சென்ற இதழ் தொடர்ச்சி...
பெரும்பான்மையான கர்மாக்கள் கோபத்தாலும் சாபத்தாலும் மட்டுமே விஸ்வரூபமெடுக்கின்றன. ஒருவரின் கோபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுமிடம் எட்டாமிடம் எனில், சாபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுவது பன்னிரண்டாமிடம். இந்த ஜாதகரின் மனக்குமுறலை கர்மா ரீதியாக ஆய்வுசெய்வோம்.
1. கிரகண தோஷம்
சூரியன், சந்திரன் மற்றும் ராகு இணைவு கிரகண தோஷம். பிரதமை திதியில் கிரகணம் முடிந்த சிலமணி நேரங்களில் பிறந்தவர். லக்னாதிபதி சனிக்கு கிரகண சம்பந்தமிருப்பதால், பிறந்தது முதல் பெற்றோருக்கும் ஜாதகருக்கும் மனதளவில் பிடிப்புத் தன்மை குறைந்தே இருக்கும். மேலும், சூரியன், சந்திரனுக்கு சனி, ராகு சம்பந்தமிருப்பதால் பெற்றோரின் அன்பைப் பெறுவது கடினமாகிவிட்டது.
2. சாபம்
ஒருவரின் ஜாதகத்தில் சாபத்தைப் பற்றிக் கூறுவது பன்னிரண்டாமிடம்.மகர லக்னத்திற்கு 12-ஆம் அதிபதியான குரு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில்- தந்தையைப் பற்றிக் கூறுமிடத்தில் அமர்ந்ததால், பெற்றோரின் சாபம் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
3. கர்மா
ஒருவரின் கோபம் மற்றும் சாபத்தால் பின்விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆய்வுசெய்வோம். மகர லக்னத்திற்கு பாக்கியாதிபதியான புதன் அஷ்டமாதிபதி சூரியனுடன் சம்பந்தம் பெறுவதாலும், லக்னாதிபதி மற்றும் கர்மாதிபதி சனி கிரகண தோஷத்தால் பாதிப்படைந்து, தன் வீட்டைத் தானே பார்ப்பதாலும் பெற்றோரின் சாபம் நிச்சயம் பாதிப்பைப் பெற்றுத் தரும். லக்னாதிபதிக்கு அஷ்டமாதிபதி, பாதகாதி பதி மற்றும் ராகு- கேதுக்கள் சம்பந்தமிருப்ப தால் சாபம் களமிறங்கி ஜாதகரை வதைக்கும். அவ்வகையில் லக்னாதிபதி சனி பாதக ஸ்தானத்தில் நின்று, அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் சம்பந்தமிருப்பதால், ஜாதகருக்கு பாதிப்பைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
4. பாதிப்பின் தன்மை
சாபத்தின் விளைவு எவ்விதமாக இருக்கும், அதற்குத் தீர்வு கிடைக்குமா என்பதற்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆய்வுசெய்வோம்.
ஐந்தாம் அதிபதி சுக்கிரன் பத்தில் ஆட்சி பலம்பெற்று ராகு சாரம் பெற்றதால், அழகு- ஆடம்பரமான ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில் அமைந்தது. ஐந்தா மிடத்தில் கேது நிற்கிறது. ஐந்தாமிடம் என்பது குழந்தை களைப் பற்றிக் கூறுமிடம். மேலும், சுக்கிரன் மனைவி யைப் பற்றிக் கூறும் கிரகம் என்பதால், பெற்றோரின் சாபம் திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள்மூலம் பாதிப்பைத் தருமென்று கூறப் பட்டது.
ஜாதகரின் முதல் மனைவி நோயால் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவிமூலம் ஒரு பெண் மற்றும் ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பெண்ணுக்கு 32 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. பையன் அரசியல், கட்சி என பொறுப்பில்லாமல் ஊர்சுற்றுகிறான் என்றார்.
ஐந்தாமிடத்தோடு சம்பந்தம் பெறும் ராகு- கேதுக்கள் குழந்தைப் பிறப்பைத் தடை செய்வதில்லை; ஆனால், வாரிசுகள்மூலம் மன உளைச்சல் உண்டு.
தீர்வு
சாபத்தின் தாக்கம் வலிமையாக இருந்த தால் சோழிப் பிரசன்னம் பார்த்து தீர்வு தரலா மென்று முடிவு செய்யப்பட்டது. இரண்டுமுறை பிரசன்னத்திற்கு நேரம் வாங்கி வரமுடியாத ஜாதகர், மூன்றாம்முறையாக தனது ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் பிரசன்னம் பார்க்க வந்தார். 30-10-2019 அன்று காலை 11.20 மணிக்குப் பார்க் கப்பட்ட பிரசன்னத்தில் சோழி விருச்சிகத்தில் நின்றது.
விருச்சிக லக்னப் பிரசன்னப் பலன்கள்
லக்னாதிபதி செவ்வாய் பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் நிற்பது சுபமான பலன். செவ்வா யின் நான்காம் பார்வை சனி மற்றும் கேதுவுக்கு இருப்பதும், சனியின் பத்தாம் பார்வை சனிக்கு இருப்பதும் சிறப்பான பலனல்ல. லக்னாதி பதிக்கு ராகு- கேதுக்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது. லக்னத்தில் நின்ற கிரகங்கள், சுக்கிரன், புதன், சந்திரன், குரு.
விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி சந்திரன், அஷ்டமாதிபதி புதன், சாபத்தை உணர்த்தும் பன்னிரண்டாம் அதிபதி சுக்கிரன் ஆகியோர் லக்னத்தில் இருந்ததும், சாபம் ஜாதகரைத் தாக்குகிறது என்பதை பிரசன்னத்தின்மூலம் உணரமுடிந்தது. சாபம் பலிதமாகுமா? சாப விமோசனம் உண்டா போன்றவற்றை ஆய்வுசெய்வோம்.
ஐந்து மற்றும் ஒன்பதாமிடத்திற்கு குரு பார்வை இருப்பதால் சாபத்தின் வலிமையைக் குறைக்கமுடியும். லக்னாதிபதி செவ்வாய்க்கு அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதிபதி சம்பந்தமில்லாத காரணத்தால் சாப நிவர்த்தி செய்யமுடியுமென்று கூறப்பட்டது. மேலும், பத்தாம் அதிபதி செவ்வாய் பன்னிரண்டில் நீசம்பெற்றிருப்பதால் தொழிலில் சிறிய பாதிப்பு ஏற்படும்; கவனம் தேவை என்று கூறப்பட்டது. ஐந்தாமிடத்திற்கு குரு பார்வை இருந்ததால், மகளுக்கு ஐந்து மாதத்திற்குள் திருமணம் முடிந்துவிடுமென்றும்; தொடர்ந்து 48 நாட்கள் 108 பேருக்கு உணவு தானம், 108 அந்தணர்களுக்கு வஸ்திர தானம் வழங்கினால், படிப்படியாக மாற்றம் கிடைக்குமென்றும் கூறப்பட்டது.
தினமும் 108 பேரை எங்கேபோய் தேடுவது? 48 நாள் இதே வேலையாக இருந்தால் தொழிலை எப்படி கவனிப்பது போன்ற குழப்பத்தில் பரிகாரம் செய்யவில்லை. 2021, பிப்ரவரி மாதத்தில் மகளுக்குத் திருமணம் முடிந்ததில் சிறிது தைரியம் வந்தது. கொரோனா வால் தொழிலில் ஏற்ற- இறக்கத்தை சந்தித்தார். கொரோனா காலத்தை முறையாகப் பயன்படுத்திப் பரிகாரத்தை செய்துமுடித்தார்.
இந்தக் கட்டுரையைப் பொருத்தவரை தவறு பெற்றோர்மீதுள்ளதா? மகன்மீதுள்ளதா என்பதை உளவியல்ரீதியாக யோசித்தால், வருடத்திற்கு ஓரிருமுறை மட்டும் பார்க்கும் பிள்ளைகள்மேல் பெற்றோருக்கு மிகைப் படுத்தலான கூடுதல் கவனம் இருக்கத்தான் செய்யும். இதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் சில பெற்றோர் கள் ஒரு பிள்ளைமீது மட்டும் தனிக்கவனம் செலுத்தத்தான் செய்கிறார்கள். இந்த மகன் நன்றாக இருக்கவேண்டும், அந்த மகன் நன்றாக இருக்கக்கூடாதென சபிப்பதும் பல இடங் களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இன்னும் ஒருபடி மேலேபோய், சில பெற்றோர்கள் சொத்துப் பங்கீட்டில் பாகுபாடு காட்டுகிறார்கள். தனக்குப் பிடித்த பிள்ளைக்கு அதிக பங்கு கொடுத்து பிள்ளையைப் பாதுகாப்பதாக நினைக்கிறார் கள். உண்மையில் மற்ற பிள்ளைகளின் மனத்தாங்கல்தான், காப்பாற்ற நினைக்கும் பிள்ளையின் ஜாதகத்தில் தோஷமாகப் பதிவாகும். எது எப்படியிருந்தாலும், பெற்ற பிள்ளைகளை சபிப்பது நியாயமா? பெற்றோ ரின் சாபம் வாரிசுகளை வதைக்கும். தனது மரபணுவில் உருவானதே வாரிசுகள் என்பதை சில பெற்றோர்கள் மறந்து, பிள்ளைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடுகின்றனர். எத்தனை வயதானாலும், பெற்றோரின் அன்பை எதிர்பார்ப்பது மனித இயல்புதானே? வயதுக் கும் பாசத்துக்கும் சம்பந்தமில்லை.
ஒருவருக்கொருவர் சாபம் கொடுக்கும் போது சாபத்தை நிவர்த்திசெய்ய மறுபிறவி எடுக்கநேரும். ருண பந்தம் தொடரும். ஆன்மாவில் வினைப்பதிவு மிகுதியாகி பிறவா நிலை அடையமுடியாது. அதுமட்டுமா? தற்போதைய கலிகாலத்தில் பெற்றோரைப் பராமரிக்க பிள்ளைகள் முன்வருவதே பெரிய விஷயம். எனவே, பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது சாலச்சிறந்தது.
பொதுவாக, யாராக இருந்தாலும் நியாயமற்ற நிகழ்வுக்கு சாபம் கொடுக்கும் போது, எய்தவரையே சாபம் வந்தடையும். நியாயமான நிகழ்வுக்கு சாபம் கொடுக்கும் போது பாதிக்கப்பட்டவருக்கு சாபநிவர்த்தி கிடைப்பது எளிதல்ல. வாழ்நாள் முழுவதும், இயன்றவரை யாரையும் புண்படுத்தாமல் வாழ்ந்தால் ஆன்மாவின் பயணம் புனிதமாக இருக்கும். தவறு செய்தவர்களை சாபம் கொடுத்துப் பழிதீர்க்கவேண்டிய அவசிய மில்லை. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பை பிரபஞ்சத்திடம் ஒப்படைத்துவிடுங்கள். தவறு செய்தவர் வருந்தும்வரை பிரபஞ்சம் பாரபட்சமின்றி வறுத்தியெடுக்கும். .
செல்: 98652 20406