பாலமுருகன் பதில்கள் 17.01.2025

/idhalgal/balajothidam/paalamauraukana-patailakala-17012025

திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சேகர், திருப்பூர்.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று வக்ரகதியில் இருப்பதும், சந்திரன்- கேது சாரம் பெற்று கேது சேர்க்கைப் பெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதன்காரணமாக தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டு பின்பு நல்லது நடக்கக்கூடிய அமைப்புகள் உண்டு. தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடக்கிறது. 2-8-2025 முதல் சூரிய தசையில் சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. சுக்கிரன் குரு- சனி சாரம் பெற்றிருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத் தில் வரன் பார்ப்பது நற்பலன

திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சேகர், திருப்பூர்.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று வக்ரகதியில் இருப்பதும், சந்திரன்- கேது சாரம் பெற்று கேது சேர்க்கைப் பெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதன்காரணமாக தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டு பின்பு நல்லது நடக்கக்கூடிய அமைப்புகள் உண்டு. தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடக்கிறது. 2-8-2025 முதல் சூரிய தசையில் சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. சுக்கிரன் குரு- சனி சாரம் பெற்றிருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத் தில் வரன் பார்ப்பது நற்பலனைத் தரும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நடப்பு சுக்கிர தசை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -செல்வம், திருநெல்வேலி.

பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் 6-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் சனி சேர்க்கைப்பெற்று 6-ஆம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. குரு சாரம் பெற்ற சுக்கிரன் என்ற காரணத்தினால் ஒருசில ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

ww

நான் தினசரி சளி பிரச்சினையால் அவதிப் படுகிறேன், அது எப்போது முடிவுக்கு வரும்? என் சொந்தமனையில் புது வீடு எனக்கு எப்போது கிடைக்கும்? -உமா, விழுப்புரம்.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி, சந்திரன் சேர்க்கைப் பெற்று தற்போது சனி தசையில் குரு புக்தி 12-5-2025 முடிய நடக்கிறது. உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் சனி தசை முடியும் தருவாயில் இருப்பதாலும் உடல் உபாதைகள் வருகிறது. அடுத்து புதன் தசை தொடங்க இருப்பதால் 2025 ஏப்ரல்முதல் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 4-ஆம் அதிபதி ஆட்சிபெற்று சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதால் 2025 மே மாதத்திற்குபிறகு சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.

மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளார். வெற்றிகரமாக முடியுமா என்று கூறுங்கள்? -வசந்த், திருச்சி.

பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதி பதி சனி நீசம்பெற்றாலும் செவ்வாய், புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருக்கிறது. நடப்பது செவ்வாய் தசை என்பதால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. செவ்வாயை குரு பார்ப்பதாலும் குறிப்பாக 6-ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சைகள் சிறப் பாகவும் வெற்றிகரமாகவும் முடிந்து ஒரு நல்ல ஆரோக்கியத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தற்போது ஏழரைச்சனி நடப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு.

இவருடைய கல்வி மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள்?

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசை நடப்பதால் கல்வி சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன் வக்ரகதியில் இருப்பதாலும் செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் முதலில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதன்பிறகு வேறு ஒரு துறையில் படிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தற்போது புதன் தசை 10-11-24 முதல் நடைபெறுவதால் படிப்பில் சாதிக்கக்கூடிய யோகங்கள் எதிர்கால அமைப்பு சிறப் பாக இருக்கக்கூடிய அமைப்புகள் உண்டு. படிக்கும் காலத்தில் புதன் தசை நடப்பது படிப்பில் அனுகூலங்களை அடைவதற்கான வாய்ப்பை உண்டாக்கும். புதன், சுக்கிரன், குரு, சந்திரன் ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்றிருப்பதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது புதன் தசை நடப்பதால் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

bala170125
இதையும் படியுங்கள்
Subscribe