Advertisment

இறைப் பணியில் ஈடுபடவைக்கும் அமைப்பு! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/organization-engage-gods-work-dr-muruku-balamurugan

றைவன் என்பவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றாலும், மனிதனாய்ப் பிறந்த எல்லாருக்குமே இறைபக்தி இயற்கையிலேயே இருப்பதில்லை.

Advertisment

நம் நாட்டில் ஆத்திகவாதிகளும் உண்டு; நாத்திகவாதிகளும் உண்டு. சிலர் இளம்வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு முற்றும் துறந்துவிடுவார்கள். சிலருக்கு நடுத்தர வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய சூழநிலைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே இறைப்பணி, ஆன்மிகப் பணிகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

Advertisment

ff

இறைப்பணி செய்வதென்பது சிறந்த பாக்கியமாகும். இந்த பாக்கியம் எ

றைவன் என்பவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றாலும், மனிதனாய்ப் பிறந்த எல்லாருக்குமே இறைபக்தி இயற்கையிலேயே இருப்பதில்லை.

Advertisment

நம் நாட்டில் ஆத்திகவாதிகளும் உண்டு; நாத்திகவாதிகளும் உண்டு. சிலர் இளம்வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு முற்றும் துறந்துவிடுவார்கள். சிலருக்கு நடுத்தர வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய சூழநிலைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே இறைப்பணி, ஆன்மிகப் பணிகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

Advertisment

ff

இறைப்பணி செய்வதென்பது சிறந்த பாக்கியமாகும். இந்த பாக்கியம் எளிதில் எல்லாருக்கும் கிடைத்துவிடாது. குறிப்பாக இறைப்பணி என்பது எல்லா மதத்திற்கும் பொதுவான ஒன்றாகும். அவரவர் மதத்திற்கேற்றவாறு இறைப் பணிகளில் ஈடுபடுவார்கள். இறைப் பணியில் ஈடுபடுவதற்கு அவரவரின் ஜனன ஜாதகப்படி 5-ஆம் பாவம் பலமாகவும், சுப கிரகங்கள் அமையப் பெற்றும், சுபர் பார்வை பெற்றும் அமைந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி 5-ஆம் பாவத்திற்கு 5-ஆம் பாவமான 9-ஆம் பாவமும் பலமாக இருந்தால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும்.

நவகிரகங்களில் தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கக்கூடிய குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் தெய்வீக எண்ணம், ஆன்மிக எண்ணம், இறைப் பணியில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதுபோல நவகிரகங்களில் நிழல் கிரகமான கேது பகவான் ஞானகாரகன் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் கேது வலுப்பெற்றிருந்தாலும் ஆன்மிக, தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

அதுபோல கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்திருந்தாலும் தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

குரு, கேது வலுப்பெற்றால் தெய்வீக எண்ணங்கள் ஏற்படுமென்றா லும், எங்கு வலுப்பெற்றால் சிறப்பென்று பார்க்கும்போது, ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் வலுப்பெற்றால்தான் தெய்வீக எண்ணங்கள் ஏற்படும். 5-ல் குரு, கேது இருந்தாலும் 5-ஆம் வீடு குரு வீடாக அமைவது, 5-ஆம் வீட்டைக் குரு பார்வை செய்வதாலும், 5-ஆமதிபதி குரு, கேது சேர்க்கைப்பெற்றாலும், அந்த ஜாதகருக்கு தெய்வீக எண்ணம், இறைப்பணி, பல்வேறு ஆன்மிக செயல்களில் ஈடுபடும் அமைப்பைக் கொடுக்கும்.

சந்திரனானவர் மனோகாரகன் என்பதால், அவர் குரு, கேது சேர்க்கைப்பெற்று 5-ல் அமையப்பெற்றா லும், சந்திரனுக்கு 5-ல் அமையப்பெற்றா லும், சந்திரனுக்கு 5-ல் குரு, கேது அமையப்பெற்றாலும் தெய்வீக நாட்டம் உண்டாகும். குரு, கேது சேர்க்கைபெற்று 5-ல் அமைந்தோ, 5-க்கு 5-ல் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கண்டிப்பாக ஆன்மிகம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

கேது பகவான் விருச்சிக ராசியில் உச்சம்பெறுவதால், ஒருவர் ஜாதகத் தில் கேது உச்சம்பெற்றாலோ, கேது உச்சம்பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ அது 5-ஆம் பாவமாக அமையப்பெற்றுவிட்டாலோ தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்புண்டாகும். 5-ல் அமையும் குருபகவான் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கிரகச் சேர்க்கைப்பெற்று, அதன் தசை அல்லது புக்தி நடைபெற்றால் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே குரு பலவீனமாக இருந்தாலும், 5-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும் ஆன்மிக, தெய்வீக சிந்தனைகளில் ஈடுபாடு குறையும்.

bala020922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe