நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். தயவுசெய்து விளக்கமாக கூறுங்கள்?
-முருகேசன்,சிவகங்கை.
பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்க ளுக்கு லக்னத் திற்கு 7-ஆம் அதிபதியும் களத்திரக்காரகனுமாகிய சுக்கிரன்- கேது நட்சத்திரமான மூலத்தில் அமையப்பெற்று கேது சேர்க்கைப் பெற்றிருப்பது அவ்வளவு நல்ல அமைப்பில்லை. குறிப்பாக 7-ஆம் அதிபதியுடனும், களத்திரகாரகன் சுக்கிரனுடனும் கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் திருமண வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்படும். இது ஒரு காரணமாகும். அதுமட்டுமில்லாமல் பிறக்கின்றபொழுதே சந்திரன்- சனி சேர்க்கைப் பெற்று பிறந்திருப்பதால் அது ஒரு புனர்பூ தோஷமாகும். இந்த தோஷத்தின் காரணமாக ஒரு நல்ல காரியம் நடக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். விடாமல் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? வசதியான வெளிநாட்டு மாப்பிள்ளை அமைவாரா என்று கூறுங்கள்?
-சுபா, சென்னை.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திர காரகன் செவ்வாய் திரிகோண ஸ்தானமான 9-ஆம் வீட்டில் அமையப்பெற்று உடன் 12-ஆம் அதிபதி புதன் இருப்பது சிறப்பான அமைப்பாகும். நல்ல படித்த வசதியான வரன் கணவராக வரக்கூடிய யோகம் உண்டு. 10, 12-ஆம் அதிபதிகள் இணைந்து ஜல ராசியான மீன ராசியில் அமைந்திருப்பதால் திருமணத்துக்கு பிறகு வெளியூர், வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியும் 9-ஆம் அதிபதியும் பரிவர்த் தனை பெற்றிருப்பதால் திருமண முயற்சியில் முதலில் சில சுணக்கங் கள் ஏற்பட்டு அதன் பின் திருமணம் கை கூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சூரிய தசையில் சூரிய புக்தி 27-7-2024 முடிய நடப்ப தால் 2025 தொடக்கத்தில் உங்களுக்கு சூரிய தசையில் களத்திரகாரகன் செவ்வாய் புக்தி நடக்கும் தருவாயில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 2-ல் ராகு இருப்பதால் மணவாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
எனக்கு அரசு பணி கிடைக்குமா? அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா? எந்த தசை எந்த புக்தியில் அரசு வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்?
-செல்வ விக்னேஷ், திருநெல்வேலி.
பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு- சனி சேர்க்கைப்பெற்று 3-ஆம் வீட்டில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் நல்லவேலை அமைய ஒருசில இடையூறுகள், தடைக்குப்பிறகு அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் போன்ற கிரகங்கள் இருப்பதால் வங்கிப் பணி, பணப்புழக்கம் சம்பந்தப்பட்ட இடங்கள், கல்வித்துறை போன்றவற்றில் அரசு உதவிபெறக்கூடிய இடங்களில் வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்ப தால் சில இடையூறுகளுக்குப் பிறகுதான் நல்ல வேலை அமையும். முதலில் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. குறிப்பாக சனி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் 30 வயதுக்கு பிறகு தான் ஒருநிலையான அமைப்பு அமையும். உங்கள் ஜாதகரீதியாக தற்போது குரு தசையில் சனி புக்தி 21-6-2025 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய புதன் புக்தியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. பொதுவாக குரு வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் சில இடங்களில் சுய கௌரவத்தை பார்க்காமல் பணி நிமித்தமாக சற்று விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்வில் முன்னேற் றத்தை அடையமுடியும். குரு வக்ரகதியில் இருப்பதால் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
எனக்கு தற்போது நடக்கும் தசை நல்ல தசையா? இந்த தசையில் வீடு வாங்கலாமா என்று கூறுங்கள்?
-பக்கிரிசாமி, திருவிடைமருதூர்.
பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 11-ல் உச்சம் பெற்ற சூரிய மகா தசை நடக்கிறது. மிதுன லக்ன மிதுன ராசிக்கு 11-ஆமிடம் மாரக ஸ்தானம் என்ற காரணத்தால் 11-ல் அமையப்பெற்ற சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும் 11-ல் இருப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது மிகவும் சிறப்பு. உங்கள் ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி 12-ல் மறைந்திருந்தாலும், சுக்கிரன் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். தற்போது உங்களுக்கு சூரிய தசையில் குரு புக்தி 19-11-2024 முடிய நடக்கிறது. 4-ஆம் அதிபதி புதன் என்ற காரணத்தால் வீடு வாங்க முயற்சிக் கின்றபொழுது உங்கள் பெயரில் வாங்காமல் கூட் டாக வாங்குவது நற்பலனைத் தரும். தற்போதைக்கு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
என் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. எனக்கு எப்போது நிரந்திர வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்?
-கோவிந்தராஜன், பன்ருட்டி.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு அதிபதி புதன் 12-ல் வக்ரகதியில் அமையப்பெற்று குரு, சனி வக்ரகதியில் இருக்கிறது. தற்போது உங்களுக்கு பகை வீட்டில் அமையப் பெற்ற குறிப்பாக சூரியன் வீட்டில் அமையப்பெற்ற ராகு தசையில் ராகுபுக்தி 19-4-2026 முடிய நடைபெறு கிறது. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி புதன் வக்ர கதியில் இருப்பதாலும், மூன்று கிரகங்கள் வக்ரகதியில் இருப்பதாலும் ஒருசில தடைக்கு பிறகு தான் முன்னேற்றங் கள் ஏற்படும். குறிப்பாக தற்போது ராகு தசையில் சுயபுக்தி நடப்பதால் சுயபுக்திக்கு பிறகுதான் வாழ்வில் நல்ல ஒரு முன்னேற்றங்கள் இருக்கும். சிம்மத்தில் ராகு இருந்து ராகு தசையில் சுயபுக்தி நடைபெற்றால் எந்தப் பணிக்கு சென்றாலும் மேலதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படும். பொது வாக மேலதிகாரி யிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் செயல் படுவது நல்லது. தற்போது கிடைக் கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் சுயபுக்திக்கு பிறகு நல்ல நிலையை அடையமுடியும். 12-ல் இருக்கக்கூடிய ராகு தசை நடப்பதால் வெளியூர் தொடர்புடைய பணிகளுக்கு முயற்சிசெய்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.