சென்ற இதழ் தொடர்ச்சி...

வெற்றி நேரத்தை நட்சத்திரப் பட்சியின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும். நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயர்ப் பட்சியின் அடிப்படையில் வெற்றி நேரத்தைக் கணக்கிடலாம். அதன்படி கணக்கிடும்போது சில அடிப்படை விதிகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அன்றைய தினத்தின் சூரிய உதயம் எப்போது என பஞ்சாங்கத்திலிருந்து அறிந்துகொண்டு, அன்றைய நாளில் அவரவரின் சாதகமான நட்சத்திரப் பட்சியின் நேரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

எந்த முக்கியமான செயலாக இருந்தாலும் அதிகாரப் பட்சி நாளில் செய்தால் வெற்றி நிச்சயம். செயலாற்றுப் போகும் நாள், நட்சத்திரப் பட்சியின் அதிகாரப் பட்சி நாளாக இருக்கும்பட்சத்தில், 50 சதவிகித வெற்றி அதிலேயே உறுதிசெய்யப்பட்டு விடுகிறது. பட்சியின் தொழில்களைப் பொருத்த வரையில், பட்சி அரசுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் 100 சதவிகிதம் வெற்றிபெறும். அரசின் உபதொழிலில் அரசு நேரம் மிகமிகச் சிறப்பு.

Advertisment

நட்சத்திரப் பட்சியின் அதிகாரப் பட்சி நாளில், அரசு தொழில் நேரத்தில் ஈடுபடும் எந்த முயற்சியும் நூறு சதவிகித வெற்றிபெறும். வெற்றி நேரங்களில் முதன்மையான மிகமிக முக்கியமான நேரமாகும்.

அதிகாரப் பட்சி சாதகமாக இல்லாத பிற கிழமைகளில், அரசுத் தொழில் நடைபெறும் வேளையில் ஈடுபடும் காரியங்கள் நிச்சயம் வெற்றிபெறும்.

அரசு நேரம் சாத்தியப்படாத பட்சத்தில், நட்சத்திரப் பட்சி ஊண் தொழிலில் ஈடுபட்டி ருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதிகாரப் பட்சி நாளில் ஊண் தொழில் நேரத்தில் ஈடுபடும் செயல்களும் அனேக மாக வெற்றிபெறும் இரண்டாவது சிறந்த வெற்றி நேரமாகும்.

Advertisment

அதிகாரப் பட்சி நாளில், நடை தொழில் நடைபெறும் நேரம் மூன்றாவது சிறந்த நேரமாகும். சற்று மிகுதியான அலைச்சல் இருக்கும். ஆனால் காரியம் அனேகமாக வெற்றிபெறும்.

நட்சத்திரப் பட்சி நடை, துயில் செய்யும் நேரத்தைத் தேர்ந்தெடுத்தால் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறுமென்று கூறமுடியாது. அது மிக மந்தகதியிலேயே நடக்கும். பல தடங்கல்கள் உருவாகும். வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

அதிகாரப் பட்சி நாளாக இருந்தாலும் துயில், சாவு நேரங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அன்றைய நாள் அதிகார மற்றும் நட்சத்திரப் பட்சியின் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது. படுபட்சி நாளில் எந்த ஒரு முக்கியமான வேலையிலும் ஈடுபடவேண்டாம். படுபட்சி நாளில் அரசு தொழிலில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்கூட தோல்வியிலேயே முடியும்.

தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்ற பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்தை ஜபிக்கவேண்டும். பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ts

ந- வல்லூறு; ம- ஆந்தை; சி- காகம்; வ- கோழி; ய- மயில்.

முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற...

ஒவ்வொரு பட்சிக்கும் சுயபலம் உண்டு. பொதுவாக காகம் 100 சதவிகிதம்; வல்லூறு 75 சதவிகிதம்; ஆந்தை 50 சதவிகிதம்; கோழி 25 சதவிகிதம்; மயில் 12.5 சதவிகிதம் பலமுடையவை.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது மயிலைப் பட்சியாகக் கொண்ட ஒருவர் காகத்தைப் பட்சியாகக் கொண்டவரை நிச்சயமாக வெற்றிகொள்ளமுடியாது. கோழியை நட்சத்திரப் பட்சியாகக்கொண்ட ஒருவரால் ஆந்தையை நட்சத்திரப் பட்சி யாகக்கொண்ட ஒருவரை வெல்லமுடியாது.ஆந்தை,கோழி இரண்டுமே வல்லூறிடம் தோற்றுப்போகும்.இவை போதுமான விதிகள்.

இந்த அடிப்படையில் பார்த்தால் காகத்தை நட்சத்திரப் பட்சியாகக்கொண்ட ஒருவரை பிற நட்சத்திரக்காரர்கள் எக்காலத்திலும் வெற்றிகொள்ளமுடியாது. பஞ்சபட்சி சாஸ்திரத்தின் நுட்பங்களை யும் சூட்சுமங்களையும் நன்கு தெரிந்து கொண்டால், எந்த பட்சியும் எந்த பட்சியை யும் வெற்றிக்கொள்ளமுடியும். நேரம் பார்த்து மோதினால் வெற்றி நிச்சயம். உதாரணமாக, பலவீனமானவர்களின் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படுபட்சியாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

பட்சிகளுக்கும் சுயபலம் இருப்பதுபோன்றே ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி பலங்கள் உண்டு. இவை இரண்டையும் கூட்டி நிகர பலன்களைக் கணக்கிட்டு மோதவேண்டும். ஆனால் போட்டியிடப்போகும் எதிராளியின் பட்சி விவரங்கள் தெரிந்தி ருப்பது மிக அவசியம்.

பஞ்சபட்சி சாஸ்திரம் மூலமாக நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஊண், நடை, அரசு போன்ற விஷயங்களையெல்லாம் நாம் படிக்கலாம்; அறிந்து கொள்ளலாம். ஆனால் பயன்பாட்டில் பலன் தருகிறதா என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஒருவருக்கு பஞ்சபட்சி வித்தை பலிதமாக வேண்டுமென்றால் தமிழ்க்கடவுளாம் முருகனின் அருள் வேண்டும்.

முருகப்பெருமானுடைய சண்முக சக்கரத்தை வைத்து, முருகனின் மூல மந்திரத்தை 1,008 முறை ஜபம்செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பஞ்சபட்சியில் ஏற்படக்கூடிய பட்சிதோஷம் விலகி முழுமையான பலன் கிடைக்கும். இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்திற்கு சண்முக சடாக்ஷர சக்கரம் என்ற ஒரு எந்திரம் உள்ளது. இந்த சடாக்ஷர சக்ரத்தைப் பார்ப்ப தென்பதே மிகவும் புண்ணியம்.

நட்சத்திர பஞ்சபட்சி அதிகாரம், ஆட்சி செலுத்தக்கூடிய- அரசின் அரசு நேரத்தில் அந்த சக்கரத்தை வெள்ளி, தங்கம் அல்லது செப்புத் தகட்டில் வரைந்து, முருகனின் மூலமந்திரத்தை 1008 உரு ஜெபித்து வீட்டில் வைத்து வழிபட, அனைத்து காரியங்களும் சித்தியாகும்.

பஞ்சபட்சி சாஸ்திரமென்பது மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதமாகும். ஜோதிடத்தில் நவகிரகங்கள் (9), பன்னிரு ராசிகள் (12), இருபத்தேழு நட்சத்திரங்கள் (27) என மொத்தம்- 48. இவையனைத்தையும் ஐந்து பட்சிகளுக்குள் (பறவை கள்) அடக்குவதே இதன் சூட்சும ரகசியமாகும்.

மேலும், நவகிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப் படுத்தும் வல்லமை இக்கலைக்குண்டு. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நேரம், லக்னம் போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது. பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்த காரியம் தோல்வியில் முடியாது.

பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி செய்த செயல் தோல்வியில் முடிந்தது- பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி செய்த செயல் கவலையைத் தந்தது- பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி செய்த செயல் இழப்புகளைத் தந்தது என்று யாராவது சொல்வார்களேயானால், அவர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்திருக்கவில்லை என்று பொருள்.

பஞ்சபட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து, சரியான காலத்தில், சரியான உபகரணங்களைக் கொண்டு, சரியான முறையில் பயன்படுத்தத் தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே பஞ்சபட்சி சாஸ்திரப் பலன் தவறாகுமே ஒழிய, முறைப்படி ஒழுங்காக பஞ்சபட்சி சாஸ்திரம் பயின்று பயன்படுத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

பிரபஞ்ச விதிகள் நசுக்கினா லும், கர்மவினையின் பாதிப்புகள் அலைக்கழித்தாலும், அனைத்தையும் களைந்து, இன்பத்தைத் தந்து வெற்றி என்னும் எட்டாக்கனியை நாம் சுவைக்கக் கொடுக்கக்கூடிய ஒரு சாஸ்திரம் உலகத்தில் உண்டென்றால் அது பஞ்சபட்சி சாஸ்திரம் மட்டும்தான்.

'பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே' என்பதால், இந்த சாஸ்திரம் தெரிந்தவரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும்.

அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டாமென மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரைகுறையாகப் புரிந்துகொண்டு சோதனை செய்து தனக் குத்தானே பிரச்சினையைக் தேடிக்கொள்ளக் கூடாது.

பஞ்சபட்சிக் கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி, வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவரை மிகவும் உச்சநிலையில் உயர்த்தி, பணம், பதவி, புகழ், ஆகியவற்றை எளிதில் அடையச்செய்யமுடியும்.

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற விருப்பம் அனைவருக்குமே உள்ளது. ஆனால் பலருக்கு வெற்றியென்பது வாழ்நாள் முழுவதும் எட்டாக்கனியாகவே உள்ளது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நேரமறிந்து செயலாற்றினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். வெற்றிதரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி நல்ல காரியங்களில் வெற்றிமேல் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்.

செல்: 98652 20406