எதிரியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கும் பஞ்சபட்சி ரகசியங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/panchapatti-secrets-defeat-enemy-and-claim-victory

சென்ற இதழ் தொடர்ச்சி...

வளர்பிறையில் மே-ருந்து கீழாக வரிசையாகவரும் அதே பட்சிகள் தேய் பிறையில் கீழிருந்து மேலாக அதே வரிசையில் வரும். உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை, தேய்பிறை இரண்டிற்கும் ஒரே பட்சி- காகம்.

தொழில் அந்தரம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு தசை யிலும் அனைத்து கிரகங்களின் புக்திகளும் வருவதுபோல, இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தி லும் பட்சிகள் ஒவ்வொரு தொழி-லும் உப தொழில்களைச் செய்கின்றன. இதற்கும் வளர்பிறை, தேய்பிறை என்ற வேறுபாடுண்டு. உதாரணமாக ஒரு பட்சி ஊண் தொழில் செய்யும் போது ஊண், நடை, அரசு, துயில், சாவு என்ற சூட்சும உப தொழில் செய்யும். ஒரு பட்சி அரசு தொழில் செய்யும்போது அரசு, துயில், சாவு, ஊண், நடை என்ற சூட்சும உபதொழில் செய்யும்.

d

அதிகாரப் பட்சி

ஒவ்வொரு பகல் மற்றும் இரவுக்கு ஒரு அதிகாரப் பட்சி உண்டு. அந்த நாளின்

சென்ற இதழ் தொடர்ச்சி...

வளர்பிறையில் மே-ருந்து கீழாக வரிசையாகவரும் அதே பட்சிகள் தேய் பிறையில் கீழிருந்து மேலாக அதே வரிசையில் வரும். உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை, தேய்பிறை இரண்டிற்கும் ஒரே பட்சி- காகம்.

தொழில் அந்தரம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு தசை யிலும் அனைத்து கிரகங்களின் புக்திகளும் வருவதுபோல, இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தி லும் பட்சிகள் ஒவ்வொரு தொழி-லும் உப தொழில்களைச் செய்கின்றன. இதற்கும் வளர்பிறை, தேய்பிறை என்ற வேறுபாடுண்டு. உதாரணமாக ஒரு பட்சி ஊண் தொழில் செய்யும் போது ஊண், நடை, அரசு, துயில், சாவு என்ற சூட்சும உப தொழில் செய்யும். ஒரு பட்சி அரசு தொழில் செய்யும்போது அரசு, துயில், சாவு, ஊண், நடை என்ற சூட்சும உபதொழில் செய்யும்.

d

அதிகாரப் பட்சி

ஒவ்வொரு பகல் மற்றும் இரவுக்கு ஒரு அதிகாரப் பட்சி உண்டு. அந்த நாளின் பகல் மற்றும் இரவில் அந்த பட்சியின் ஆட்சியே நடக்கும். இது வளர்பிறை மற்றும் தேய்பிறைக்கு மாறுபடும். அதாவது ஒவ்வொரு பகலிலும் முதல் சாமத்தில் ஊண் தொழிலை எந்தப் பட்சி செய்கிறதோ, அதுவே அந்தநாளின் பகல் அதிகாரப் பட்சியாகும். அதேபோல் ஒவ்வொரு இரவிலும் முதல் சாமத்தில் ஊண் தொழிலை எந்தப் பட்சி செய்கிறதோ, அதுவே அந்தநாளின் இரவு அதிகாரப் பட்சியாகும்.

வளர்பிறை அதிகாரப் பட்சி

பகல்

வல்லூறு- ஞாயிறு, செவ்வாய்.

ஆந்தை- புதன், திங்கள்.

காகம்- வியாழன்.

கோழி- வெள்ளி.

மயில்- சனி.

இரவு

வல்லூறு- வெள்ளி.

ஆந்தை- ஞாயிறு.

காகம்- ஞாயிறு, செவ்வாய்.

கோழி- திங்கள், புதன்.

மயில்- வியாழன்.

தேய்பிறை அதிகாரப் பட்சி

பகல்

வல்லூறு- வெள்ளி.

ஆந்தை- வியாழன்.

காகம்- புதன்.

கோழி- ஞாயிறு, செவ்வாய்.

மயில்- திங்கள், சனி.

இரவு

வல்லூறு- ஞாயிறு, செவ்வாய்.

ஆந்தை- புதன்.

காகம்- வியாழன்.

கோழி- திங்கள், சனி.

மயில்- வெள்ளி.

படுபட்சி

வாரத்தின் சில குறிப்பிட்ட கிழமைகளில் ஒரு குறிப்பிட்ட பட்சி முற்றிலும் செயலி-ழந்து போகும். அது பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள். இவை படுபட்சி நாட்கள் எனப் படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புதுமுயற்சி, சுபகாரியம், பயணம், மிகவும் ஆபத்தான ஆபரேஷன், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அதிகாரப் பட்சி பகலுக்கும் இரவுக்கும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் படுபட்சியைப் பொருத்தவரையில் ஒருநாள் முழுவதும் பகலுக்கும் இரவுக்கும் ஒரே பட்சிதான்.

ra

ra

வளர்பிறை படுபட்சி நாட்கள்

வல்லூறு- வியாழன், சனி.

ஆந்தை- ஞாயிறு, வெள்ளி.

காகம்- திங்கள்.

கோழி- செவ்வாய்.

மயில்- புதன்.

தேய்பிறை படுபட்சி நாட்கள்

வல்லூறு- செவ்வாய்.

ஆந்தை- திங்கள்.

காகம்- ஞாயிறு.

கோழி- வியாழன், சனி.

மயில்- புதன், வெள்ளி.

நட்பு, பகை பட்சிகள் (சத்ரு, மித்ரு)

கிரகங்களைப்போலவே பட்சிகளுக்கும் சத்ரு, மித்ரு பட்சிகள் இருக்கின்றன. நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டுசேர்வது நன்மை பயக்கும். பகையுள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.

ஒவ்வொரு பட்சிக்கும் பிற நான்கு பட்சிகளில் இரு பட்சிகள் நட்பு பட்சிகளாகவும், இரு பட்சிகள் பகை பட்சிகளாகவும் அமையும். வளர் பிறை, தேய்பிறைக்கு இதில் மாற்றம் ஏற்படும்.

வல்லூறு- வளர்பிறை

நட்பு: மயில், ஆந்தை.

பகை: காகம், கோழி.

வல்லூறு- தேய்பிறை

நட்பு: மயில், காகம்.

பகை: ஆந்தை, கோழி.

ஆந்தை- வளர்பிறை

நட்பு: வல்லூறு, காகம்.

பகை: மயில், கோழி.

ஆந்தை- தேய்பிறை

நட்பு: கோழி, காகம்.

பகை: வல்லூறு, மயில்.

காகம்- வளர்பிறை

நட்பு: ஆந்தை, கோழி.

பகை: வல்லூறு, மயில்.

காகம்- தேய்பிறை

நட்பு: ஆந்தை, வல்லூறு.

பகை: மயில், கோழி.

கோழி- வளர்பிறை

நட்பு: மயில், ஆந்தை.

பகை: காகம், வல்லூறு.

கோழி- தேய்பிறை

நட்பு: மயில், ஆந்தை.

பகை: காகம், வல்லூறு.

மயில்- வளர்பிறை

நட்பு: வல்லூறு, கோழி.

பகை: ஆந்தை, காகம்.

மயில்- தேய்பிறை

நட்பு: வல்லூறு, கோழி.

பகை: ஆந்தை, காகம்.

பலன்காணும் முறை

ஒருவர் தன் தொழிலி-ல் சிறந்து விளங்கவும், பகைவரை வெல்லவும், நீதிமன்ற வழக்கு விஷயங் களில் வெற்றிபெறவும், கடன் கொடுக்கவும், கடன் வாங்கவும், ஆபரேஷன் செய்யவும், புதிய உத்தியோகத்தில் சேரவும், தூர தேசங்களுக்குப் பயணம் செய்வும், முக்கிய நிகழ்வுகளுக்கு முகூர்த்தம் குறிக்கவும், வீடு, மனை வாங்குதல், வீடு கட்டுதல், நகை வாங்குதல், துணி வாங்குதல், தொழில் துவங்குதல், புதிய ஒப்பந்தங்கள் செய்தல், நோய்க்கு சிகிச்சை துவங்குதல், வேலைநிமித்தமாக பெரியவர்களை- அதிகாரிகளை சந்தித்தல், போட்டிகளில் கலந்துகொள்ளுதல், தேர்வு எழுதுதல், எதிரிகளோடு மோதுதல் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் பஞ்சபட்சி முறையில் நேரம் கணித்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala140521
இதையும் படியுங்கள்
Subscribe