Advertisment

பாதகாதிபதி குற்றவாளியா? -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/padagadipati-guilty-s-vijayanarasimhan

பாதக கிரகங்கள் மற்றும் ராசிகள் என்பவை லக்னத்துக்கு 11, 9, 7 ஆகிய பாவங்கள், அதிலுள்ள கிரகங்கள் அல்லது அவற்றின் அதிபதிகள் ஆவர். அவை முறையே சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு உடையவை. "ஜாதக பாரிஜாத'த்தில் இந்த பாதகாதிபதிகள் காரா அல்லது மாந்தி இடம்பெற்ற இடத்தின் அதிபதிகளுடன் இடம்பெற்றால் அதிக துன்பங்களைத் தருமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

எனவே, பாதகாதிபதி என்ற தகுதியை ஒரு கிரகம் அடைய கீழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு நிலைகளை அடைய வேண்டும்.

Advertisment

ff

முதலாவதாக 11, 9, 7-ஆம் வீடுகள் முறையே சர, ஸ்திர, உபய வீடுகள் அல்லது வீட்டு அதிபதிகளாக இருக்கவேண்டும். அந்த பாதகாதிபதியானவர், காரேஷா அல்லது மாந்தி உள்ள இடத்தின் அதிபதியாகவும் இருக்கவேண்டும். மாந்தி என்பது நாமறிந்த ஒன்று. காரேஷா பற்றி "ஜாதக பாரிஜாதம்' சுலோகம் 56-ல் சொல்லப்பட்டள்ளது. காரா என்பது லக்னத்திலிருந்து 22-ஆம் திரிகோணமாகும். அதன் அதிபதி காரேஷா ஆவார்.

மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே ஒரு கிரகம் பாதகாதிபதி தகுதியைப் பெறுகிறது. எனவே, பல ஜாதகங்களில் பாதகாதிபதியே அமைவதில்லை. அப்படிப்பட்ட ஜாதகங்களில் பாதகாதிபதி நிலை பொய்த்துப்போய், சிறப் பான பலன்களைத் தருபவராகிறார்.

பாதகாதிபதி என்ன பாதகம் செய்யுமென்பது சுலோகம் 30, பகுதி 18-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதக ஸ்தானாதி பதி அல்லது அதற்குத் தொடர்புடைய கிரக தசாபுக்திக் காலங்களில் நோய் மற்றும் துன்பங்களைத் தருகிறது. பாதக ஸ்தானத் திற்கு கேந்திரங்களில் இடம்பெற்றுள்ள கிரக தசாபுக்திக் காலங்களில் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாவதோடு, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள நேரிடுகிறது.

dddd

பிரசன்ன மார்க்கம் எனும் பண்டைய நூலில் வேறுவிதமாக விளக்கம், குழப்பமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதக ஸ்தானங்கள், லக்னத்திலிருந்து 11, 9, 7 என்பது ஆரூட லக்னத்திலிருந்து பார்க்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த காரா மற்றும் மாந்தியின் நிலைபற்றி குறிப்பிடப்படவில்லை. இது பிரசன்ன கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.

அதன் (பிரசன்ன மார்க்கம்) ஆசிரியர் வசிஷ்டர் குறிப்பிடுவதாகக் கூறுவதாவது- "எதிர்காலத்தைப் பற்றி பலனறிய வருபவர்கள், அவர்கள் கேள்வி கேட்டாலும் கேட்காவிட்டாலும்

பாதக கிரகங்கள் மற்றும் ராசிகள் என்பவை லக்னத்துக்கு 11, 9, 7 ஆகிய பாவங்கள், அதிலுள்ள கிரகங்கள் அல்லது அவற்றின் அதிபதிகள் ஆவர். அவை முறையே சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு உடையவை. "ஜாதக பாரிஜாத'த்தில் இந்த பாதகாதிபதிகள் காரா அல்லது மாந்தி இடம்பெற்ற இடத்தின் அதிபதிகளுடன் இடம்பெற்றால் அதிக துன்பங்களைத் தருமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

எனவே, பாதகாதிபதி என்ற தகுதியை ஒரு கிரகம் அடைய கீழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு நிலைகளை அடைய வேண்டும்.

Advertisment

ff

முதலாவதாக 11, 9, 7-ஆம் வீடுகள் முறையே சர, ஸ்திர, உபய வீடுகள் அல்லது வீட்டு அதிபதிகளாக இருக்கவேண்டும். அந்த பாதகாதிபதியானவர், காரேஷா அல்லது மாந்தி உள்ள இடத்தின் அதிபதியாகவும் இருக்கவேண்டும். மாந்தி என்பது நாமறிந்த ஒன்று. காரேஷா பற்றி "ஜாதக பாரிஜாதம்' சுலோகம் 56-ல் சொல்லப்பட்டள்ளது. காரா என்பது லக்னத்திலிருந்து 22-ஆம் திரிகோணமாகும். அதன் அதிபதி காரேஷா ஆவார்.

மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே ஒரு கிரகம் பாதகாதிபதி தகுதியைப் பெறுகிறது. எனவே, பல ஜாதகங்களில் பாதகாதிபதியே அமைவதில்லை. அப்படிப்பட்ட ஜாதகங்களில் பாதகாதிபதி நிலை பொய்த்துப்போய், சிறப் பான பலன்களைத் தருபவராகிறார்.

பாதகாதிபதி என்ன பாதகம் செய்யுமென்பது சுலோகம் 30, பகுதி 18-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதக ஸ்தானாதி பதி அல்லது அதற்குத் தொடர்புடைய கிரக தசாபுக்திக் காலங்களில் நோய் மற்றும் துன்பங்களைத் தருகிறது. பாதக ஸ்தானத் திற்கு கேந்திரங்களில் இடம்பெற்றுள்ள கிரக தசாபுக்திக் காலங்களில் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாவதோடு, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள நேரிடுகிறது.

dddd

பிரசன்ன மார்க்கம் எனும் பண்டைய நூலில் வேறுவிதமாக விளக்கம், குழப்பமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதக ஸ்தானங்கள், லக்னத்திலிருந்து 11, 9, 7 என்பது ஆரூட லக்னத்திலிருந்து பார்க்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த காரா மற்றும் மாந்தியின் நிலைபற்றி குறிப்பிடப்படவில்லை. இது பிரசன்ன கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.

அதன் (பிரசன்ன மார்க்கம்) ஆசிரியர் வசிஷ்டர் குறிப்பிடுவதாகக் கூறுவதாவது- "எதிர்காலத்தைப் பற்றி பலனறிய வருபவர்கள், அவர்கள் கேள்வி கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிரசன்ன கட்டத்தின்மூலம் பலனறிய ஆரூட லக்னத்தின் மூலம் தகுதியுடையவர் ஆகிறார் கள். மேலும், ஜோதிடர் துல்லிய மான கேள்வி நேரத்தைக் குறித்துக்கொள்வது, சகுனம் மற்றும் சமிக்ஞைகளையும் நோக்கவேண்டும்.

பிரசன்ன மார்க்கம் மேலும் இரண்டு விளக்கங்களைக் குறிப்பிடுகிறது. 1. பாதக ஸ்தானத் திலிருந்து கேந்திரங்களிலுள்ள கிரகங்கள் பாதகம் செய்கின்றன. 2. பொதுவாக, எல்லா சர ராசிகளுக்கும் பாதக ஸ்தானமாக கும்ப ராசி அமைகிறது.

விருச்சிக ராசி- சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளுக்குப் பாதகம் செய்கிறது. ரிஷபத்திற்கு மகரம் பாதகமாகிறது. கடகம்- கும்பத்திற்கும், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்கு தனுசு ராசியும் பாதக ஸ்தானங்கள் ஆகின்றன.

முதல் மற்றும் மூன்றாவது விதிகள் பிரசன்ன மார்க்கம் ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசன்ன மார்க்கத்தில் பாதகம் பற்றிக் குறிப்பிடுகையில், மனம், உடல், ஆன்மா, மனக் குழப்பம், உடல் உபாதைகள், தொல்லைகள் போன்றவற்றில் மட்டுமே பாதகம் ஏற்படுத்துகிறது. பிற சமூகப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரம், உத்தியோகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் பாதகம் செய்வதில்லை.

ஜாதகர் படுகின்ற கஷ்டங்களுக்குக் காரணங்கள் அல்லது இன்னல்களுக்கு வேர்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்கள் மற்றும் அதிதேவதைகளைக் குறிப்பிடுவதே முக்கியமாகக் கருதப்படுகிறது.

சில ஆசிரியர்கள் துர் ஸ்தானங்களான 6, 8, 12-ஆம் வீடுகளை பாதக ஸ்தானங்களில் சேர்த்தாலும், அதை பாதக ஸ்தானமாகக் கருதக்கூடாது என பிரசன்ன மார்க்கத்தில் 31-ஆவது சுலோகத்தில், 15-ஆவது பகுதியில் குறிப் பிடப்பட்டுள்ளது.

dd

உதாரணமாக, குரு பாதகாதி பதியாக, அவர் ராகுவுக்கு கேந்திரங்களில் நின்று, அந்த பாவங்கள் துர் ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய பாவங்களானால் பாதகமில்லை என, பாதகம் மற்றும் துர் ஸ்தானங்களுக்கான வேறுபாட்டை விளக்குகிறார்.

ஜனன ஜாதகத்தில் பாதகாதி பதி, அது இருக்குமிடம், அதற் கான காரகங்களில், இயற்கை காரகத்துவங்களில் மட்டுமே பின்னடைவுகளும், கஷ்டங் களையும் தரும். பாதகாதிபதி இல்லாத ஜாதகர் தனது வாழ்க்கை என்னும் கடலை கஷ்டங்களின்றி நீந்திக் கரைசேர முடியுமா? உதாரண ஜாதகங்கள்மூலம் காண்போம்.

உதாரண ஜாதகம்- 1

பிறந்த தேதி: 15-5-1935, பகல் 1.40 மணி. சந்திர தசை இருப்பு- 2 வருடம், 11 மாதம், 24 நாட்கள்.

மேற்கண்ட ஜாதகத்தில், லக்னம் கும்பம்; 9-ஆமிடம் துலாம்; அதன் அதி பதி சுக்கிரன்; துலாத்தில் குரு அமர்ந் துள்ளார். 22-ஆவது திரேக்காணம்- கன்னி ராசியில் 2-ஆவது திரேக்காணமாகும். அது மகரத்தில் விழுகிறது. மகரம் சனியின் ஆட்சி வீடு. இந்த சனி கும்ப ராசி யில் உள்ளார். எனவே, காரா அல்லது காரேஷா சனி ஆகிறார்.

விருச்சிகத்தில் மாந்தி உள்ளார். அதன் அதிபதி செவ்வாய். பாக்கியாதிபதி சுக்கிரன், பாக்கிய பாவத்திலுள்ள குருவும் காராவுக்கு அதிபதியாக, அல்லது மாந்தியுடன் இணைந்தோ இல்லாத நிலையில், லக்னத்தைப் பொருத்து பாதகாதிபதி இல்லையென்ற நிலையே உள்ளது.

பண்டைய நூலாசிரியர்களின் கருத்துப்படி, எந்தவொரு பலனையும் லக்னத்துக்கும், சந்திரா லக்னத்துக்கும் பார்க்கவேண்டும் என்பதேயாம்.

இங்கு சந்திரா லக்னம் கன்னி. அதற்கு பாதக ஸ்தானம் 7-ஆமிடம் மீனமாகும்.

அதன் அதிபதி குரு. சந்திரனிலிருந்து 22-ஆம் திரேக்காணம், மேஷத்தின் கடைசி திரேக் காணம் தனுசில் விழுகிறது. எனவே, குரு காரேஷா ஆகிறார். சுக்கிரன் வீட்டில் குரு உள்ளார். மாந்தி செவ்வாயின் வீட்டில் உள் ளார். 7-ஆமதிபதி சுக்கிரன் அல்லது செவ் வாயோ அல்ல. எனவே, சந்திரனிலிருந்தும் இந்த ஜாதகத்தில் பாதகாதிபதி அமையவில்லை.

ஆனாலும், இந்த ஜாதகி வாழ்க்கையில் படாத பாடுபட்டாள். உயர்ந்த மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர். நடுத்தரமான நல்ல சமூக பின்புலம் உள்ளவர். அவரது மகன் வேற்றின ஏழைப் பெண்ணைக் காதல் மணம் முடித்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். அழகிய மகளோ அரேபிய நாட்டில் ஒரு ஹோட்டல் பணியாளைக் காதலித்து மணந்து அன்னைக்கு அதிர்ச்சி தந்தாள்.

பாதகாதிபதியின் பாதிப்பில்லாத பட்சத்தில் எப்படி இந்த நிலை ஏற்பட்டது? யோககாரகன் சுக்கிரன் 5-ஆம் வீட்டில் உள்ளார். 5-ஆம் வீடும், 5-ஆமதிபதியும் பாபகர்த்தாரியில் இரு பாவ கிரகங்களான கேது மற்றும் செவ்வாய்க்கிடையே உள்ளார். 5-ஆமதிபதி புதன் அதற்கு 12-ல் உள்ளார். குரு 5-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும், அவர் வக்ரமடைந்து பல இன்னல்களைத் தந்தார். எனவே, இங்கு பாதகாதிபதி இல்லாத நிலையில், அதை பலன்காண எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

உதாரண ஜாதகம்- 2

பிறந்த தேதி: 9-9-1960, இரவு 7.15 மணி. சுக்கிர தசை இருப்பு 14 வருடம், 9 மாதம், 18 நாட்கள்.

இந்த ஜாதகத்தில் 7-ஆமதிபதி புதன் ஆவார். லக்னம் மீனம் முதல் திரேக்காணத்தில் இருப்பதால், 22-ஆம் திரேக்காணம் துலாம் முதல் திரேகாணத்தில் அமையும். அந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன், புதனோடு இணைந்து புதனின் ராசியிலேயே உள்ளார். புதன் பாதகாதிபதி ஆவதோடு, அவர் காரேஷாவும் ஆகிறார். எனவே, ஜாதகரின் மணவாழ்க்கையில் எவ்வளவு பாதகங்கள் செய்து, ஒருவழி செய்திருப்பார்- உபய ராசிக்குப் பாதகாதிபதியான புதன்.

ஜாதகர் துர்குணம் உள்ளவராக இருந்ததால், அவர் மனைவி எட்டு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விவாகரத்துபெற்றுப் பிரிந்துவிட்டாள். இரண்டாம் மனைவி 20 நாட்களே உடனிருந்து பிரிந்துவிட்டாள். ஜாதகர் ஆண்மையற்றவர் என்று சொல்லி அவளும் விவாகரத்து பெற்றுவிட்டாள். 7-ஆம் வீட்டில் பாதகாதிபதி புதனே இவர் மணவாழ்க்கை சோகத்திற்குக் காரணம் என நாம் முடிவுசெய்யலாமா?

பாதகாதிபதி புதன் என்பதை ஒதுக்கிவிட்டு, 7-ஆம் வீட்டையும், களத்திர காரகன் சுக்கிரனையும் மட்டுமே வைத்து ஆராயலாமா?

7-ஆமதிபதி புதன்- 8-ஆமதிபதி, களத்திரகாரகன் சுக்கிரனுடன் உபய ராசியில் இணைந்துள்ளார். 7-ஆம் பாவம், பாவாதிபதி மற்றும் களத்திர காரகன் ஆகியோர் பிற உபய ராசிகளில் அமர்ந்துள்ள செவ்வாய் (2 மற்றும் 9-ஆமதிபதி) மற்றும் சனியால் (11-ஆமதிபதி) பார்க்கப்படுகிறார்கள். இது பலதார யோகம் தந்தது. உபய ராசியில் இருக்கும் சுக்கிரனை அசுப கிரகங்கள் செவ்வாய், சனி பார்ப்பதே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கு வழிவகுத்தது. இங்கு உபய ராசியில் அமர்ந்த சுக்கிரனை, இயற்கை பாவிகள் இருவர் பார்த்ததே இந்த பாதிப்பு நிலைக்கு மேலும் வலுசேர்க்கிறது.

சுக்கிரன் உபய ராசியில் அமர்ந்து, அந்த ராசியாதிபதி உச்சம்பெற்று, 7-ஆமதிபதியும் பலம்பெற "பகுலி தார யோகம்' (பல தார யோகம்) ஏற்படுமென்று "பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா'விலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலைகளை நாம் இந்த ஜாதகத்தில் காணமுடிகிறது. பாதகாதிபதியை விலக்கிவிட்டுப் பார்த்தாலும் மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை உறுதியாகிறது. ஆயினும், இரு முறையும் விவாகரத்து வரை சென்று வாழ்க்கை வீணானதற்குக் காரணமாக பாதகாதிபதி புதனைச் சொல்லலாம்.

உதாரண ஜாதகம்- 3

பிறந்த தேதி: 28-5-1883, இரவு 9.25 மணி. செவ்வாய் தசை இருப்பு 1 வருடம், 1 மாதம், 26 நாட்கள்.

தனுசு லக்னம். 7-ஆம் அதிபதி புதன். உபயத்துக்கு பாதகாதிபதி. 22-ஆவது திரேக்காணம் கடகத்தின் 3-ஆவது திரேக்காணதில் விழுகிறது. அந்த திரிகோணாதிபதி குரு காரேஷா ஆகிறார். குரு 7-ல், அதன் அதிபதி மற்றும் பாதகாதிபதி புதனுடன் மிதுனத் தில் உள்ளார். பாதகாதிபதி புதன் 7, 10-க்கு அதிபதியாகி லக்னத்தைப் பார்வை செய்கிறார்.

எனவே, இந்த பாவங்கள் அனைத்தும் மிகவும் பாதிப்புகளை அடைகின்றன. இந்த ஜாதகர் மிகப்பெரிய தியாகி; சுதந்திரப் போராட்ட வீரர்; மதிப்பிற்குரிய விநாயக் தாமோதர் சாவர்க்கர். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துச்சமாக நினைத்து, வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரர். நமது தாய்த் திருநாட்டிற்குத் தொண்டு செய்து, இன்னலுற்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க நேர்ந்தது. தாய்நாட்டுக்காக அவர்பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இயற்கை சுபர் குரு, லக்னாதிபதியாகி, லக்னத்தைப் பார்த்தபோதும், அவருக்கு ஏற்பட்ட வறுமை, பொருள் கஷ்டம், துன்பங்களைத் தடுக்கமுடியாதவர் ஆனார். அதற்குக் காரணம் அவர் ராகுவின் திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்று, ஆயுத திரேகாணத்தில் அமர்ந்ததேயாம். பாதகாதிபதியின் தொடர்பு மேலும் அதிக துன்பத்திற்குக் காரணமாயிற்று.

மேற்கண்ட ஜாதகங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, பாதகாதிபதி மட்டுமே ஜாதகருக்குப் பாதகம் செய்துவிடவில்லை என்பதை அறிகிறோம். அடிப்படையிலேயே ஜனன ஜாதகத்தில் பாதிக்கக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே பாதகாதிபதியின் தாக்கம் எடுபடும் என்பதை அறியவேண்டும்.

ஒவ்வொரு ஜாதக மும் பாதகாதிபதியைக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. அதேபோல், ஜாதகத்தில் பாதகாதிபதியை அடையாளம் கண்டால் அவர் பாதகம் செய்யும் குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டியதில்லை.

ஜாதகத்திலுள்ள பாதிப்பு எரியும் நெருப்பென்றால், பாதகாதிபதி எண்ணெய் போன்றவரே. அதாவது தீய செயலுக்கு உதவுபவர், தூண்டிவிடுபவர் மட்டுமே என்று கொள்ளலாம். எனவே, பாதகாதிபதியின் பாத்திரப்படைப்பு சாதாரணமானதாகும். சில சமயங்களில் மட்டுமே அது சுறுசுறுப்பாக செயல்படும். ஆனால், பிரசன்ன ஜாதகத்தில் மட்டும் பாதகாதிபதி தன் முழு தீமையைக் காட்டிவிடுகிறார்.

bala100323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe