Advertisment

பாலமுருகன் பதில்கள் 27.12.2024

/idhalgal/balajothidam/paalamauraukana-patailakala-27122024

எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? தற்போது என்ன தசை புக்தி நடக்கிறது என்று கூறுங்கள்? -வினோத்குமார், சிவகங்கை.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 3, 6-க்கு அதிபதியான புதன் 3-ல் அமையப் பெற்று புதன் தசையில் சுக்கிர புக்தி நடப்பது பல்வேறு வகையில் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். சதயத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆவது தசையாக புதன் தசை நடப்பது நல்ல வளர்ச்சியை தரக்கூடிய அமைப்பாகும். கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடப்பதால் சிறிது காலத்துக்கு சற்று நிதானத் தோடு இருந்தால் ஒரு வளமான பலன்களை அடையமுடியும். 29-3-2025-ல் ஜென்ம சனி முடிந்தால் ஒரு சில அனுகூலங

எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? தற்போது என்ன தசை புக்தி நடக்கிறது என்று கூறுங்கள்? -வினோத்குமார், சிவகங்கை.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 3, 6-க்கு அதிபதியான புதன் 3-ல் அமையப் பெற்று புதன் தசையில் சுக்கிர புக்தி நடப்பது பல்வேறு வகையில் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். சதயத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆவது தசையாக புதன் தசை நடப்பது நல்ல வளர்ச்சியை தரக்கூடிய அமைப்பாகும். கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடப்பதால் சிறிது காலத்துக்கு சற்று நிதானத் தோடு இருந்தால் ஒரு வளமான பலன்களை அடையமுடியும். 29-3-2025-ல் ஜென்ம சனி முடிந்தால் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

Advertisment

Q&A

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -லதா லட்சுமிநாராயண், தில்லைநகர்.

Advertisment

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்கனத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-க்கு அதிபதி சனி 8-ல் கேது சேர்க்கை பெற்றிருப்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகமாகும். சுக்கிரன் கேந்திரத்தில் இருப்பது நல்ல அமைப்பு என்பதால் 2025 மே மாதத்திற்கு பிறகு திருமணம் அமைய வாய்ப்புண்டு. சனி- கேது சேர்ந்திருப்பதால் திருமணம் அமைந்தாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்துச் செல்வது, சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நன்மை தரும்.

எனது ஆயுள், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் பற்றி கூறவும்? -மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத் தில் பிறந்த உங்களுக்கு ஆயுள், ஆரோக்கிய காரகன் சனி உச்சம் பெற்றிருப்பதும், 8-ஆம் வீட்டை குரு பார்ப்பதும் சிறப்பான அமைப்பாகும். இதன்காரணமாக நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஏற்படும். தற்போது குரு தசை நடப்பதால் எதிர்கால அமைப்பு சிறப்பாக இருக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -ரேவதி, திருச்சி.

பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-க்கு அதிபதி சந்திரன் 6-ல் மறைந்திருப்பதால் திருமணம் தாமதமாகியது. தற்போது சனி தசையில் ராகு புக்தி 5-6-2025 முடிய நடக்கிறது. அடுத்து குரு புக்தி நடக்கும் தருவாயில் 2025 ஜூனுக்குபிறகு திருமணம் அமைய வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

எனது திருமணம் எப்போது நடைபெறும்? அரசாங்க வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -நந்தினி, மதுரை.

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்கு அதிபதி குரு 10-ல் வக்ரகதியில் இருப்பதாலும், செவ்வாய் 6-ல் இருப்பதாலும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். தற்போது ராகு தசையில் கேது புக்தி 1-9-2025 முடிய நடப்பதால் அடுத்து வர இருக்கக்கூடிய சுக்கிர புக்தியில் திருமணம் அமைய வாய்ப்புண்டு. நடப்பது ராகு தசை என்பதால் அடிக்கடி அம்மன் வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நன்மை தரும். 10-ஆம் வீட்டில் குரு அமையப்பெற்று 10-ஆம் அதிபதி புதனாக இருப்பதால் வங்கிப் பணி, பள்ளி, கல்லூரியில் பணிபுரியக்கூடிய பணிகள், கம்ப்யூட்டர் துறைகளில் வேலைக்காக முயற்சிசெய்தால் நல்லது நடக்கும். தற்போது ராகு தசை நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் குரு தசை வருகின்றபொழுது அரசு உதவி பெறக் கூடிய இடங்களில் வேலை வாய்ப்பு அடையமுடியும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

bala271224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe