நிம்மதியான குடும்ப வாழ்வு! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/peaceful-family-life-dr-murugan-balamurugan

குடும்பமென்பது நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும் மனிதன் தினம்தினம் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் செல்பவருக்கு கூட்ட நெரிசலில் சிக்க வேண்டிய நிலை, வண்டிகளில் செல்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம், பணியில் அதிகாரிகளின் கெடுபிடி, வேலைப்பளு, அலைச்சல் என ஒடி ஒடி உழைத்துக் களைத்து வீடு திரும்பும் மனிதனுக்கு, வீட்டில் மனைவியின் அன்பும் ஆதரவும், பிள்ளைகளின் பாசமும் இருந்தால் எத்தகைய கஷ்டங்களையும் மறந்து மனநிம்மதி ஏற்படும். அதுவே வீட்டில் அன்பான துணை இல்லாவிட்டால் அவன் வாழ்க்கையில் நிம்மதியென்பது கேள்விக்குறியாகி விடுகிறது.

ஒருவருக்கு ஒற்றுமையான குடும்ப வாழ்க்கை அமைய ஜோதிட ரீதியான காரணத்தை ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடானத

குடும்பமென்பது நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்கவேண்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும் மனிதன் தினம்தினம் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் செல்பவருக்கு கூட்ட நெரிசலில் சிக்க வேண்டிய நிலை, வண்டிகளில் செல்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம், பணியில் அதிகாரிகளின் கெடுபிடி, வேலைப்பளு, அலைச்சல் என ஒடி ஒடி உழைத்துக் களைத்து வீடு திரும்பும் மனிதனுக்கு, வீட்டில் மனைவியின் அன்பும் ஆதரவும், பிள்ளைகளின் பாசமும் இருந்தால் எத்தகைய கஷ்டங்களையும் மறந்து மனநிம்மதி ஏற்படும். அதுவே வீட்டில் அன்பான துணை இல்லாவிட்டால் அவன் வாழ்க்கையில் நிம்மதியென்பது கேள்விக்குறியாகி விடுகிறது.

ஒருவருக்கு ஒற்றுமையான குடும்ப வாழ்க்கை அமைய ஜோதிட ரீதியான காரணத்தை ஆராயும் போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடானது பலமாக இருப்பது சிறப்பு.

குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 2-ஆம் வீடு பலமிழக்காமல் சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தால் அமைதி யான குடும்ப வாழ்க்கை உண்டாகிறது. 2-ம் அதிபதி பலமாக இருந்தாலும் சுபகிரகத் தொடர்புடன் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

family

அதுவே சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் 2-ல் அமைந்தால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிலும் பாவ கிரகங்களில் கொடிய பாவ கிரகங்களான சனி அல்லது ராகு 2-ல் அமைவது மிகவும் கெடுதியை ஏற்படுத்துகிறது. பாவ கிரகங்கள் 2-ஆம் வீட்டில் ஆட்சி, உச்சம்பெற்று அமைந்திருந் தாலும் நன்மையைத் தராமல் குடும்பத் தில் ஒற்றுமைக் குறைவு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு 8-ஆம் வீடாக 2-ஆம் வீடு வருவதால், 2-ஆம் வீடு பலமாக இருப்பது நல்லது.

அப்படி 2-ஆம் வீடு பலமாக இருக்கும் ஜாதகருக்கு குடும்பத்தில் ஒற்றுமை, வாழ்க்கைத் துணைக்கு நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை போன்ற சாதகமான பலன்கள் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீட்டில் ஏதாவதொரு பாவ கிரகம் வலுப்பெற்று இருந்துவிட்டால்- அதிலும் குறிப்பாக சனி, ராகு அமைந்தால் வாழ்வில் ஏதாவதொரு காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் தசை இளம்வயதில் வருமானால் தாய்- தந்தையரை இழக்கும் சூழ்நிலை அல்லது பிரிந்து வாழக்கூடிய நிலை உண்டாகிறது. 10 முதல் 25 வயதுவரை 2-ல் வலுப் பெற்ற பாவிகளின் தசை வந்தால் தாய்- தந்தை மற்றும் உடன் பிறந்தவர் களைவிட்டுப் பிரிந்து படிப்பு அல்லது பணி நிமித்தமாக வெளியிடங்களுக்குச் செல்லும் நிலை அல்லது குடும்ப உறவினர்களில் யாராது ஒருவரை இழக்கும் நிலை ஏற்படும்.

25 வயதுமுதல் 40 வயதுவரை 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் தசை நடைபெற்றால் வேலை நிமித்த மாக வெளியிடங்களில் தனிமையில் வாழும் நிலை, திருமணம் நடைபெறத் தடை, திருமணம் நடைபெற்றா லும் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகிறது. 40 வயதுக்கு மேல் 2-ல் வலுப்பெற்ற பாவ கிரகத்தின் தசை நடைபெற்றால் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை, உற்றார்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகிறது. சிலருக்கு குடும்பத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. 2-ல் அமைந்த பாவ கிரகங்களின் தசை நடக்கும்போது குடும்பத்தில் ஏதாவதொரு வகையில் ஒற்றுமைக் குறைவு ஏற்படுகிறது. 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் புக்தி மற்ற கிரகத்தின் தசையில் வந்தாலும், அந்த புக்திக் காலத்தில் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒருவரது மண வாழ்க்கைரீதியாக பார்கும்போது, 2-ல் பாவ கிரகங்கள் அமைந்தால் திருமணவாழ்வில் நிம்மதிக்குறைவு ஏற்படுகிறது. குறிப்பாக திருமண வயதுக் காலத்தில் 2-ல் அமைந்த பாவ கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெற்றால், அக்காலத்தில் திருமணம் அமைய இடையூறு ஏற்படுகிறது. 2-ல் பாவிகள் அமைந்து அந்த கிரகத்தின் தசை திருமண வயது மற்றும் அதன் பின்புவரும் 10- 15 வருடங்களுக்கு வாரா மலிருந்தால் திருமண வாழ்க்கை பாதிக்காமல் நிம்மதி யாக இருக்கிறது. அதுவே திருமணத்திற்குப்பிறகு 2-ல் உள்ள பாவ கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெற்றால் கணவன்- மனைவியிடையே சண்டை, சச்சரவு, ஒற்றுமைக் குறைவு ஏற்படுகிறது. வேலை அல்லது தொழில் நிமித்தமாக கணவர் ஒரு ஊரில், மனைவி ஒரு ஊரில் வாழ்கின்ற நிலை உண்டாகிறது.

பாவ கிரகங்களின் தசை நடைபெறும் காலத்தில் தகுந்த இறை வழிபாடுகள் மேற்கொள்வதும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் ஓரளவுக்கு பிரச்சினைகள் குறைய வழிவகுக்கும்.

bala180322
இதையும் படியுங்கள்
Subscribe