்பதால், மிகுதியான பொருள்வரவு இருந்தாலும் குழந்தைகளால் மனச்சங்கடம் அல்லது கௌரவப் பிரச்சினை, பதவியில் தொல்லைகள் தலைதூக்கும். அரச மரத்தடியில் இருக்கும் எறும்புப் புற்றுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த நொய்யரிசியிட, வெகு விரைவில் மாற்றம் தெரியும்.

சிம்மம்

பத்தில் ராகு, நான்கில் கேது இருப்பதால், தொழில் தொடர்பான மன உளைச்சல், தாய்க்கு ஆரோக்கியக் குறைபாடு, வீடு, வாகனப் பழுது போன்ற இடர்களைத் தவிர்க்க, நதிக்கரை அல்லது குளக்கரையிலுள்ள சிவலிங்கத்தை- ஐந்துதலை நாகம் குடைபிடிப்பதுபோல் உள்ள லிங்கத்தை வழிபடவும்.

கன்னி

ஒன்பதில் ராகு, மூன்றில் கேது இருப்பதால், தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு, இடப்பெயர்ச்சி, வேலையாட்களால் பயனற்ற நிலை, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை போன்ற மன சஞ்சலத்தைத் தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம்.

துலாம்

எட்டில் ராகு, இரண்டில் கேது இருப்பதால், சம்பந்தம் இல்லாத வம்பு, வழக்கு, தனவரவில் தடை, தாமதம் இருக்கும். இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு, ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடிக்கப்பட்டு, அரசமரத்தின் அடியில் இருக்கும் சர்ப்ப சிலையை வழிபடவேண்டும்.

விருச்சிகம்

ஏழில் ராகு, லக்னத்தில் கேது இருக்கிறது. ஏழாமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் ஜனனகால ஜாதகரீதியான திருமணத் தடை அகலும். மேலும் சுபப் பலனை அதிகரிக்க, வீட்டின் அருகிலுள்ள அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்யவும்.

தனுசு

ஆறில் ராகு, பன்னிரன்டில் கேது இருப்பதால் வெளிநாட்டுப் பயணத்தில் தடை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி அல்லது கடன் தொகை கிடைக்கும். காரிய சித்திக்கு சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவேண்டும்.

மகரம்

லக்னத்தில் குரு, சனி; ஐந்தில் ராகு, பதினொன்றில் கேது இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, குலதெய்வ அனுக்கிரகம், வெளிநாட்டுப் பயணம் போன்ற பாக்கியப் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சுந்தரகாண்டம் படிக்கவேண்டும்.

கும்பம்

நான்கில் ராகு, பத்தில் கேது இருப்பதால் அழகு, ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட் கள் சேர்க்கை அதிகரிக்கும். உயிரின வளர்ப்பில் கவனம் தேவை. தாய்க்கு ஆரோக்கியக்குறை இருக்கும். சிரமங்களைத் தவிர்க்க தெரு வோரம் வசிப்பவர்களுக்கு உணவு, உடை தானம் செய்யவேண்டும்.

மீனம்

மூன்றில் ராகு, ஒன்பதில் கேது இருப்ப தால், முன்ஜென்ம கர்மாவைக் கழித்து ஆன்மாவை சுத்தபடுத்தும் ஆன்மிக வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். முன்னோர் களின் ஆன்மாவை சாந்திப்படுத்தும் பித்ருக் கள் வழிபாடு அவசியம்.

செல்: 98652 20406

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe