உலகில் எந்த எதிர் பார்ப்புமில்லாத- கலப்ப டமில்லாத அன்பென்று ஒன்று உண்டென்றால் அது தாயின் அன்பு மட்டுமே. ஜோதிடம் நான் காமிடத்தை தாயைக் குறிக்கும் இடமாகவும், சந்திரனைத் தாயைக் குறிக்கும் கிரகமாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் நான்காமிட சம்பந்தம் கூறும் செய்திகளை இங்கு காண்போம்.
இரண்டாமிடத்திற்கு நான்காமிடம் என்பது மூன்றாம் பாவகமாக வரும். இதனால் ஒரு தாய் தன் குடும்பத்திற்கு, குழந்தைகளுக்குத் தேவையான தைரியம், முன்னேற்றம், புகழ் போன்றவற்றுக்காகப் பாடுபடுகிறாள்.
மூன்றாமிடத்திற்கு நான்காமிடம் என்பது இரண்டாமிடமாக வரும். ஒரு குழந்தைக்குப் பேச்சு வரவும், பேசவும் சொல்லிக்கொடுப்பது தாய்தான். மேலும் குடும்பவளத்தைப் பெருக்கு வதில் கடுகு டப்பாவிலிருந்து தபால் அலுவலகம் வரை சிறுகச்சிறுக சேர்ப்பது தாய்தான்.
ஐந்தாமிடத்திற்கு நான்காமிடம் 12-ஆமிட மாக வரும். குடும்பம், குழந்தைகளின் ஆரோக்கி யம் வளரவும், அவர்களின் நல்ல பழக்க வழக்கத்திற்காகவும் ஓடியாடி உழைப்பவள்.
ஆறாமிடத்திற்கு நான்காமிடம் 11-ஆமிட மாகும். குடும்ப முன்னேற்றத்திற்குத் தாயின் உழைப்பு அளவுக்கு மீறியது. சிலசமயம் தன் நோயையும் பொருட்படுத்தாமல் பாடுபடுவாள்.
ஏழாமிடத்திற்கு நான்காமிடம் என்பது பத்தாம் பாவகமாக வரும். குடும்பத்தினரை அனுசரித்து, கணவன் வீட்டாரை சகித்துக் கொண்டு, கௌரவத்தை மட்டும் நிலைநாட்டு பவள்.
எட்டாமிடத்திற்கு நான்காமிடம் என்பது ஒன்பதாம் பாவகமாகும். நிறைய தாய்மார்கள் தங்கள் கணவன், பிள்ளைகள் விஷயமாக பெற்றோரையே தூக்கியெறிவதையும், தன்னைப் பெற்றவர்களிடம் சண்டை யிடுவதையும் பார்க்கத்தானே செய்கிறீர்கள்.
ஒன்பதாம் இடத்திற்கு நான்காமிடம் என்பது எட்டாம் பாவகமாக வரும். சில இல்லங் களில் தந்தை குடிகாரராகவோ, வீட்டைவிட்டு ஓடிப்போனவராகவோ இருப்பார். அவரை சற்றும் லட்சியம் செய்யாமல், தானே தந்தை யாகவும் தாயாகவுமிருந்து, அவமானங்களை சகித்துக்கொண்டு குழந்தைகளை வளர்ப்பவள் அன்னை.
பத்தாமிடத்திற்கு நான்காமிடம் என்பது ஏழாம் பாவகமாக வரும். தன் சுய சம்பாத்தியம், கௌரவம் என தனக்கானவற்றையெல்லாம் குழந்தைகளுக்கே விட்டுக் கொடுப்பாள்.
பதினொன்றாம் இடத்திற்கு நான்காமிடம் ஆறாம் பாவகமாக வரும். சிலசமயம் தன் வருமானத்தை மீறி கடன் வாங்கி குடும்ப முன்னேற்றத்திற்கு உழைப்பாள்.
12-ஆமிடத்திற்கு நான்காமிடம் ஐந்தாம் பாவகமாக வரும். குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, தனித்திறமையை வளர்ப்பது என பல விஷயங்களுக்கு செலவுசெய்வது மட்டுமல்லாமல், எவ்வளவு தொலைவு அதற்காக அலைந்து சிரமப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
அனைத்து விஷயங்களுக்கும் மறுபக்கம் உண்டு என்பார்கள். அதுபோல தாயின் அன்பிலும் சற்று எதிர்மறை தருணங்கள் ஏற்படும். ஆம்; முன்பெல்லாம் மகனைப் பெற்ற தாய்தான் அராஜகம் செய்வார் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்ணைப்பெற்ற தாய்மார்களும் அராஜகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். திருமணம் முடிந்தவுடன் இந்த அன்பான அம்மாக்கள் பதட்டத்தின் உச்சிக்கே செல்கிறார் கள். எங்கே தன் வாரிசை இவன் அல்லது இவள் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விடுவார்களோ என மிகவும் அஞ்சு கின்றனர். ஒருவித சுய பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். இது எதனால் ஏற்படுகிறது?
தாயைக் குறிப்பது நான்காமிடம். மருமகன்- மருமகளைக் குறிப்பது பதினொன்றாமிடம். இப்போது கவனியுங்கள். 11-ஆமிடமும் நான்காமிடமும் 6-8 எனும் சஷ்டாஷ்டக நிலை பெறுகின்றதல்லவா? அதுதான் முக்கிய காரணம். எனவே தான் எப்போதும் மாமியாருக்கும் மருமகன் அல்லது மருமகளுக்கும் ஆகியே வரமாட்டேனென்கிறது. எதிரிபோல வாழ ஆரம்பிக்கின்றனர். அதிலும் நான்காமதிபதியும் பதினொன்றாமதிபதியும் ஒரு ஜாதகத்தில் 6, 8, 12-ல் இருந்தாலும், ஒன்றுக்கொன்று பகை கிரகமாக இருந்தாலும், ஏதோவொரு அதிபதி நீசமாக இருந்தாலும் அந்த வீட்டில் மாமியார்- மருமகள் சண்டை நிச்சயம். இது சில வீடுகளில் விவாகரத்துவரை செல்லும்போது அந்த வேதனை அனைவருக்கும் கொடுமையானதல்லவா? ஒரு தாயின் அன்பு திரிவதுபோல் ஆகிவிடுமல்லவா?
ஒரு தாய் குடும்பம், குழந்தைகளுக்காக எவ்வளவு இன்னல்படுகிறாள்! பிள்ளைகளின் மண வாழ்க்கையின்போதும் சற்றே விட்டுக் கொடுக்கலாமே. சில தாய்மார்கள் பெருமை யடித்துக்கொள்வார்கள். "என் மகன் என்னை விட்டு இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போக மாட்டான்' என்பர். பெண்ணைப்பெற்ற தாயார் கள், "என் மகளுக்கு என்னைப் பார்க்காமல் இருக்கவே முடியாது' என்பார்கள். அவ்வாறில் லாமல் கொஞ்சகாலம் உங்கள் வாரிசுகளை அவர்களுடைய வாழ்க்கைத் துணையுடன் தனித்துவிடுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் இணக்கமாக இருந்து பேரன்- பேத்தியைப் பெற்றுத்தர முடியும். அதுவரையிலாவது சற்றே ஒதுங்கியிருக்கலாம் மாமியார்கள்.
செல்: 94449 61845