தோஷங்கள் நிறைய இருப்பதால்
திருமணம் தாமதமாகும்..
சீக்கிரம் பண்ணி இருந்தா
ஏதாவது ஒரு விதத்தில்
பிரிந்து இருக்க வேண்டும்னு
சொன்னதை வச்சு..
எல்லாம் நன்மைக்கேன்னு
ஆண்டவன்மேல பாரத்தை போட்டு
தயங்காமல் தாமதமா
திருமணம் பண்னேன்..
இப்ப திருமணம் ஏன்டா பண்ணேன்னு
தினம் தினம் அழுகிறேன்...
ஜாதகத்தில் என் பிரச்சினை என்ன?!..
ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்கய்யா...
லக்னத்திற்கு ஏழாம் இடம் களத்திர ஸ்தானம்
ஏழு என்றாலே வதை தாரை..
ஏக்கத்தை அதிகம் தரும்
ஏற்றத்தை குறைவாகத்தான் தரும்..
எங்காவது ஒருவனுக்கு ஏழாம் இடம்
சுத்தமாக இருக்கும்..
அவனுக்கு மட்டுமே திருமணத்திற்கு
பிறகு நல்ல யோகம் கிடைக்கும்..
ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இன்றி
ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்து
ஆறு, எட்டு, பன்னிரண்டு தசைகள் வராமல் இருந்தால்
அவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி..
இது ஆயிரத்தில் ஒருவனுக்கோ
கோடியில் ஒருவனுக்கோ அமையுமப்பா...
குடும்பத்தை தரக்கூடியது இரண்டாம் இட
தோஷங்கள் நிறைய இருப்பதால்
திருமணம் தாமதமாகும்..
சீக்கிரம் பண்ணி இருந்தா
ஏதாவது ஒரு விதத்தில்
பிரிந்து இருக்க வேண்டும்னு
சொன்னதை வச்சு..
எல்லாம் நன்மைக்கேன்னு
ஆண்டவன்மேல பாரத்தை போட்டு
தயங்காமல் தாமதமா
திருமணம் பண்னேன்..
இப்ப திருமணம் ஏன்டா பண்ணேன்னு
தினம் தினம் அழுகிறேன்...
ஜாதகத்தில் என் பிரச்சினை என்ன?!..
ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்கய்யா...
லக்னத்திற்கு ஏழாம் இடம் களத்திர ஸ்தானம்
ஏழு என்றாலே வதை தாரை..
ஏக்கத்தை அதிகம் தரும்
ஏற்றத்தை குறைவாகத்தான் தரும்..
எங்காவது ஒருவனுக்கு ஏழாம் இடம்
சுத்தமாக இருக்கும்..
அவனுக்கு மட்டுமே திருமணத்திற்கு
பிறகு நல்ல யோகம் கிடைக்கும்..
ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இன்றி
ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்து
ஆறு, எட்டு, பன்னிரண்டு தசைகள் வராமல் இருந்தால்
அவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி..
இது ஆயிரத்தில் ஒருவனுக்கோ
கோடியில் ஒருவனுக்கோ அமையுமப்பா...
குடும்பத்தை தரக்கூடியது இரண்டாம் இடம்
இரண்டாம் இடத்தில்
பாவ கிரகங்கள் இன்றி
இரண்டாம் அதிபதியோடு
பாவ கிரகங்கள் சேராமல்
இரண்டாம் அதிபதியை
பாவ கிரகங்கள் பார்க்காமல்
இரண்டாம் அதிபதி 6, 8, 12-ஆம் அதிபதி
கிரக சாரம் பெறாமல் இருந்தால்..
இனிய இல்லறம் கிடைக்குமப்பா..
வாக்கு ஸ்தானம் கெட்டால்
குடும்பத்தில்
வாக்குவாதம் ஏற்படும்..
விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மை வராது
வாய் பேச்சால் வம்பு, வழக்கு வரும்..
குடும்பம் பிரியாமல் இருக்க
குடும்ப ஸ்தானம் சிறப்பாக அமைய வேண்டும்..
பாதகாதிபதி மாரகாதிபதி தசை நடந்தாலும்
கணவன்- மனைவிக்கு கண்டம் வருமப்பா...
மூன்றாம் இடம் கெட்டுப் போனவனுக்கு
முக்கால்வாசி பொண்டாட்டி நிற்காதப்பா..
அஞ்சாமிடம் கெட்டுப் போனால்
வம்சவிருத்தியால் வம்பு, வழக்கு வருமப்பா..
குரு கெட்டுப்போனவனுக்கு
குழந்தை பிறந்தவுடன்
குடும்பப் பிரச்சினை துவங்கிவிடும்..
புத்திர தோஷம் உள்ளவனுக்கு
பிள்ளைகளால் குடும்பம் பிரியும்..
குருவோடு ராகு சேர்ந்தால்
பிள்ளை யோகம் இல்லை..
வரம் பெற்று பெத்த பிள்ளை
வாழ்க்கையே கெடுத்துவிடும்..
ஏழாம் இடம் கெட்டுப் போனால்
இரண்டாவது பிள்ளை
பிறந்ததும் பிரச்சினை ஏற்படும்...
களத்திர தோஷத்தை போக்க
வாழைக்கன்றை வெட்டினால்
புத்திர தோஷம் பற்றிக்கொள்ளும்..
பரிகாரம் தெரிந்தும் செய்யாவிட்டால்
பரிகாசமே மிஞ்சுமப்பா..
கருக்கலையும், குழந்தை பிறக்காது
ஆண் வாரிசு இருக்காது
பெற்ற பிள்ளையால் நிம்மதி தொலையும்..
புத்திர தோஷம் குடும்பத்தையே கெடுக்கும்..
ஐந்தாமிடம் கெட்டுப் போனவனுக்கு
காதலால் கவுரவம் கெடும்..
நாலாமிடமும் சேர்ந்து கெட்டால்
காதலால் கருக்கலையும்..
கெட்ட தசை நடந்தால் கெட்டதே நடக்கும்...
ஆறாம் இடத்து தசை நடந்தால்
புத்தி கெட்டுப் போகும்..
எட்டாம் இடத்தில் தசை நடந்தால்
அசிங்கம் கேவலம்
அடியோடு கௌரவம் பாதிக்கும்..
12-ஆமிட தசை நடந்தால்
அனைத்தும் விரயமாகும்..
6, 8, 12 தசைகள் நடந்தால்
அபூர்வமாகவே நன்மை நடக்கும்..
சுப கிரக தொடர்புகள் சுகத்தை தரும்..
வெளிநாட்டு வாழ்க்கை மேன்மை தரும்..
90 சதவிகித மக்களுக்கு கெடுதலே நடைபெறும்..
ஆசை காட்டி மோசம் செய்யும் என்பதால்
மோசமாக ஏமாறாமல்
எச்சரிக்கையாக இருந்தால்
கொஞ்சமாக ஏமாறலாம்..
ஏழாம் இடம் கெட்டுப்போனவனுக்கு
எந்த தசையும் கை கொடுக்காது..
குடும்ப வாழ்க்கை ஏமாற்றம் தரும்..
வப்பாட்டி வச்சாலும் வாழ்க்கை தடுமாறும்..
செவ்வாய், சனி சேர்ந்தவனுக்கு
கலகத்தில் கல்யாணம்..
கலவரத்தில் கல்யாணம்..
கல்யாணத்துக்கு பின் கலவரம்..
முறையற்ற திருமணம்
திருமண வாழ்க்கை திருப்தி தராது
கொண்டவனை பிரியும் கொடுங்காலம் வரும்..
ஏழாம் இடத்தை செவ்வாய், சனி பார்த்தாலும்
ஏடாகூடம் திருமண வாழ்க்கை..
சூரியன், செவ்வாய் சேர்ந்தால்
விதவை ஆகும் நிலை வரும்..
செவ்வாய், ராகு சேர்ந்தாலும்
பெண்ணுக்கு நிம்மதி இல்லை..
செவ்வாய் கெட்டுப்போன பெண்ணுக்கு
கணவனால் ஆபத்து..
கணவனுக்கும் ஆபத்து..
கல்யாண வாழ்க்கை அவமானத்தை
அவதியை தரும்..
கௌரவமாய் வீட்டுக்குள்
அழும் பெண்கள் அதிகமப்பா...
திருமணம் செய்வது போராட்டம் என்றால்
திருமணத்திற்கு பின்னால் போராட்டம் அதிகம்
ஏழாம் இடம் கெட்டுப் போனவன்
எப்பாடு பட்டாலும்..
ஏக பத்தினி விரதனாக இருந்தாலும்
ஒருத்தியோடு வாழ மாட்டான்..
தாமதத் திருமணம் செய்தாலும்
தாரம் ஒன்றல்லப்பா..
காதலித்து ஏமாந்தாலும் கணக்கில் வராது
கட்டாயம் கட்டியவளால் கணக்கில் அடங்கா
துயரம் உண்டு..
தேசம் விட்டு தேசம் நீ ஓடினாலும்
தேவைக்கு மனைவி உன்னோடு இருக்கமாட்டாள்..
கோடிக் கணக்கில் சொத்தைக் கொடுத்தாலும்
வந்தவள் துரோகம் செய்வாள்..
பரிகாரம் உனக்கில்லை
மறக்காமல் ஒன்று செய்..
மறந்தும் பெண்ணை நம்பிவிடாதே
சுக்கிரன் கெட்டுவிட்டால்
சுதந்திரம் பறிபோகும்...
களத்திரகாரக கிரகத்துடன்
சூரியன் சேர்ந்தால்
தார தோஷம் கட்டாயம் உண்டு..
களத்திர தோஷத்திற்கு
கட்டாயம் பரிகாரம் வேண்டும்..
திருமணத்திற்குமுன்பு
காளகஸ்தி சென்றுவா..
நவகிரக கோவிலுக்கு செல்..
தோற்றுப் போகாமல் நீயிருக்க..
தோஷமறிந்து பரிகாரம் செய்துகொள்...
செல்: 96003 53748