எப்பொழுது திருமணம் நடக்கும்? வரன் எந்த தசையில் அமையும் என்று கூறுங்கள்? -ராம்குமார், கோவில்பட்டி.
உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு லக்ன, ராசிக்கு 7-ல் ராகு இருக்கின்றபொழுது பிறந்து தற்போது ராகு தசையில் சனி புக்தி 17-12-2027 முடிய நடக்கிறது. ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ 7-ல் ராகு இருந்து ராகு தசை நடந்தால் அமையும் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. மகர ராசியில் பிறந்த ஜாதகிக்கு தற்போது லக்னாதிபதி புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்தம் இல்லாமல் அந்நியத்தில் வரன் அமைய வாய்ப்புண்டு. இருக்கும் இடத்திலிருந்து கிழக்கு திசையில் வரன் பார்க்கவும். பிறக்கின்றபொழுது களத்திரகாரகன் செவ்வாய், சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் வரக்கூடிய வரன் நல்ல இடத்தி-ருந்து படித்த பையனாக வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.
நான் அரசு வேலைக்காக மூன்று வருடமாக முயற்சி செய்துகொண்டி ருக்கின்றேன். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -ரம்யா, சிதம்பரம்.
பூராட நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ல் குரு, செவ்வாய் இணைந்திருப்பது நல்ல அமைப்பாகும். 10-ஆம் அதிபதி புதன்- சூரியன் சேர்க்கைப்பெற்று 9-ல் அமையப்பெற்று சூரியன் ஆட்சி பெற்றிருக்கிறது. 10-ல் செவ்வாய் இருப்பதால் சிறப்பான நிர்வாக திறமையுண்டு. 10-ஆம் அதிபதி 9-ல் இருப்பதால் உங்களுக்கு பிறந்த ஊரை விட வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடு தொடர்புடைய பணிகளுக்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு அடுத்து வரக்கூடிய காலங்களில் 12-ல் இருக்கக்கூடிய ராகு தசை நடப்பதால் அரசு சார்ந்த துறைகளில் முயற்சி செய்வதைவிட பன்னாட்டு நிறுவனங் களில் வேலைக்காக முயற்சி செய்தால் நற்பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று கூறுங்கள்? -சரண், பண்ருட்டி.
கணவர் ஜாதகரீதியாக பார்க்கின்றபொழுது விருச்சிக லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்த ஜாதகருக்கு 5-ஆம் அதிபதி குரு 5-ஆம் வீட்டை பார்ப்பதும் 5-ல் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். தற்போது 7-ல் இருக்கக்கூடிய கேது தசை நடப்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. 2026 ஜூனுக்கு பிறகு சுக்கிர தசை நடக்கின்றபொழுது குடும்ப வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் சற்றுக் குறைந்து பெண் குழந்தை அமைவதற்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. மனைவி ஜாதகரீதியாக பார்க்கின்றபொழுது அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 5-ஆம் அதிபதி சனி 7-ல் அமையப்பெற்று 7-ஆம் அதிபதி குரு 5-ல் அமையப்பெற்று 5, 7 பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. தற்போது குரு தசையில் சுயபுத்தி 28-9-2025 முடிய நடக்கிறது. புத்திர ஸ்தானாதிபதியும் புத்திர காரகன் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஒரு தடைக்குப் பிறகு நல்லது நடக்கவாய்ப்பு உண்டு. கணவருக்கு சுக்கிர தசை வருகின்றபொழுது 2026 கடைசி 2027 தொடக்கத்தில் நற்பலன் நடக்கவாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? என்ன படிப்பில் சேரலாம்? எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பாஸ்கரன், திண்டுக்கல்.
பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு கல்வி ஸ்தானாதிபதியும் கல்விக்காரகனான புதன், சூரியன் சேர்க்கைப்பெற்று 6-ல் இருப்பதால் கல்வியில் சாதிக்கக்கூடிய யோகங்கள், மருந்து, கெமிக்கல், நிர்வாக தொடர்புடைய கல்விகள் மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சந்திரன்- குரு சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் ஜென்ம லக்னத்தை குரு பார்ப்பதாலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். செவ்வாய் ஜென்ம லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால்தான் செவ்வாய் தோஷமாகும். ஜாதகிக்கு லக்னத் தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் கிடையாது.