நான் பத்தாண்டுகளாக பெட்டி கடை நடத்தி வருகிறேன். லாபம் எதுவுமில்லை, வேறு தொழில் செய்யலாமா அல்லது அதே தொழிலை தொடரலாமா? அடுத்துவரும் தசை எப்படி யிருக்கும்? -கோவிந்தராஜு, கோவை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சனி விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் சம்பந் தப்பட்ட விஷ யத்தில் பெரிய அளவில் முன் னேற்றம் ஏற்பட இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது உங்களுக்கு சந்திர தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. தற்போதைக்கு செய்யக்கூடிய விஷயத்தையே செய்வது நல்லது. 10-ஆம் அதிபதியைவிட 7-ஆம் அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் வேறு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத் தால் நீங்கள் கூட்டாக செய்வது மிகமிக நல்லது. குறிப்பாக தனித்து செய்வதைவிட கூட்டாக செய்கின்றபோது ஒரு சில முன்னேற் றங்கள் ஏற்படும். சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.
நான் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள லாமா? எப்போது செய்து கொள்வது என்று கூறுங்கள்? -பத்மநாபன், சென்னை.
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி 16-3-2026 முடிய நடக்கிறது. கோட்சாரத்தில் உங்கள் ராசிக்கு 3-ல் சனி இருப்பதும், 6-ல் சஞ்சரிக்ககூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. குறிப் பாக டிசம்பர், ஜனவரி மாதங் களில்கூட செய்து கொள் ளலாம். கால பைரவர் வழி பாடு உங்களுக்கு வளமான பல னைத் தரும்.
எந்த ஒரு வேலை எடுத்தாலும் பிரச்சினை மற்றும் தடங்கல் ஏற்படுகிறது. எந்த கோவிலுக்கு செல்லவேண்டும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -திருஞானம்.
பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு இது நாள்வரை குறிப்பாக 20-6-2024 முடிய கேது தசை நடைபெற்றது. கேது 12-ல் அமையப்பெற்ற தசை என்பது ஒரு நல்ல அமைப்பில்லை. தற்போது சுக்கிர தசை தொடங்கி ஐந்து மாதம்தான் ஆகிறது. சுக்கிர தசையில் சுய புக்தி சுய அந்தரத்துக்கு அப்புறம் குறிப்பாக ஜனவரிக்குபிறகு ஒரு நல்ல முன்னேற் றம் இருக்கும். 29-3-2025 முதல் சனி 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்ப தும், 14-5-2025 முதல் குரு 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்ப தும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை தரும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டால் வளமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு நன்மை தரும்.
என் அப்பாவின் குடும்ப சொத்தின் பிரச்சினை எப்போது தீருமென்று கூறுங்கள்? -உஷா, சென்னை.
பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் தந்தைக்கு லக்னத்திற்கு 4-ல் கேது இருப்பதும் சனி நீசம்பெற்று, செவ்வாய் நீசம் பெற்றிருப்பதும் நல்ல அமைப்பில்லை. 5-ஆம் வீட்டில் சனி நீசம் பெற்றிருப்பதும் 5-ஆம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்றிருப்பதும் சொத்து சுகத்திற்கு காரக னான சுக்கிரன் வக்ர கதியில் இருப்பதும் அனு கூலமான அமைப்பு என கூற முடியாது. குறிப்பாக உங்கள் தந்தையைத் தவிர சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் மற்றவர் கள் யாராவது தலை யிட்டு பேசினால் ஒருசில சாதகப் பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலம் விரைவில் நல்லது நடக்கும்.
என் கணவரின் பூர்வீக சொத்து இன்னும் விற்பனை ஆகாமல் உள்ளது. எப்போது விற்க முடியும் என்று கூறுங்கள்?
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு 5-ஆம் வீட்டில் குரு ஆட்சி பெற்றிருந் தாலும், 5-ல் இருக்கக்கூடிய குரு, சுக்கிரன் இருவரும் கேது நட்சத்திரத் தில் இருப்பது நல்ல அமைப்பு இல்லை. 16-4-2022 முடிய உங்கள் கணவருக்கு கேது தசை நடைபெற்றது சாதகம் இல் லாத அமைப்பு. தற்போது சுக்கிர தசை தொடங்கினாலும் ஏழரைச் சனி நடப்பதும் ஒரு சரியில்லாத அமைப்பாகும். 5-ஆம் அதிபதி கேது சாரம் பெற்றிருப்பதால் சற்று பக்குவமாக கையாளுகின்ற பொழுது நல்லது நடக்க வாய்ப் புண்டு. வரும் மார்ச் மாதத்தில் ஜென்ம சனி முடியும் தருவாயி லும் 14-5-2024 முதல் ராசிக்கு 5-ல் குரு அமையப்பெற்று சுக்கிரனை குரு பார்க்கின்ற பொழுது சொத்து சம்பந்தமாக நீங்கள் முயற்சிகள் மேற்கொண் டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போதைக்கு ஏழரைச் சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற் கொள்வது மிகவும் நல்லது.