சென்ற இதழ் தொடர்ச்சி...
(பத்தாமதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்களை, நான்காம் பாவம் வரை சென்ற இதழில் கண்டோம். மற்ற பாவங்களைத் தொடர்ந்து காண்போம்.)
ஐந்து
பத்தாமதிபதி திரிகோண ஸ்தானமான ஐந்தில் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும். தொழில் லாபம், நினைத்த தொழிலில் வெற்றி பெற்று சுகபோக வாழ்க்கையை அடைவர். பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பதால் முன் ஜென்ம கர்மவினை அடிப்படை யில் தொழில் சிறப்பாக நடக்கும். செய்யும் தொழில், லாபம் பெற்ற பிள்ளைகளுக்கு சேதாரமின்றிப் போய்ச்சேரும். ஐந்தாமிடத்தில் அமர்ந்தால் திடீர் அதிஷ்டத்தால் தொழிலில் பெரிய வெற்றி, லாபத்தைப் பெற்று சுகமாக வாழ்வர். பிள்ளைகள் யோகம், பிள்ளை களால் யோகம் பெற்று சகல சௌபாக்கிய சுகத்தைப் பெறுவர். அரசாங்கத்தில் நல்ல பதவி கிடைக்கும். ஆளுமை கொண்ட பல்துறை வித்தக ராகப் பணியாற்றுவார்.
பெரிய மனிதராகவோ அல்லது அவர்களுக்கருகில் பணியாற்றி அதன்மூலம் பலன் பெறுபவராகவோ இருப்பர். நல்ல பெரிய குடும்பத்தில் பிறந்து பூர்வீக நிலத்தைப் பாதுகாத்தல், பூர்வீகத்தால் நன்மை பெறுதல் நடைபெறும். சாஸ்திரம் அறிந்த ஞானியாகவோ, சாஸ்திரத்தை போதிப்பவராகவோ, சாஸ்திரத் தொழில் செய்பவராகவோ இருப்பர். தெய்வ வாக்கு தருபவராகவோ, ஆன்மிகப் பெரியவராகவோ புகழ்பெறுவர். சுபகிரக பலம் நல்ல வழியில் நேர்மையான தொழிலைத் தரும். பாவகிரக வலு மந்திர, தந்திரத் தொழிலைத் தந்து, பிரச்சினைகளைக் கொடுத்து அவமானப் படுத்திவிடும்.
ஆறு
பத்தாமதிபதி ஆறில் நின்றால் தொழிலானது நோய், எதிரி, கடனால் பாதிக்கப்படும். செய்யும் தொழிலால் ஜாதகரின் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். அல்லது தொழில் நன்றாக நடக்கும்போது உடல்நிலை ஒத்துழைப்பு தர இயலாத அளவுக்கு பாதிப்பு வரும்.
பெரிய தொழில், சுயதொழில் செய்ய ஆசை இருந்தும், பண மில்லாததால் முடங்கும். அல்லது தகுதிக்குமீறி தொழில் செய்து கடன் ஏற்பட்டு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்படுவர். கூட்டுத்தொழில் செய்து கூட்டாளியால் ஏமாற்றப்படுவர். எதிரிகளால் தொழில் தொடங்க முடியாமல்,தொழில் நடத்த முடியாமல்,தொழிலை எதிரிகள் அபகரிப்பார்கள். எதிரிகளின் தொல்லையால் எந்தத
சென்ற இதழ் தொடர்ச்சி...
(பத்தாமதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்களை, நான்காம் பாவம் வரை சென்ற இதழில் கண்டோம். மற்ற பாவங்களைத் தொடர்ந்து காண்போம்.)
ஐந்து
பத்தாமதிபதி திரிகோண ஸ்தானமான ஐந்தில் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும். தொழில் லாபம், நினைத்த தொழிலில் வெற்றி பெற்று சுகபோக வாழ்க்கையை அடைவர். பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பதால் முன் ஜென்ம கர்மவினை அடிப்படை யில் தொழில் சிறப்பாக நடக்கும். செய்யும் தொழில், லாபம் பெற்ற பிள்ளைகளுக்கு சேதாரமின்றிப் போய்ச்சேரும். ஐந்தாமிடத்தில் அமர்ந்தால் திடீர் அதிஷ்டத்தால் தொழிலில் பெரிய வெற்றி, லாபத்தைப் பெற்று சுகமாக வாழ்வர். பிள்ளைகள் யோகம், பிள்ளை களால் யோகம் பெற்று சகல சௌபாக்கிய சுகத்தைப் பெறுவர். அரசாங்கத்தில் நல்ல பதவி கிடைக்கும். ஆளுமை கொண்ட பல்துறை வித்தக ராகப் பணியாற்றுவார்.
பெரிய மனிதராகவோ அல்லது அவர்களுக்கருகில் பணியாற்றி அதன்மூலம் பலன் பெறுபவராகவோ இருப்பர். நல்ல பெரிய குடும்பத்தில் பிறந்து பூர்வீக நிலத்தைப் பாதுகாத்தல், பூர்வீகத்தால் நன்மை பெறுதல் நடைபெறும். சாஸ்திரம் அறிந்த ஞானியாகவோ, சாஸ்திரத்தை போதிப்பவராகவோ, சாஸ்திரத் தொழில் செய்பவராகவோ இருப்பர். தெய்வ வாக்கு தருபவராகவோ, ஆன்மிகப் பெரியவராகவோ புகழ்பெறுவர். சுபகிரக பலம் நல்ல வழியில் நேர்மையான தொழிலைத் தரும். பாவகிரக வலு மந்திர, தந்திரத் தொழிலைத் தந்து, பிரச்சினைகளைக் கொடுத்து அவமானப் படுத்திவிடும்.
ஆறு
பத்தாமதிபதி ஆறில் நின்றால் தொழிலானது நோய், எதிரி, கடனால் பாதிக்கப்படும். செய்யும் தொழிலால் ஜாதகரின் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். அல்லது தொழில் நன்றாக நடக்கும்போது உடல்நிலை ஒத்துழைப்பு தர இயலாத அளவுக்கு பாதிப்பு வரும்.
பெரிய தொழில், சுயதொழில் செய்ய ஆசை இருந்தும், பண மில்லாததால் முடங்கும். அல்லது தகுதிக்குமீறி தொழில் செய்து கடன் ஏற்பட்டு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்படுவர். கூட்டுத்தொழில் செய்து கூட்டாளியால் ஏமாற்றப்படுவர். எதிரிகளால் தொழில் தொடங்க முடியாமல்,தொழில் நடத்த முடியாமல்,தொழிலை எதிரிகள் அபகரிப்பார்கள். எதிரிகளின் தொல்லையால் எந்தத் தொழிலும் செய்யமுடியாமல் தவிப்பர்.
தொழிலைக் கெடுக்க கடன், நோய், எதிரி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு பத்தாமதிபதி மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாமதிபதி தொடர்பு கொண்டால், எதிரிகள் வைக்கும் மாந்ரீகம், பில்லி, சூனியத்தால் தொழில் நடத்தமுடியாமல் தவிக்கநேரும். சொல்லமுடியாத பல பிரச்சினைகளை தொழில்மூலம் அடைவர். சுபகிரகத் தொடர்பிருந்தால் ஓரளவு நன்மை தந்து, அடிமைத் தொழிலாவது செய்ய வாய்ப்பு தரும். நோய் சம்பந்தப் பட்ட மருத்துவத்துறை, கடன் சம்பந்தப்பட்ட வசூல், வங்கித்துறை, எதிரி தொல்லைக்குத் தீர்வுதரும் காவல், நீதித்துறையில் அவரவர் சுய ஜாதக நிலையைப் பொருத்து வேலை கிடைக்கும். பாவகிரக பலம் பெற்றால் தொழில் செய்து மேற்கண்டவற்றால் பாதிப்பை சந்திப்பர்.
ஏழு
பத்தாமதிபதி ஏழில் நின்றால் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணைவரால் தொழில் அமையும். பணக்கார வரன் கிடைக்கும். அல்லது காலம் முழுவதும் பணத்தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்ளும் வரன் அல்லது வேலையில் இருக்கும் வரன் அமையும். மொத்தத்தில் துணைவரால் அதிர்ஷ்டம் பெறுவார். கூட்டுத் தொழிலால் யோகம் உண்டாகும். ஜாதகர் வேற்று தேசம் சென்று பணம் ஈட்டும் யோகத்தைப் பெறுவார். துணைவர் பெயரில் தொடங்கும் எந்தத் தொழிலும் வெற்றிதரும். நண்பர்களால் ஆதாயம் பெறுவார்.
பாவகிரகத் தொடர்பானது மனைவியால் பொருள் நஷ்டம், அவமானம், அவப்பெயரைப் பெற்றுத் தரும். தொழில் பலவித சிக்கலைத் தரும். அடங்கா மனைவி அமைவாள். அதற்குக் காரணம் ஜாதகரின் பேச்சு, நடவடிக்கையாகதான் இருக்கும். சுபகிரகச் சேர்க்கை பெற்றால் அரசாங்கப் பணி கிடைக்கும். தான தர்மம் செய்யும் சிந்தனை, பிறருக்கு உதவும் குணம்கொண்டவராகத் திகழ்வார். ஊர் போற்றும். ஆடை, ஆபரணம், சொத்து, சொந்த பந்தத்துடன் சிறப்பாக வாழ்வார். சிறிய முதலீட்டில் தொடங்கிய தொழில் பெரிதாய் வளர்ந்து பலன் தரும். சுபகிரகம் வலுப்பெற்றால் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் செய்வார்.
எட்டு
பத்தாமதிபதி எட்டாமிடத்தில் இருப்பது ஆயுள் பலத்தைத் தரும். அதேவேளையில் தொழிலில் முன்னேற்றமின்றி பலவித தோல்விகளையும், அவமானத்தையுமே தரும். எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் கூட்டாளி ஏமாற்றிவிடுவார். அடிமைத் தொழிலில்கூட அடிக்கடி இடம் மாறுவர். நிலையான தொழில், வருமானமின்றி அவதிப் படுவர். ஒரு தொழில் ஓரிடத்தில் இருக்கவிடாது. யாராவது எதிலாவது தொல்லையாக- எதிரியாக வந்துநிற்பார். நிம்மதியே இருக்காது. புத்திர தோஷம் உண்டாகும். விரக்தியான மன நிலையில் சட்டதிற்கு எதிரான- முறையற்ற தொழில் செய்வர்.
பொதுவாக நல்ல தசாபுக்திகள் நடந்தாலும், தொழிலில் குறைவான நன்மைகளே நடக்கும்.
ஆனால் எட்டாமிடத்தில் பத்தாமதிபதி பல நிலைகளில் கெட்டவராகி, கெட்டிருந்தால் வேற்றுமொழி, இனத்தவரால் மறைமுகத் தொழில்செய்து முன்னேறுவார். யாரும் யூகிக்கமுடியாத தொழில், லாபம் பெற்று விபரீத ராஜயோகத்தால் பதவி, புகழ் பெறுவார். எட்டா மிடம் பாவகிரக வீடாகி, பத்தாமதிபதி பாவகிரகமாக இருந்து பவகிரகப் பார்வையால் பாதிக்கப்பட்டு, விபரீத ராஜயோக தசை நடந்தால் குடிசையில் இருப்பவரையும் கோபுரத்திற்குக் கொண்டுபோகும்.
ஒன்பது
பத்தாமதிபதி, திரிகோண, பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் இருப்பது தொழிலில் பலவித யோகத்தை வாரிவழங்கும். பிறருக்கு உபதேசம் செய்யும் தொழிலைச் செய்வர். ஜோதிடர், வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், ஆலோசகர்கள், ஆன்மிக மத போதகர், அறநிலைத்துறை போன்ற பிறர் மதிக்கக்கூடிய தொழில்களைச் செய்வர். சுபகிரக வலுப்பெறுதல் தந்தைக்கு நன்மையைத் தரும். தந்தையால் தொழில் அமைதல், தந்தை செய்த தொழிலைத் தொடரும் நிலையையே தரும். இரண்டாவது பாதி வாழ்க்கை யோத்தைத் தரும்.
பாவகிரகத் தொடர்பு தந்தைக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுக்கும். தந்தையின் சொத்துகளில் இழப்புண்டாகும். சிலரது தந்தையின் ஆயுளை பாதித்துவிடும். புத்திர சந்தான பாக்கியம் கெடும். கடும் துன்பங்களை அனுபவித்து வாழும் நிலை உருவாகும். போராட்டமான வாழ்க்கை உண்டு. ஆன்மிக நாட்டம் நன்மை சேர்க்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டு. கடைசி நேரத்திலாவது யாராவது காப்பாற்றுவார். பெரிய வி.ஐ.பிக்கள் ஆதரவு, அவர்களின் நன்மதிப்பைப் பெறுவர். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
பத்து
பத்தாமதிபதி பத்தில் இருப்பது யோகத்தைத் தரும். இந்த இடத்தில் சுபகிரகங்கள் வலுவைவிட பாவகிரகம் வலுப்பெறுதல் நல்லபலனைத் தரும். உலக விஷயங்கள் பல அறிந்து செயல்படுவர். பிரபலமானவர்களால் போற்றப்படுவர். சொந்த பந்தம், உற்றார்- உறவினரின் நட்பு, ஆதரவு நன்மை தரும். சுபகிரக வலு தொழிலுக்கு பெரிய நன்மை தராது. தெய்வீக ஈடுபாடு, தர்ம சிந்தனை, புண்ணிய காரியங்கள் பிறர் போற்றும்படி இருக்கும். அரசாங்க நன்மை, ஆதரவு, அரசியலால் லாபம் பெறுதல் போன்ற யோகப் பலன்கள் அடைவர். பத்தாமதிபர் நல்ல நிலையில் இருந்தால் அரசாளும் யோகம் உண்டாகும். அமைச்சராகும் தகுதி படைத்தவர். கிரக நிலைகளைப் பொருத்து அரசியலில் பதவிகளை அடைவர். மக்கள் தொண்டு செய்தே தீரவேண்டும். தொழிலால் அதிர்ஷ்டம் பெறுபவர்கள் கண்டிப்பாக மக்களுக்கு உதவும் சூழல் அவர்களைமீறி நடந்தே தீரும்.
பதினொன்று
பத்தாமதிபதி பதினொன்றில் இருந்தால் தொழிலால் லாபம் பெறும் அதிர்ஷ்டம் பெற்றவர். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் லாபம்பெற்று வாழ்வர். சொந்தத் தொழில் செய்யும்போது தானாக வழிகள் தேடிவந்து அமைந்து தொழிலை விரிவுபடுத்துவர். யாருடைய துணையுமில்லாமல் தொழில் தொடங்கிய சிறிது காலத்திலேயே பெரிய இடத்திற்கு உயர்ந்து, பொருளாதார லாபமும் அடைவர். நல்ல அதிர்ஷ்டமிக்கவராக இருப்பர். பலர் இவரை நம்பி வாழும் சூழல் உண்டாகும். சிறப்பாகத் தொழிலை நடத்தும் ஆற்றல் மிக்கவர். பிறவிலேயே நிர்வாகத்திறன் கொண்டவராக இருப்பர். சிறுவயதிலேயே பிறரை வேலைவாங்கும் திறன் படைத்தவர். சுபகிரக வலுப்பெற்றவர்கள் பெரும் முன்னேற்றம் அடைவர். பாவகிரக வலுப்பெற்றவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை சேர்த்துவைக்கத் தெரியாமல் இருப்பர். சொத்துகளை தனக் கும் செலவு செய்யாமல், பிறருக்கும் கொடுக்காமல் கஞ்சனாக வாழ்ந்து காலத் தைக் கழிப்பர்.
பன்னிரண்டு
பத்தாமதிபதி விரய ஸ்தானமான பன்னிரண்டாமிடத்தில் இருப்பது தொழிலில் அதிக விரயத்தைத் தரும். நஷ்டமும் கஷ்டமும் தொழிலில்- தொழிலால் நடக்கும். புத்திர தோஷமும், புத்திரர்களால் விரயமும் ஏற்படும். கவனமாக இல்லையென்றால் புத்திரர்களால் தொழில் கெடும். சொத்துகளை வீண்வழியில் அழித்துவிடுவர். போக விஷயங்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்வர். தொழிலில் நாட்டமிருக்காது. பாவகிரகமாகி கெட்டிருந்தால் விபரீத ராஜயோகத்தால் மறைமுகத் தொழிலால் லாபம் பெறுவர். உள்ளூரில் வேலை கிடைக்காமல் பரதேசம் சென்று- அதாவது வெளிநாடு சென்று பொருளீட்டவேண்டிய நிலை உருவாகும். வெளிநாட்டில் சென்றும்கூட நினைத்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையிலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறாமல் அவதிப்படுவர். தொழில்வழி தொல்லை இருந்துகொண்டே இருக்கும். நிலையான தொழில், வருமானம் பெறமுடியாது. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்றல், சட்டத்திற்குப் புறம்பான தொழிலில் ஈடுபடுதல் போன்றவையும் செய்வார்கள். கவனக்குறைவாக இருந்தால் அரசாங்க தண்டனை பெறுவர்.
பரிகாரம்
"காலம் முழுவதும் அடிமைத் தொழிலில் நான் அவதிப்பட வேண்டுமா? ஏன் நான் சொந்த தொழில் செய்யக்கூடாது' என பலருக்கு பலசமயம் தோன்றும். சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் சிலருக்குத் தோன்றவே தோன்றாது. சிலருக்கு சொந்தத் தொழில்செய்ய பொருளாதாரம் இல்லாமல் யோசித்துக்கொண்டே காலத்தைக் கடத்துவர். சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் முதலில் அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை யென்றால் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து உங்கள் ஜாதகப்படி பத்தாமிடம் வலுவாக சுபர் பார்வையுடன் இருந்தால், மற்ற கிரகநிலைகளை ஆராய்ந்து சொந்தத் தொழில் நமக்கு வருமா என்பதை அறிந்துகொண்டு இறங்கவேண்டும். முக்கியமாக தொழில்காரகன் சனி கோட்சாரப்படி நல்ல இடத்தில் உள்ளதா என அறிந்துகொண்டு ஈடுபட்டால் நஷ்டமின்றி, இஷ்டப் படி லாபம் பெறலாம். பத்தாமதிபதி தசை நன்றாக இருந்து தசை நடந்தால் தொழிலில் பெரும் வெற்றியை சந்திப்பர்.
தொழில் அதிபதி கிரகத்தைக் கண்டறிந்து அந்த கிரகத்தை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். நீசம், பாவகிரகத்தால் பாதிப்படைந் தால், அந்த கிரகத்தை சுபப்படுத்த, சுபகிரக வழிபாடு செய்துகொள்வது நன்மைதரும். கிரகத்தை வலுப்படுத்த அந்த கிரக அதிபதி தெய்வத்தை வணங்கிவருதல் நல்ல முன்னேற்றத் தைத் தரும். குலதெய்வ வழிபாடு தொழில் விருத்தி தரும்..
செல்: 96003 53748