Advertisment

பாதகாதிபதி! மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/pathakathipati-melmaruvathur-s-kalaivani

ஜோதிடவியலில் அமையப்பெற்ற நுணுக்கங்களிலும், ரகசியங்களிலும், ஏராளமான விதிகளும், விதிவிலக்குகளும், இருந்தாலும், ஒருவரின் ஜாதகத்தில் பலனை கணிப்பதற்கும், அவற்றின் உண்மை நிலையை உரைப்பதற்கும், சவாலாக இருப்பது பாதகஸ்தானமும் பாதகாதி பதியின் தொடர்புகளுமே ஆகும்.

Advertisment

பாதகம் என்பதனை பெயரிலேயே நம்மால் அறிந்துகொள்ளமுடியும். ஜோதிடத்தில் ராசிகளுக்குள் பகுக்கப்பட்ட சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு ஒவ்வொரு பாவகத்தையும் பாவக அதிபதியும் பாதகமாக வகுத்துள்ளார்கள். அதாவது சர ராசிக்கு 11-ஆமிடமும், ஸ்திர ராசிக்கு 9-ஆமிடமும், உபய ராசிக்கு ஏழாமிடமும் பாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேஷம், கடகம், துலாம், மகர, லக்னங்கள் சர லக்னங்களாகவும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகியவை ஸ்திர லக்னங்களாகவும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் உபய லக்னமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது

மேலும் மேஷம், ரிஷபத்திற்கு, சனி பாதகாதிபதியாகவும். மிதுனம், கன்னி, குருவும், கடகம், கும்பதிர்க்கு சுக்கிரனும், சிம்மம், மகரத்திற்கு செவ்வாயும், தனுசு, மீனத்திற்கு, புதனும். துலா லக்னத்திற்கு சூரியனும், விருச்சிக லக்னத்திற்கு சந்திரனும் பாதக அதிபதிகளாக அமைவார்கள்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடப்பில் இருந்தாலும் பாதகாதிபதியின் தொடர்பு அல்லது பாதகாதிபதி வீட்டின் தொடர்பானது நேர்மறையான பலனை, அசுப பலனாக மாற்றி அளிக்கின்றது.

மேலும் பெரும் இன்னலின் வசம் இட்டுச் செல்வதை கண்கூடாக காண முடிகின்றது. எனவே ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதி வலுபெறாமல் இருப்பது சிறப்பினை தரும்.

சமீபத்தில் கையாண்ட ஜாதகம் ஒன்றில் கடக லக்னமாகி, பாதகாதிபதி சுக்கிரன் 11-ல் ஆட்சிபெற்று தசை நிகழ்த்த அவர்பெற்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. சுக்கிரனுக்கு முன்நிகழ்ந்த கேது தசைவில் ஐந்திலிருந்து கேது தசை நிகழ்த்தியபொழுது வீடு, நிலம், குலதெய்வத்திற்கு கோவில், மூன்று ட்ரான்ஸ்போர்ட் லாரி போன்றவை வாங்கி ஒரு சுபிட்சமான சூழலில் சென்ற வாழ்க்கை சுக்கிரனின் தசை சுக்கிரனின் புக்தி காலங்களான குறுகிய காலத்திலேயே அனைத்தையுமே இ

ஜோதிடவியலில் அமையப்பெற்ற நுணுக்கங்களிலும், ரகசியங்களிலும், ஏராளமான விதிகளும், விதிவிலக்குகளும், இருந்தாலும், ஒருவரின் ஜாதகத்தில் பலனை கணிப்பதற்கும், அவற்றின் உண்மை நிலையை உரைப்பதற்கும், சவாலாக இருப்பது பாதகஸ்தானமும் பாதகாதி பதியின் தொடர்புகளுமே ஆகும்.

Advertisment

பாதகம் என்பதனை பெயரிலேயே நம்மால் அறிந்துகொள்ளமுடியும். ஜோதிடத்தில் ராசிகளுக்குள் பகுக்கப்பட்ட சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு ஒவ்வொரு பாவகத்தையும் பாவக அதிபதியும் பாதகமாக வகுத்துள்ளார்கள். அதாவது சர ராசிக்கு 11-ஆமிடமும், ஸ்திர ராசிக்கு 9-ஆமிடமும், உபய ராசிக்கு ஏழாமிடமும் பாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேஷம், கடகம், துலாம், மகர, லக்னங்கள் சர லக்னங்களாகவும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஆகியவை ஸ்திர லக்னங்களாகவும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் உபய லக்னமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது

மேலும் மேஷம், ரிஷபத்திற்கு, சனி பாதகாதிபதியாகவும். மிதுனம், கன்னி, குருவும், கடகம், கும்பதிர்க்கு சுக்கிரனும், சிம்மம், மகரத்திற்கு செவ்வாயும், தனுசு, மீனத்திற்கு, புதனும். துலா லக்னத்திற்கு சூரியனும், விருச்சிக லக்னத்திற்கு சந்திரனும் பாதக அதிபதிகளாக அமைவார்கள்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடப்பில் இருந்தாலும் பாதகாதிபதியின் தொடர்பு அல்லது பாதகாதிபதி வீட்டின் தொடர்பானது நேர்மறையான பலனை, அசுப பலனாக மாற்றி அளிக்கின்றது.

மேலும் பெரும் இன்னலின் வசம் இட்டுச் செல்வதை கண்கூடாக காண முடிகின்றது. எனவே ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதி வலுபெறாமல் இருப்பது சிறப்பினை தரும்.

சமீபத்தில் கையாண்ட ஜாதகம் ஒன்றில் கடக லக்னமாகி, பாதகாதிபதி சுக்கிரன் 11-ல் ஆட்சிபெற்று தசை நிகழ்த்த அவர்பெற்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. சுக்கிரனுக்கு முன்நிகழ்ந்த கேது தசைவில் ஐந்திலிருந்து கேது தசை நிகழ்த்தியபொழுது வீடு, நிலம், குலதெய்வத்திற்கு கோவில், மூன்று ட்ரான்ஸ்போர்ட் லாரி போன்றவை வாங்கி ஒரு சுபிட்சமான சூழலில் சென்ற வாழ்க்கை சுக்கிரனின் தசை சுக்கிரனின் புக்தி காலங்களான குறுகிய காலத்திலேயே அனைத்தையுமே இழந்து குடும்பத்தைவிட்டு வெளியேறும் சூழ்நிலை அமைந்தது. இதிலிருந்து பாதகாதிபதியின் வியப்பூட்டும் வீரியத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும் என்பதற்காகவே இந்த நிகழ்வினை பதிகின்றேன்.

பாதகாதிபதிகளை வெற்றிகொள்வது எவ்வாறு என்று பார்க்கலாம். ஒரு லக்னத்திற்கு எந்த பாவகம் பாதகாதிபதியாக வருகின்றதோ, அந்த பாவக உறவு களின்மீதும் காரகத்தின்மீதும் பற்று, எதிர்பார்ப்போ இல்லாமல் இருப்பது பாதகத்திலிருந்து நம்மை சற்று காப்பாற்றும்.

மேலும் பாதகாதிபதிகளின் தசைகளிலும் புக்திகளிலும் அவை சார்ந்த காரக உறவுகளோடும் சூழ்நிலைகளோடும் பயணிப்பதைக் குறைத்துக் கொள்வதனாலும் இந்த பாதகம் பெரிதாக வேலை செய்வதைத் தடுத்துக் கொள்ளமுடியும்.

முறையே 12 லக்னங்களுக்கும், பாதகாதிபதிகளும், அவர் பெற்றுள்ள பாவக காரக உறவுரீதியான சூழ்நிலை களையும் பின்வருமாறு காணலாம்.

siva

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு 11-ஆம் அதிபதியான சனியும், பதினோராம் பாவகமும் பாதக ஸ்தானங்களாகவும், பாதகாதிபதியாகவும், அமையும் இது காலப்பருஷனுக்கும் பதினோராம் வீடாக வரும்பொழுது இவர்கள் 11-ஆம் இடத்திற்கு காரகமான லாபத்தில் பெரும் ஆசை வைக்காமல் இருப்பதும், மூத்த சகோதரன், இளைய மனைவி போன்ற உறவுகளின்மீதான எதிர்பார்ப்பை யும், குறைத்துக்கொள்வது பாதகத்திலிருந்து விடுபடு வதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் பாதகாதிபதி காலபுருஷனுக்கும் ஏழாம் வீட்டில் உச்சம் அடைவதனால், இந்த லக்னத்திற்கும் ஏழாக அமைவதனால் வாழ்க்கைத் துணையின் விஷயத்தில் பாதகத்தை சந்திக்கும் சூழ்நிலையும் அமையப்பெறும். மேலும் சனி தொழில் காரகன் என்பதனால் பாதகாதிபதி லக்னத்தில் நீசம் பெறும் சூழ்நிலை உருவாகுவதால் தொழிலின்மூலமும் பாதகத்தை அடையும் தன்மை சர ராசியான மேஷத்திற்கு உரித்தானது. இவர்கள் லாபம், வாழ்க்கைத் துணை, தொழில், ஆகியவற்றின்மூலம் பெரும் எதிர்பார்ப்பினை உதறும்பொழுது பாதகத்திலிருந்து விடுபடலாம்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 9-ஆமிடம் பாதகமாக வந்து, இது காலபுருஷனுக்கு 10-ஆம் வீடாகி, சனி பாதகாதிபதியாக திகழ்வார். இவர்களுக்கு நல்ல குருவோ, தகப்பனார்வழி அனுசரணையோ அமைவது கடினம். குருவின்மூலம் பாதகத்தை அனுபவிக்கும் விதிகொண்ட ராசி இந்த ரிஷபமாகும். இவர்களின் உழைப்பை மட்டுமே நம்பி சில விஷயங்களில் ஈடுபடவேண்டும். இவர்களின் பாதகாதிபதி காலபுருஷனுக்கு ஆறாம் வீட்டில் உச்சம் அடைவதனால் கடன், எதிரி போன்றவற்றின்மூலம் சில பாதகங்களை அனுபவிக்கும் சூழ்நிலை அமையும். மேலும் சனி பன்னிரண்டாம் வீட்டில் நீசமாவதனால் செய்யும் செலவுகளின்மூலமாகவும் பாதகத்தை அனுபவிக்கும் சூழல் ரிஷப லக்னங்களுக்கு அமையப்பெறும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு ஏழாமிடம் பாதகமாக அமையும். இது கால புருஷனுக்கு 9 மற்றும் 12-ஆம் பாவகங்கள் ஆகி, குரு பாதகாதிபதி ஆவார். இவர்களுக்கு ஏழாம் அதிபதியே பத்தாம் அதிபதியாகி, பாதகாதிபதியாகவும் அமர்வதனால் இவர்கள் தொழிலின் மூலமும், களத்திரத்தின்மூலமும், எண்ணிலடங்கா இன்னலை அடையும் சூழ்நிலை உருவாகும். பாதகாதிபதி இரண்டில் உச்சம் அடைவதனால் வருமானம், குடும்பம், ஆகியவற்றின் மூலம் பாதகத்தை அனுபவிக்கும் விதி உடையது இந்த மிதுன லக்னமாகும். வாழ்க்கைத் துணை, குடும்பம், ஆகியவற்றின்மூலம் பெறப்படும் சுகங்களுக்கு முன்னுரிமை தராமல் இருந்தால் இவர்களின் பாதகம் தவிர்க்கப்படும்.

கடக லக்னம்

கடக லக்னம் சர ராசியாகி பதினோராம் அதிபதி பாதகாதிபதியாக அமையப்பெறுவார். இங்கு லக்னாதி பதி பாதகஸ்தானத்தில் உச்சம்பெறுவதனால் தனது ஆசையே இவர்களுக்கு பெரும் பாதகத்தை செய்யும். மேலும் சுக்கிரன் பாதகாதிபதியாக வருவதனால் பெண்களாலும், மூத்த சகோதரி, மச்சினி, துணைவி, மாமியார், அத்தை, ஆகியவர்களின்மூலமும் பாதகத்தை எதிர்கொள்ளும் சூழல் இவர்களுக்கு அமையும் மேலும் ரிஷபம் பஞ்சபூத கோட்பாட்டில் பூமியாக வருவதனால் பூமியின்மீதான ஆசைகளும் இவர்களுக்கு பாதகத்தை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

சிம்ம லக்னம்

சிம்ம லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் பாதகஸ்தானமாகவும், செவ்வாய் பாதகாதிபதியாகவும், அமைவார் இவர்களுக்கு லக்னாதிபதியே பாதகத்தில் உச்சம் அடையும் விதிபெற்ற லக்னமாகும். இவர்கள் தந்தைவழி மற்றும் சகோதரன், பங்காளி, நிலம், பூமி போன்றவற்றின்மூலம் பாதகத்தை அடைவார்கள். இவற்றின்மீது உண்டான ஈர்ப்புகளை துறக்கும்பொழுது பாதகம் தடுக்கப்படும்.

கன்னி லக்னம்

கன்னி லக்னத்திற்கு ஏழாம் அதிபதி பாதகாதி பதியாகவும், ஏழாம் அதிபதியே நான்காம் அதிபதியாகவும், மாறி பாதக கிரகமாகவும், அமையும். இவர்கள் வாழ்க்கைத் துணை விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மேலும் கூட்டாளிகள், பங்காளிகள், கல்வியி னால் பாதகம், தாய்மாமன், தாயாதி உறவு, நான்காம் இடம் சுட்டிக்காட்டும் வீடு, வாகன வழிகளிலும் கவனத்துடன் இருப்பதன்மூலம் பாதகத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.

துலா லக்னம்

துலா லக்னம் சர லக்னமாகி 11-ஆமிடம் பாதகமாகும். இவர்கள் அதிகாரம் உள்ளவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும். அரசு, அரசியல்மூலம் பாதகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பாதகாதிபதி லக்னத்திலேயே நீசம் ஆவதனால் தந்தைவழி சொத்துமூலம் பாதகத்தை கைக்கொள்ளும். இவர்கள் தந்தைவழி உறவில் வாழ்க்கைத்துணையினை அமைத்துக்கொண்டால் பெரும் பாதகத்தில் பயணிக்கவேண்டியது இருக்கும் சூரியன் சார்ந்த எல்லா விஷயங்களும் இவர்களுக்கு பாதகத்தினையே செய்யும். மேலும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் அரசு வேலைக்கு பணம் கட்டுதல் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றது.

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்திற்கு, ஒன்பதாமிடம் பாதகம், அதிர்ஷ்டத்தின் மூலம் பாதகம், தாயார், மாமியார், மூத்த சகோதரி போன்றவர்களின் மூலம் பாதகத்தை அனுபவிக்கும் ராசி இந்த ராசியாகும். இவர்களுக்கு பாதகாதிபதியான சந்திரன், லக்னத்திலேயே நீசம்

அடையும் சூழல் உருவாகும். இந்த சந்திரன் காலபுருஷனுக்கு நான்காம் அதிபதியாகி லக்னத்தில் நீசம் ஆவதால் தாய்வழி உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பது சிறப்பினை தரும். மேலும் இவர்கள் நீர் நிலையில் குளிக்கும்பொழுதும், உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பினை தரும்.

தனுசு லக்னம்

தனுசு லக்னத்திற்கு ஏழாம் அதிபதி பாதக அதிபதியாகி அவரே பத்துக்கு உடைய புதனாக அமைவார். இதனால் வாழ்க்கைத் துணை, மனைவிவழியில் பாதகம், சமுதாய உறவு, கடன் போன்றவற்றின்மூலம் பாதகத்தை ஏற்பார். மேலும் தோல், நரம்பு, ஆகியவைகளின்மூலம் சிறு நோயினை சந்திக்கும் விதி உடைய ராசியாகும். புதனே பாதகாதிபதியாக வருவதால் கையெழுத்து, பத்திரம், சம்பந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பு.

இவர்கள் வாழ்க்கைத்துணை விஷயத்தில் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து செல்கின்றார்களோ அந்த அளவிற்கு தொழில் வளர்ச்சியினை கைக்கொள்ள முடியும்.

மகர லக்னம்

மகர லக்னத்திற்கு பதினோராம் அதிபதி பாதகாதிபதியாக வருவார். பாதகாதிபதி செவ்வாயாகி சகோதரன், பூமி, ரத்த சம்பந்தமான உறவுகளின் மூலமும், இவர்களுக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் செவ்வாய் இவரின் லக்னத்திற்கு நான்காம் இடத்திலும் தொடர்புகொள்வதனால், வீடு தாயார், வாகனம், பூமி போன்றவற்றின்மூலம் பாதகத்தை பெறுவார். ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு

கும்ப லக்னம்

கும்ப லக்னத்திற்கு 9-ஆமிடமான துலாம் பாதகஸ்தானமாகவும் சுக்கிரன் பாதகாதிபதியாகவும் அமைவார். பாதகாதிபதி தனது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் உச்சம் அடைவதால் தன் குடும்பத்தின்மூலமாகவே மேலும் வருமானத்தின்மூலமாகவே, பாதகத்தை சந்திக்கும் ராசியாக இது அமையும். சுக்கிரன் பாதகாதிபதியாக வருவதனால் பெண்களின்மூலம் பாதகத்தை அடைவார். மேலும் மூத்த சகோதரி, அத்தை போன்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது சுபிக்சத்தை தரும்

மீன லக்னம்

மீன லக்னத்திற்கு ஏழாம் அதிபதியாக புதன் பொறுப்பேற்று அவரே நான்குக்கும் அதிபதியாகி, பாதகாதிபதியாகின்றார். மீன லக்னக்காரர்கள் பத்திரம், கையெழுத்து போன்றவற்றில் கவனத்துடன் பயணிப்பது சிறப்பு. மேலும் புதனின் வீடான கன்னி காலபுருஷனுக்கு ஆறாம் வீடாகவும், திகழ்வதனால் தாய்மாமன், மாமன் வழி உறவுகள், கடன் போன்றவற்றின் மூலம் பெறும் பாதகத்தினை அடையும் ராசியாக அமைந்துள்ளது. மேலும் பாதகாதிபதி லக்னத்தில் நீசம் அடைவதனால், கடனின்மூலமும், கையெழுத்தின்மூலமும், ஒரு இன்னலை சந்திக்கவேண்டியது இருக்கும். இவர்கள் வாழ்க்கைத்துணை விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது சிறப்பு. பாதகாதிபதி ஏற்றுள்ள காரக உறவுகளிடமும், பாவக உறவுகள் மற்றும் சூழ்நிலைகளுடனும், விட்டுக்கொடுத்து செல்வதே பாதகாதிபதியை வெற்றிக்கொள்ளும் முறையாகும்.

செல்: 80563 79988

bala271023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe