சிவபெருமானை வழிபட்டால் நம் நோய்கள் குணமாகும். நம் வாழ்க்கை மகிழ்ச்சியோடு இருக்கக் காரணமானவர் சிவன். ஒருவருக்கு தாங்கமுடியாத அளவுக்குப் பிரச்சினைகள் உண்டாகலாம். அவருக்கு யாருமே உதவ முன்வராமல் இருக்கலாம். அவரைக் கைகழுவி விட்டு, எல்லாரும் அவரை விட்டு விலகிப்போயிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் இருக்கும்போது, அவர் சிவனை வழிபட்டால் உதவுவ தற்கு அவர் வருவார் என்பது பொதுவான நம்பிக்கை. ஒருவர் ஜாதகத்தில் லக்னா திபதி பலவீனமாக அல்லது அஸ்த மனமாக இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு தைரியம் இருக்காது. சுயமாக எதையும் செய்வதற்கு, பயம் இருக்கும். அதனால் மனநோய் உண்டாகும்.
அதன்விளைவாக வயிற்றில் நோய், தலைவலி உணடாகும்.
உணவு ஜீரணமாகாது. சரியாகத் தூக்கம் வராது. அத்தகை யவர்கள் தினமும் சிவாலயத்திற்குச் சென்று, அவருக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். அரிசி, சிவப்பு மலர் வைத்து, தீபமேற்றி வழிபட வேண்டும். இரவில் "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தைச் சொல்லி வந்தால் அனைத்துக் குறைகளும் அவரைவிட்டு நீங்கும்.
ஒரு ஜாதகத்தில் ரோக ஸ்தானாதிபதி வலுவாக இருந்து, அதை இன்னொரு பாவகிரகம் பார்த்தால், அவருக்கு மாரகாதிபதி தசை நடக்கும்போது பலவிதமான நோய்களும் வரும். குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட நோய், காலில் அடிபடுதல் ஆகியவற்றால் அவர் பாதிக்கப் படுவார். அவர் தினமும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களை வைத்துப் பூஜை செய்ய வேண்டும். மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறிவந்தால் நோய்களிலிருந்து அவர் விடுபடுவார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் 3, 6, 8, 12-ல் இருந்து சந்திர தசை நடந்தால், அவருக்கு வயிற்றில் நோய் உண்டாகும். ரத்தக் கொதிப்பு உண்டாகும். அதிகமாக சிந்திப்பார். அவர் தினமும் சிவாலயத்திற்குச் சென்று, கரும்புச் சாறாலும், நீரில் சர்க்கரை கலந்தும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
வெள்ளைநிற மலர் வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். சிவனின் விபூதியை நெற்றியிலும் தொப்புளிலும் பூசிக் கொண்டால் நோய்கள் அவரைவிட்டு நீங்கிவிடும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லா மலிருந்தால், அவருடைய வீட்டில் ஆக்னேய தோஷம் உண்டாகும். வீட்டில் நீர்த்தொட்டி தென்கிழக்கில் அல்லது தென்மேற்கில் பூமிக்கு அடியில் இருக்கும். அதனால் அவர் அடிக்கடி சிறுசிறு விபத்துக்களைச் சந்திப்பார். அவர் தினமும் சிவனின் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பால், நீர் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவனுக்கு நான்கு சொட்டு கடுகெண்ணெய் விடவேண்டும். தினமும் பயணிப்பவர்கள் சிவனின் லகு மகாமிருத்யஞ்ஜய மந்திரமான "ஓம் ஜும் ஷ' என்ற மந்திரத்தைக் கூற, நலம் உண்டாகும். ஒரு ஜாதகத்தில் சூரியன், சனி சரியில்லா மலிருந்தாலும், சனி, சூரியனைப் பார்த்தாலும், அந்த ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந் தாலும் அவருக்கு இதய நோய் வரும். அவர் தன் வீட்டில் சிவலிங்கத்தை வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அல்லது சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்துக்கு வில்வ அர்ச்சனை செய்து கடுகெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும். ஒரு தேங்காயை உடைக்கவேண்டும். முடியுமானால், வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ருத்ராபிஷேகம் செய்யலாம். அல்லது பார்த்திப சிவலிங்கம் (களிமண்ணால் செய்யப்பட்டது) வைத்துப் பூஜை செய்யலாம். மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லிவந்தால் இதயநோய் விலகிவிடும். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் இருந்தாலும், ஜாதகத்தில் சந்திரன் 8-ல் இருந்தாலும் அல்லது பிறக்கும் போது சந்திரன் பலவீனமாக இருந்தாலும், மாரகாதிபதி தசை நடந்தாலும் அந்தக் குழந்தைக்கு எட்டு வயது முடியும்வரை அடிக்கடி ஜுரம் வரும். பயம் உண்டாகும். குழந் தையின் பெற்றோர் சிவன் கோவிலுக்குச் சென்று, சிவனுக்கு நீர், பால், கடுகெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறவேண்டும். சிவப்புநிற நூலை ஒன்பது முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சைப் போடும்போதும் சிவனின் பெயரைக் கூறவேண்டும். அதை வீட்டிலிருக்கும் பெரியவரிடம் கொடுத்து குழந்தையின் கழுத்திலோ கையிலோ கட்டி விட்டால், குழந்தைக்கு இருந்த தொல்லைகள் விலகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய், சனி, ராகு அல்லது செவ்வாய், சூரியன், சுக்கிரன் 11 அல்லது 5 அல்லது 8-ல் இருந்தால், மாத விடாய் பிரச்சினை இருக்கும். சிலருக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். அதிலிருந்து விடுபடுவதற்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமை களில் சிவன் ஆலயத்திற்குச் சென்று, சிவப்புநிற மலர்களை வைத்து, கடுகெண் ணெய்யில் தீபமேற்றி, நிற்கும் நிலையிலேயே நான்குமுறை சுற்றி சிவனின் பெயரைக்கூறி வழிபடவேண்டும். விபூதியை நெற்றிலும், தொப் புளிலும் தடவினால், கர்ப்பப்பை பிரச்சினை சரியாகும். மாதவிடாய் ஒழுங்காக வரும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால் அல்லது ஏழரைச்சனி நடந்தால் அதிகமாக வேலைசெய்ய நேரும். தூக்கம் சரியாக வராது. கோபம் அதிகமாகும். சிலருக்கு மனநோய் உண்டாகும். அத்தகைய பெண் தினமும் காலையில் குளிக்கும்போது, தனது இடதுகை கட்டை விரலை சிவனாக பாவித்து அதற்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் தூக்கம் சரியாக வரும். மனநோய் குணமாகும்.
பிற தோஷங்களும் விடைபெறும்.
செல்: 98401 11534