Advertisment

பாலமுருகன் பதில்கள் 28.02.2025

/idhalgal/balajothidam/paalamauraukana-patailakala-28022025

என் மகளுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? -விஜயராமு, சென்னை.

ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மகள் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் இருப்பதும், கடந்த காலங்களில் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற ராகு தசை நடை பெற்றதும் குழந்தை பாக்கியத்திற்கு இடையூறு ஏற்படுத்தின அமைப் பாகும். தற்போது குரு தசையில் குரு புக்தி 31-5-2025 முடிய நடப்பது சற்று சாதகமான அமைப்பாகும். மாப்பிள்ளை ஜாதகத்தில் 5-ல் குரு, சூரியன், புதன் போன்ற கிரகங்கள் இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் 2026-ல் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

என் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -விஜயர

என் மகளுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? -விஜயராமு, சென்னை.

ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் மகள் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் இருப்பதும், கடந்த காலங்களில் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற ராகு தசை நடை பெற்றதும் குழந்தை பாக்கியத்திற்கு இடையூறு ஏற்படுத்தின அமைப் பாகும். தற்போது குரு தசையில் குரு புக்தி 31-5-2025 முடிய நடப்பது சற்று சாதகமான அமைப்பாகும். மாப்பிள்ளை ஜாதகத்தில் 5-ல் குரு, சூரியன், புதன் போன்ற கிரகங்கள் இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் 2026-ல் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

என் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -விஜயராமு, சென்னை.

ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னத் தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ல் குரு ஆட்சி பெற்றிருப்பதும், 2-ல் செவ்வாய் இருப்ப தும் நல்ல அமைப் பாகும். தற்போது சுக்கிர தசையில் சூரிய புக்தி 4-7-2025 முடிய நடப்பது அனுகூல மான அமைப்பு தான். உங்கள் மகள் ஜாதகத் தில் சனி 8-ல் இருப்பதால் ஒருசில தடை கள் ஏற்படு கிறது. ஜாதகத் தில் சூரியன்- கேது சேர்க் கைப் பெற்றிருப் பதால் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வும். இந்த ஆண்டு இறுதிக் குள் திருமணம் கைகூட வாய்ப்பு உண்டு.

Advertisment

aa

இந்த குழந் தையின் ஆட்டிசம் பிரச்சினை எப்பொழுது சரியாகும்? ராகு தசை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -விஜயராமு, சென்னை.

Advertisment

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னத்தில் பிறந்த இந்த குழந்தை ஜாதகத்தில் 2-ல் சனி இருப்பதால் பேச்சு, இளமை, கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் சற்று தாமத மாகும். ஜாதகத் தில் புதன்- குரு சேர்க்கைப் பெற்றிருப்பது சாதகமான அமைப்பு என்ப தால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. 12-ல் அமையப்பெற்ற ராகு- புதன் வீட்டில் இருப்பதால் ராகு தசை சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 2-ல் உள்ள சனி புக்தி 17-9-2025 முடிய நடப்பதால் அதன்பின்பு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.

என் தந்தை வழி சொத்து எப்பொழுது விற்கும்? எனக்கு சேரவேண்டிய பங்கு எனக்கு கிடைக்குமா என்று கூறுங்கள்? -விஜயராமு, சென்னை.

சித்திரை நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 9-ஆம் வீட்டில் கேது இருப்பதாலும், சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் தந்தைவழியில் சொத்துகளை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். செவ்வாய் வீட்டில் சனி இருப்பதால் பங்காளியிடம் கூட தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்களுக்கு தற்போது குரு புக்தி 23-1-2027 முடிய நடப்பதால் சற்று சமாதானமாக சென்றால் ஒருசில அனுகூலங்கள் அடைய வாய்ப்புண்டு.

திருமணம் எப்பொழுது நடக்கும்? சொந்தமா அல்லது அசலா என்று கூறுங்கள்? -விஜயராமு, சென்னை.

பூச நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு- ராகு சாரம் பெற்றிருப்ப தாலும், களத்திர காரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் சொந்தத்தில் திருமணம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல. அந்நியத்தில் ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சற்று சாதகமாக இருக்கும். உங்களுக்கு 15-5-2025 முதல் கேது தசை நடைபெற இருப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். 2026 தொடக்கத்தில் கேது தசையில் சுக்கிர புக்தி நடக்கும் அந்த நேரத்தில் அந்நியத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை சற்று சாதகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. சுக்கிரன்- கேது சாரம் பெற்றிருப்பதாலும் அடுத்து கேது தசை நடப்பதாலும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய ஜாதகமாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe