என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -கண்ணன், சென்னை.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் களத்திரகாரகன் செவ்வாய் 8-ல் மறைந்து இருப்பதால் காலதாமதமான திருமண யோகமாகும். செவ்வாயை குரு பார்ப்பது நல்ல அமைப்பாகும். தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்கக்கூடிய யோகம் உண்டு. அம்மான் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்; நற்பலன் கிடைக்கும்.
என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -ஊர், பெயர், வெளியிடவில்லை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ல் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதும், 5-ல் செவ்வாய் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். தற்போது ராகு தசையில் சனி புக்தி நடக்கிறது. 16-3-2025 முதல் புதன் புக்தி நடக்க இருப்பதால் 2025 மே மாதத்திற்குபிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு மேற்கொள்ளவும்; நன்மை கிடைக்கும்.
என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும் என்று கூறுங்கள்? -பார்த்தசாரதி, திருவள்ளூர்.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு தசையில் ராகுவுக்கு 8-ல் உள்ள புதன் புத்தி நடப்பதால் பொருளாதார நெருக்கடிகள் இருக்கிறது. 4-ல் உள்ள ராகு தசை என்பதால் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு, பணவரவில் இடையூறுகள் ஏற்படுகிறது. விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு 2025 மார்ச்சுக்குபிறகு சற்று கடன்கள் குறைய வாய்ப்புண்டு. குலதெய்வம் வழிபாடு மேற்கொள்வது; கெடுதியைக் குறைக்கும்.
என் கஷ்டம் மற்றும் கடன் பிரச்சினைகள் தீருமா? சொந்த வீடு அமையுமா என்று கூறுங்கள்? -லோகேஸ், பாளயம்புதூர்.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் சனி ஆட்சி பெற்றிருப்பதால் எவ்வளவு கடன்கள் வாங்கி னாலும் அதனை அடைக்கக் கூடிய சக்தி கண்டிப்பாக இருக்கும். தற்போது உங்களுக்கு செவ்வாய் தசையில் புதன் புக்தி 4-6-2025 முடிய நடக்கிறது. 2025 இறுதியில் செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி நடக்கும் சமயத்தில் உங்கள் கடன்கள் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். 2026 தொடக்கத்தில் சுக்கிர புக்தி நடக்கும் சமயத்தில் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.
நான் தொழிலில் கூட்டாளி யால் நஷ்டபட்டேன். என்னால் மீண்டும் சம்பாதிக்க முடியுமா? எதிர்காலம் எப்படியிருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? -சிவசங்கர், கோவை.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 6-ல் அமையப்பெற்று சந்திரனுக்கு குரு பார்வை இருப்பதாலும், 10-ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதாலும் சம்பாதிக்கும் யோகம் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் அடையும் அமைப்பு, வேலைக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. 7-ஆம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்ததால் கூட்டாளி களால் நஷ்டப்பட்டுள்ளது. 7-ல் சுக்கிரன், கேது இருக்கும் பொழுது பிறந்து உள்ளீர்கள். 7-ஆம் அதிபதி 11-ல் கேது நட்சத்திரத்தில் இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத் தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 2025 மே மாதத்துக்குள் திருமணம் நடைபெறக்கூடிய யோகங்கள் உண்டு. வேலைக்கு சென்றால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.