எதிரியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கும் பஞ்சபட்சி ரகசியங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/panchapatchi-secrets-defeat-enemy-and-claim-victory-prasanna-astrologer-i

ஜோதிடமென்பது ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் நிலவும் கிரகங்களின் நிலை கொண்டும், கோட்சாரத்தில் அந்த கிரகங்கள் இருக்கும் நிலையறிந்தும் ஒருவருக்கு ஏற்படக் கூடிய சாதக- பாதகங்களைக் கூறும் ஒரு கலையாகும். இதன்மூலம் ஜாதகருக்கு ஏதேனும் தோஷம் மற்றும் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் சரிசெய்துகொள்ள ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறுவிதமான உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அதுபோல விதியை மதியால் வெல்லும் சூட்சும முறையான பஞ்சபட்சி சாஸ்திரம் மானிடர்களுக்கு சித்தர்கள் வழங்கிய அரிய கலை.

மனிதர்கள் ஒவ்வொரு நாளும் அவரவர் விதிப்படி பல்வேறுவிதமான ஏற்ற- இறக்கங் கள் நிறைந்த சம்பவங்களை சந்திக்கிறார்கள்.

மகிழ்ச்சிகரமான சம்பவங்களால் ஆனந்தப் படும் மனம், துக்ககரமான சம்பவங்களை ஏற்காது. இது மனித இயல்பு. அதேபோல் மகிழ்சியான சம்பவங்களை உடனே மறக்கும் மனது துக்கத்தை வெகுநாட்களுக்கு அசை போட்டு ஆழ்மனதில் படியவைத்து விடும்.

அதேபோல் காலை எழுந்ததுமுதல் இரவுவரை தொழில், வேலை, உடல்நலக்குறைவு, வம்பு, வழக்கு என்று பல்வேறுவிதமான பிரச்சினைகளை சந்திக்கவேண்டியுள்ளது. இவை யனைத்திலும் சாதகமும் பாதகமும் நிறைந்தே இருக்கும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மனிதர்களைக் காக்க உதவுவது பஞ்சபட்சி. பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய புராணக் கதை முருகன் குமரப் பருவம் அடைந்தவு டன், சிவபெருமான் முருகனின் அவதார நோக்கத்தைக் கூறி, சூரபத்மனை அழித்து மக்களையும் தேவர்களையும் காக்க கட்டளையிட்டார். பிறகு முருகனுக்குத் துணையாகவீரபாகு தலைமையிலான படைகளை யெல்லாம் உருவாக்கித் தந்தார்.

அன்னை பராசக்தி முருகப் பெருமான் சூரனை வதம்செய்வதற்காக தன்னுடைய சக்திகளையெல்லாம் ஒன்றுதிரட்டி வேலாயுதத்தை உருவாக்கித் தந்தார். சிவபெருமான் போரின் நுணுக்கங்களை முருகனுக்கு உபதேசிக்கும் போது, ஜோதிட சாஸ்திரப்படி நேரம் காலம் பார்த்து போர்செய்யக்கூடிய தந்திரத் தையும், நவகிரகங்களின் இயக்கத் தைக் கட்டுப்படுத்தக்கூடிய பஞ்சபூத ரகசியம் என்னும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை யும் முருகனுக்கு உபதேசித்தார்.

தனக்கு சாதகமான நல்ல நேரத்தில் எத்தகைய செயல்கள் செய்தாலும் அவரை எளிதாக யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அந்த சரியான காலத் தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினால் எவ்வளவு பலசா-யான எதிரியாக இருந்தாலும், சக்திகள் பல பெற்ற எதிரி யாக இருந்தாலும் வீழ்த்தி வெற்றிபெற்று விடலாம். இந்த நேரங்களின் சூட்சும ரகிசயங்களை விரிவாக உரைப்பதுதான் பஞ்சபட்சி சாஸ்திரம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தைதான் சிவபெருமான் முருகனுக்கு உபதேசித்தார். ஆக, பஞ்சபட்சி சாஸ்திரம் முதன் முதலாக சிவபெருமானால் முரு கனுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

முருகன் பிறந்தது வைகாசி மாத

முருகன் பிறந்தது வைகாசி மாத விசாக நட்சத்திரம், பௌர்ணமி திதி. அவருடைய நட்சத்திரப் பட்சி காகம். நெருப்புத் தத்துவம். நெருப்புத் தத்துவமென்பது அழிக்கக்கூடியது. அதாவது சிவனுடைய நெற்றிக்கண் எனும் நெருப்புத் தத்துவத்தில் பிறந்ததால்தான் முருகப்பெருமான் அசுரர்களை வதம்செய்யும் சக்தி பெற்றார். பஞ்சபட்சிகளின் அரசன் காகம்.

காகம் என்ற பட்சியின் அரசு நேரத்தில் போருக்குச் சென்றார். முதல் ஐந்து நாட்கள் போரில் சூரபத்மனின் சேனைகளை அழித்து, சிங்கமுகன், தாரகாசுரனைக் கொன்றார். 6-ஆம் நாள் போரில் சூரபத்மன் முருகனிடம் போர்புரிய முடியாமல் திணறினான். முருகனுக்கு அஞசி மரமாக உருமாறினான். முருகன் தன்னு டைய கூர்மையான வேலாயுதத்தால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்தார். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும் மறுபாதி சேவலாகவும் (கோழி) மாறியது. காகம் என்ற பட்சியின் பகை பட்சியான மயிலைத் தனது வாகனமாக்கிக் கொண்டார். நட்பு பட்சியான சேவலைத் தனது கொடியாக வைத்துக்கொண்டார். பஞ்சபட்சியின் மகத்துவத்தை உணர்ந்த முருகப்பெருமான் உலகநன்மை கருதி 18 சித்தர்களுக்கு அதை உபதேசம் செய்தார். அந்த சித்தர்கள்மூலமாக பஞ்சபட்சிக் கலை மனிதகுலத்திற்குக் கிடைத்தது.

பஞ்சபூதமும் பஞ்சபட்சியும்

"அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது' என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்ச மானது பஞ்சபூதங்களாலானது. அதுபோல் மனித உடலானது பஞ்சபூதங்களாலானது. ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோகாரகன் என்று பெயர். மனித உட-லும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் திற்குத் தகுந்தாற்போல் அமைந்துள்ளது. உடலை இயக்குவது உயிர்காந்த ஆற்றலாகும். அந்த உயிர்காந்த ஆற்றலானது கோட்சார சந்திரனின் சுழற்சிக்கேற்ப சில நேரங்களில் வ-மையடைந்தும் சில நேரங்களில் வலுவிழந்தும்போகும்.

உட-ல் உயிர்காந்த ஆற்றல் வ-மையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உடல்வ-மை, மனவ-மை கூடும். உட-ல் உயிர்காந்த ஆற்றல் வலிமை யிழக்கும்போது காரியத் தடைகள் ஏற்படும்.

மனவலிமை குறையும். உட-ல் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் கோட்சார சந்திரனின் இயக்கத்தால் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது.

ஒருவரின் மன நிலைகளில், உணர்வு நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களே காரணமாக உள்ளன. ஆக, உடலின் இயக்கங்கள், தோஷங்கள், நோய்கள், மனநிலை மாற்றங்கள் என அனைத்துமே பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. சுருக்க மாகக் கூறுவதனால் மனிதர்களின் வாழ்க்கை, பிரபஞ்சத் தின் இயக்கமென அனைத்துமே பஞ்ச பூதங்களோடு இணைக் கப் பட்டுள்ளன.

அந்த கால சுழற்சிக் கேற்ப, பிரபஞ்ச சக்தி யோடு இணைந்து செயல்பட்டால் வாழ்க் கையில் எப்பொழுதும் வெற்றிநடை போடலாம் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு பஞ்சபட்சி சாஸ்திரம் உருவாக்கப் பட்டது.

"பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள். "பட்சி' என்றால் பறவை என்று பொருள். "சாஸ்திரம்' என்றால் ஞானிகள், சித்தர்களால் எழுதப்பட்டவை என்று பொருள்.

பஞ்சபட்சிகள் என்பவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்னும் ஐந்து பட்சிகளுடன் ஒப்பிடுகி றோம்.

வல்லூறு (நிலம்)

வானத்தி-ருந்து நிலத்தைத் துல்-யமாகப் பார்க்கும் தன்மைகொண்டதால் வல்லூறு நிலத் தத்துவப் பட்சியாகிறது.

வல்லுறை நட்சத்திரப் பட்சியாகக் கொண்டவர்கள் புத்திக்கூர்மை மிகுந்தவர்கள். பிடிவாதம், விஷமத்தனம் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஆழமான கொள்கைப் பிடிப்புகளோடும் நிதானத் தோடும் வாழ்க்கையை எதிர்கொள்வதால் பிறர் தொடமுடியாத உச்சத்தைக்கூட இவர்களால் தொடமுடியும்; சாதனை புரியமுடியும். நினைத்ததை நினைத்தபடியே நடத்திமுடிப்பார்கள்.

ஆந்தை (நீர்)

சந்திரன் நீர்த்தன்மை கொண்ட கிரகம். சந்திரனுக்கு இரவில் பலம் அதிகம். இரவு நேரத்திலும் பார்வை துல்-யமாக இருக்கக்கூடிய ஒரு பறவை ஆந்தை. எனவே இது நீர் தத்துவப் பட்சி.

சுறுசுறுப்பு, புத்தி சா-த்தனம், தன்னம் பிக்கை, தைரியம் மிகுந்த வர்கள். முரட்டுத்தனமும் முன்கோபமும் இவர் களிடம் காணப்படும். தற்பெருமை மிகுந்த வர்கள். தோல்விகளைக்கண்டு மனம் தளர மாட்டார்கள். எந்த பிரச்சினையையும் எதிர் கொண்டு சமயோசிதமான புத்தியால் வெற்றியை சுவைப்பார்கள். கடுமையான உழைப்பாளிகள். வித்தியாசமான சிந்தனை, செயல்பாடுகள் அதிகம் நிறைந்தவர்கள். பகல் கனவைக்கூட நனவாக்கும் புத்திக்கூர்மை உண்டு. சமுதாயத்திற்கும் பிறருக்கும் உதவும் குணம் அதிகமாக இருக்கும்.

காகம் (நெருப்பு)

அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டக்கூடிய சனி பகவானின் வாகனம் காகம். இது நெருப்புத் தத்துவப் பட்சியாகும்.

பஞ்சபட்சிகளிலேயே மிகவும் வ-மை வாய்ந்த பட்சி காகமாகும். உடலாலும் உள்ளத்தாலும் மிக வ-மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் மனம் கலங்க மாட்டார்கள். தங்கள் மனவுறுதியால் பல சாதனைகளைச் செய்வார்கள். ஒரு ஆசையை நிறைவேற்றிவிட்டால் உடனே மனதில் வேறு ஆசை முளைக்கும். மிகவும் நாணயமானவர்கள். அனைவரது கவனத் தையும் எளிதில் ஈர்ப்பார்கள். எந்த கூட்டத்திலும் இவர்களுக்கு மரியாதை இருக்கும். நியாயம், தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சொந்த விருப்பு- வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தராதவர்கள். எதிலும் நடுநிலையோடு நடப்பார்கள்.

கோழி (காற்று)

அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டி ருக்கும்போது அவர்கள் விழிக்க வேண்டும் என்பதற்காக கூவும் சேவல் காற்று தத்துவப் பட்சி.

சுயநலம் மிக்கவர் கள். பிறரைப்பற்றி அதிகம் கவலைப் பட மாட்டார்கள். தனக்குப் பிறர் உதவ வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் பிறருக்கு இவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எந்த காரியத்திலும் இறங்கமாட்டார்கள். ஆழம் தெரியாமல் காலைவிட்டு அகப் பட்டுக் கொள்ளமாட்டார்கள். எவராவது இவர்களைப் புண்படுத்திவிட்டால் அவர் களை பகைத்துக்கொள்வர். எந்த வகை யிலாவது பழிவாங்கவேண்டுமென்ற எண்ணம் அதிகமிருக்கும். மன்னிக்கும் மனப்பக்குவம் இருக்காது. இவர் களாகவே எதிரிகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

r

மயில் (ஆகாயம்)

மழை வரக்கூடிய நேரத்தை முன்கூட்டியே அறிந்து ஆகாயத்தைப் பார்த்து நடனமிடும் மயில் ஆகாயத் தத்துவப் பட்சி.

ஆற்று மணலைக்கூட அளந்துவிடலாம், ஆனால் இந்த நட்சத்திரப் பட்சியினரின் மனதை யாராலும் அறியமுடியாது. வெளியில் சாந்தமான மனநிலை உள்ளவர்களாவும், எளிதில் உணர்ச்சிவசப் படாதவர் களாகவும் தோன்றுவார்கள். கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். தாங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள்.

அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக ஏற்றுக்கொள்வார்கள். கடந்தகால நினைவுகளை அசை போட்டுக்கொண்டே இருப்பார்கள். எதையும் மறக்கமாட்டார்கள். கடந்தகாலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டிருப்பதால் தூக்கம் கெடும்; உடல்நலமும் கெடும்.

நாழிகை, சாமம்

ஒரு நாள் என்பது மொத்தம் 24 மணி நேரம். அதாவது 60 நாழிகை.

பகல்-30 நாழிகை; இரவு- 30 நாழிகை.

ஆறு நாழிகைகள் சேர்ந்தது ஒரு சாமம்.

ஒரு பகலுக்கு ஐந்து சாமங்கள்.

ஒரு இரவுக்கு ஐந்து சாமங்கள்.

ஆக ஒரு நாளைக்கு பத்து சாமங்கள்.

ஒரு சாமம் என்பது 24 நிமிடங்கள்.

6ஷ்24= 144 நிமிடங்கள்.

அதாவது 2 மணி, 24 நிமிடங்கள்.

ஒரு பட்சி 2 மணி நேரம், 24 நிமிடத்திற்கு ஒரு தொழிலைச் செய்யும். ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு தொழிலைச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் நேரத்தில்தான் அந்தநாளின் முதல் சாமம் துவங்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6.00 மணிக்கென்றால் அந்தநாளின் முதல் சாமம் காலை 6.00 மணிக்குத் துவங்கும். அதி-ருந்து 2 மணி, 24 நிமிடத்திற்கு முதல் சாமம். அதாவது காலை 8.24 வரை முதல் சாமம். (அந்தநாளில் சூரியன் உதயமாகும் நேரத்திற்கேற்ப சாம நேரம் மாறுபடும். ஒரு சாமத்தின் கால அளவான 2 மணி, 24 நிமிடங்கள் மாறாது.)

பகல்

1-ஆம் சாமம் 6.00-8.24.

2-ஆம் சாமம் 8.24-10.48.

3-ஆம் சாமம் 10.48-1.12.

4-ஆம் சாமம் 1.12-3.36.

5-ஆம் சாமம் 3.36-6.00.

இரவு

1-ஆம் சாமம் 6.00-8.24.

2-ஆம் சாமம் 8.24-10.48.

3-ஆம் சாமம் 10.48-1.12.

4-ஆம் சாமம் 1.12-3.36.

5-ஆம் சாமம் 3.36-6.00.

பட்சிகளின் தொழில்கள்

இந்த ஐந்து பட்சிகளுக்கும் ஐந்து விதமான தொழில்கள் புரிவதாகக் கூறப்பட்டுள் ளது. தொழில் என்று கூறப்படுவது ஐந்து விதமான இயக்க நிலைகள். பட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒவ்வொருவிதமான சக்தியுடன் இயங்கும். அதன்படி இந்த ஐந்து பட்சிகளின் தொழில் கள் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ்க்கண்டவாறு இருக்குமென்று சொல்லலாம்.

அரசு: 100 சதவிகித பலம்

ஒரு நாட்டின் தலைவனாகக் கருதப் படுபவன் அரசன். அந்த நாட்டில் மிக சக்திவாய்ந்தவனும் அரசனே. எனவேதான் ஒரு பட்சி தனது முழு சக்தியுடன் செயல் படும் நேரத்தை அதன் "அரசு' நேரம் என்கிறோம்.

இந்த வேளையில் அந்த நட்சத்திரத்திற் குரிய பட்சி தனது முழு வ-மையுடன் செயல்படும்.

ஊண்: 80 சதவிகித பலம் "ஊண்' என்பது உணவுண்பதைக் குறிக்கும் அல்லது உணவைக் குறிக்கும் சொல் லாகும். உயிர்வாழ்வதற்கும் செயல்படுவதற்கும் உணவு மிகமிக அவசியம் . ஒரு பட்சி அரசு நிலையைவிட சற்றே குறைவான சக்தி நிலையில் செயல்படும் நேரத்தை "ஊண்' நேரம் என்கிறார்கள்.

நடை: 60 சதவிகித பலம்

ஊண் நிலைக்கு சற்றே குறைவான சக்திநிலை இயக்கத்தை "நடை' எனலாம். நடை என்பது நடத்தல் என்ற தொழிலைக் குறிக்கும் சொல்லாகும்.

துயில்: 40 சதவிகித பலம்

துயில் என்றால் தூக்கம் என்று பொருள். ஒரு பட்சி துயில் நிலையில் இருக்கும்போது இயக்கம் மிகமிகக் குறைவாக இருக்கும். இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற மிக அத்தி யாவசியமான செயல்கள் மட்டுமே உட-ல் நடந்துகொண்டிருக்கும். புலன்கள் அடங்கிப் போகும். வேறு எந்த இயக்கமும் உட-ல் இருக்காது. ஒரு பட்சி தனது துயில் நேரத்தில் இதேபோல் மிகமிக சக்திகுறைந்த நிலையில்தான் இருக்கும்.

சாவு: 20 சதவிகிதம்

சலனமற்ற- இயக்கங்கள் அறவே நின்றுபோன நிலையே சாவு. ஒரு பட்சி தனது சாவு நேரத்தில் எந்தவொரு இயக்கமும் இல்லாத நிலையை அடைகிறது. இதுவே இந்த பட்சி முற்றிலும் சக்தியிழந்த ஒரு நிலையாகும்.

நட்சத்திரப் பட்சி

பஞ்சபட்சி சாஸ்திரத்தில், ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், தெரியாதவர் களுக்கு அவரவருடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிரெழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப் படுகிறது. அத்துடன் வளர்பிறை, தேய்பிறைக் கேற்ப நட்சத்திரப் பட்சிகள் மாறுபடும் என்பதால், ஒருவர் பிறந்தது வளர்பிறையா? தேய்பிறையா என்பது மிகவும் முக்கியம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala070521
இதையும் படியுங்கள்
Subscribe