ண் 1-ல் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரும் சூரியனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களே. பெயர் எண்களைக் கூட்டினால் வரும் ஒற்றை இலக்க எண் 1- ஆக வந்தாலும் சூரியனின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களே.

1-ஆம் எண்ணில் பிறந்தவர்கள்

உண்மையானவர்கள். ஏகாந்த குண முடையவர்களாகத் திகழும் இவர்கள் நேர்மையாக வாழக்கூடியவர்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதன் நுனிவரை சென்று வெற்றிகரமாக முடித்துக் காட்டக்கூடிய திறமை இருக்கும். வாழ்வில் எதிர்வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயம் கொள்ளாதவர்கள். எதிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவார்கள்.

மேலும், இவர்கள் சூசகமான அறிவுடன் காணப்படுவர். அதனால் பல வழிகளில், பல கலைகளில்- உதாரணமாக சிற்பக்கலை, ஓவியம், வைத்தியம், ஜோதிடம், சங்கீதம் உள்ளிட்ட ஆய கலைகள் 64-ல் ஏதேனும் ஒன்றில் சிறந்தவர்களாகவோ, புகழ்பெற்றவர்களாகவோ, புலமை பெற்றவர் களாகவோ திகழ்கின்றனர். அத்தகைய கலைகளின் வாயிலாகப் பொருளீட்டும் ஆற்றலும் படைத்தவர்கள். மிகச் சிலரையே நண்பர்களாகக் கொண்டிருப் பார்கள். நட்புக்காக எதையும் இழக்கத் துணிந்தவராகவும் இருப்பார்கள். மேலும், இவர்களுக்கு அரசியலும் கைகொடுக்கும்.

Advertisment

இதயம், முதுகுத் தண்டுவடம் இரண்டையும் பாதுகாக்கும் கிரகம் சூரியன். விசாலமான பார்வையும், அகன்ற நெற்றியும் உடைய இவர்கள் மிகவும் வசீகரத்துடன் காணப்படுவர். 1, 10, 19 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 1-ஆம் எண்ணின் ஆதிக்கத்தை முழுமையாகப் பெறக் கூடியவர்கள். இதில் 10-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதன்பொருட்டு பெரும்பாலானோர் கண்ணாடி அணிந்து காணப்படுவர்.

28-ஆம் தேதி பிறந்தவர்களுக்கும், பெயர் எண் 28- ஆக அமையப்பெற்றவர்களுக்கும் சூரியனின் ஆதிக்க பலம் குறைவு. அதனாலேயே அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே 28-ஆம் தேதி பிறந்தவர்கள் தங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் எதுவோ, அதற்கு ஏற்றவாறு வ-மையான எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் நன்மைகள் நடைபெறும். பெயர் எண் 28 தவிர 1-ஆம் எண் வரிசையில் 10, 19, 37, 46, 55, 64, 73, 82, 91, 109 போன்ற எந்த எண்களில் வேண்டுமானாலும் மாற்றியமைத்துக்கொள்ளலாம். தொழில் விலாசத்தின் கூட்டு எண்ணையும் மேலே சொல்லப்பட்டிருக்கும் எண்களில் அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாதிக்கர்களுக்கு 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் தானே வந்துசேரும். ஆனால், தானே தேடிச்சென்று பலன் எதிர்பார்த்தால் நன்மை பயக்காது. 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 8-ஐக் குறிக்கும் 8, 17, 26 தேதிகள் தோல்விகளையும் தீமைகளையும் உருவாக்கக் கூடியது. அதனால் இந்த தேதிகளில் எந்த நற்செயலையும் ஆரம்பிக்கக் கூடாது. இதில் 8 மட்டும் ஓரளவு பரவாயில்லை. ஆனால், 17, 26 ஆகியவை மிகவும் துர்திர்ஷ்டத்தையே தரக்கூடியவை.

Advertisment

திருமணம் செய்துகொள்ள 1, 4, 8 தேதிகளில் பிறந்த வர்கள் பொருத்தமானவர்கள். இவர்கள் அனுசரித்துப் போகக்கூடியவர்கள். ஆனால் திருமணத் தேதி அதிர்ஷ்டகரமானதாக அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம். மணமகன் மற்றும் மணமகள் பிறந்த தேதியை அனுசரித்து, திருமணத் தேதி அமைத்துக் கொள்ளவேண்டும். 1-ஆம் எண்ணுடையோர் 3, 5, 6 தேதிகளில் பிறந்தவரை மணம் முடித்துக்கொண்டால் வாழ்க்கை சுகமானதாக அமையும்.

செல்: 99400 78841